பிரான்சில் வங்கிக் கணக்கொன்றைத் திறத்தல்

நீங்கள் தற்போது பிரான்சில் வசிப்பவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருந்தால், உங்களுக்கு வதிவிட உரிமை அல்லது வருமானம் இல்லாவிட்டாலும், வங்கிக்கணக்கைத் திறக்க உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் பெயரில் ஒரு கணக்கைத் திறக்க வங்கி மறுத்திருந்தால், “Banque de France” எனப்படும் பிரெஞ்சு மத்திய வங்கியின் மூலமாக கணக்கைத் திறக்க நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

24/05/2023 அன்று Ouarda Varda Sadoudi ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

நிபந்தனைகள்

பிரான்சில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வதிவிட உரிமைகள் அல்லது வருமானம் இல்லாமல் கூட வங்கிக் கணக்கைத் திறக்கலாம். இந்த உரிமை “droit au compte” என்று குறிப்பிடப்படுகிறது. பொருந்தக்கூடிய சட்டம்: 29 ஜூலை 1998 சட்டத்தின் பிரிவு 137 “loi d’orientation relative à la lutte contre les exclusions” என்று அறியப்படுகிறது.

கட்டாயம் இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவது போன்ற குறித்த நிபந்தனைகளைச் சில வங்கிகள் விதிக்கின்றன.

எப்படித் தொடர வேண்டும்

 • பிரான்சில் வங்கிக் கணக்கைத் திறக்க, தேவையான ஆவணங்களைக் கொண்ட ஒரு கோப்பை நீங்கள் முதலில் தயாரிக்க வேண்டும்:

  • உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற அடையாள ஆவணம்
  • மூன்று மாதங்களுக்குக் குறையாத வாடகைப் பற்றுச்சீட்டு, எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணம் அல்லது நீங்கள் தங்கியிருக்கும் நபரின் “attestation d’hébergement” போன்ற உங்கள் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் வதிவிடச் சான்று அல்லது “justificatif de domicile” என அறியப்படும்.
 • Nickel account போன்று, “bureaux de tabac” எனப்படும் சிகரெட் கடையில் வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.

  கணக்கைத் திறக்கும்போது ஒரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும், பொதுவாக வருடத்திற்கு 20 யூரோக்கள் ஆகும்.

  Relevé d’identité bancaire (RIB)” எனப்படும் வங்கி அடையாள ஆவணம், வங்கிக் கணக்கு, வங்கி அட்டை ஆகியவற்றை நீங்கள் சில நிமிடங்களில் பெறுவீர்கள்.

 • நீங்கள் பல வங்கிகளைத் தொடர்புகொண்டு அவை என்ன சேவைகளை வழங்குகின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்

  உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் பெயரில் கணக்கைத் தொடங்க இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:

  • ஒரு வங்கிக் கிளையில், ஆலோசகர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொள்வதன் மூலம். உங்கள் சந்திப்பிற்கு உங்களின் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
  • நிகழ்நிலையில், வங்கியின் இணையதளத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றுவதன் மூலம்.
 • உங்கள் பெயரில் கணக்குத் தொடங்க வங்கி ஒப்புக்கொண்டால்:

  • convention”அல்லது ஒப்பந்தம் எனப்படும் கணக்குத் திறப்பதை உறுதிப்படுத்த கையொப்பமிட வேண்டிய ஆவணத்தை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள் அல்லது அனுப்புவார்கள்.
  • உங்கள் வங்கிக்கு மூடல் கோரிக்கையை அஞ்சல் மூலம் அனுப்புவதனால் நீங்கள் விரும்பும் போது இந்த வங்கிக் கணக்கை மூடலாம்.

  வங்கி உங்கள் பெயரில் கணக்கைத் திறக்க மறுத்தால்:

  • உங்கள் விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்ததாகக் குறிப்பிடும் “attestation de refus d’ouverture de compte”என்ற ஆவணத்தை உங்களுக்கு வழங்க வேண்டும்.
  • வங்கி உங்களுக்கு “attestation de refus d’ouverture de compte” என்ற ஆவணத்தை வழங்கவில்லை என்றால், அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • ஒரு சில நாட்களுக்குள் பிரெஞ்சு மத்திய வங்கியில் வங்கிக் கணக்கைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இந்த ஆவணம் உங்களுக்கு உதவும். செயல்முறையை நாங்கள் கீழே விளக்குவோம்.

ஒரு வங்கி மூலம் நிராகரிக்கப்பட்டால்

உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், “Banque de France” என்றழைக்கப்படும் பிரெஞ்சு மத்திய வங்கியைத் தொடர்புகொண்டு, உங்கள் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்கக் கட்டாயப்படுத்தும் நடைமுறையைத் தொடங்குமாறு கேட்கலாம். இந்தச் செயல்முறை “procédure de droit au compte”என்று அழைக்கப்படுகிறது.

 • உங்களுக்கு அருகிலுள்ள “Banque de France” இற்கான தொடர்பு விவரங்களை this website காணலாம்.

  ஒரு கிளைக்கு நேரிலும் தபால் மூலமாகவும் அல்லது “Banque de France” இன் இணையதளத்தில் நிகழ்நிலையில் தனிப்பட்ட சுயவிவரத்தை உருவாக்குவதன் மூலமும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.

  உங்கள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் செய்தால், அதை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

  • பூர்த்தி செய்யப்பட்ட கணக்குரிமை அல்லது “droit au compte” விண்ணப்பப்படிவம்
  • உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி உங்களுக்கு வழங்கும் ஆவணம் “attestation de refus d’ouverture de compte” என்றழைக்கப்படும்.
  • உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற செல்லுபடியாகும் அடையாள ஆவணம்
  • மூன்று மாதங்களுக்குக் குறையாத வாடகைப் பற்றுச்சீட்டு, எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணம் அல்லது நீங்கள் தங்கியிருக்கும் நபரின் “attestation d’hébergement”போன்ற உங்கள் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் வதிவிடச் சான்று அல்லது “justificatif de domicile” என அறியப்படும்.

  lettre recommandée avec accusé de réception” அல்லது கடிதத்தின் விநியோகம் பதிவு செய்யப்பட்டு, பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்கக் கூடியஒரே வழி இதுவாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

 • உங்கள் விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, “Banque de France” ஆல் ஒரு வங்கியை நியமிக்க இரண்டு வேலை நாட்கள் இருக்கிறது

  சில நாட்களுக்குப் பிறகு உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கிய முகவரிக்கு அஞ்சல் மூலம் பதிலைப் பெறுவீர்கள்.

  நியமிக்கப்பட்ட வங்கியுடன் நீங்கள் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் கோரப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியவுடன், உங்கள் பெயரில் ஒரு கணக்கைத் திறக்க அவர்களுக்கு மூன்று வேலை நாட்கள் போகும்,

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • associations” எனப்படும் நிறுவனங்கள் உள்ளன, அவை வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கின்றது.

  • இந்தச் சேவைகள் இலவசமாகும்.
  • அவர்கள் உங்கள் உரிமைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
  • Banque de France” என்றழைக்கப்படும் பிரெஞ்சு மத்திய வங்கியின் வங்கிக் கணக்கிற்கான உங்கள் உரிமையைச் செயல்படுத்தும் “droit au compte” என்ற நடைமுறையைச் செயல்படுத்த அவர்கள் உங்களுக்கு உதவலாம்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் certified“associations களின் பட்டியலைப் பார்க்கலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

அவசரமாக நிதியை அணுகுதல்

உங்களிடம் நிதி வளங்கள் இல்லையென்றால் அல்லது உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் நிதிக்கான…

அரச நிதி உதவியை கோருதல்

வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மக்களுக்கு உதவ பிரெஞ்சு பொது அமைப்புகளால் பல வகையான நிதி…

பிரான்சில் வேலை தேடுவது, தொழிற்பயிற்சி பெறுவது

நீங்கள் வளராத ஒரு நாட்டில் வேலை தேடுவது கடினமானதாகத் தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மொழி பேசவில்லை…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்