எங்கள் ஏன்
பெண்களில் 3 இல் 1 பேர் தங்கள் வாழ்நாளில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கிறார்கள்
வெளிநாட்டில் பிறந்தவர்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் போது குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகாரமும் கட்டுப்படுத்தலும்
வீட்டுத் துஷ்பிரயோகத்தின் சிறந்த அறியப்பட்ட வரைவிலக்கணமானது வலுக்கட்டாயக் கட்டுப்படுத்தல் என அழைக்கப்படுகிறது.
வலுக்கட்டாயக் கட்டுப்டுத்தலின் குற்றவாளிகள் தங்களின் வெளிநாட்டில் பிறந்த கூட்டாளரைச் சமூகத் தனிமைப்படுத்தலுடனும் நிர்வாக மற்றும் நிதி ரீதியாகச் சார்ந்திருத்தலை உருவாக்குவதன் மூலமும் கட்டுப்படுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் அதிக வழிகளைக் கொண்டுள்ளனர்.
ஒரு சிக்கலான அமைப்பு
பிரெஞ்சு அரசும் ஐரோப்பிய ஆராய்ச்சிக்கான கவுன்சிலும் பிரான்சில் பிறந்து வளர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட, பாதுகாப்புகள், நீதி மற்றும் தொடர்புடைய சேவைகள் என்பவற்றிற்கான அணுகலைச் சுற்றியுள்ள பிரெஞ்சு அமைப்பு குறிப்பாகச் சிக்கலானதாகவும் வழிச்செலுத்துவதற்குக் கடினமாகவும் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்திருக்கின்றது.
Women for Women France நடத்திய ஆய்வில், பிரான்சில் வளராத மற்றும்/அல்லது பிரெஞ்சு மொழி பேசாதவர்களுக்குக் குறிப்பிடத்தக்க கூடுதல் சவால்களும் ஆதரவிற்காகச் சில இடங்களும் மட்டுமே உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களின் வேலைத் திட்டம்
Women for Women France செய்யும் அனைத்தும் ஒரு இலக்கை மையமாகக் கொண்டது: பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் பொருளாதார நிலைமை, இடம்பெயர்வு நிலை அல்லது பிறந்த நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பலன்களை மேம்படுத்துதல்.
தேசிய பன் மொழி இணையத்தளத் தகவலின் உருவாக்கமும் மேலாண்மையும்
Women for Women France இணையத்தளத்தின் தகவல்கள், வீட்டு வன்முறையை எதிர்கொள்ளும் மக்களின் முதன்மைத் தேவைக்குப் பதிலளிக்கின்றது: அவர்களின் கவலைகளையும் நடைமுறைத் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் நடைமுறை தகவல்களை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் அணுகலாம்.
பிரான்சின் முன்னணி நிபுணர்களுடன் அவர்களின் துறைகளில் பணிபுரிவதன் மூலம், உடனடியான பாதுகாப்பைக் கண்டறிவது முதல் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டுவது வரை நடைமுறையான,இன்று வரையான புதிய தகவல்களை எங்களால் வழங்க முடியும்.
இந்த இணையத்தளம் பாலினம் அல்லது தேசிய இனம் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வேலைப்பயிற்சி
பின்வரும் அமைப்புகளுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் நாங்கள் வடிவமைக்கப்பட்ட, ஆராய்ச்சி அடிப்படையிலான மற்றும் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பயிற்சியை முன்மொழிகிறோம்
- தூதரக சேவைகள்
- போலீஸ் சேவைகள்
- சுகாதாரசேவை வழங்குநர்கள்
- சட்டரீதியான சேவை வழங்குநர்கள்
- சமூக சேவகர்கள்
- நீதித்துறைக்கான தேசியப் பள்ளி
- பணியமர்த்துநர்கள்
எங்கள் பயிற்சித் திட்டங்களில் உங்கள் அமைப்பு ஆர்வமாக இருந்தால், எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளவும்.
ஆராய்ச்சியும் தப்பிப் பிழைத்தவருடனான கலந்து பேசுதலும்
சமீபத்திய ஆராய்ச்சிகள், வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட நபர்களின் உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் எங்கள் திட்டங்களும் துணை வலிமை கொடுப்புக்களும் தகவலளிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்வதற்கு, நாங்கள் காலவட்ட அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுடனும் தப்பிப் பிழைத்தவர்களுடனும் கலந்தாலோசிப்பது உட்பட ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறோம்.
பல்கலைக்கழகங்களுடனும் ஆராய்ச்சி அமைப்புகளுடனுமான எங்கள் கூட்டாண்மை காரணமாக எங்களால் இந்த வேலையைச் செய்ய முடிகின்றது.
ஆராய்ச்சிக் கூட்டாண்மை முன்மொழிவுகளை [email protected] இற்குச் சமர்ப்பிக்கலாம்.
நிறுவனங்களுடனும் சேவைகளுடனும் பணிபுரிதல்
பிரான்ஸ் இஸ்தான்புல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது: பெண்களுக்கு எதிரான வன்முறையையும் வீட்டு வன்முறையையையும் தடுப்பதும் எதிர்த்துப் போராடுவதும் தொடர்பான ஐரோப்பிய கவுன்சில் உடன்படிக்கை.
இடைவெளிகளைக் கண்டறிந்து சீர்திருத்தப் பரிந்துரைகளை வழங்குவதற்கு நிறுவனங்களுடனும் சேவைகளுடனும் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.
பொதுமக்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் அடைவுக்கான திட்டங்கள்
எங்கள் தொடர்பாடல் முயற்சிகள் உயர் இலட்சிய நோக்குடையவை: பிரான்சில் வாழும் அனைத்து மக்களும், அவர்கள் எந்த மொழி பேசினாலும் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வீட்டுத் துஷ்பிரயோகம் பற்றிய பொதுவான தவறான எண்ணங்களை எதிர்த்துப் போராடவும் நாங்கள் வேலை செய்கிறோம்.
தேசிய ஆதரவுச் சேவை
Women for Women France தற்போது ஒரு தேசிய ஆதரவுச் சேவையைச் செயற்படுத்தி வருகின்றது, அதன் காரணமாக வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அவர்களின் பாதையில் தனிப்பட்ட ஆதரவை அணுக முடியும்.
நீங்கள் இந்த இன்றியமையாத சேவைக்கு நிதிப் பங்காளராக மாற ஆர்வமாக இருந்தால், [email protected] இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.