சர்வதேச பெற்றோர் பிள்ளை கடத்தல் விடயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

மற்றைய பெற்றோர் உங்களின் பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றிருந்தால் அல்லது உங்களின் ஒப்புதலின்றி அவர்களை கப்பலில் வைத்திருந்தால், அது சர்வதேச பெற்றோர் பிள்ளை கடத்தல் குற்றமாகும். உங்களின் பிள்ளைகளை மீண்டும் பிரான்சுக்கு அழைத்து வருவதற்கான தீர்வுகள் இருக்கின்றன. 

03/03/2022 அன்று ஹன்சு யாலாஸால் சரிபார்க்கப்பட்டது

மற்றைய பெற்றோர் உங்களின் பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றிருந்தால் அல்லது உங்கள் ஒப்புதலின்றி அவர்களை கப்பலில் வைத்திருந்தால், அவர்களுடனான உங்களின் உறவுகள் என்று பாராது, அந்த செயல் சர்வதேச பெற்றோர் பிள்ளை கடத்தல் குற்றமாக கருதப்படும்: திருமணம் செய்தவர், குடியியல் துணைவர், கூடிவாழ்பவர், பிரிந்து வாழ்பவர் அல்லது விவாகரத்து செய்தவர்.

ஒரு அவசரநிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில், நீங்கள் 116 000 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம். இது 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு இலவச தொலைபேசி வசதியாகும். 

 • தொலைபேசியில், நீங்கள் கதைப்பதை கேட்டு உங்களுக்கு யாராவது உதவுவார்கள். அவர்கள் உங்களுக்கு சட்ட ஆலோசனைகள் அடங்கலாக ஆலோசனை வழங்குவார்கள். ஒரு வழக்கு கோவையையும் திறப்பார்கள். உங்களின் நிருவாகம் மற்றும் சட்டம் சார்ந்த நடைமுறைகளுக்கு அவர்கள் உங்களுக்கு உதவலாம்.
 • பிள்ளை உங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் வரை அவர்களின் உதவியை நீங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். 
 • கதைக்கக்கூடிய மொழிகள்: ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ரஷியன்.

அதன்பின்னர், தனியார் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றசட்டத்தரணி ஒருவரின் சேவையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் கடுமையாக பரிந்துரை செய்யப்படுகின்றது. அவர்களின் சேவைகளுக்கு கட்டணங்களை செலுத்தக்கூடியளவில் உங்களுக்கு அவ்வளவு வசதியில்லையெனில், அதற்கும் தீர்வுகள் இருக்கின்றன.

 • சில சந்தர்ப்பங்களிலும்,நாட்டைப் பொறுத்தும்,“aide juridictionnelle”எனப்படும் உதவு வசதியிலிருந்து பிரெஞ்சு சட்ட செலவுகளை ஈடுசெய்துகொள்ளவும்,சட்ட உதவியிலிருந்து நன்மை பெறவும் சாத்தியப்படலாம். உங்களின் பிள்ளைகள் எந்த நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் சரிபார்த்து தேடிக்கண்டுகொள்ளலாம்
 • உங்கள் பிள்ளைகள் எந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்,அத்துடன் ஏதேனும் நிதி உதவி உள்ளதா என்பதைக் கண்டறியலாம். 116 000 ஐ அழைப்பதன் மூலம் உதவி பெறுங்கள் அல்லது உங்கள் வழக்கறிஞரைக் கேளுங்கள்

நாடளாவிய நடைமுறை

உங்களின் பிள்ளைகளை திரும்பப் பெறுவதற்கான நடைமுறை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ள நாடு மற்றும் அவர்களின் தேசியத்துவம் ஆகியவற்றில் தங்கியிருக்கும். உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப உங்களின் சட்டத்தரனி உங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராகவும் செயல்முறைக்கு உதவக்கூடியவராகவும் இருப்பார்.

 • ஹேக் சமவாயத்திற்கான ஒரு தரப்பாக விளங்குகின்ற நாட்டில் அல்லது பிரஞ்சு நாட்டுடன் ஒரு இரு தரப்பு ஒப்பந்தத்தை செய்துள்ள ஒரு நாட்டில் உங்களின் பிள்ளை அல்லது பிள்ளைகள் இருக்கிறார்களா என்பதை முதலில் உங்களின் சட்டத்தரனி சரிபார்த்து அறிந்துகொள்வார். 

  • நாடுகளின் பட்டியலை இங்கேயும் (A முதல் L வரையான நாடுகள்) மற்றும் இங்கேயும் (M முதல் நாடுகள் Z வரையான நாடுகள்) நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

  உரிய நாடு பட்டியலிடப்பட்டிருந்தால், பிரெஞ்சு நீதித்துறை அமைச்சுடன் “Bureau du droit de l’Union, du droit International privé et de l’entraide civile”ஐ விரைவில் தொடர்புகொள்வது அவசியமாகும். 

  • நீங்கள் 01 44 77 61 05 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது [email protected]என்ற மின்னஞ்சலுடன் தொடர்புகொண்டு அவர்களை அழைக்கலாம் 
  • அவசியமென்றால், பின்வரும் முகவரியிலுள்ளவர்களுக்கு நீங்கள் எழுத்திலும் அறிவிக்கலாம்:
   Ministère de la Justice
   Bureau du droit de l’Union, du droit international privé et de l’entraide civile
   13 place Vendôme
   75042 PARIS CEDEX 01
 • எந்த ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளாத ஒரு நாட்டில் உங்களின் பிள்ளை தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அவருக்கு பிரெஞ்சு நாட்டு குடியுரிமை இருந்தால், கூடுமான விரைவில் பிரெஞ்சு வெளியுறவுகள் அமைச்சுடன்“Bureau de la protection des mineurs et de la famille (PMF)”தொடர்புகொள்வது அவசியமாகும். 

  • நீங்கள் 01 43 17 80 32 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களை அழைக்கலாம்.  
  • அவசியமென்றால், பின்வரும் முகவரியிலுள்ளவர்களுக்கு நீங்கள் எழுத்திலும் அறிவிக்கலாம்:
   Ministère des Affaires étrangères
   Bureau de la protection des mineurs et de la famille (PMF) 
   244 bd Saint-Germain
   75007 Paris
 • எந்த ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளாத ஒரு நாட்டில் உங்களின் பிள்ளை தடுத்துவைக்கப்பட்டால், அதேபோல் அவர் ஒரு பிரஞ்சு நாட்டவர் அல்லாதிருந்தால், சம்பந்தப்பட்டுள்ள உரிய நாட்டின் அதிகாரிகளை நீங்கள் உங்களின் சட்டத்தரனியின் ஊடாக தொடர்பு கொள்ள வேண்டும்.

 • நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றி உங்களின் சட்டத்தரனி உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். கடத்தல் பற்றி காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கும் காவல்துறையின் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • Droit d'enfance” ஆல் நிருவகிக்கப்படும் இந்த தொலைபேசி ஆலோசனை சேவை, மற்றைய பெற்றோர் பிள்ளையை கடத்தும் சந்தர்ப்பம் அடங்கலாக பிள்ளை காணாமல் போன சகல மக்களுக்கும் கிடைக்கும். மற்றைய பெற்றோர் உங்கள் அனுமதியின்றி உங்களின் பிள்ளைகளை கூட்டிச்சென்று விடுவார்கள் என உங்களுக்கு அச்சமிருந்தால், அவர்கள் தடுப்பது பற்றிய ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குவார்கள்.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • தொலைபேசியில், நீங்கள் கதைப்பதை கேட்டு உங்களுக்கு யாராவது உதவுவார்கள். அவர்கள் உங்களுக்கு சட்ட ஆலோசனைகள் அடங்கலாக ஆலோசனை அளிப்பார்கள். ஒரு வழக்கு கோவையையும் திறப்பார்கள். நிருவாக மற்றும் சட்டம் சார்ந்த நடைமுறைகளிலும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
  • உங்களின் பிள்ளை உங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் வரை அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், ரஷியன்.
  • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம் 116 000, இலவச எண் மற்றும் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் கிடைக்கும்.
 • Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

  • இந்தச் சேவை இலவசமானது.
  • அவர்களின் வழக்கறிஞர்கள் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் மற்றும் உங்கள் பிரிவு, விவாகரத்து மற்றும்/அல்லது பிள்ளைப் பொறுப்புக் காப்பு விடயங்களில் ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஒரு தகவல் சேவை மட்டுமே ஆகும்: அவர்கள் உங்களை சட்ட நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம்.
  • தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது தொலைபேசி மூலம் 04 78 03 33 63 திங்கள் முதல் புதன்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
  • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
  • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன. 
  • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில்நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்

பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…

பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்

சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…

ஒரு வழக்கறிஞருக்கும் பிற சட்டச் செலவுகளுக்கும் பணம் செலுத்துவதற்கு "'aide juridictionnelle" அல்லது சட்ட உதவிக்கு விண்ணப்பித்தல்

ஒரு வழக்கறிஞரை அமர்த்துவதற்கும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்துவதற்கும் உங்களிடம் போதுமான பணம்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்