பிரான்சில் வதிவிட உரிமைகள்

உங்கள் வன்முறை துணையை விட்டு வெளியேறினால், பிரான்சில் தங்குவதற்கான உங்கள் உரிமையைப் பற்றிய சந்தேகம் உங்களை சிக்கியதாக உணர்த்தலாம் சோர்வடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், தீர்வுகள் உள்ளன.

எங்களின் புலம்பெயர் வினாப்பட்டியல், நீங்கள் விண்ணப்பிக்கும் பிரெஞ்சு வதிவிட உரிமைகள் என்ன என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வினாப்பட்டியல், தற்போது பிரான்சில் உள்ள, செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாத வதிவிட உரிமைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே

வினாப்பட்டியல் முற்றிலும் பெயரறியப்படாதது.

புகலிடத்திற்கு விண்ணப்பிப்பது என்பது பிரான்சிற்கு வெளியே பிறந்தவர்கள் அகதி அந்தஸ்து அல்லது அவர்கள் பிறந்த நாட்டில் துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தல் அபாயத்திற்கு எதிராக துணை பாதுகாப்பைப் பெற அனுமதிக்கும் ஒரு செயல்முறையாகும்.

நீங்கள் தற்போது பிரான்சில் இல்லை என்றால், உங்கள் “titre de séjour”வதிவிட அனுமதியை இழந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, நீங்கள் பிரெஞ்சு தூதரகத்திடம் இருந்து மறு நுழைவு விசா அல்லது “visa de retour”என்ற ஆவணத்தை கோரலாம் எனவே நீங்கள் பிரான்சுக்குத் திரும்பலாம்.

உங்களிடம் “titre de séjour”எனப்படும் செல்லுபடியாகும் குடியேற்ற ஆவணம் இருந்தால், நீங்கள் பிரான்சில் இருக்கும் போது அது திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, உள்ளூர் நிர்வாக அதிகாரியிடம் இருந்து“duplicata”என்ற ஆவணத்தைக் கோரலாம்.

எங்கள் பெயர் அறியப்படாத புலம்பெயர் வினாப்பட்டியயலை பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் தகுதியைச் சோதிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் பிரெஞ்சு வதிவிட உரிமைகளைப் பெறுவதற்கு உங்களை அனுமதிக்கும் முக்கிய அளவுகோல்கள் அல்லது “fondements” மூலம் உலாவலாம். வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கான பல தெரிவுகளும் இதில் அடங்கும்.

இவை ஏற்கனவே பிரான்சில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த நிபந்தனைகள் எதுவும் உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், நீங்கள் ஒரு குடியேற்ற நிபுணரை அணுகலாம், அவர் உங்கள் நிலைமையை ஆராய்ந்து, உங்களுக்கு வேறு என்ன தெரிவுகள் இருக்கக்கூடும் என்பதைத் தீர்மானிப்பார்

வீட்டு வன்முறை அல்லது பலவந்தமான திருமணதிற்கான அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சிய நீதிபதியிடம் இருந்து பாதுகாப்பு கட்டளை அல்லது "ordonnance de protection” இனை பெற்றுக்கொண்ட மக்களுக்கு "titre de séjour”அல்லது வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பிரெஞ்சு குடிமகனை மணந்தவர்கள் மற்றும் பிரான்சுக்கு வந்தவர்கள் அல்லது திருமணத்தின் விளைவாக பிரான்சில் வதிவிட உரிமை பெற்றவர்கள், குடும்ப வன்முறை அல்லது பலதார மணம் கொண்ட சூழ்நிலையை அனுபவித்ததால், அவர்கள் தங்கள் மனைவியுடன் வாழ்வதை நிறுத்தினால், தங்களுடைய வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் “Pacs”அல்லது வீட்டுக் கூட்டாண்மை என அழைக்கப்படும் ஒரு பிரெஞ்சு சிவில் கூட்டாண்மையாளராகவும் உங்கள் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”, உங்கள் துணையுடன் நீங்கள் வாழும் நிபந்தனையின் அடிப்படையில் இருந்தால், நீங்கள் அனுபவித்த குடும்ப வன்முறையை முன்னிலைப்படுத்தலாம் மற்றும் பிரிந்தால் உங்கள் வதிவிட உரிமைகளை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

குடும்ப மறு ஒருங்கிணைப்பு உரிமைகள் அல்லது “regroupement familial” மூலம் பயனடைபவர்கள், வீட்டு வன்முறையை அனுபவித்ததால், தங்கள் மனைவியுடன் வாழ்வதை நிறுத்தினால், தங்களுடைய வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமனின் துணைவர்கள் குடும்ப வன்முறையை அனுபவித்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் வாழ்வதை நிறுத்த முன்முயற்சி எடுத்தால், அவர்கள் தங்களுடைய வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

சர்வதேச பாதுகாப்பிலிருந்து பயனடையும் நபர்களின் துணைவர்கள், குடும்ப வன்முறையை அனுபவித்திருந்தால், அவர்கள் தங்கள் துணையுடன் வாழ்வதை நிறுத்தும்போது அவர்களின் வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பிரான்சில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பிள்ளையின் பெற்றோராக நீங்கள் இருந்தால் மற்றும் அவர்களின் பராமரிப்பு மற்றும் கல்விக்கு நீங்கள் பங்களித்தால், வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” வழங்கப்படலாம்.

ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” ஆனது, பிரான்சில் வசிப்பவர்களுக்கு அவர்கள் பிரான்சில் போதுமான அளவு நீடித்த, நெருக்கமான மற்றும் நிலையான தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்கு வழங்கப்படலாம்.

ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” ஆனதுபிரான்சில் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நபர்களுக்கு வழங்கப்படலாம்.

பிரான்சில் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் நோய்வாய்ப்பட்ட பிள்ளையுடன் வரும் எந்தவொரு நபருக்கும் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” வழங்கப்படலாம். இது அவர்களின் தாய், தந்தை அல்லது பெற்றோரின் அதிகாரம் கொண்ட வேறு யாராகவும் இருக்கலாம்.

ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”, பிரான்சில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் உள்ள தனிநபர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே “titre de séjour”அல்லது இல்லாவிட்டாலும் வழங்கப்படலாம்.

ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” ஆனது ஏற்கனவே வதிவிட உரிமைகள் மற்றும் சுதந்திரமாக வேலை செய்ய அல்லது பிரான்சில் தங்கள் சொந்த வணிகத்தை அமைக்க விரும்பும் நபர்களுக்கு வழங்கப்படலாம்.

ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”, ஆட்கடத்தல் மற்றும்/அல்லது பாலியல் வர்த்தகம் தொடர்பான புகார் அல்லது சாட்சியம் மூலம் நீதி அமைப்புடன் ஒத்துழைக்கும் நபர்களுக்கு வழங்கப்படலாம்.

பிரான்சில் தங்குவதற்கான உரிமையை வழங்கும் ஆவணம், “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும், விபச்சாரம் சம்பந்தப்பட்ட சூழ்நிலையை விட்டு வெளியேறும் மற்றும் அதை நிர்வகிக்க குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடன் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை பின்பற்றும் நபர்களுக்கு வழங்கப்படலாம். இது “association agréée” என்று அறியப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக, வதிவிட உரிமையுடன் அல்லது இல்லாமலேயே பிரான்சில் தங்கியிருப்பதை நிரூபிக்கும் நபர்களுக்கு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” வழங்கப்படலாம்.

புகலிட உரிமை என்பது பிரான்சுக்கு வெளியே பிறந்தவர்கள் அகதி அந்தஸ்து அல்லது அவர்கள் பிறந்த நாட்டில் துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தல் அபாயத்திற்கு எதிராக துணை பாதுகாப்பைப் பெற அனுமதிக்கும் உரிமையாகும்.

நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக செல்லுபடியாகும் வதிவிட உரிமைகளுடன் அல்லது குறிப்பிட்ட சில நாட்டினருக்கு மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் “carte de résident” எனப்படும் வதிவிட அனுமதியை நீங்கள் கோரலாம். நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அது உங்களுக்கு வழங்கப்படலாம்.

சாட்சியங்கள்

எனது பிரெஞ்சுக் கணவரின் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க நாங்கள் ஜப்பானை விட்டு வெளியேறினோம். நாங்கள் வந்தவுடன் வன்முறை தொடங்கியது. துரதிஷ்டவசமாக, எனது பிள்ளைகள் இப்போது பிரான்சில் வசிப்பதால், பிரெஞ்சு சட்டத்தின்படி அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேற நான் அனுமதிக்கப்படவில்லை. எனது வதிவிட அனுமதிப்பத்திரம் எனது துணைவரால் அனுசரனையளிக்கப்பட்டது.அதனால் நான் அவரை விட்டுபிரிந்தால் எனது பிள்ளைகளிடமிருந்து நாடு கடத்தப் படுவேனா என்ற பயம் இருந்தது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வதிவிட அனுமதி இருப்பதையும், எனது பிள்ளைகள் பிரெஞ்சுக்காரர்களாவும் பள்ளிக்குச் செல்வதாலும் நான் பிரான்சில் தங்க முடியும் என்பதையும் கண்டுபிடித்தேன். பல வருடங்கள் கழித்தும் விட்டுக் கொடுக்காததை நினைத்து இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பிள்ளைகளும் நானும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், என்னையும் பிள்ளைகளையும் மரியாதையுடனும் கருணையுடனும் நடத்தும் அழகான புதிய கணவர் எனக்கு இருக்கிறார்.

“ஐகோ ” - ஜப்பான் - 42 வயது

நான் இங்கே சட்டவிரோதமாக இருந்தேன், என் துணைவர் அதை எனக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கினார். வன்முறை தீவிரமானது, ஆனால் நான் உதவியற்றவனாக உணர்ந்தேன். அவர் பிரான்சில் தங்குவதற்கான ஒரே வாய்ப்பு என்றும் நான் அவரை விட்டுவிட்டால் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று மிரட்டினார். அதிஷ்டவசமாக, ஆவணங்கள் இல்லாமல் கூட, நான் ஒரு பாதுகாப்பு உத்தரவைப் பெற முடிந்தது, இது எனக்கு குடியிருப்பு அனுமதிக்கான உரிமையை வழங்கியது. எனது ஆவணங்களைப் பெற முடிந்ததில் எந்நேரத்திலும் நிம்மதியாகவும் பதட்டம்மில்லாமலும் இருக்கிறேன். எங்களுக்கு பொதுவான நண்பர்கள் உள்ளதால் இந்நாட்களில் நான் அவரைப் பார்க்க நேர்ந்தது, ஆனால் அவர் என் மீது தனது ஆதிக்கத்தை வைத்திருக்கவில்லை என்பதை அவர் கண்கள் காட்டியது நான் அதைவிட வலிமையானவள்.

“லைலா” - அல்ஜீரியா - 26 வயது

நான் பிரான்சுக்கு வந்தபோது, நான் எனது சுற்றுலா நுழைவுச்சான்றில் தங்கியிருந்தேன். நான் நினைக்கிறேன்… சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவனாக நான் பேச விரும்பாத பல காரணங்களால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. என்னிடம் பணமும் வேலை செய்ய உரிமையும் இல்லை. அதனால் பல வருடங்கள் பாலியல் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் நிறுத்த விரும்பியபோது, விபச்சாரத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் சிறப்பு வாய்ந்த ஒரு சங்கம் உங்களுடன் இருந்தால், நீங்கள் வதிவிட அனுமதி பெறலாம் என்பதைக் கண்டறிந்தேன் அவர்கள் எனக்கு அறிவுரை கூறினார் மற்றும் செயற்முறை மூலம் எனக்கு உதவினார்கள். இன்று, எனக்கு புதிய வேலை கிடைத்தது, நீண்ட கால நுழைவுச்சான்றை பெற முடிந்தது.

“பெத்” - ஐக்கிய அமெரிக்கா - 55 வயது

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்