வதிவிட உரிமைகள் இல்லாமல் மருத்துவ சேவையைப் பெற “Aide médicale de l’Etat” இற்காகப் பதிவு செய்தல்

Aide médicale de l’État (AME)” அல்லது மருத்துவ உதவியாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கானது, வதிவிட உரிமைகள் இல்லாத மக்களுக்கு உதவி செய்வதாகும்.

30/05/2022 அன்று காமெட் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

எது தொடர்புபடுகின்றது?

Aide médicale de l’État (AME)” உடன், உங்களது மருத்துவ உதவிக்கும், வைத்தியசாலையில் தங்குவதற்கும், மருந்துகளுக்குமான 100% செலவானது சமூகப் பாதுகாப்பு விகிதத்திற்கு அமைய வழங்கப்படும். நீங்களாகவே கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பிரான்சில் வசிக்கும் உங்களது குடும்ப உறுப்பினர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.

நிபந்தனைகள்

நீங்கள் சட்டரீதியாக வயதுக்கு வந்தவராக இருந்தால், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்களால் இந்த மருத்துவ உதவியின் மூலம் பயன்பெற முடியும்.

 • நீங்கள் பிரான்சில் வசிக்கின்றீர்.(மயோடி தவிர)
 • குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது நீங்கள் பிரான்சின் வசித்ததாக உங்களால் உறுதிப்படுத்த முடியும்.
 • உங்கள் குடும்பங்களில் உள்ள நபர்களின் வளங்கள் நிரந்தரமான தொடக்க நிலையை விஞ்சியிருந்தல் கூடாது.
 • உங்களிடம் செல்லுபடியான வதிவிட உரிமைகள் அல்லது வதிவிட அனுமதிப் பத்திரத்திற்கான தற்போதைய விண்ணப்பம் அல்லது “titre de séjour” செயலில் இல்லை. நிர்வாகமானது இதனை “situation irrégulière” எனும் நிலையில் இருப்பதாக அழைக்கிறது.

நீங்கள் பராயமடையாதவராக இருந்தால், அதாவது 18 வயதிற்கு குறைவானவர் என்றால், கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் இந்த ஏற்பாட்டிலிருந்து பயன்பெறலாம்.

 • நீங்கள் பிரான்சில் வசிக்கின்றீர்
 • உங்கள் பெற்றோரிடம் செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இல்லை.

நடைமுறை

விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து கோப்பு ஒன்றினை தயாரிக்கவும்:

 • உங்களது கடவுச்சீட்டின் நிழற்படபிரதி( சகல பக்கங்களையும் நிழற்படபிரதி எடுக்கப்பட வேண்டும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்திருக்கவும்) இல்லாத பட்சத்தில், உங்களது அடையாள அட்டை
 • வண்ண அடையாள புகைப்படம்
 • பிரான்சில் உங்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஓர் ஆவணம், உ.ம்.வாடகை பற்றுச்சீட்டு, மின்சார அல்லது எரிவாயு கட்டணம், தங்குமிட சான்றிதழ்
 • உங்களது நிதி வளங்களை சான்றுப்படுத்தும் ஆவணம்.

உங்களிடம் கடவுச்சீட்டு இல்லை என்றால், “attestation sur l’honneur” எனும் சத்தியப்பிரமாண அறிக்கையை உங்கள் விண்ணப்பத்துடன் இணைத்து உங்களிடம் கடவுச்சீட்டு இல்லை என்று குறிப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

உங்களது “caisse d’assurance maladie” இடம் நேரடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 • உங்கள் “caisse d’assurance maladie” என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், மேலும் அறிவதற்கு உங்களுக்கு அருகிலுள்ள “Caisse Primaire d’Assurance Maladie (CPAM)” ஐ நீங்கள் தொடர்புகொள்ளலாம். தொடர்பு விவரங்களை இந்தத் தளத்தில் காணலாம்.
 • உங்களால் பிரெஞ்சு மொழி பேச முடியாது என்றால், உங்களுக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் செல்லும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பத்திற்குப் பிறகு

 • இரண்டு மாதங்களுக்குள், உங்களது “caisse d’assurance maladieஇடமிருந்து கடிதமொன்றைச் சந்திப்பு நேரமொன்றுடன் பெற்றுக்கொள்வீர்கள்.

  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

  • சந்திப்பு நேரத்தின் போது, “Aide médicale d’Etat” இற்கான அனுமதி அட்டையை பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் உங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு இந்த அட்டையானது செல்லுபடியாகும்.
  • நீங்கள் நிபந்தனைக்கு உட்பட்டிருக்கும் வரை இந்த அட்டையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க முடியும். அட்டையை புதுப்பிப்பதற்கு, காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே உங்களது “caisse d’assurance maladie" இற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
  • வைத்தியரை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடுகளுக்கும் மருந்தகத்திற்கு மருந்து வாங்க செல்லும் போதும் இந்த அட்டையை எடுத்துச் செல்லவும். நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்று அர்த்தம்.
 • விண்ணப்பத்தை சமர்ப்பித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பதில் கிடைக்கவில்லை எனில், மேலதிக தகவல்களுக்கு உங்களது“caisse d’assurance maladie” ஐ தொடர்பு கொள்ளும்படி பரிந்துரை செய்யப்படுகிறது

 • உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மேன்முறையீடு அல்லது “உதவி நாடல்” எனப்படும் நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்த முடிவை மாற்றுமாறு நீங்கள் கேட்கலாம். மேன்முறையீடு அல்லது “உதவி நாடல்” செய்ய, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பைப் பெற்றதிலிருந்து இரண்டு மாதங்கள் உள்ளன .

  இரண்டு வகையான மேன்முறையீடுகள் அல்லது “உதவி நாடல்” சாத்தியம்:

  • உங்கள் “caisse d’assurance maladie” இயக்குனருடன் “recours gracieux” என்று அழைக்கப்படும் ஒரு இணக்கமான தீர்மானம்
  • நீங்கள் வசிக்கும் இடத்தின் நிர்வாக நீதிமன்றம் அல்லது “tribunal administratif” முன் “recours contentieux” எனப்படும் இணக்கமற்ற தீர்மானம். உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு, “tribunal administratif” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் தொடர்பு விவரங்களை இந்தத் தளத்தில் காணலாம்.

  இந்தப் படிநிலைகளில் உங்களுக்கு உதவ, ஒரு வழக்கறிஞர் அல்லது "சங்கம்" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் உங்களுடன் இருப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • Comede” என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைப் பெற உதவும் ஒரு அமைப்பாகும்.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அவர்கள் உங்களுக்கு உடல்நலப் பாதுகாப்பை அணுக உதவலாம் மற்றும் உங்கள் ஆவணங்களில் உங்களுக்கு உதவலாம், குறிப்பாக அவர்களின் தொலைபேசி சேவை மூலம் உங்களுக்கு உதவலாம்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: அனைத்து மொழிகளிலும் உரைபெயர்ப்பு சாத்தியமாகும்.
  • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம்.
 • "PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “Pôle Emploi” இற்கான அறிவிப்புகள் போன்றவை.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.
 • சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “Pôle emploi” இல் பதிவு செய்தல் போன்றவை.
  • கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்:

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக

வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…

பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்

இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…

மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்

பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்