துஷ்பிரயோகம் நடந்ததற்கான சான்றுகளைச் சேகரித்தல்

துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றாலும், சான்றுகளைச் சேகரிப்பது முக்கியமாகும். உதாரணமாக, வீட்டுவசதி, வதிவிட உரிமைகள் அல்லது விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு போன்றவற்றில் உங்கள் உரிமைகளைப் பின்னர் பயன்படுத்துவதற்கு இது உங்களுக்கு உதவக்கூடும்.

23/02/2024 அன்று மைட்ரே பாலின் ரோங்கியர் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்?

உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்களிடம் மற்றும்/அல்லது உங்கள் பிள்ளைகளிடம் துஷ்பிரயோகமான அல்லது கட்டுப்படுத்தும் நடத்தையை வெளிப்படுத்தினால், சான்றுகளைச் சேகரிப்பது முக்கியமாகும்.

இன்று துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் வீட்டுவசதி, குடியேற்றம், விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு தொடர்பான உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு இந்தச் சான்று உங்களுக்கு உதவக் கூடும்.

நான் எவ்வாறு அதைச் செய்ய வேண்டும்?

சான்றாக எதைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க உதவும் வகையில் கீழே உள்ள பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

புகாரைப் பதிவு செய்வதற்கு முன் மற்றும்/அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நீதிபதியிடம் விண்ணப்பிக்கும் முன் நீங்கள் சான்றுகளைச் சேகரிக்க வேண்டியதில்லை. உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதலாவதாக முன்னுரிமையானது.

நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்:

  • நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே சான்றுகளைச் சேகரிக்கவும்
  • அதை எங்காவது பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைப்பதற்கு நினைவில் கொள்ளவும்
  • இரகசிய Mémo de Vie பணித்தளத்தில் உள்ள(Google Drive, Dropbox, iCloud, முதலியன) நிகழ்நிலை சேமிப்பகத்தில் சேமிக்கலாம் அல்லது தொழில் வல்லுநர் அல்லது நண்பர் போன்ற நீங்கள் நம்பும் ஒருவருக்கு அனுப்பலாம்.
  • குற்றம் புரிபவருக்கு உங்கள் கடவுச்சொற்கள் தெரியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் அவற்றை மாற்றவும்.
  • பின்வருவனவற்றை விவரப்பதற்கு ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கவும்:

    • துல்லியமாக என்ன நடந்தது: உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் என்ன சொன்னார் அல்லது என்ன செய்தார்
    • திகதியும் இடமும்
    • சாட்சிகள் யாராவது இருப்பின் அவர்களின் விவரங்கள்
    • நீங்கள் நினைக்கக் கூடிய வேறு ஏதாவது சான்றுகள்.

    நீங்கள் இதை நிகழ்நிலையில் செய்யலாம், உதாரணமாகப் பாதுகாப்பான Mémo de Vie பணித்தளத்தில் (பிரெஞ்சு மொழியில் மட்டுமே கிடைக்கும்). இது நடத்தைச் சாட்சிப் பத்திரங்கள், வாழ்க்கைக் கதைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் என்பவற்றைச் சேமிப்பதற்கு உங்களை அனுமதிக்கிறது.

  • துஷ்பிரயோகத்தின் ஒப்புக்கொள்ளல்கள், துஷ்பிரயோகத்திற்காக மன்னிப்புக்கோரல்கள், அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள், கட்டுப்படுத்தலுக்கான முயற்சிகள் அல்லது தொல்லை கொடுக்கின்ற நடத்தைகள் போன்று அவர்களிடமிருந்து நேரடியாக வரும் சான்றுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக:

    • மின்னஞ்சல்கள்
    • குறுஞ்செய்திகள்(அனுப்புபவரின் தொலைபேசி எண்ணைக் காட்டுகின்ற ஸ்க்ரீன்ஷாட்கள்)
    • குரல் வடிவிலான செய்திகள்
    • குறுந்தகவலனுப்பும் பயன்பாடுகளில் உள்ள செய்திகள் (உ.ம். Messenger, WhatsApp, Signal).
  • உதாரணமாகச் சிராய்ப்புக் காயங்கள், காயங்கள் அல்லது வடுக்கள்.

    • நீங்களாகவே உங்களைக் கழுவிக்கொள்ள வேண்டாம்.
    • உங்களால் இயலுமானவுடன், விரைவாக ஒரு மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்குச் செல்லவும். ஒரு உடல்நலக் கவனிப்பு நிபுணர் உங்களைப் பரிசோதிக்கவும் தாக்குதலுக்கான சான்றுகளைச் சேகரிக்கவும் முடியும்.
    • மருத்துவப் பரிசோதனையின் மூலம் துஷ்பிரயோகம் செய்தவரின் DNA ஐப் பயன்படுத்தி அவரை உறுதியாகக் கண்டறிய முடியும்.

    நீங்கள் வயது வந்தவராக இருந்தால் (18 வயதிற்கு மேல்), மருத்துவ ஊழியர்கள் மருத்துவ இரகசியத்தை மதிக்க வேண்டும், மேலும் உங்கள் அனுமதியின்றி துஷ்பிரயோகத்தைத் தெரிவிக்க முடியாது.

  • சாத்தியமென்றாலும் நீங்கள் அவ்வாறு செய்வது பாதுகாப்பானதென்றாலும், துஷ்பிரயோகம் நடைபெறுவதை விவேகமாகப் பதிவு செய்யவும் அல்லது படமெடுக்கவும். உதாரணமாக, உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்திக் குரல் பதிவைத் தொடங்கலாம்.

    இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.

  • சாத்தியமெனில், துஷ்பிரயோகத்தின் அடையாளங்கள் உள்ள பொருட்களை அல்லது ஆடைகளைப் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும் அல்லது அவற்றைப் புகைப்படம் எடுக்கவும்.

    இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.

  • பின்வருவனவற்றைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ நடத்தைச் சாட்சிப் பத்திரத்தை வழங்குமாறு உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கவும்:

    • அவர்கள் எவ்வாறு உங்களைச் சந்தித்தார்கள்
    • அவர்கள் உங்களை எவ்வளவு காலமாக அறிந்திருக்கிறார்கள்
    • உங்களுடனும் குற்றம் புரிந்தவருடனுமான அவர்களின் உறவு
    • அவர்கள் எதைக் கண்டார்கள்
    • அவர்கள் எப்போது அதைக் கண்டார்கள்
    • துஷ்பிரயோகம் பற்றி நீங்கள் அவர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ள விடயங்கள்.

    ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும். உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.

  • நீங்கள் கலந்தாலோசிக்கும் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் சான்றாகச் செயல்படும் ஆவணங்களை எழுத முடியும். உதாரணமாக:

    • நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி, நடந்த துஷ்பிரயோகத்தைப் பதிவுசெய்யும் மருத்துவச் சான்றிதழை அவரிடம் கேட்கலாம்
    • அவசரகால சேவைகள் உங்களுக்கு உதவியிருந்தால், ஒரு அறிக்கையை உங்களுக்கு வழங்கும்படி அவர்களிடம் கேட்கவும்
    • நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், அறிக்கையொன்றைக் கோரவும்: இது ஒரு “Certificat Initial Descriptif (CID)” ஆக அல்லது “Compte Rendu des Urgences (CRU)” ஆக இருக்கலாம்.
  • உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தெரிந்த தொழில் வல்லுநர்களிடம் அறிக்கையொன்றை அல்லது “attestation” ஐ வழங்குவதன் மூலம் சான்றுகளை வழங்குமாறு கேட்கவும்.

    இது ஒரு சமூக சேவகராக, வழக்கறிஞராக, பள்ளி ஆசிரியராக அல்லது உங்களுக்கு உதவிய "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றாகக் கூட இருக்கலாம்.

    ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும்.

    உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.

  • உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் பணத்திற்கும் ஆவணங்களுக்குமான உங்கள் அணுகலைக் கட்டுப்படுத்தினால் அல்லது அச்சுறுத்தினால், பின்வரும் சான்றுகளை வைத்திருக்கவும்:

    • கணக்கு அறிக்கைகள்
    • உங்கள் துணைவர் பயன்படுத்தும் உங்கள் பெயரில் உள்ள கடன் ஒப்பந்தங்கள்
    • உங்கள் வருமானம் அல்லது செலவுகள் குறித்த எழுத்து வடிவிலான கடிதப் போக்குவரத்துகள்
    • உங்களை வேலை செய்வதிலிருந்தும், கல்வி கற்பதிலிருந்தும் அல்லது பிரெஞ்சு வகுப்புகளில் கலந்து கொள்வதிலிருந்தும் அவர் தடுக்கின்ற எழுத்து வடிவிலான கடிதப் போக்குவரத்துகள்
    • உங்கள் அடையாள ஆவணங்கள் போன்ற உங்கள் ஆவணங்களை மீட்டெடுக்க நீங்கள் கேட்கின்ற எழுத்து வடிவிலான கடிதப் போக்குவரத்துகள்
    • அவர் உங்களின் வளங்களைக் கவர்ந்து கொள்கிறார், மேலும் புதிய புதிய வளங்களைப் பெறுவதைத் தடுக்கின்றார் என்பதற்கான ஏதாவது சான்றுகள்.
  • துஷ்பிரயோகமான அல்லது ஆதிக்கம் செலுத்துகின்ற நடத்தைக்கான எந்தச் சான்றையும் வைத்திருக்கவும்:

    • கடந்தகால நீதிமன்ற தீர்ப்புகள்
    • அவரிடமிருந்து துஷ்பிரயோகத்தை அனுபவித்த முன்னாள் துணைவரிடமிருந்து ஒரு சாட்சி அறிக்கை அல்லது “attestation de témoin”.

    ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும். உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.

    இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. சாட்சிகள் உங்கள் துணைவரிடம் அல்லது முன்னாள் துணைவரிடம் சொல்ல மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.

  • நீங்கள் புகாரொன்றைப் பதிவு செய்யத் தயாராக இல்லை எனில், எந்தவொரு பொலீஸ் நிலையத்திலும், அதாவது ஒரு “commissariat de police” இல் அல்லது “brigade de gendarmerie” இல் பதிவொன்றை அல்லது “main courante” ஐச் சமர்ப்பிப்பதன் மூலம் துஷ்பிரயோகத்தை இலகுவாகப் புகாரளிக்கலாம்.

    இந்த பதிவு நீங்கள் புகாரளிக்கும் உண்மைகளைப் பதிவு செய்யும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது பொதுவாக விசாரணையொன்றைத் தூண்டுவதில்லை.

    குறிப்பு: iவீட்டுத் துஷ்பிரயோக வழக்கொன்றில், பதிவை அல்லது “main courante” ஐ அரசு வழக்கறிஞருக்கு அல்லது “procureur de la République” இற்கு அனுப்ப வேண்டிய கடமை பொலிசாருக்கு உள்ளது. வன்முறை மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட்டால், அவர்கள் விசாரணையை மேற்கொள்வதற்கும், குற்றவாளி மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்யலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் இந்தக் கோப்பகத்தில் உங்கள் பகுதியில் உள்ள “CIDFF” இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "சங்கம்" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளல்

உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது…

நீங்கள் இன்னும் ஒன்றாக வாழும்போது பாதுகாப்பு உத்திகளை வைத்திருத்தல்

எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை…

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்

வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்