குற்றவாளிகள் பிரெஞ்சு சட்டமுறைமையில் மோசடி செய்வதை அடையாளம் காணுதல்

குற்றவாளிகள் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்த பொதுவான உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அவர்களின் துஷ்பிரயோகத்தை தொடர்ந்து செய்ய அநேகமாக சட்ட முறைமையை பயன்படுத்துவார்கள். எவ்வாறாயினும், நீதிபதிகள், காவல்துறையினர், ஊடகங்கள், சமூகம் ஆகிய அனைவரும் அத்தகைய குற்றவாளி இயக்கப்படும் தந்திரோபாயங்களையும் நடத்தை முறைகளையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர்.

Assoc உறுதிப்படுத்தியது. 17/11/2023 ஆம் திகதி துணைப் பேராசிரியர் Andreea Gruev-Vintila ஆல் உறுதிப்படுத்தப்பட்டது.

உத்தி

குடும்ப துஷ்பிரயோகம் செய்பவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான உத்தி "DARVO" (denying, attacking, and reversing the roles of victim and offender) என அழைக்கப்படுகினற்து. இது ஆங்கிலத்தில் சுருக்கமாக, பாதிக்கப்பட்டவரினதும் குற்றவாளியினதும் வகிபாகங்களை மறுத்தல், தாக்குதல் மற்றும் தலைகீழாகமாற்றிவிடுதல் முதலிய விடயங்களைக் குறிக்கின்றது.

துஷ்பிரயோகம் செய்பவரால் அது சரி என நினைக்க வைக்குமளவுக்கு கைப்பொம்மையாக்கப்பட்டுள்ள குற்றவாளியினது ஆதராவளர்களில் ஒருவரின் உதவியுடன் இந்த உத்திகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும்.

குற்றவாளிகள் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் செய்யவில்லை என மறுப்பார்கள், துஷ்பிரயோகம் பற்றி அறிக்கையிடும் எவரேனும் ஒருவரை இழிவான முறையில் தாக்குவார்கள், அது மட்டுமன்றி அவ்வாறு அறிக்கையிடுகின்றவர்கள் தான் அந்த சூழ்நிலையில் குற்றாவாளிகள் எனவும் கூறுவர்கள்.

இந்த உத்திகள் தனிநபர் விடயங்களிலும் வழமையாக சட்ட நடவடிக்கைகளிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

அவர் துஷ்பிரயோகம் செய்யவில்லை என மறுக்கிறார்

பெண்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது என்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பொதுவாக காணப்படுவதாக ஆராய்ச்சிகளும் புள்ளிவிவரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும், பெரும்பாலான வழக்குகளில், குற்றவாளிகள் தப்பிப்பிழைத்தவரின் குற்றச்சாட்டுகள் பொய் என மறுத்துரைப்பார்கள்.

குற்றவாளி முன்வைக்கும் பொதுவான தற்காப்புக் குற்றச்சாட்டுக்கள்: 

  • எங்கள் பிள்ளைகளின் முழுப் பாதுகாப்பு உரிமைகளையும் பெற அவள் பொய் சொல்கிறாள்
  • அவள் தன் சொந்த நிதி இலாபத்திற்காக பொய் சொல்கிறாள்
  • அவள் பழிவாங்க பொய் சொல்கிறாள்
  • குடிவரவு ஆவணங்களைப் பெறுவதற்காக அவள் பொய் சொல்கிறாள்
  • அவள் பைத்தியமாக இருக்கிறாள்/அதிகளவு மனநலம் பாதிக்கப்பட்டவள்.

வீட்டு வன்முறை பற்றிய நிபுணத்துவ அறிவுடையவர்கள் இந்தக் கூற்றுகளுக்கு உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை என்பதை அறிந்திருப்பார்கள், ஆனால் அவை இன்னும் குற்றவாளிகளாலும், அவர்களின் சட்டத்தரனிகளாலும் அவர்களின் வழக்கை வெல்லும் முயற்சியில் பிரயோகிக்கப்படுகின்றன.

என்னால் என்ன செய்ய முடியும்?

  • துஷ்பிரயோகம் பற்றிய உங்களின் நினைவில் நம்பிக்கை வையுங்கள்.
  • வன்முறை சம்பவங்கள், துஷ்பிரயோகம் மற்றும் அவரது கட்டுப்படுத்தும் நடத்தை ஆகியவற்றை உங்களால் முடிந்தவரை விரைவில் குறித்துக்கொள்ளுங்கள்.
  • முடிந்தவரை ஆதாரங்களையும் பல சாட்சிகளையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

அவர் வன்முறை பற்றி அறிக்கையிடும் நபரை தாக்குவார்

தப்பிப்பிழைத்தவர், அவர்களின் பிள்ளைகள் அல்லது சாட்சியாக இருந்தாலும், குற்றவாளிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யும் எவரையும் குற்றவாளிகள் இழிவுபடுத்தவும் மிரட்டவும் முயற்சிப்பது மிகவும் பொதுவான ஒரு செயலாகும்.

இந்த அவதூறு உத்திகளில் பொதுவாக பின்வருவன உள்ளடங்கும்:

  • தப்பிப்பிழைத்தவர் மற்றும்/அல்லது வன்முறைக்கு எதிராக முறைப்பாடு செய்யும் நபர் பற்றி தவறான, பாதிப்பான தகவல்களைப் பரப்புதல்
  • தப்பிப்பிழைத்தவருக்கு எதிராக போதைப்பொருள் துஷ்பிரயோகம் அல்லது தீவிர மனநல குறைகள் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தல்
  • தப்பிப்பிழைத்தவரின் மனநல சிகிச்சையை பயன்படுத்தி தகுதியற்ற பெற்றோர் எனக் கூறுதல்
  • துன்புறுத்தலின் ஒரு வடிவமாக தவறான காரணங்களின் அடிப்படையில் வழக்குகளை தாக்கல் செய்தல்
  • பாதிக்கப்பட்டவர்/தப்பிப்பிழைத்தவர் என்ற பெயரில் மோசடி போன்ற குற்றங்களை செய்தல்
  • மேற்கூறியவற்றில் ஏதாவதொரு விதத்தில், பாதிக்கப்பட்டவரை/தப்பிப்பிழைத்தவரை அச்சுறுத்தல்.

என்னால் என்ன செய்ய முடியும்?

  • பிரிந்ததையடுத்து வரும் பிந்தைய துஷ்பிரயோகம் எனப்படுகின்ற வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறீர்கள் என்பதை உணர்ந்து, உதவியை நாடுங்கள்.
  • குற்ற உணர்வு, சங்கடம் ஆகியன இல்லாமல் அல்லது அவமானப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர் தவறு செய்கிறார், நீங்கள் அல்ல.
  • எந்தவொரு தவறான கூற்றையும் மறுத்துரைக்க நீங்கள் எத்தகைய சான்றை முன்வைக்கலாம் என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

அவர் பாதிக்கப்பட்டவரினதும் குற்றவாளியினதும் பொறுப்புக்களை தலைகீழாக மாற்றுவார்

பெண்கள் குடும்ப துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது அரிது என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்கள் வன்முறையாக நடந்துகொள்ளும் போது, பொதுவாக அவர்கள் அவ்வாறு செய்வது வன்முறையை எதிர்ப்பதற்காக, கட்டுப்படுத்துவதற்காக அல்லது தப்பிப்பிழைப்பதற்காக என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறன. இருப்பினும், குற்றவாளிகள் அநேகமாக அவர்களால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்.

அதிஷ்டவசமாக, அதிகாரிகள் இந்த குற்றவாளியின் நடத்தையை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த உத்திகளில் பொதுவாக பின்வருவன உள்ளடங்கும்:

  • தப்பிப்பிழைத்தவருக்கு எதிராக காவல்துறையினரிடம் அல்லது பிள்ளைகள் பாதுகாப்பு சேவைகளிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துதல்
  • பிள்ளைகளை பாதுகாக்க முயற்சிப்பதற்காக "பெற்றோரின் அந்நியப்படுத்தல்" என்று தப்பிப்பிழைத்தவரை குற்றம் சாட்டுதல்
  • பாதிக்கப்பட்டவர் போல் நடித்து, தப்பிப்பிழைத்தவர் தான் குற்றவாளி என்று கூறுதல்.

என்னால் என்ன செய்ய முடியும்?

  • குற்ற உணர்வு, சங்கடம் ஆகியன இல்லாமல் அல்லது அவமானப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர் தவறு செய்கிறார், நீங்கள் அல்ல.
  • அதிகம் கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதிகாரிகள் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் விசாரிக்க சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளனர், ஆனால் இந்த பொதுவான குற்றவாளி உத்தியையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர்.
  • தவறான உரிமைகோரல்களை மறுத்துரைப்பதற்கும்/அல்லது அவரது தவறான மற்றும் வன்முறையான நடத்தையின் வடிவத்தை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டுவதற்கும் நீங்கள் முன்வைக்கக்கூடிய ஏதாவதொரு சான்றை பற்றிச் சிந்தியுங்கள்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்