உடல்நலக் கவனிப்பு அட்டைக்கு அல்லது “carte vitale”க்கு விண்ணப்பித்தல்
“carte vitale” என்பது உங்கள் சுகாதாரச் செலவுகள் பிரான்சில் எளிதாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை…
பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் உடல்நலச் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு உரிமை உண்டு. மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு “Protection universelle maladie (PUMA)” என்று அழைக்கப்படுகிறது, இது “sécurité sociale” என்றும் அழைக்கப்படுகிறது.
31/05/2023 அன்று காமெட் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
“Protection universelle maladie (Puma)” என்றும் “sécurité sociale” என்றும் அழைக்கப்படுகின்ற அமைப்பு உங்கள் மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியை ஈடுசெய்கின்றது.
பெரும்பாலான நேரங்களில், முதலில் உங்கள் மருத்துவச் செலவுகளை நீங்கள் செலுத்தவேண்டி இருக்கும், பிறகு உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஒரு செலவு ஈட்டைப் பெறுவீர்கள்.
அது மருத்துவச் செலவில் 100% ஐயும் ஈடுசெய்யாது. செலவுக்கு ஈடு செய்யப்படும் தொகையானது நீங்கள் பெறும் சிகிச்சையைப் பொறுத்ததாகும். செலவு ஈட்டு விகிதங்களின் முழுப் பட்டியல் இங்கே கிடைக்கிறது.
மாநில அமைப்பால் உள்ளடக்கப்படாத தொகையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ ஈடு செய்வதற்கு, “mutuelle” எனப்படும் தனியார் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையைப் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் வருமானம் “mutuelle” இற்குச் செலுத்த முடியாத அளவிற்குக் குறைவாக இருந்தால், நீங்கள் மேலதிக மாநில உடல்நலக் கவனிப்புக் காப்பீட்டை அல்லது “Complémentaire santé solidaire (CSS)” ஐக் கோரலாம்.
உங்களிடம் செல்லுபடியான வதிவிட உரிமைகள் இல்லையென்றால், சில நிபந்தனைகளின் கீழ் “ Aide médicale d’Etat (AME)” ஐ நீங்கள் கோரலாம்.
பொதுவாக, உங்கள் உரிமைகளை ஒதுக்குவதற்கு “caisse d’assurance maladie” எனப்படுகின்ற உங்கள் உடல்நலக் காப்பீட்டு உரிமைகளை நிர்வகிக்கும் நிறுவனத்தை உங்கள் பணியமர்த்துநர் தொடர்புகொள்வார். இந்தப் படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்ப்பதற்கு அவர்களுடன் நீங்கள் சரிபார்க்கலாம்.
“sécurité sociale” எனப்படுகின்ற உடல்நலக் காப்பீட்டிற்கான உரிமைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து, “caisse d’assurance maladie” எனப்படுகின்ற உங்கள் உரிமைகளை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
செயலாக்க நேரம் மாறுபடலாம். உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் எந்தப் பதிலையும் பெறவில்லை என்றால், இற்றைப்படுத்தலுக்கு உங்கள் “caisse d’assurance maladie” ஐத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்கள் உடல்நலக் கவனிப்பு உரிமைகளை உறுதிப்படுத்தும் “attestation d’ouverture de droits” எனப்படுகின்ற ஆவணத்தை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஆவணம் உங்கள் தனிப்பட்ட சமூகப் பாதுகாப்பு எண்ணை அல்லது “numéro de sécurité sociale” ஐக் குறிப்பிடும்.
கடிதத்தில் கீழ்வரும் படிவமும் இருக்கும்: “Ma nouvelle carte vitale”.
“Comede” என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைப் பெற உதவும் ஒரு அமைப்பாகும்.
"PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “France Travail” இற்கான அறிவிப்புகள் போன்றவை.
இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.
சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.
உடல்நலக் கவனிப்பு அட்டைக்கு அல்லது “carte vitale”க்கு விண்ணப்பித்தல்
“carte vitale” என்பது உங்கள் சுகாதாரச் செலவுகள் பிரான்சில் எளிதாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை…
வதிவிட உரிமைகள் இன்றி மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு “Aide médicale de l’État” இல் பதிவு செய்தல்.
“Aide médicale de l’État (AME)” அல்லது மருத்துவ உதவியாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கானது, வதிவிட…
பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக
வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…
“mutuelle” எனப்படும் தனியார் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கையை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் சுகாதாரக் செலவுகளை முடிந்தவரை திருப்பிப் பெறுவதற்கு, பொதுவாக “mutuelle” எனப்படும் தனியார்…
“Complémentaire santé solidaire (CSS)” எனப்படும் அனுசரணை அரச சுகாதார காப்பீட்டிற்கு பதிவு செய்தல்
உங்களிடம் சில அல்லது நிதி ஆதாரங்கள் இல்லை மற்றும் சமூக பாதுகாப்பு அல்லது “sécurité sociale”…