உங்கள் துணைவர் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளல்

துஷ்பிரயோகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. துஷ்பிரயோகம் செய்யும் துணைவர்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கப்படாத அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்த அதிர்ச்சி அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் நியாயப்படுத்தாது. துரதிஷ்டவசமாக, அவர்கள் உறுதியளித்தாலும் கூட, அவர்களிடம் மாறுவதற்கான ஆற்றல் அரிதாகவே உள்ளது.

Assoc உறுதிப்படுத்தியது. 18/11/2022 ஆம் திகதி துணைப் பேராசிரியர் Andreea Gruev-Vintila ஆல் உறுதிப்படுத்தப்பட்டது.

உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலான துஷ்பிரயோகம் செய்யக்கூடிய துணைவர்கள் கைவிடப்படுதல், பாதுகாப்பின்மை மற்றும் அவமானப்படுத்தப்பட்ட உணர்வின் காரணாமாக கோபம் ஆகியவற்றால் தூண்டப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் அவர்களின் அதிர்ச்சி மற்றும் பயங்கள் என்பன அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் நியாயப்படுத்தாது.

  • துஷ்பிரயோகம் செய்யக்கூடிய துணைவர்கள் தங்கள் சொந்த உணர்வுகள் மற்றும் தேவைகள் என்பன உறவில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள்.

    அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக தங்கள் துணைவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுகிறார்கள்:

    • அவர்கள் வெளியேற்றப்படுவதில்லை மற்றும் கைவிடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு
    • தங்கள் துணைவர் மீது கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் பெறுவதற்கு
    • அநேகமாக அவர்களின் பிள்ளைகளைக் கருத்தில் கொள்ளாமலும் அவர்களின் துணைவரையும் அவர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளாமலும் அவர்கள் விரும்பியதைச் செய்யும் திறன்
    • அவர்களின் துணைவர் அவர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார் என்ற உறுதி பெறுவதற்கு
    • அவர்களின் துணைவரிடமிருந்து அமைதி மற்றும் இணக்கம் என்பவற்றைப் பெறுவதற்கு
    • அவர்கள் கோபமாகவோ, மன அழுத்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும்போது தங்கள் விரக்தியை கட்டுப்பாடு இல்லாமல் வெளிப்படுத்தும் திறன்.
  • பிரான்சில் இன்னும் நன்கு அறியப்படவில்லை, ஆனால் வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழியாக சர்வதேச அளவில் வலுக்கட்டாயக் கட்டுப்பாடு என்ற கோட்பாடு அடையாளங்காணப்பட்டுள்ளது.

    வலுக்கட்டாயக் கட்டுப்பாடு என்பது ஒரு நபர் தனது துணைவருக்கு அல்லது முன்னாள் துணைவருக்கு எதிராக, அவரைச் சார்ந்திருப்பதற்கு, அவருக்குக் கீழ்ப்படிவதற்கு மற்றும்/அல்லது அவரின் செயற்பாடுகளிற்கான சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே கட்டுப்படுத்தல், வற்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் என வரையறுக்கப்படுகிறது.

    குற்றவாளிகள் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்துவதற்குத் தங்கள் துணைவரை மிரட்டலாம், அவமானப்படுத்தலாம், கண்காணிக்கலாம், சூழ்ச்சியான முறையில் கையாளலாம் அல்லது தனிமைப்படுத்தலாம். அவர்களின் துஷ்பிரயோகம் பல்வேறு வடிவங்களில் நிகழ முடியும்.

எதை நினைவில் கொள்ள வேண்டும்

துஷ்பிரயோகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நீங்கள் அனுபவிக்கும் துஷ்பிரயோகத்திற்கு நீங்கள் பொறுப்பானவரல்ல. 

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துஷ்பிரயோகத்தை அனுபவித்த பலர், அனுபவத்தைத் திரும்பத் திரும்பக் கூறவோ சிகிச்சை பெறவோ தேவையில்லை என்று தேர்வு செய்கிறார்கள். துஷ்பிரயோகம் செய்யக்கூடிய துணைவர்கள்,அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைத் தேர்வு செய்கிறார்கள். 

துரதிஷ்டவசமாக, அவர்கள் உறுதியளித்தாலும் கூட, அவர்களிடம் மாறுவதற்கான ஆற்றல் அரிதாகவே உள்ளது.

பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் என்பவற்றிற்கான உங்கள் வழியில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் சேவைகள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

நீங்கள் இன்னும் ஒன்றாக வாழும்போது பாதுகாப்பு உத்திகளை வைத்திருத்தல்

எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை…

தாக்குதலின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளல்

உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் ஆக்ரோஷமாக நடக்க ஆரம்பித்தால், கூடிய விரைவில் பாதுகாப்பைப் பெற…

உங்கள் துஷ்பிரயோகமான துணைவரிடமிருந்து பிரிவிற்குத் தயாராதல்

உறவுமுறையொன்றை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாக இருக்கலாம். முன்பு ஒரு துணைவர்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்