இவ்விணையத்தளம் உங்கள் உலாவல் வரலாற்றில் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் ‘தனிப்பட்ட / மறைநிலை’ முறையில் புதிய விண்டோவைத் திறந்து உங்கள் உலாவி வரலாற்றை நீக்க முடியும்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements " கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பிரான்சில் உள்ளவர்களுக்கு மட்டுமே. வினாப்பட்டியல் முற்றிலும் பெயரறியப்படாதது.
அல்ஜீரிய குடிமக்கள்
பிரான்சில் வசிப்பதற்கான உங்கள் உரிமை பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே,“Code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile (CESEDA)” என்றழைக்கப்படும் பிரெஞ்சு வதிவிட உரிமைகளை நிர்வகிக்கும் சட்டத்தின் விதிகள் உங்களுக்குப் பொருந்தாது. பல்வேறு பிரெஞ்சு வதிவிட உரிமைகளைப் பெறுவதற்கான நிபந்தனைகள் உங்களுக்கு வேறுபட்டதாக இருக்கும் போது, ஒவ்வொரு முடிவிலும் அல்ஜீரியக் குடிமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரிவைச் சேர்த்துள்ளோம்.
நான் ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் குடிமகனாவேன்
உங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தால் பிரான்சில் வசிக்க உங்களுக்கு உரிமை உண்டு நீங்கள் பொதுவாக ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.