உங்கள் துஷ்பிரயோகமான துணைவரிடமிருந்து பிரிவிற்குத் தயாராதல்

உறவுமுறையொன்றை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாக இருக்கலாம். முன்பு ஒரு துணைவர் கட்டுப்படுத்துதல், துஷ்பிரயோகமான அல்லது சொந்தமாக்கிக் கொள்ளும் நடத்தை ஆகியவற்றைக் கொண்டிருந்தால், வெளியேறும் தருணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். நீங்கள் நன்கு ஆயத்தமாக இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

23/02/2024 அன்று மைட்ரே பாலின் ரோங்கியர் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

கட்டுப்படுத்துகின்ற அல்லது துஷ்பிரயோகமான துணைவரை விட்டு வெளியேறுவதற்கான பாதை எளிதானது அல்ல.

உங்கள் பாதுகாப்பையும் சாத்தியமான சிறந்த பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்துவதற்கு உங்களால் முடிந்தவரை உங்களைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், உங்கள் பிள்ளைகளுடன் வெளியேறுவதற்குக் காத்திருக்க வேண்டாம். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானதாகும்.

உங்கள் துஷ்பிரயோகமான துணைவருடன் நீங்கள் வாழ்ந்தால், பாதுகாப்பு உத்தரவு அல்லது “ordonnance de protection” மூலம் உங்கள் கூட்டாளரை வெளியேற்றுமாறு நீதிபதியிடம் கேட்கலாம். இந்த நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் நீதிபதி முடிவு செய்யலாம்.

நீங்கள் வெளியேறும் முன்

சாத்தியமெனில், நீங்கள் உங்கள் துணைவரை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறீர்கள் என்பதை நீங்கள் நம்பும் ஒருவருக்குத் தெரியப்படுத்தி, அவர்களிடம் உதவி கேட்கலாம். உங்கள் திட்டத்தைப் பற்றி அவர்கள் உங்கள் துணைவரிடம் சொல்ல மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியமானதாகும்.

வெளியேறும் தருணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம், எனவே நீங்கள் புறப்படுவதைத் திட்டமிட்டு ஆயத்தமாவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

  • அவசரநிலையொன்றில் உங்கள் வீட்டை விட்டு எப்போது வெளியேற வேண்டியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

    • தேவைப்படும்போது விரைவாகப் பயன்படுத்துவதற்கு அனைத்து அவசரகால எண்களையும் உங்கள் சொந்த முகவரியையும் கூடக் குறித்துக்கொள்ளவும்.
    • உங்கள் துணைவரை வருத்தமடையச்செய்யாமல் உங்கள் பிள்ளைகளுடனும் செல்லப்பிராணிகளுடனும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நம்பத்தகுந்த சாக்குகளின் பட்டியலைத் தயாரிக்கவும்.
    • உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் எங்கு செல்வது, எவ்வாறு அங்கு செல்வது என்று சிந்திக்கவும்.
    • நீங்கள் முதல் தடவையாகப் பிரியும் போது உங்களுக்குத் தங்க முடியுமான இடமொன்றைப் பற்றிச் சிந்திக்கவும்.
    • நீங்கள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், உங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சில துணிகளைக் கொண்ட பையொன்றைத் தயார் செய்து கொள்ளவும். நீங்கள் அதை உங்கள் பணியிடத்திலோ அல்லது நீங்கள் நம்பும் ஒருவரிடமோ ஒப்படைத்து வைக்கலாம்.
  • அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வெளியேறும் முன் உங்களின் அனைத்து நிர்வாக ஆவணங்களையும், துஷ்பிரயோகம் நடந்ததற்கான சான்றுகளையும் ஒன்றாகச் சேகரித்து வைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

    • முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான இடமொன்றில், உங்கள் பணியிடத்தில் அல்லது நீங்கள் நம்பும் ஒருவரிடத்தில் சேமித்து வைக்கவும்:
      • உங்களினதும் உங்கள் குழந்தைகளினதும் அடையாள ஆவணங்கள்: அடையாள அட்டை, கடவுச்சீட்டு
      • உங்கள் குடிவரவு ஆவணங்கள்: “titre de séjour”, “récépissé”,புகலிட விண்ணப்பம்
      • உங்கள் குடும்பப் பதிவுப் புத்தகம் அல்லது “livret de famille
      • உங்கள் உடல்நலக்கவனிப்பு அட்டை அல்லது “carte vitale
      • உங்கள் உடல்நலப் பதிவுப் புத்தகம் அல்லது “carnet de santé”, மற்றும் உங்கள் பிள்ளைகளின் புத்தகம்
      • Caisse d’allocations familiales (CAF)” இலிருந்தான ஆவணங்கள்
      • உங்கள் குடிவரவு ஒப்பந்தம், சான்றிதழ்கள் அல்லது “contrat d’intégration républicaine (CIR)
      • உங்கள் துணைவருடைய ஆவணங்களின் புகைப்படங்கள்: வரி அறிவிப்புகள், ஊதியச் சீட்டுக்கள், கணக்கு அறிக்கை புகைப்படங்கள், வேலை ஒப்பந்தங்கள் போன்றவை.
      • அறிவிக்கப்படாத வருமானத்திற்கான பிற ஆதாரங்கள்: பணம், குறிப்பேடுகள், கொள்வனவுகள் போன்றவற்றின் புகைப்படங்கள்.
      • உங்கள் துணைவரின் சொத்துக்களிற்கும் உடைமைகளிற்குமான ஆதாரம் அல்லது நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆதாரம்: ரியல் எஸ்டேட், முதலீடுகள் போன்றவை.
    • துஷ்பிரயோகம் குறித்த எந்த ஆதாரத்தையும் படிப்படியாகச் சேகரிக்கவும், ஏனெனில் துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு புகாரைத் தாக்கல் செய்வதற்கு அல்லது நீதிபதியிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோருவதற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நீங்கள் அவ்வாறு செய்வதற்குத் தேவைப்படலாம். உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு இந்தச் சான்று அவசியமாகும்.
    • ஒரு வழக்கறிஞரை அல்லது துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்களுக்கு ஆதரவளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உரிமைகளையும் நீங்கள் எடுக்கக்கூடிய படிகளையும் புரிந்துகொள்ள அவை உதவும்.
    • உங்கள் மின்னஞ்சலைப் பாதுகாப்பாகப் பெறக்கூடிய நிர்வாக முகவரியைத் தேர்வுசெய்யவும், இது “domiciliation” என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, "சங்கம்” இடம் அல்லது உங்கள் வழக்கறிஞரிடம் முகவரியைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்குமாறு கேட்கலாம்.
  • விஷேடமாக நீங்கள் நிதித் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருந்தால், உங்கள் நிதிச் சுதந்திரத்திற்காகத் தயாராவது முக்கியமாகும். உங்களால் என்ன செய்ய முடியும்:

    • உங்களுக்குச் சொந்த வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் அல்லது உங்கள் துணைவர் உங்களுடைய பணத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தினால், உங்களின் இயற்பெயரில் தனிப்பட்ட வங்கிக் கணக்கொன்றைத் திறந்து, உங்கள் புதிய "domiciliation" முகவரியைப் பயன்படுத்தவும்.
    • உங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய வகையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தொகைப் பணத்தை மறைத்து வைக்கவும்
    • உங்கள் மதிப்புமிக்க பொருட்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்
    • உங்களுக்கு அவசரமாகப் பணத்தை அணுக முடியுமா என்பதைக் கண்டறியவும்

நீங்கள் வெளியேறும்போது

நீங்கள் செல்லத் தயாராக இருக்கும்போது, ​​உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குச் சில நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமாகும்:

  • துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியுடன் பிள்ளைகளை விட்டுவிடாதீர்கள்
  • உங்கள் தொலைபேசிகள், கணனிகள் மற்றும்/அல்லது டேப்லெட்டுகள் கண்காணிக்கப்படும் பட்சத்தில், ஜிபிஎஸ் செயல்பாட்டைச் செயலிழக்கச் செய்யவும்
  • உங்கள் அனைத்துக் கடவுச்சொற்களையும் மாற்றவும்: மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் உட்பட உங்கள் துணைவருடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்துப் பிற கணக்குகளும் செயலிகளும்
  • தேவை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வெளியேறியவுடன் உங்கள் ஃபோனை மாற்றவும், ஏனெனில் சில வேளை அதுவும் கண்காணிக்கப்படலாம்
  • ஏதாவதொரு பொலிஸ் நிலையத்தில் புகாரொன்றைத் தாக்கல் செய்யவும், அதாவது துஷ்பிரயோகத்தைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்கு, “commissariat de police” அல்லது “brigade de gendarmerie
  • ஒரு வழக்கறிஞரின் உதவியுடன், குடும்ப நீதிமன்றத்திடம் அல்லது “Juge aux affaires familiales (JAF)” இடம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கேட்கவும், பாதுகாப்பு உத்தரவு அல்லது “ordonnance de protection” போன்றவற்றைக் கேட்கவும், இது உங்கள் முன்னாள் துணைவரை உங்கள் வீட்டிலிருந்து அகற்றுவதற்கு மற்றும்/அல்லது அவர் உங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு உதவும்.
  • உங்கள் முன்னாள் துணைவரை உங்கள் வீட்டிலிருந்து அகற்றுமாறு நீதிபதியிடம் நீங்கள் கேட்டிருந்தாலும், இது நடப்பதற்கு ஒரு வாரம் வரை ஆகலாம்.

    வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களை நீங்கள் கழிக்கக்கூடிய அவசரகால தங்குமிடத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுமாறு போலீசாரிடம் நீங்கள் கேட்கலாம். உங்களுடன் உங்கள் வீட்டிற்குச் செல்லும்படி போலீசாரிடம் நீங்கள் கேட்கலாம், அதனால் உங்கள் பொருட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    அவசரகாலத் தங்குமிடங்களைக் கண்டறிவதற்கான பிற தீர்வுகளும் உள்ளன.

  • பிள்ளை கடத்தல் தொடர்பாக மற்ற பெற்றோர் உங்களுக்கு எதிராகப் புகார் செய்வதைத் தடுக்க சில நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமாகும்.

    • எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தாமதமின்றி புகாரொன்றைத் தாக்கல் செய்யவும், அதாவது “commissariat de police” or “brigade de gendarmerie” இல் பதிவு செய்யவும்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள், குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றிற்கான உங்கள் விண்ணப்பத்தில் உங்களுக்கு உதவுவதற்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.
    • modalités d’exercice de l’autorité parentale” எனப்படும் உங்கள் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கான விதிகளை அமைப்பதற்கு உங்கள் வழக்கறிஞர் ஊடாக குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “Juge aux affaires familiales” இற்கு விண்ணப்பமொன்றை அனுப்பவும்.
    • உங்கள் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அவர்களுக்குத் தெரிவிப்பதற்கு, கூடிய விரைவில் உங்கள் “Caisse d’Allocations Familiales (CAF)” ஐத் தொடர்பு கொள்ளவும். அவர்களின் தொடர்பு விவரங்களை இந்தக் கோப்பகத்தில் காணலாம்.

பொதுவான விடயங்கள்/கரிசனைகள்

  • உங்கள் துணைவரையோ அல்லது முன்னாள் துணைவரையோ நீங்கள் இன்னும் நேசிப்பது போல் உணர்வது முற்றிலும் இயல்பானது. இந்த உணர்வுகள் பொதுவாகக் காலப்போக்கில் உருவாகின்றன, அவை ஒரே நேரத்தில் அரிதாகவே மறைந்துவிடும். ஆனால் அவை காலப்போக்கில் மறைந்துவிடும்.

    கட்டுப்படுத்தப்படுவது, ஆதிக்கம் செலுத்தப்படுவது அல்லது உங்கள் துணைவரைப் பயந்து வாழ்வது சாதாரணமானது அல்ல. அது காதல் அல்ல.

    இப்போது அதைப் பார்ப்பது கடினமாகும், ஆனால் பின்னோக்கிப் பார்த்தால், கட்டுப்படுத்துகின்ற, துஷ்பிரயோகமான நடத்தையை வெளிப்படுத்தும் ஒரு துணைவரை விட்டு வெளியேறும் நபர்கள், அவர்களை விட்டு வெளியேறியது அவர்கள் எடுத்த சிறந்த முடிவு என்று கூறுகிறார்கள்.

  • நீங்கள் வெளியேறும்போது உங்கள் துணைவரின் எதிர்வினைக்குப் பயப்படுவது இயல்பானதாகும்.

    ஒரு பிரிவு துஷ்பிரயோகத்தைபிரிவு தீவிரப்படுத்தும், ஏனெனில் இது துஷ்பிரயோகமான துணைவரின் கட்டுப்பாட்டை இழப்பதைக் குறிக்கிறது. எனவே உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நீங்கள் புறப்படுவதற்கு நன்கு தயாராக இருப்பது சிறந்ததாகும்.

    நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், உங்கள் பிள்ளைகளுடன் வெளியேறுவதற்குக் காத்திருக்க வேண்டாம். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானதாகும்.

  • இந்தப் பயம் முற்றிலும் இயல்பானதாகும், குறிப்பாக நீங்கள் நிதித் துஷ்பிரயோகத்தை அனுபவித்தும் உங்கள் துணைவரை நிதி ரீதியாகச் சார்ந்தும் இருந்தால் இது இயல்பானதாகும். ஆனால் பிரான்சில் இதற்கான தீர்வுகள் உள்ளன.

    உங்களால் முடியும்:

    உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து விருப்பத்தேர்வுகளையும் ஆராய்வதற்கு, எங்களுடைய பணம், வீட்டுவசதி, சுதந்திரம் பிரிவை நீங்கள் அணுகலாம்.

  • இது எளிதானதாக இல்லாவிட்டாலும் கூட, வீட்டுத் துஷ்பிரயோகத்தின் சூழலில் பல ஆய்வுகள், பிரிவானது பிள்ளைகளுக்கு நீண்ட காலத்திற்கான சிறந்த தீர்வாகும்.

    வீட்டுத் துஷ்பிரயோகம் பிள்ளைகள் மீது குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • பிரான்சில் ஒரு பெற்றார் தங்கள் பிள்ளைகள் அல்லது அவர்களின் “autorité parentale” மீதான உரிமைகளையும் கடமைகளையும் இழப்பது மிகவும் அரிதானதாகும். மிகவும் தீவிரமான துஷ்பிரயோகத்தின் நிகழ்வில், குற்றம் புரிபவர் அவரின் “autorité parentale” ஐ இழக்கலாம், எனவே உங்களுக்குப் பிரத்தியேகமான பெற்றோருக்குரிய உரிமைகள் அல்லது “autorité parentale exclusive” இருக்கும்.

    பிள்ளைகள் பெரும்பாலும் ஒரு பெற்றாருடன் வாழ்ந்தால், அவர்களின் வதிவிடம் “habituelle” ஆக அல்லது ஒவ்வொரு பெற்றாருடனும் சமமான காலத்திற்கு வாழ்ந்தால் “alternée” ஆகவும் இருக்கலாம்.

    இவை அனைத்தும் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அறிவதற்கு, எங்கள் பிள்ளைப் பொறுப்புக் காப்பு பக்கத்தைப் பார்வையிடலாம்.

  • மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதும், சங்கடமாக அல்லது வெட்கமாக உணர்வதும் சாதாரணமானதாகும். ஆனால் உங்களுக்கு நடந்தது உங்களுடைய தவறல்ல, ஒரு நபராக நீங்கள் யார் என்பதை இது பிரதிபலிக்கவில்லை.

    சமீபத்திய ஆண்டுகளில், நமது சமூகங்களில் வீட்டுத் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம் என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.

    நிச்சயமாக, சிலர் இன்னும் பொருத்தமற்ற விடயங்களைக் கூறலாம், ஆனால் உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பு மட்டுமே முக்கியமானதாகும்.

  • உங்கள் செல்லப்பிராணிகளை உங்களுடன் வைத்திருக்க விரும்பி, அவற்றை நீங்கள் தங்கப் போகும் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டால், உங்களுக்கு அருகிலுள்ள SPA விலங்குக் காப்பிடமொன்றை அணுகி, சாத்தியமான தீர்வுகளைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம்.

    நீங்கள் ஒரு வீட்டைத் தேடிப்பெறும் வரை அவற்றைக் கவனித்துக்கொள்ளலாம்:

    • நீங்கள் நம்பக்கூடிய ஒருவரால்
    • ஒரு செல்லப்பிராணிக் காப்புச் சேவை மூலம் (பெரும்பாலும் கட்டணம் அறவிடப்படும்).

    நீங்கள் வெளியேறும் நாளில் உங்களுடன் எடுத்துச் செல்வதற்கு ஒரு பையைத் தயார் செய்து வைக்கவும்:

    • உங்கள் செல்லப்பிராணிக்கான உணவு
    • அவை உட்கொள்ளும் ஏதாவது மருந்து
    • உங்கள் செல்லப்பிராணியைப் பற்றிய ஆவணங்கள்: சமீபத்திய புகைப்படம் உட்பட, நீங்கள் உரிமையாளர் என்பதை நிரூபிக்கும் எந்த ஆவணமும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: அளவளாவல் சேவை. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

துஷ்பிரயோகம் நடந்ததற்கான சான்றுகளைச் சேகரித்தல்

துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றாலும், சான்றுகளைச் சேகரிப்பது…

முன்னாள் துணைவர் உங்களை அணுகுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு நீதிபதியிடம் வினவுதல்

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி…

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்