பாதுகாப்புத் திட்டமிடலும் பாதுகாப்பு உத்தரவுகளும்
உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதலாவதாக முன்னுரிமையானது. துரதிருஷ்டவசமாக நீங்கள் ஒரு கட்டுப்படுத்தும் அல்லது வன்முறை துணைவர் மூலம் பாதுகாப்பாக இல்லை, ஆனால் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க தீர்வுகள் உள்ளன. நீங்கள் உடனடி ஆபத்தில் இருந்தால், காவல்துறையை 17 இல் அழைக்கவும் அல்லது 114 மூலம் SMS அனுப்பவும்.
ஒரு அவசர நிலையில், காவல்துறைக்கு 17 அல்லது அவசர மருத்துவ சேவைகளுக்கு 112 ஐ அழைக்கவும். அவர்களின் பங்கு அனைவருக்கும் அவர்களின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், செல்லுபடியாகும் குடியிருப்பு உரிமை இல்லாதவர்களுக்கும் உதவி வழங்குவதாகும்.
உறவுமுறையொன்றை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாக இருக்கலாம். முன்பு ஒரு துணைவர் கட்டுப்படுத்துதல், துஷ்பிரயோகமான அல்லது சொந்தமாக்கிக் கொள்ளும் நடத்தை ஆகியவற்றைக் கொண்டிருந்தால், வெளியேறும் தருணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். நீங்கள் நன்கு ஆயத்தமாக இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.
எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை விட்டு வெளியேற முடியாமல் போகலாம். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்கவும் முயற்சி செய்யவும் நீங்கள் வைத்திருக்க முடியுமான உத்திகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே புண்படுத்தக்கூடிய அல்லது கட்டுப்படுத்துகின்ற நடத்தையை வெளிப்படுத்திய ஒருவருடன் நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் ஆக்ரோஷமாக நடக்க ஆரம்பித்தால், கூடிய விரைவில் பாதுகாப்பைப் பெற முயற்சிக்கவும். உங்களால் தப்பிக்கவோ அல்லது உதவிக்கு அழைக்கவோ முடியாவிட்டால், அவர்களின் ஆக்ரோஷத்தை அமைதிப்படுத்த உதவும் கடைசி முயற்சியாகச் சில உத்திகள் உள்ளன.
உறவின் போதும் நீங்கள் பிரிந்த பிறகும், உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு உங்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகள் என்பவற்றைக் கண்காணிக்க முயற்சி செய்யக் கூடும். இது மிகவும் பயங்கரமானதாக இருக்கலாம், ஆனால் அதற்கும் தீர்வுகள் உள்ளன.
நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி முறைமையிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டிக்கொள்ள முடியும். குடும்ப வீட்டிலிருந்து துஷ்பிரயோகம் செய்ப்பவரை வெளியேற்றுவது உட்பட துஷ்பிரயோகம் செய்ப்பவர் உங்களை அணுகுவதை அவர்கள் தடுக்கலாம்
கட்டாய சிவில், மத அல்லது பாரம்பரிய திருமணத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால், ஒரு பிரெஞ்சு நீதிபதியால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம். நீங்கள் வேறொரு நாட்டிலிருந்து கட்டாயத் திருமணத்தை விட்டும் நீங்கி தப்பி ஓடினால், புகலிட உரிமை என்றும் அழைக்கப்படும் பிரான்சின் சர்வதேச பாதுகாப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.