தாக்குதலின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளல்

உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் ஆக்ரோஷமாக நடக்க ஆரம்பித்தால், கூடிய விரைவில் பாதுகாப்பைப் பெற முயற்சிக்கவும்.
உங்களால் தப்பிக்கவோ அல்லது உதவிக்கு அழைக்கவோ முடியாவிட்டால், அவர்களின் ஆக்ரோஷத்தை அமைதிப்படுத்த உதவும் கடைசி முயற்சியாகச் சில உத்திகள் உள்ளன.

10/11/2023 அன்று போலீஸ் ஆணையர் Charlotte Huntz ஆல் சரிபார்க்கப்பட்டது

கடைசி முயற்சி உத்திகள்

ஏற்கனவே புண்படுத்தக்கூடிய அல்லது கட்டுப்படுத்தும் நடத்தையைப் பயன்படுத்திய ஒருவருடன் நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தாக்குதலின் போது உங்களால் எண் 17 இல் பொலிஸை அழைக்கவோ, எண் 114 இல் காவல்துறைக்கு SMS அனுப்பவோ, உதவிக்கு அயல் வீட்டாரை அழைக்கவோ அல்லது தாக்குதலின் போது தப்பிக்கவோ முடியாவிட்டால், தாக்குதலின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழே உள்ள ஆலோசனையைப் பின்பற்றலாம்.

முடிந்தால், உங்கள் கைத்தொலைபேசியை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருங்கள், இதனால் நீங்கள் உதவிக்கு அழைக்கலாம்.

    • உங்கள் சுவாசத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கவும். 
    • உங்கள் கைகள் மற்றும் முகம் போன்ற உங்கள் உடலின் சில பகுதிகளைத் தளர்வாக வைத்திருக்க முயற்சிக்கவும்.
    • உங்களை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் - அது சரியாகிவிடும் என்று உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள்.
    • உங்கள் துணைவரிடமிருந்து அல்லது முன்னாள் துணைவரிடமிருந்து ஒரு தூரத்தைக் கடைபிடியுங்கள்.
    • எந்தத் திடீர் அசைவுகளையும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
    • அமைதியாகவும் மெதுவாகவும் நகரவும்.
    • அவருடன் வாதிடவோ அல்லது குறுக்கிடவோ முயற்சிக்காதீர்கள்.
    • மென்மையாகவும் அமைதியாகவும் பேசுங்கள்.
    • புரிந்துணர்வுடனும் இரக்கமாகவும் இருங்கள், உதாரணமாக நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அவர்களுக்கு மிகவும் வெறுப்பாகவோ அல்லது கடினமாகவோ இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதன் மூலம்.
    • உண்மை இல்லாவிட்டாலும், நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள்: அவர் புரிந்து கொண்டால், அவர் அமைதியடையலாம்.
    • நீங்கள் பேசியதற்காக அல்லது செய்ததற்காக அவர் கோபமாக இருந்தால் அதற்காகக் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும்.
    • முடிந்தவரை தீவிரமாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள், எனவே நீங்கள் அவரைக் கேலி செய்கிறீர்கள் என்று அவர் நினைக்க மாட்டார்.
  • உங்களை ஆபத்தில் ஆழ்த்தாமல் முடிந்தவரை, அவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற முயற்சிக்கவும். அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தால், அவர் அமைதியடையத் தொடங்கலாம்.

  • பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையவும்:

    • கத்திகள், கத்தரிக்கோல்கள் மற்றும் ஏனைய கருவிகள் போன்ற ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அல்லது பொருட்கள் இல்லாத அறைகள்
    • தேவைப்பட்டால் வெளியேறும் வழிகளைக் கொண்ட அறைகள், உதாரணமாக வெளியில் ஒரு கதவு அல்லது தரை தளத்தில் ஒரு ஜன்னல்

    பூட்டப்பட முடியுமான அறைகள், அங்கு நீங்கள் எண் 17 இல்போலீஸை அழைக்கலாம்அல்லது எண் 114 மூலம் உங்கள் முகவரியுடன் குறுஞ் செய்தி அனுப்பலாம்.

  • நீங்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாவிட்டால், காவல்துறையை அழைக்கத் தொலைபேசியை வைத்திருக்க முடியாவிட்டால்,அத்துடன் உங்களுக்கு உதவ யாரும் இல்லாவிட்டால்:

    • ஒரு பந்து போல் சுருண்டு உங்கள் உடலை முடிந்தவரை பாதுகாக்கவும்
    • உங்கள் முகத்தையும் தலையையும் உங்கள் கைகளால் பாதுகாக்கவும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: chat service. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • பிரான்சில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உங்களுக்கு உதவ இரண்டு சேவைகள் உள்ளன. 

    ஆம்புலன்ஸ் சேவை “Service d’aide médicale urgente (SAMU)” என்றும் அவசர சேவைகள் “pompiers” என்றும் அழைக்கப்படுகின்றன. உங்களுக்கு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவைப்பட்டால், அவர்கள் உங்களுக்கு விரைவாக உதவலாம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் செல்லலாம்.

    • உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் மாநில சுகாதார காப்பீட்டில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது இச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை.
    • அவசரநிலை அல்ல என்று அவர்கள் கருதுவதன் காரணமாகக் கட்டணங்கள் அறவிடப்பட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் மாநில மற்றும் தனியார் உடல்நலக் காப்பீட்டால் ஈடுசெய்யப்படும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • தொடர்பு கொள்ளவும்: 24/7 இல் இலவசமாகக் கிடைக்கக்கூடிய எண் 112ஐ அழைக்கவும்.
  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், http://www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

அவசர சேவைகளை அழைத்தல்: போலீஸ், ஆம்புலன்ஸ்

ஒரு அவசர நிலையில், காவல்துறைக்கு 17 அல்லது அவசர மருத்துவ சேவைகளுக்கு 112 ஐ அழைக்கவும். அவர்களின்…

முன்னாள் துணைவர் உங்களை அணுகுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு நீதிபதியிடம் வினவுதல்

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி…

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்