சட்ட அறிவித்தல்

தளப் பதிப்பாசிரியர்

www.womenforwomenfrance.org இணையத்தளத்தை, 1901 ஜூலை 1 இன் சட்டத்தின் கீழ் பிரெஞ்சு சட்டத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சங்கமான Women for Women France பிரசுரித்தது.

SIRET எண் 848 317 517 00029
தலைமை அலுவலகம்: 18 rue Ramus, 75020 PARIS
மின்னஞ்சல் முகவரி: [email protected]
வெளியீட்டுப் பணிப்பாளர்: யாஸ்மின் எல் கோன்டி, தலைவர்

சேவை வழங்குநர்கள்

ஹோஸ்டிங்: Microsoft Azure
அபிவிருத்தியும் பராமரிப்பும்: Talan
கிராஃபிக் சாசனம்: Fringe22
மொழிபெயர்ப்பு: LanguageWire

பயன்பாட்டு விதிமுறைகள்

Women for Women France (“WFWF”) தளத்தின் இந்தப் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பயன்பாடு (“ஜிசியூ”), www.womenforwomenfrance.org என்ற இணையத்தளத்தின் ஊடாக ("தளம்") அணுகக்கூடியது, உங்களின் (“பயனர்” அல்லது “நீங்கள்”) தளத்தின் பயன்பாட்டை ஆளும். தளத்தை அணுகுவதன் மூலம், இந்த விதிமுறைகளை நீங்கள் மறுத்துரைக்காமல் ஏற்றுக்கொள்கின்றீர்கள். இந்த விதிமுறைகளில் எதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து தளத்தை அணுக வேண்டாம்.

 1. ஹைபர்டெக்ஸ்ட் இணைப்புகள்

  தளத்திற்கான இணைப்பை தாபிப்பது எந்தவொரு முன் ஒப்பந்தத்திற்கும் உட்பட்டதல்ல.

  இந்தத் தளம் மற்றைய இணையதளங்களுக்கான பல இணைப்புகளை வழங்குகிறது. எண்ணிய பொருளின் பிற ஆதாரங்களை பயனர் கண்டறிவதற்கு வசதியளிக்கும் நோக்கத்தில் அந்த இணைப்புகள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தைக் கட்டுப்படுத்த எந்தவிதமான இணைவும் இல்லாததால் இவற்றின் இருப்பானது WFWF ஐ பாரப்படுத்தாது.

 2. புலமைச்சொத்து

  WFWF எல்லா நேரங்களிலும் (i) தளத்தின் பிரத்தியேக உரிமையாளராக இருக்கும் என்பதுடன் (ii) மற்றைய பங்காளித்துவ நிறுவனங்களுக்கு சொந்தமான வணிகக் குறியீடுகள், லோகோக்கள் அல்லது உள்ளடக்கம் அல்லது மேற்கூறப்பட்டுள்ள பதிப்பாசிரியர்கள் மற்றும் மேலும் பொதுவானவை தவிர அவை உரையாக அல்லது கட்புலக் கூறுகளாக, அதனுடன் தொடர்புடைய சகல புலமைச்சொத்து உரிமைகளாக இருந்தாலென்ன அவற்றுக்கும் மற்றும் தளத்தின் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தில் WFWF இன் வழிமுறைகளுக்கும், அனைத்து எண்ணக்கருக்களுக்கும், நுட்பங்களுக்கும் மற்றும் மேம்பாடுகளுக்கும், மேலும் பொதுவாக அது கண்டுபிடித்த, உருவாக்கிய அல்லது பயன்படுத்தும் ஏதாவது சம்பந்தப்படும் புலமைச்சொத்துக்களுக்கும், (iii) தனது செயற்பாட்டிற்காக WFWF பொதுவாக எந்த நேரத்திலும் அது உருவாக்கிய ஏதாவது புலமைச்சொத்துக்களுக்கும், உள்ளடக்கத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும், மென்பாகக் கருவிசாதனங்களுக்கும், மாதிரிகளுக்கும், மீளப்பயன்படுத்தக்கூடிய மற்றும்/அல்லது பொதுவான குறியீடுகளுக்கும் மற்றும் நூல்களுக்கும், உரிமையாளராகவும் இருக்கும்.

  WFWF இன் முன்கூட்டிய அனுமதியின்றி, இந்தக் கூறுகளின் பாகமாக இருந்தாலும் எதனையும் மீளவுற்பத்தி செய்தல், விநியோகித்தல், மாற்றியமைத்தல், தழுவுதல், மறுபரிமாற்றம் செய்தல் அல்லது வெளியிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடையை மீறிச்செய்தால், அதன் பதிப்பாசிரியரின் சிவில் மற்றும் குற்றவியல் பொறுப்பில் சம்பந்தப்படக்கூடிய ஒரு மீறலாக கருதப்படும்.

  WFWF இங்கு உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, நீங்கள் தளத்தை அணுக அனுமதிக்கப்படலாம், ஆனாலும் WFWF, அதன் உள்ளடக்கம், மென்பொருள், வர்த்தகக் குறியீடுகள், வர்த்தகப் பெயர்கள் அல்லது லோகோக்கள் என்பவற்றை பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்காது.

 3. பொறுப்பு வரையறை

  தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் நம்பகமானவை என்று உத்தரவாதம் அளிக்கத் தன் வசம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் WFWF பயன்படுத்தும். இருப்பினும், பிழைகள் அல்லது குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் சேகரித்த தகவலின் செவ்வையை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  அதன்படி, தளம் "அப்படியே" உங்களுக்காக விடப்படுகின்றது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள முழு அளவிற்கும், WFWF எந்த உத்தரவாதத்தையும், வெளிப்படையான, மறைமுகமான, சட்டப்பூர்வ அல்லது வேறுவிதமான (ஆனாலும், வணிகத்தன்மை உத்தரவாதங்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, மற்றும் வன்முறையின்மை அடங்கலாக) எதனையும் வழங்காது. தளத்தின் செயல்பாடு தடையின்றி, பாதுகாப்பாக அல்லது பிழையின்றி இயங்கும் அல்லது பிழைகள் அல்லது முறைமை முறிவுகள் சரிசெய்யப்படும் என்பதற்கு WFWF உத்தரவாதம் அளிக்காது. இந்தத் தகவலை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது அவ்வாறு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நேரடியான அல்லது அதன் விளைவாக ஏற்படக்கூடிய இழப்புக்கு அல்லது சேதத்திற்கு WFWF பொறுப்பாகாது. நீங்கள் உங்கள் சொந்தப் பொறுப்பில் தளத்தைப் பயன்படுத்துவீர்கள், மேலும் இணையசார் நடத்தை மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் தொடர்பான உள்ளூர் விதிகள் அடங்கலாக அனைத்து உள்ளூர் சட்டங்களையும், விதிகளையும் ஒழுங்குவிதிகளையும் நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும். ஏற்புடைய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள முழு அளவிற்கும், (1) எந்தவொரு நிகழ்விலும் சிறப்பு, மறைமுக, பின்விளைவுகளை அல்லது பிற ஒத்த சேதங்களை (ஒப்பந்தத்தில் அல்லது தீங்கியலில் காரணம் அல்லது கொள்கைப் பொறுப்பு என பாராது, (ஆனாலும் மட்டுப்படுத்தப்படாதளவுக்கு அலட்சியம் அடங்கலாக) அல்லது வேறுவிதமாக) WFWF பொறுப்பேற்காது, அத்துடன் ஒரு வலுக்கட்டாய செயலிலிருந்து அல்லது மூன்றாம் தரப்புகளின் ஒரு செயலிலிருந்து அல்லது அத்தகைய தரப்புகள் செய்யாமல் விட்டிருக்கும் செயலிலிருந்து எழுகின்ற எந்த பாதிப்புகளையும் பொறுப்பேற்காது என்பதுடன் (2) 250 யூரோவை விஞ்சாத தள இணைப்பில் அல்லது அதிலிருந்து எழுகின்ற, உருவாகுகின்ற எந்த வகையானதாகவிருந்தாலும் அந்த வகையான ஏதாவது உரிமைக்கோரல்களின், செயல்களின் அல்லது வழக்குகளின் விளைவாக ஏற்படுகின்ற அனைத்து செலவுகள், நட்டங்கள் அல்லது பாதிப்புகள் ஆகியவற்றுக்கான மொத்த, திரண்ட பொறுப்புக்கும் WFWF பொறுப்பாகாது.

 4. கிடைக்காமை

  தளத்தின் உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியும், WFWF இன் சொந்த தற்றுணிவின் பேரிலும், சில அம்சங்கள் (பீட்டா என அடையாளம் காணப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) மாற்றியமைக்கப்படலாம், தற்காலிகமாக அகற்றப்படலாம் மற்றும்/அல்லது இடைநிறுத்தப்படலாம். தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக கிடைக்காத தளத்தில் வழங்கப்படும் உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றுக்கு WFWF பொறுப்பாகாது.

 5. மாற்றங்கள்

  WFWF எந்த நேரத்திலும் ஜிசியூ ஐ மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம், அதன் சொந்த தற்றுணிவின்படி அது மாற்றியமைத்த அத்தகைய WFWF ஜிசியூ ஐ தளத்தில் பிரசுரிக்கும் போது அது பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றங்களை செய்த பின்னரும் நீங்கள் தளத்தைப் பயன்படுத்தினால், இந்த மாற்றங்களை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றீர்கள் என கருதப்படும். நாங்கள் செய்யும் மாற்றங்கள் முக்கியமானதாக இருந்தால், நியாயமான முறையில் உங்களுக்கு அறிவிப்போம் (உதாரணமாக, தளத்தில் அத்தகைய மாற்றங்கள் பற்றிய ஒரு அறிவித்தலை பிரசுரிப்பதன் மூலம்). மாற்றியமைத்த ஜிசியூ களை நீங்கள் ஏற்கவில்லை என்றால், தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

 6. சட்டம்

  ​இந்த நிபந்தனைகளும் நியதிகளும் பிரெஞ்சு சட்டத்தால் ஆளப்படும். மேலும் அவற்றின் விளக்கத்திலிருந்து அல்லது அவற்றை நிறைவேற்றுவதிலிருந்து எழுகின்ற எந்தவொரு பிணக்காகவிருந்தாலும், சங்கத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகம் அமைந்திருக்கின்ற நீதிமன்றங்களின் பிரத்யேக நியாயாதிக்கத்தினுள் வரும்.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்