தனிப்பட்ட முறையில் உலாவவும்

உங்கள் உலாவல் வரலாற்றில் இந்த இணையத்தளம் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், 'தனிப்பட்ட / மறைநிலை' பயன்முறையில் தொடர்ந்து உலாவவும் உங்கள் உலாவி வரலாற்றை நீக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் உலாவியைப் பொறுத்துப் பின்பற்ற வேண்டிய செயன்முறையை நாங்கள் இங்கே விளக்குகிறோம்.

கூகுள் குரோம்

தனிப்பட்ட உலாவலுக்கு மாற்றுவதற்கு: நீங்கள் குரோம் ஐத் திறந்ததும், மெனு ஐகானைக் கிளிக் செய்யவும் (உங்கள் விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள நிலைக்குத்தான மூன்று புள்ளிகள்) பின்னர் புதிய மறைநிலை விண்டோவில் கிளிக் செய்யவும்.

உங்கள் உலாவல் வரலாற்றை அழிப்பதற்கு: மெனு ஐகானைக் கிளிக் செய்து, மேலும் கருவிகள் > உலாவல் தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

சபாரி

தனிப்பட்ட உலாவலுக்கு மாற்றுவதற்கு: நீங்கள் சபாரியைத் திறந்ததும், உங்கள் மேக்புக்கின் மெனு பட்டிக்குச் சென்று கோப்பு > புதிய தனிப்பட்ட விண்டோ என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உலாவல் வரலாற்றை அழிப்பதற்கு: உங்கள் மேக்புக்கின் மெனு பட்டியில், வரலாறு > வரலாற்றை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொசில்லா பயர் பாக்சு

தனிப்பட்ட உலாவலுக்கு மாற்றுவதற்கு: நீங்கள் மொசில்லா பயர் பாக்சு ஐத் திறந்ததும், மெனு ஐகானைக் கிளிக் செய்யவும் (உங்கள் விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள சமாந்திரமான மூன்று பட்டிகள்) பின்னர் புதிய மறைநிலை விண்டோவில் கிளிக் செய்யவும்.

உங்கள் உலாவல் வரலாற்றை அழிப்பதற்கு: மெனு ஐகானைக் கிளிக் செய்து வரலாறு > வரலாற்றை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

மைக்ரோசாப்ட் எட்ஜ்

தனிப்பட்ட உலாவலுக்கு மாற்றுவதற்கு: நீங்கள் மைக்ரோசாப்ட் எட்ஜ் ஐத் திறந்ததும், அமைப்புகள்(settings)ஐகானைக் கிளிக் செய்யவும் (உங்கள் விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள கிடையான மூன்று புள்ளிகள்) பின்னர் புதிய மறைநிலை விண்டோவில் கிளிக் செய்யவும்.

உங்கள் உலாவல் வரலாற்றை அழிப்பதற்கு: அமைப்புகள் ஐகானைக் கிளிக் செய்து, தனியுரிமை > உலாவல் தரவை அழி > எதை அழிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்

மறைநிலை விண்டோவைத் திறப்பதற்கு நீங்கள் விசைப்பலகைக் குறுக்குவழியையும் பயன்படுத்தலாம்:

  • விண்டோஸ், லினக்ஸ் மற்றும் குரோம் ஓஎஸ்: Ctrl+Shift+N ஐ அழுத்தவும்
  • மேக்: Command ⌘ + Shift + N ஐ அழுத்தவும்

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்