பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்குப் பிறகு சிகிச்சை பெறுதல்

நீங்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் குணமடையும் போது உங்களை ஆதரிக்கும் அமைப்புகளும் நிபுணர்களும் உள்ளனர் - அது உளவியல் ரீதியாகவோ அல்லது அறுவைசிகிச்சை ரீதியாகவோ இருக்கலாம். இந்தத் தொழில்முறை வல்லுநர்கள் அதே சூழ்நிலையில் பெண்களுக்கு ஆதரவளிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்.

22/09/2023 அன்று La Maison des Femmesஆல் சரிபார்க்கப்பட்டது

நீங்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அது உங்கள் தவறு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தவொரு தீர்ப்பும் வழங்காமல், உங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய பல வல்லுநர்கள் உள்ளனர்.

உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்புப் பகுதிகளை பகுதியளவில் அல்லது முழுவதுமாக அகற்றுவதற்கு வழிவகுக்கும் தலையீடுகள் அல்லது பெண் பிறப்புறுப்பு உறுப்புகளின் பிற சிதைவுகள் பெண் பிறப்புறுப்புச் சிதைவு அல்லது “mutilations sexuelles féminines (MSF)” அல்லது சில நேரங்களில் “mutiliations génitales féminines (MGF)”அல்லது “excisions” என்று குறிப்பிடப்படுகின்றது. 

பெண்ணின் பிறப்புறுப்பைச் சிதைப்பது மனித உரிமை மீறலாகக் கருதப்படுகிறது. இது பிரெஞ்சு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒரு "crime", மிகவும் கடுமையான தண்டனைச் சட்ட மீறல் எனக்கருதப்படுகின்றது. இருப்பினும், நீங்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் குடும்பத்திற்கு நீதித்துறையால் வழக்குத் தொடரப்படாமலேயே நீங்கள் சுகாதாரப் பராமரிப்பை நாடலாம்.

சிகிச்சை பெறுதல்

உங்கள் குழந்தைப் பருவத்திலோ அல்லது சமீபகாலத்திலோ பெண் பிறப்புறுப்பு சிதைவை நீங்கள் சந்தித்திருந்தால், மகப்பேற்று மருத்துவர்கள், மருத்துவ மாதுக்கள், உளவியலாளர்கள் அல்லது பாலியல் சுகாதார நிபுணர்கள் போன்ற சிறப்புச் சுகாதார நிபுணர்களை நீங்கள் சந்திக்கப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

இந்தப் பக்கத்தின் கீழே, பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு உள்ளான பெண்களுக்கு வழக்கமாக ஆதரவளிக்கும் இலாப நோக்கற்ற அமைப்புக்களின் பட்டியலை நீங்கள் காண்பீர்கள்.

அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் மற்றும் உளவியல் மற்றும்/அல்லது உடல் ரீதியான மீண்டெழலுக்கான பாதையில் உங்களை ஆதரிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு தீர்வைக் கண்டறிய அவை உங்களுக்கு உதவும். நீங்கள் விரும்பினால், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையின் விருப்பத்தையும் நீங்கள் ஆராயலாம்.

பொதுவான விடயங்கள்/கரிசனைகள்

  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் குடும்பத்திற்கு நீதித்துறையால் வழக்குத் தொடரப்படாமலேயே நீங்கள் சிகிச்சை பெறலாம். 

    பிரான்சில், அனைத்து சுகாதார நிபுணர்களும் மருத்துவ இரகசியத்தை மதிக்க வேண்டும். உங்கள் சிகிச்சையின் போது நீங்கள் சந்திக்கும் நபர்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர அனுமதிக்கப்படுவதில்லை.

    தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அல்லது இயலாமை காரணமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்று சுகாதார நிபுணர் கருதினால் இது மாறலாம். இந்த விடயத்தில் அவர்கள் உங்கள் நிலைமையை அரச வழக்கறிஞரிடம் அல்லது "procureur de la République" இற்குத் தெரிவிக்கலாம்.

  • "Aide médicale de l'État (AME)" எனப்படும் மாநில சுகாதார காப்பீட்டிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இது செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இல்லாதவர்கள் இலவசமாக மருத்துவ சேவையைப் பெற அனுமதிக்கிறது.

  • நீங்கள் சந்திக்கும் சுகாதார வல்லுநர்கள், உங்களைப் போலவே அனுபவித்த பல நோயாளிகளைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் உங்களுக்குச் செளகரியமாக உணரஅவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். நீங்கள் சொளகாரியமாக உணர்வீர்களென்றால், நீங்கள் ஒரு பெண் சுகாதார நிபுணரையும் கண்டறிய முடியும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • Seine-Saint-Denis இல் அமைந்துள்ள “Maison des Femmes”, பெண்களின் பிறப்புறுப்ப்புச் சிதைப்பு சம்பந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. அதன் மருத்துவர்கள், மருத்துவ மாதுக்கள், உளவியலாளர்கள் மற்றும் பாலியல் வல்லுநர்கள் அடங்கிய குழு, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்புக் கவனிப்பை வழங்குகிறது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்
    • நீங்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நினைத்தால், அவர்களுடன் இரகசியச் சந்திப்பொன்றை மேற்கொள்ளலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ் மற்றும் அனைத்து மொழிகளிலும் தொலைபேசி மற்றும் நேருக்கு நேர் உரைபெயர்ப்பு சாத்தியமாகும்.
    • தொடர்பு கொள்ளவும்: 01 42 35 61 28 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ அல்லது [email protected]என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
  • Comede” என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைப் பெற உதவும் ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களுக்கு உடல்நலப் பாதுகாப்பை அணுக உதவலாம் மற்றும் உங்கள் ஆவணங்களில் உங்களுக்கு உதவலாம், குறிப்பாக அவர்களின் தொலைபேசி சேவை மூலம் உங்களுக்கு உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: அனைத்து மொழிகளிலும் உரைபெயர்ப்பு சாத்தியமாகும்.
    • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம்.
  • Fédération GAMS” என்பது பெண் பிறப்புறுப்புச் சிதைவு அல்லது கட்டாயத் திருமணத்திற்கு ஆளானவர்களை ஆதரிக்கிறது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • அவர்கள் உங்கள் நிலைமையை மதிப்பிடுவார்கள், பின்னர் உங்களுக்கு அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்துவார்கள்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் பம்பாரா.
    • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம் 01 43 48 10 87 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல். மாலை 4 மணி வரை அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக

வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…

மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்

பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…

வதிவிட உரிமைகள் இன்றி மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு “Aide médicale de l’État” இல் பதிவு செய்தல்.

Aide médicale de l’État (AME)” அல்லது மருத்துவ உதவியாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கானது, வதிவிட…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்