எங்கள் சபை

Women for Women France குழுவானது, பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பணிபுரியும் பல துறைகளையும் பன் மொழிகளையும் கொண்ட வல்லுநர்களைக் கொண்டது. குழுவானது ஒரு பணிப்பாளர் சபையால் ஆதரிக்கப்படுகின்றது. அவர்களின் பங்கானது, செயற்பாட்டுக் குழுவிடம் அவர்களின் உயிர்காக்கும் பணியைச் செய்வதற்குத் தேவையான வளங்கள் இருப்பதை உறுதிசெய்வதும், அமைப்பின் நல்ல நிர்வாகத்தை உறுதி செய்வதும், ஒட்டுமொத்த மூலோபாயத் திசையை வரையறுப்பதும் ஆகும்.

  • நிறுவுநர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி

    சாரா மெக்ராத் 2018 இல் Women for Women France ஐ நிறுவினார்.

    சாரா மூன்று கண்டங்களில் உள்ள தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற துறைகளில் 5 மில்லியன் முதல் 750 மில்லியன் USD வரையிலான வரவுசெலவுத் திட்டங்களில் 17 வருட நிதி நிர்வாகத்தையும் சிக்கலான திட்ட விநியோக அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.

    சாரா,2016 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசிக்கும் அவுஸ்திரேலியாவிலிருந்து புலம்பெயந்தவர் என்ற வகையிலும்,கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நியூசிலாந்திற்கு அகதிகளாகத் தனது குடும்பத்தின் பயணக் கதைகளையும் தன்னகத்தே ண்டுள்ளவர் என்ற வகையிலும், அனைத்து நாடுகளிலிருந்துமான புலம்பெயர்ந்தோரை இழிவுபடுத்துதலுக்கும் மனிதத்தன்மையழித்தலிற்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    சாரா,முதல் தொடர்பு பாதிக்கப்பட்ட சேவைகளுக்குள்ளும் பிரெஞ்சு நீதித்துறை அமைப்புக்குள்ளும் கலாச்சார ரீதியானதும் முறையானதுமான மாற்றத்திற்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இருக்கின்ற குறுக்குவெட்டுப் பாகுபாட்டுக் கலாச்சாரத்தை நீக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்.

  • தலைவர்

    யாஸ்மின் எல் கோட்னி, டிஜிட்டல் திட்டங்களிலும் இலாப நோக்கற்ற திட்ட நிர்வாகத்திலும் நிபுணராக இருப்பதுடன் தனது நிபுணத்துவத்துடன் Women for Women France இற்கு ஆதரவளித்துள்ளார்.

    யாஸ்மின் ஒரு பிரெஞ்சு-மொரோக்கோரராவார். அவர் மொரோக்கோவில் தனது குழந்தைப் பருவத்திற்குப் பிறகு கற்றலுக்காகப் பிரான்சுக்குச் சென்றார். பிரான்சில் தனது தொழிலைத் தொடங்கிய பிறகு, அவர் அவுஸ்திரேலியாவிற்கும் பின்னர் நியூசிலாந்திற்கும் குடிபெயர்ந்தார், அங்கு அவர் இலாப நோக்கற்ற நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றார்.

    2016 ஆம் ஆண்டில், அவர் பிரான்சுக்குத் திரும்பியதும், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'Bas Les Pailles' என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இணைந்து நிறுவினார், இது வெற்றிகரமாக முடிந்ததுடன் ஜனவரி 2021 இல் பிரான்சில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் தடைசெய்யப்பட்டது

    பாலின சமத்துவம், அனைத்துக் குறுக்குவெட்டுப் பாகுபாடுகளையும் நீக்குதல் என்பவற்றிற்கான போராட்டங்களிற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாஸ்மின், மக்களின் பிறந்த நாடு அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும், நிர்வாக ரீதியான மற்றும் சட்ட ரீதியான சேவைகள் தேவைப்படுகின்ற அனைத்து மக்களுக்கும் அவற்றின் அணுகலை மேம்படுத்துவதற்கான Women for Women France இன் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்குச் செயற்படுகிறார். வலுக்கட்டாயக் கட்டுப்படுத்தலை எதிர்கொள்ளும் அனைத்து மக்களுக்கும் சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புக்காகவும் அவர் அழைப்பு விடுக்கிறார்.

  • சபை

    லாரெட் டெமானோ ஒரு நிதி ஆலோசகரும் சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளருமாவார். அவர் நிதி தொடர்பான ஆய்விலும் ஆலோசனையிலும் நிபுணராவார்.

    லாரெட் 2018 இல் பிரான்சுக்குக் குடிபெயர்ந்த கேமரூனிய நாட்டைச் சேர்ந்தவராவார். அவர் புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு, குறிப்பாக வதிவிட உரிமைகளைப் பெறுவதற்காக அல்லது புதுப்பிப்பதற்காகக் கடினமானதாக, நீண்டகாலம் எடுக்கக்கூடியதாக மற்றும் அதிக செலவினத்தைக்கொண்டதாக இருக்கக்கூடிய நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் கூர் உணர்திறன் மிக்கவராவார்.

    பாலினம் காரணமாக பெண்களின் குரல் செவியேற்கப்படாத சூழலில் இருந்து வருகின்றவர்களுக்கு, பாலின சமத்துவத்தை மீட்டெடுப்பதில் பங்கேற்பது லாரெட்டின் பிரதான பணியாகும். Women for Women France இல் தனது பங்கிற்கு அப்பால், லாரெட் அனைத்துப் பெண்களினதும் கல்வியிலும் தன்மேம்பாடு பெறுதலிலும் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறார்.

  • சபை

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதில் உறுதியாக உள்ள கிளாரா லூயிசர், பெண்கள், குடும்பங்கள் மற்றும் வீட்டுத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் ஆவார். கிளாரா குடும்பச் சட்டத்தில் 2 முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார், இதன் போது அவர் சிவில் அந்தஸ்தில் பாலின இருமை பற்றிய ஆய்வறிக்கையை எழுதினார்.

    ஒரு வழக்கறிஞராக, கிடைக்கக்கூடிய சேவைகள் அணுகுவதற்குக் கடினமானவை என்பதையும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் எதிர்கொள்ளும் பல தடைகளுக்கு அவை பதிலளிக்கவில்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். தப்பிப் பிழைத்தவர்களின் பலன்களிற்குத் தீங்கு விளைவிக்கும் நிறுவனத் தடைகளை அகற்றுவதற்கு, நிறுவன மட்டத்தில் சீர்திருத்தத்தைக் காணவும் அவர் விரும்புகிறார். இறுதியாக, வன்முறையின் உளவியல் பரிமாணத்தை அதிகமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

    பாலினம், இனம், வர்க்கம், பாலியல் நோக்குநிலை, மதம், வயது, இயலாமை, இடம்பெயர்வு நிலை, அரசியல் கருத்து அல்லது சமூக-பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சட்டரீதியான தகவல்களை அணுகுவதில் அனைத்து நபர்களையும் உட்சேர்ப்பதற்குக் கிளாரா போராடுகிறார்.

  • சபை

    லிசா டான்ஜென் பாரிஸைத் தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பின் நிர்வாக நிபுணராவார். அவர் நிர்வாக, செயன்முறை மேம்பாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராவார்.

    நோர்வே நாட்டைச் சேர்ந்த லிசா,தற்போது தனது தாயகம் என்று கூறுகின்ற பிரான்சில் சுமார் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.

    வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து தப்பிப் பிழைத்தவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற நிறுவனத் தீர்ப்பை நீக்கும் வகையில், அதிர்ச்சி-தகவலளிப்பு அணுகுமுறையில் லிசா ஆர்வம் காட்டுகின்றார். வீட்டுத் துஷ்பிரயோகத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களாக அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் சிறுவர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக அவர் அழைப்பு விடுக்கிறார்.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்