பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்

பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள் மீதான உரிமைகளையும் கடமைகளையும் கொண்டிருப்பதை “autorité parentale” என்றழைக்கப்படும். துரதிஷ்டவசமாக, வீட்டுத் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கூட, பெற்றோரிடமிருந்து இந்த உரிமைகள் திரும்பப் பெறப்படுவது மிகவும் அரிதானது.

31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

தங்கள் பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் உரிமைகளும் பொறுப்புகளும் இவற்றில் இருந்து எழும் தீர்மானங்களும் பெற்றோருக்குரிய அதிகாரம் அல்லது “autorité parentale” என்றழைக்கப்படுகின்றன:

  • இது பகிரப்படும் போது, இது​​ பெற்றோருக்குரிய இணைந்த அதிகாரம் அல்லது “autorité parentale conjointe” என அறியப்படுகிறது.
  • ஒற்றைப் பெற்றோருக்கு பிரத்தியேக பெற்றோர் அதிகாரம் இருந்தால், அது “autorité parentale exclusive” என்று அழைக்கப்படுகிறது.

பிரிந்தால் அல்லது பெற்றோர் விவாகரத்துச் செய்தால், பிள்ளைகள் வசிக்கும் இடம் குறித்து ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும், இது பெரும்பாலும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு அல்லது “garde d’enfants” என்று குறிப்பிடப்படுகிறது.

  • பிள்ளைகள் இரு பெற்றோருடனும் சமமாக வாழும்போது, ​​அது மாற்றுக் குடியிருப்பு அல்லது “résidence alternée” என்று அழைக்கப்படுகிறது.
  • பிள்ளைகள் முக்கியமாக ஒரு பெற்றோருடன் வசிக்கும் போது, ​​அந்தப் பெற்றோரின் வீடு அவர்களின் வழக்கமான குடியிருப்பு அல்லது “résidence habituelle” என்று குறிப்பிடப்படுகிறது.
  • சட்டத்தின் பிரகாரம்,பிரான்சில், பெற்றோருக்குரிய அதிகாரம் பெற்றோரால் தானாகப் பகிரப்படுகின்றதுடன் இது “autorité parentale conjointe” என அறியப்படுகிறது.

    இதன் அர்த்தம் என்னவெனில்:

    • பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் ஒரே மாதிரியான உரிமைகளையும் பொறுப்புகளையும் கொண்டுள்ளனர்
    • பிள்ளைகள் தொடர்பான முக்கியத் தீர்மானங்கள் பரஸ்பர இணக்கம் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், பெற்றோரில் ஒருவரிடமிருந்து பெற்றோருக்குரிய அதிகாரத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீதிபதி முடிவு செய்யலாம். மற்றைய பெற்றாருக்குப் பிரத்தியேகப் பெற்றோருக்குரிய அதிகாரம் அல்லது “autorité parentale exclusive” உள்ளது.

    வீட்டு வன்முறையின் தீவிர நிகழ்வுகளில் இது நிகழலாம் அல்லது பெற்றோர் பிள்ளை மீது முற்றிலும் அக்கறை காட்டவில்லை என்றால் இது நிகழலாம், ஆனால் இது தானாகவே நடக்காது.

  • résidence alternée” மூலம், பிள்ளைகள் ஒவ்வொரு பெற்றோரின் வீட்டிலும் சமமான நேரத்தைச் செலவிடலாம்.

    résidence alternée” ஏற்பாடுகள் குடும்பங்களுக்கு இடையே மாறுபடலாம். உதாரணமாக: ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளைத் தங்கள் வீட்டில் வைத்திருப்பார்கள். இது சாத்தியமாகும் போது, இந்த ஏற்பாடு இன்று பிரான்சில் உள்ள நீதிபதிகளால் தேர்வு செய்யப்படுகின்றது.

  • résidence habituelle” மூலம், பிள்ளைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரின் வீட்டில் மட்டுமே வாழலாம்.

    மற்றைய பெற்றார் பொதுவாகத் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து பார்க்க முடியும், மேலும் அவர்களை ஒரு வழக்கமான அல்லது தற்காலிக அடிப்படையில் தங்கள் வீட்டில் தங்க வைக்கலாம். அவர்கள் சந்திப்புகளுக்கும் நள்ளிரவில் தங்குதல் அல்லது “droit de visite et d’hébergement” இற்கும் உரிமைகளைக் கொண்டுள்ளனர்.

    மிகவும் பொதுவான ஏற்பாடு ஒவ்வொரு வார இறுதி நாட்களும் பள்ளி விடுமுறை நாட்களில் பாதி நாட்களுமாகும்.

    மற்றைய பெற்றாருடன் செலவளிக்கின்ற நேரமானது தீர்மானிக்கப்பட்ட ஏற்பாட்டைப் பொறுத்துக் மட்டுப்படுத்தப்படலாம் அல்லது நீட்டிக்கப்படலாம். உதாரணமாக:

    • இது புதன் கிழமைகள் மற்றும் வார இறுதி நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்
    • மற்றைய பெற்றார் தொலைவில் வசிக்கும் பட்சத்தில் அது விடுமுறை நாட்களில் மட்டுப்படுத்தப்படலாம்
    • இரவு தங்காமல் சந்திப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படலாம்.

    நீதி அமைப்பால் ஒரு பெற்றோர் துஷ்பிரயோகமான நடத்தை கொண்டவராக இனங்காணப்பட்டால், நீதிபதி பின்வரும் முடிவை எடுக்கலாம்:

    • அவர்களின் சந்திப்புகளினதும் நள்ளிரவில் தங்குதல் அல்லது “droit de visite et d’hébergement” என்பவற்றினதும் உரிமையை இடைநிறுத்தம் செய்தல்
    • சமூக சேவையாளர்கள், உளவியலாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு சந்திப்பு இடத்தில் அவர்களின் சந்திப்புகளை ஏற்பாடு செய்யவும், இது இணக்குவித்தலுடன் சந்திப்புகள் அல்லது “visites médiatisées” என அறியப்படுகிறது.
    • மற்றொரு நபரின் முன்னிலையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், மூன்றாம் தரப்பினர் அல்லது “tiers” என அழைக்கப்படுகிறது.

நடைமுறை

  • நீங்கள் பிரிந்தால் அல்லது புரிந்துணர்வுடன் விவாகரத்துச் செய்தால், பிள்ளைகளின் பாதுகாப்பை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பதை நீங்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்யலாம். இது “modalités d’exercice de l’autorité parentale” என்று குறிப்பிடப்படுகிறது. இதில் குறிப்பாக உள்ளடக்கப்படுபவை:

    • பிள்ளைகள் வசிக்கும் இடம்
    • பிள்ளைகள் ஒரு பெற்றோருடன் தங்கள் வழக்கமான குடியிருப்பில் அல்லது “résidence habituelle” இல் இருக்கும்போது மற்ற பெற்றோரின் சந்திப்பிற்கும் நள்ளிரவில் தங்குதல் அல்லது “droit de visite et d’hébergement” என்பதற்குமான உரிமை
    • பிள்ளை தொடர்பான செலவினங்களுக்கான நிதிப் பங்களிப்பை செலுத்துதல், இது “contribution à l’entretien et l’éducation des enfants”, அல்லது "pension alimentaire" (பராமரிப்புக் கொடுப்பனவு) என அழைக்கப்படுகின்றது.

    உங்கள் உடன்பாட்டை உறுதிப்படுத்துவதற்குக் குடும்ப நீதிமன்ற நீதிபதிக்கு அல்லது “Juge aux affaires familiales (JAF)” இற்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அல்லது “requête conjointe” ஐ அனுப்புவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நடைமுறை பொதுவாக விரைவானது, ஏனெனில் இது நீதிமன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது அல்ல.

    விண்ணப்பத்தை நீங்களே எழுதலாம் அல்லது உங்கள் வழக்கறிஞரின் உதவியைப் பெறலாம்.

    • requête conjointe” என்பது நீங்களும் மற்றைய பெற்றாரும் கையொப்பமிட வேண்டிய எளிய கடிதத்தின் வடிவத்தில் உள்ளது. இந்தப் படிவத்தின் அடிப்படையில் அதை எழுதலாம்.
    • அதில் பின்வருவன உள்ளடக்கப்படல் வேண்டும்:
      • குடும்பப்பெயர்கள், முதல் பெயர்கள், தொழில், குடியிருப்பு, தேசியம், பெற்றோரின் பிறந்த திகதியும் இடமும்
      • விண்ணப்பம் செய்யப்படும் நீதிமன்றம்
      • பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்படும் “modalités d’exercice de l’autorité parentale” பற்றிய விவரங்கள்.
    • பிள்ளைகள் வசிக்கும் இடத்திற்கு “Juge aux affaires familiales” இன் “greffe” (கிளார்க்) எனப்படும் நிர்வாக அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவர்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய, உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு, “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தக் கோப்பகத்தைப் பயன்படுத்தலாம்.
  • பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் அல்லது “modalités d’exercice de l’autorité parentale” பற்றிப் பெற்றோர்கள் உடன்படவில்லை என்றால், அவை நீதிபதியால் தீர்மானிக்கப்படும்.

    • நீங்கள் சர்ச்சைக்குரிய விவாகரத்து நடவடிக்கைகள் இல் இருந்தால், இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிள்ளையின் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் நீதிபதியால் தீர்மானிக்கப்படும்.
    • நீங்கள் பிரிந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அல்லது விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக இல்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்து, பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதற்கு உங்கள் வழக்கறிஞர் மூலம் குடும்ப நீதிபதிக்கு அல்லது “Juge aux affaires familiales” இற்கு விண்ணப்பமொன்றை அனுப்ப வேண்டும்.
    • நீங்கள் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றவராகவும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளை மாற்றவும் விரும்பினால், உங்கள் வழக்கறிஞர் மூலம் “Juge aux affaires familiales” இற்குப் புதிய விண்ணப்பமொன்றை அனுப்ப வேண்டும்.

    பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் போது நீதிபதி பல அளவுகோல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்.

    • தீர்ப்பு வரை இருந்த ஏற்பாடு. உதாரணமாக, தீர்ப்பு வரும் வரை ஒவ்வொரு வாரமும் பிள்ளைகள் வசிக்கும் இடத்தைப் பெற்றோர்கள் மாற்றத் தேர்வுசெய்தால், நீதிபதி இந்த ஏற்பாட்டைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எனவே நீதிபதியின் தீர்ப்புக்காக நீங்கள் காத்திருக்கும் போது நீங்கள் செய்யும் ஏற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, உங்கள் வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
    • உங்கள் பிள்ளைகளின் நிலைமைகளையும் அவர்களின் ஆர்வங்களையும் பற்றி அவர்கள் எவ்வாறு அவர்கள் உணர்வதாகக் கூறுகிறார்கள்.
    • ஒவ்வொரு பெற்றோரின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம்.
    • ஒவ்வொரு பெற்றோரின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் மற்றைய பெற்றாரின் உரிமைகளை மதிப்பதற்குமான திறன்.
    • பிள்ளைகளின் சமூக,குடும்ப சூழ்நிலையின் மதிப்பீடுகளின் முடிவு, ஒரு நிபுணர் இவற்றைச் மதிப்பீடு செய்திருந்தால்.
    • எந்தவொரு சமூக விசாரணையிலும் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.
    • ஒரு பெற்றோரால் மற்றவர் மீது செலுத்தப்படுகின்ற உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான அழுத்தம் அல்லது துஷ்பிரயோகம்.

பொதுவான விடயங்கள்/கரிசனைகள்

  • தீர்வுகள் உள்ளன.

    நீதிபதி உங்களுக்கு ஒரு பராமரிப்புக் கொடுப்பனவை அல்லது “contribution à l’entretien et l’éducation de l’enfant” வழங்க முடியும், பொதுவாக இது “pension alimentaire” என்று அழைக்கப்படுகிறது இது குழந்தைகளுடன் தொடர்புடைய செலவுகளுக்கு பங்களிக்க மற்றைய பெற்றார் ஒவ்வொரு மாதமும் உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையாகும்.

    உங்கள் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகளை நீங்கள் செலுத்த உதவுவதற்கு நீங்கள் மாநில நிதி உதவியையும் பெறலாம்.

    நிதி ரீதியாக எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பது பற்றி இங்கே மேலும் அறிக.

  • Juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிபதி, உங்கள் முன்னாள் துணைவரின் முன்னிலையில் குடும்ப இணக்கம் அல்லது “médiation familiale“ எனப்படும் சந்திப்பில் பங்கேற்கச் சொன்னால், இந்தச் சந்திப்பில் நீங்கள் தனியாகக் கலந்துகொள்ளக் கோரலாம்.

    வீட்டுத் துஷ்பிரயோகம் நடைபெற்றிருந்தால், “médiation” சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.

  • பிரிவு என்கின்ற நிகழ்வில், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுடன் தனிப்பட்ட உறவுகளைப் பேண வேண்டும் என்பதைச் சட்டம் பொதுவாக எதிர்பார்க்கின்றது.

    இருப்பினும், வீட்டுத் துஷ்பிரயோகம் நிகழ்வில் சட்டம் தீர்வுகளை அமைக்கிறது. துரதிஷ்டவசமாக நடைமுறையில், வீட்டுத் துஷ்பிரயோகத்தின் நிகழ்வில் கூட, பிரான்சில் பெற்றோருக்குரிய அதிகாரத்தைத் திரும்பப் பெறுவது அரிதாகவே உள்ளது. உங்கள் வழக்கறிஞருடன் உங்கள் விண்ணப்பத்தைக் கவனமாகத் தயாரிக்க வேண்டும்.

    தீர்வுகள் பின்வருமாறு இருக்கலாம்.

    • Juge aux affaires familiales” உங்களுக்குப் பெற்றோருக்குரிய அதிகாரத்தின் அல்லது “autorité parentale” இன் என்ற பிரத்தியேக பயிற்சியை வழங்க முடிவு செய்யலாம். இந்தத் தீர்மானம் பின்னர் திருத்தப்படலாம்.
    • குற்றவியல் நீதிபதி, துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியிடமிருந்து பெற்றோருக்குரிய அதிகாரத்தை அல்லது “autorité parentale” ஐ ஒரு தண்டனையாகத் திரும்பப் பெற முடிவு செய்யலாம். இந்த முடிவை பின்னர் திருத்த முடியாது.
    • மற்றைய பெற்றார் தங்கள் பிள்ளைகளைச் சில நிபந்தனைகளின் கீழ் பார்க்கவும் நள்ளிரவில் தங்க வைக்கவும் முடியும். இந்தத் தீர்மானம் பின்னர் திருத்தப்படலாம்.
    • துஷ்பிரயோகம் செய்த பெற்றாரின் சந்திப்பினதும் நள்ளிரவில் தங்க வைப்பதினதும் உரிமை அல்லது“droit de visite et d’hébergement” என்பது ஒரு இணங்கிய சந்திப்பு இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, இது “droit de visite médiatisé” என்று அறியப்படுகிறது.
    • Mesure d’Accompagnement Protégé” இன் ஒரு பகுதியாக நம்பகமான நபரின் உதவியுடன் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் இறக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • உங்கள் பிள்ளைகள் உங்களுடன் வாழ்ந்தாலும், உங்கள் முகவரி மாற்றத்தை மற்றைய பெற்றாருக்குத் தெரிவிக்க வேண்டும்.

    நீங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கும் நேரத்திற்கும் உங்கள் நகர்வுக்கும் இடையில் ஒரு மாத காலத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும்.

    பிள்ளைகளை மற்றைய பெற்றார் எவ்வளவு அடிக்கடி பார்க்க முடியும் என்பதை உங்கள் நகர்வு மாற்றினால், நீங்கள் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும் அல்லது “modalités d’exercice de l’autorité parentale” ஐத் திருத்தம் செய்ய வேண்டும். மற்றைய பெற்றாருடன் புதிய பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.

    நீங்கள் ஒரு உடன்பாட்டை எட்டினால், அனுமதிக்காக “Juge aux affaires familiales” இற்கு “requête conjointe” எனப்படும் கூட்டு விண்ணப்பத்தை அனுப்பப் பரிந்துரைக்கப்படுகிறது.

    உடன்பாடின்மை ஏற்பட்டால், உங்கள் வழக்கறிஞர் மூலம் விண்ணப்பத்தைJuge aux affaires familiales” இற்கு அனுப்பலாம், இதனால் அவர்கள் புதிய “modalités d’exercice de l’autorité parentale” ஐத் தீர்ப்பளிக்க முடியும்.

  • இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவை இலவசமானது.
    • அவர்களின் வழக்கறிஞர்கள் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் மற்றும் உங்கள் பிரிவு, விவாகரத்து மற்றும்/அல்லது குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஒரு தகவல் சேவை மட்டுமே ஆகும்: அவர்கள் உங்களை சட்ட நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம்.
    • தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது தொலைபேசி மூலம் 04 78 03 33 63 திங்கள் முதல் புதன்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
  • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

    • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
    • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
    • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
    • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிள்ளை தொடர்பான செலவுகளுக்குப் பங்களிப்பதற்கு மற்றைய பெற்றாரிடமிருந்து நிதிப் பங்களிப்பைப் பெறுதல்

பெற்றார்கள் பிரிந்தாலும், தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புடைய செலவுகளுக்குத் தொடர்ந்து பங்களிக்க…

நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை உங்களின் முன்னாள் துணைவர் வழங்காவிட்டால் என்ன செய்வது என அறிந்து கொள்ளல்

உங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை அல்லது பிள்ளைப்…

பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கு மற்றைய பெற்றார் இணங்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளவும்

பிள்ளைகள் ஒரு பெற்றோருடன் வாழ்ந்தாலும் அல்லது இரு பெற்றோரிடையே மாறி மாறி வாழ்ந்தாலும், பிள்ளைப்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்