பணம், தங்குமிடம், சுதந்திரம்

புரிந்துகொள்ளக்கூடிய வகையில், பணத்தின் மீதான பயமும் எங்கு வாழ்வதென்பதும் உங்களை கட்டுப்படுத்தும் அல்லது வன்முறையான துணையிடம் உங்களைச் சிக்க வைக்கும். இது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் தீர்வுகள் உள்ளன பல்வேறு தெரிவுகளூடாக உங்கள் சுதந்திரத்தை மீண்டும் நாங்கள் நிலை நிறுத்துவோம்

உங்களிடம் நிதி வளங்கள் இல்லையென்றால் அல்லது உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் நிதிக்கான அணுகலைத் தடுத்திருந்தால், உங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட சில தீர்வுகள் உள்ளன. துரதிஷ்டவசமாக, இந்தத் தீர்வுகள் இன்னும் பிரான்சில் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.

நீங்கள் தற்போது பிரான்சில் வசிப்பவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருந்தால், உங்களுக்கு வதிவிட உரிமை அல்லது வருமானம் இல்லாவிட்டாலும், வங்கிக்கணக்கைத் திறக்க உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் பெயரில் ஒரு கணக்கைத் திறக்க வங்கி மறுத்திருந்தால், “Banque de France” எனப்படும் பிரெஞ்சு மத்திய வங்கியின் மூலமாக கணக்கைத் திறக்க நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மக்களுக்கு உதவ பிரெஞ்சு பொது அமைப்புகளால் பல வகையான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் நீங்கள் நிதி உதவியின் முக்கிய வடிவங்களின் மேலோட்டத்தைக் காணலாம்.

நீங்கள் வளராத ஒரு நாட்டில் வேலை தேடுவது கடினமானதாகத் தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மொழி பேசவில்லை என்றால். ஆனால் விடாமுயற்சி, ஆதரவுடன், வேலை தேடுவது அல்லது ஒரு புதிய தொழிலைக் கற்றுக்கொள்வது சாத்தியமாகும்.

உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை பிரான்சில் விற்க விரும்பினால், “micro-entreprise” என்று அழைக்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆட்சியின் மூலம் உங்கள் சிறு வணிகத்தை ஒரு தனி உரிமையாளராகத் தொடங்கலாம், இது “auto-entreprise” என்றும் அழைக்கப்படுகிறது.

பிரான்சில், சட்டத்தின்படி,தேவைப்பட்டால் திருமணமான துணைவர்கள் ஒருவருக்கொருவர் நிதி மற்றும் பொருள் உதவிகளைச் செய்துகொள்ள வேண்டும். நீங்கள் விவாகரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணையிடமிருந்து நிதிப் பங்களிப்புகளைக் கோரலாம்.

பெற்றார்கள் பிரிந்தாலும், தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புடைய செலவுகளுக்குத் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். ஒரு நீதிபதி மற்றைய பெற்றாரிடம் அவரது பிள்ளைகளுடன் தொடர்புடைய கல்வி மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்கான கொடுப்பனவை அல்லது “contribution à l’entretien et à l’éducation de l’enfant” ஐ கேட்கலாம், இது “pension alimentaire” என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஒரு வழக்கறிஞரை அமர்த்துவதற்கும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்துவதற்கும் உங்களிடம் போதுமான பணம் இல்லை என்றால், இந்தச் செலவுகளை ஈடுசெய்யுமாறு நீங்கள் அரசிடம் கேட்கலாம். இது சட்ட உதவி அல்லது “aide juridictionnelle” என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் பிரான்சை விட்டு வெளியேறி உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், சில நிபந்தனைகளின் கீழ், “aide au retour volontaire” அல்லது தன்னார்வத் திரும்பிச் செல்லல் உதவி எனப்படும் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இல்லாவிட்டால், எங்கு செல்வது என்று தெரியாவிட்டால், தீர்வுகள் உள்ளன. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்தான சூழ்நிலையில் நீங்கள் இருக்காமலிருப்பது மிகவும் முக்கியமாகும் உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானதாகும்.

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி முறைமையிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டிக்கொள்ள முடியும். குடும்ப வீட்டிலிருந்து துஷ்பிரயோகம் செய்ப்பவரை வெளியேற்றுவது உட்பட துஷ்பிரயோகம் செய்ப்பவர் உங்களை அணுகுவதை அவர்கள் தடுக்கலாம்

உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social”, என்றும் அழைக்கப்படும் வீட்டை வாடகைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம். இது வாடகைக் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகள் ஆகும், இது பொதுவாக தனியார் வீடுகளை விட மிகவும் மலிவாகக் காணப்படும் நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டிருந்தால், நீங்கள் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

பிரான்சில், தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பது, தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பீட்டளவில் விரைவான வழியாகும். நீங்கள் குடியேறுவதற்கு முன் யாருடன் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என சொத்தின் உரிமையாளரால் நிபந்தனைகள் அமைக்கப்படுகின்றன, நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது மாநகரத்தைப் பொறுத்து, ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆகலாம்.

நீங்கள் பிரான்சில் வசிப்பவராகவும் மற்றும் உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அல்லது உங்கள் வங்கியில் கடன் வாங்க முடியும் என்றால், நீங்கள் ஒரு வீட்டை வாங்குவதை ஆராயலாம். இந்தச் செயல்பாட்டின் முக்கிய படிமுறைகள் மூலம் உங்களை இந்தம் பக்கம் அழைத்துச் செல்லும்.

நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன், நிர்வாக அதிகாரிகள்,சேவை வழங்குநர்கள் தொடர்பாக நீங்கள் பல படிகளைச் செய்ய வேண்டும். உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் மாறுபடலாம்.

நீங்கள் உங்கள் முன்னாள் துணைவருடன் “bail” அல்லது குத்தகைக்கு கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், பிரிந்த பிறகு குத்தகையைப் புதுப்பிப்பது முக்கியமாகும். செலுத்தப்படாத வாடகைக்கு நீங்கள் பொறுப்பாவதிலிருந்து இது உங்களைத் தடுக்கும். வீட்டுத் துஷ்பிரயோகம் காரணமாக நீங்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேறினால், நீங்கள் வீட்டு உரிமையாளருக்கு வழங்க வேண்டிய குறைக்கப்பட்ட அறிவிப்புக் காலத்தின் மூலம் நீங்கள் பயனடையலாம்.

பிரான்சில், துரதிஷ்டவசமாக, பிரெஞ்சு தவிர மற்ற மொழிகளில் மிகச் சில சேவைகளும் படிவங்களும் கிடைக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டிய சில விடயங்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் மற்றும் வேலை தேடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஆரம்ப மட்டம் எதுவாக இருந்தாலும், பல தீர்வுகள் இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தியும் கிடைக்கின்றன.

பல்கலைக்கழகத்தில் படிப்பது ஒரு பட்டம் பெற உங்களை அனுமதிக்கும், இது பிரான்சில் வேலை தேடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது சில தொழில் முயற்சிப் பிரவேசங்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். பிரஞ்சு நாட்டவர் அல்லாதவர்கள் சில நிபந்தனைகளின் கீழ் பிரான்சில் படிப்பில் சேரலாம்.

பிரான்சில், மூன்று வயது முதல் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பள்ளி வருகை கட்டாயமாகும். உங்கள் பிள்ளைகள் மூன்று வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்றால், வெவ்வேறு பிள்ளைப் பராமரிப்புத் தீர்வுகள் உள்ளன. பிள்ளைப் பராமரிப்பின் பங்கு பிள்ளைகளைப் பராமரிப்பது மற்றும் அவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு என்பவற்றை உறுதி செய்வதுமாகும்.

குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து வெகு தொலைவில், குறிப்பாக நீங்கள் வீட்டு துஷ்பிரயோகத்தை அனுபவித்திருந்தால், தனிமைப்படுத்தப்படுவதை அனுபவிப்பது இயல்பானது. இருப்பினும், நீங்கள் பிரெஞ்சு மொழி பேசாவிட்டாலும், உங்கள் கலாச்சாரம் அல்லது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களின் சமூகத்தைக் கண்டறிய முடியும்.

நீங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று நிரந்தரமாக பிரான்சில் தங்கியிருந்தால், ஒரு பொதுவான விதியாக நீங்கள் அதை பிரெஞ்சு உரிமத்திற்கு மாற்ற வேண்டும். பல நாடுகள் பிரான்சுடன் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. உங்களிடம் உரிமம் இல்லையென்றால் அல்லது உங்களுடையதை மாற்ற முடியாவிட்டால், நீங்கள் பிரான்சில் ஓட்டுநர் சோதனையையும் மேற்கொள்ளலாம்.

சாட்சியங்கள்

நான் அவருக்காக பிரான்சுக்கு வந்தேன். நான் நல்ல ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டேன், அங்கு மதிப்பும் மரியாதையும் பெற்றதாக உணர்ந்தேன். நான் வந்தபோது, பிரெஞ்சு மொழியின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு வேலை கிடைக்கவில்லை. பிரிந்த நேரத்தில், பிரெஞ்சுக் கணக்கில் அவர் பெயரில் இருந்த எனது சேமிப்புகள் அனைத்தையும் அவர் முடக்கினார். என்னிடம் எதுவும் மிச்சமில்லை, காவல்துறையால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனது நாட்டில், இது பொருளாதார வன்முறையாக கருதப்பட்டிருக்கும், ஆனால் நான் அறிந்ததிலிருந்து இந்த பொருளாதாரத் துஷ்பிரயோகம் பிரான்சில் சட்டப்பூர்வமாக உள்ளது! எனது பணத்தை நான் மீண்டும் பார்க்கவில்லை நான் முதலில் இருந்து ஆரம்பித்து, உயிர் வாழ்வதற்காக முதல் வேலையை எடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் மீறி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அடைந்த முன்னேற்றம் குறித்து பெருமைப்படுகிறேன். நான் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டேன், எனது நிபுணத்துவத் துறையில் ஒரு வேலையைக் தேடிக்கொண்டேன், எனக்கு சிறந்த நண்பர்கள் உள்ளனர், இறுதியாக மீண்டும் சேமிக்கத் தொடங்கினேன்

"ஹெலன்" - ஐக்கிய இராச்சியம் - 54 வயது

நான் பிரான்சுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன், அவர் விரைவில் என்னுடன் வன்முறையில் ஈடுபட்டார். அதை மீண்டும் செய்ய மாட்டேனென்று ஒவ்வொரு முறையும் உறுதியளித்தார். நான் சட்டவிரோதமாக இங்கு இருந்தேன், இதனால் அவர் இல்லாமல் எனக்கு எவ்வாய்ப்பும் இல்லையென்று அவர் என்னிடம் கூறினார். எங்கே போவதென்று கூடத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கையில், அவரை சார்ந்து என்னை இருக்க முயற்சித்திருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறேன். நான் வன்முறைக்கு ஆளானேன் என்பதை புரிந்து கொள்ள உதவிய ஒரு சங்கத்துடன் சந்திப்பை முடித்தேன், அவர்கள் எனது ஆவணங்களுடன் எனக்கு உதவினார்கள்.

“லியூ” - சீனா - 28 வயது

எனது இயலாமையால் எனக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம் எனது பிரிவிற்குப் பிறகு, நான் மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் இருந்தேன். அதிஷ்டவசமாக, நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன், அவர் உள்ள அமைப்புகளைப் பற்றி எனக்குத் தெரிவித்தார். இப்போது, நான் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி பெறுவதுடன் எனது வேலை தேடலில் Cap Emploi இன் ஆதரவைப் பெறுகிறேன், மேலும் நண்பர்களை உருவாக்கக் கூடிய நடன வகுப்புகளுக்கு நான் பதிவு செய்துள்ளேன்.

“ஹூடா” - துனிசியா - 43 வயது

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்