அவசர சேவைகளை அழைத்தல்: போலீஸ், ஆம்புலன்ஸ்
ஒரு அவசர நிலையில், காவல்துறைக்கு 17 அல்லது அவசர மருத்துவ சேவைகளுக்கு 112 ஐ அழைக்கவும். அவர்களின்…
வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில், உங்கள் நிதி நிலைமை என்னவாக இருந்தாலும், உங்கள் வதிவிட உரிமைகளைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஆரோக்கியப் பராமரிப்பைப் பெறலாம்.
22/09/2023 அன்று La Maison des Femmesஆல் சரிபார்க்கப்பட்டது
நீங்கள் அனுபவிக்கும் துஷ்பிரயோகத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், அது நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் முன்னுரிமைகளில் கடைசியாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க மறக்காதீர்கள். பிரான்சில், உங்களிடம் வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் அல்லது பணம் பெறுவதற்கான அணுகல் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் ஆரோக்கியப் பராமரிப்பைப் பெறலாம்.
உதாரணமாகக் காயம் அல்லது பாலியல் வன்கொடுமை என்பவற்றின் போது உங்களுக்கு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவைப்பட்டால், , அவசர சேவைகளை அழைக்கவும்.
உங்களின் பாதுகாப்பு ஆபத்தான நிலையிலிருந்தால், காவல்துறையை தலையிடச் சொல்லலாம்.
கடுமையான காயம் ஏற்பட்டால், அவசர மருத்துவ சேவைகளை அழைக்கவும். அவர்கள் உங்களுக்கு உதவ முதலுதவி பயிற்சி பெற்ற குழுவை அனுப்புவார்கள்.
உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் மருத்துவ சிகிச்சை பெறுவீர்கள்:
நீங்கள் “Protection universelle maladie (PUMA)”, சில சமயங்களில் “sécurité sociale” என்றும் அழைக்கப்படுகின்ற மாநில சுகாதாரக் காப்பீட்டு அமைப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட
நீங்கள் காயம் அடைந்து நேராக மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினால், இந்தக் கோப்பகத்தைப் பார்க்கவும்.
பல விவரத்திரட்டுகள் உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவரைத் தேட அனுமதிக்கின்றன, அது ஒரு பொது மருத்துவராகவோ அல்லது நிபுணராகவோ இருக்கலாம்.
நீங்கள் “sécurité sociale” மூலம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், எல்லா மருத்துவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டண வீதங்கள் இல்லை.
நீங்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்திருந்தால், அதற்காகத் தயவுசெய்து வெட்கப்பட வேண்டாம். நீங்கள் அனுபவித்ததற்கு எந்த வகையிலும் நீங்கள் பொறுப்பானவரல்லர்.
உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, கீழே உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறீர்:
ஒரு மருத்துவரைப் பார்க்கவும் அல்லது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெறவும். உங்களுக்கு அருகிலுள்ள "unité médico-judiciaire (UMJ)" எனப்படும் சிறப்பு மருத்துவ சேவைக்கு நீங்கள் செல்லப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள். அவர்களின் குழுக்கள் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்களைச் சேகரிக்கச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாவர். சில "UMJ" கள் நோயாளிகளை சந்திப்பு நேரம் மூலம் மட்டுமே பார்க்கிறது: வருகைக்கு முன் அவர்களை அழைக்கவும்.
மருத்துவர் உங்களுக்கு அவசர சிகிச்சையை வழங்க முடியும்:
பிரான்ஸ் நீதி அமைப்பிடம் வன்முறையைப் புகார் அளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
புகாரைச் சமர்ப்பிக்கும் போது, உங்களைச் சந்திக்கும் காவல்துறை அதிகாரி உங்களுக்காக “UMJ” இல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யக்கூடும்.
ஒரு சுகாதார நிபுணரின் நடத்தை உங்களில் பயம், அவமானம் அல்லது குற்ற உணர்ச்சியைத் தூண்டினால், பாலின வன்முறையில் அவர்களின் நிபுணத்துவம் குறைவாக உள்ளது மற்றும் இது உங்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தக் கூடும்.
இது தான் விடயமெனில், வேறொரு சுகாதார நிபுணரை அணுகத் தயங்க வேண்டாம். உங்களைத் தேற்றிக்கொள்ளாமல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மருத்துவர்களை மாற்றலாம்.
வீட்டுத் துஷ்பிரயோகத்திலிருந்து மீண்டெழுவதற்குக் காலம் எடுக்க முடியும். தேர்ச்சி பெற்ற நிபுணர்களின் கவனிப்புத் தேவைப்படும் பிந்தைய மன உளைச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சமூக, உடல் மற்றும் உளவியல் விளைவுகளை இது ஏற்படுத்த முடியும். இது உங்கள் முன்னுரிமைகளில் கடைசியாக இருந்தாலும், உங்கள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க நினைவில் கொள்ளவும். முடிந்தால், நீங்கள் அனுபவித்ததைப் பற்றி ஒரு நிபுணரிடம் பேசுங்கள். அவை உங்கள் உணர்வுகளை வாய்மொழியாகச் சொல்லவும், மீண்டெழலுக்கான உங்கள் பயணத்தில் உங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும்.
உங்களுக்குத் துன்பம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைப் பெறுவதற்கு எந்த நேரத்திலும் நிபுணர்களை அணுகலாம்.
மனநல மருத்துவர் என்பவர் மனநல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராவார். தேவை என்று அவர்கள் நினைத்தால் உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடும்.
மனநல ஆலோசனைக்கான கட்டணங்கள் சில நேரங்களில் “sécurité sociale” மூலம் திருப்பிச் செலுத்தப்படும்.
பல விவரத்திரட்டுக்கள் உங்களுக்கு அருகிலுள்ள மனநல மருத்துவரைத் தேட அனுமதிக்கின்றன:
ஒரு உளவியலாளர் உளவியலில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒரு தொழில்முறை வல்லுநராவார். அவர்களுக்கு மருத்துவப் பயிற்சி இல்லை. அவர்கள் உளவியல் சிகிச்சையுடன் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும்.
உங்களுக்கு அருகிலுள்ள ஒரு உளவியலாளரைத் தேட, பல விவரத்திரட்டுகள் உங்களை அனுமதிக்கின்றன. Doctolibஉங்கள் மொழியைப் பேசும் நிபுணர்களைத் தேட அனுமதிக்கிறது.
ஒரு மனநல மருத்துவரின் அல்லது உளவியலாளரின் நடத்தை உங்களில் பயம், அவமானம் அல்லது குற்ற உணர்ச்சியைத் தூண்டினால், பாலின வன்முறையில் அவர்களின் நிபுணத்துவம் குறைவாக உள்ளது என்றும், இது உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் அர்த்தமாகும்.
அப்படியானால், வேறு ஒருவரைக் கலந்தாலோசிக்கத் தயங்க வேண்டாம். உங்களைத் தேற்றிக்கொள்ளாமல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மனநல மருத்துவரை அல்லது உளவியலாளரை மாற்றலாம்.
“Comede” என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைப் பெற உதவும் ஒரு அமைப்பாகும்.
இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.
அவசர சேவைகளை அழைத்தல்: போலீஸ், ஆம்புலன்ஸ்
ஒரு அவசர நிலையில், காவல்துறைக்கு 17 அல்லது அவசர மருத்துவ சேவைகளுக்கு 112 ஐ அழைக்கவும். அவர்களின்…
மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்
பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்
வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த…
பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்குப் பிறகு சிகிச்சை பெறுதல்
நீங்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் குணமடையும் போது உங்களை…