பிரான்சில் எளிமைப்படுத்தப்பட்ட அந்தஸ்துடன் தனிப்பட்ட வணிகத்தை உருவாக்குதல்

நீங்கள் பிரான்சில் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க விரும்பினால், “auto-entreprise” என்றும் அழைக்கப்படுகின்ற “micro-entreprise” எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆட்சியுடன் உங்கள் சிறு வணிகத்தைத் தனி உரிமையாளராகத் தொடங்கலாம்.

13/10/2023 அன்று சியாரா காண்டி ஆல் சரிபார்க்கப்பட்டது

பிரான்சில் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க உங்கள் வணிகத்தை அமைக்க விரும்பினால்,“micro-entrepreneur” என்ற நிலையில் தொடங்குவது பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகிறது, இது “auto-entrepreneur” என்று முன்பு அறியப்பட்டது இது எளிமைப்படுத்தப்பட்ட தனியுரிமைத் திட்டமாகும்.

எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள், வரி, சமூகப் பாதுகாப்பு விதிகள் மூலம் பயனடைவதனால் பிரான்சில் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதைச் சாத்தியமாக்குகிறது  

இருப்பினும், ஒரே நிறுவனத்தில் பணியாளர்களை பணியமர்த்தவோ அல்லது மற்றவர்களுடன் பணிபுரியவோ இது உங்களை அனுமதிக்காது.

நிபந்தனைகள்

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியின் குடிமகனாக இருந்தால், உங்களுக்குச் சரியான அடையாள ஆவணம் தேவை.

நீங்கள் வேறொரு நாட்டின் குடிமகனாக இருந்தால், உங்களிடம் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” இருக்க வேண்டும், இது ஒரு நிறுவனத்தை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. இந்த வதிவிட அனுமதி இருக்க முடியும்:

  • carte de séjour” அல்லது வதிவிட அனுமதி அட்டையானது “toute profession en France”, அல்லது “entrepreneur / profession libérale“ என்ற வார்த்தைகளைத் தாங்கியிருக்கும்
  • carte de séjour” ஆனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அல்லது “vie privée et familiale” என்ற வார்த்தைகளைத் தாங்கியிருக்கும்
  • அல்ஜீரிய குடிமக்களுக்கான ஒரு குறிப்பிட்ட “titre de séjour” ஆனது “carte de résident algérien” என்று அழைக்கப்படுகிறது.

titre de séjour” இற்குப் பொருந்தும் விதிகள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை வழங்கிய “préfecture” எனப்படும் உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

  • அவர்களின் தொடர்பு விவரங்களை இந்த கோப்பகத்தில் காணலாம்.
  • ஒரு நிறுவனத்தை அமைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றால், சுய தொழில் செயல்பாட்டை அங்கீகரிக்கும் ஒரு குறிப்பிட்ட வதிவிட அனுமதிக்கு ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படித் தொடர வேண்டும்

குறிப்பாக நீங்கள் பிரஞ்சு பேசாதிருந்தால், நடைமுறைகள் சிக்கலானதாக இருக்கலாம், உங்கள் வணிகச் செயல்பாட்டை அறிவிக்கும்போது தவறு செய்யாமல் இருக்க, உதவியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. 

உதாரணமாக, உங்கள் நிலைமை குறித்த ஆலோசனைக்கு இந்த கோப்பகத்தை தேடுவதன் மூலம் “Centres de formalités des entreprises (CFE)” என்ற நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

  • micro-enterprise” ஐ உருவாக்குவதற்கான நடைமுறைகள் நிகழ்நிலையில் நடைபெறுகின்றன:

    • நீங்கள் ஒரு சேவை வணிகத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் autoentrepreneur.urssaf.fr என்ற இணையதளத்தில்
    • guichet-entreprises.fr என்ற தளத்தில் நீங்கள் வணிக, தொழில்துறை அல்லது கைவினைஞர் வணிகத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால். 

    நீங்கள் பதிவு செய்யும் போது, பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:

    • உங்கள் தற்போதைய செல்லுபடியாகும் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”. அது விரைவில் காலாவதியானால், உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படாமல் போகலாம். அதை புதுப்பிக்க நினைவில் கொள்ளுங்கள். 
    • உங்கள் சமூகப் பாதுகாப்பு எண் அல்லது “numéro de sécurité sociale” என அறியப்படும் மாநில சுகாதாரக் காப்பீட்டு அமைப்பிற்கான உங்கள் பதிவு எண். உங்களிடம் அது இல்லையென்றால், உங்கள் விண்ணப்பத்தில் இதைக் குறிக்கும் பெட்டியைத் தேர்வுசெய்து, உங்கள் வணிகச் செயல்பாட்டின் அறிவிப்பை முடிக்கலாம்.

    உங்கள் வணிகத்தை அமைக்கும் போது, ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களின் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளை செலுத்த வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்தக் கட்டணங்களைச் செலுத்துவது கட்டாயமாகும்.

  • உங்கள் வணிகச் செயல்பாட்டை அறிவித்த பிறகு, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

    • Centre de Formalité des Entreprises” எனப்படும் நிறுவனங்களுக்கான நிர்வாக நடைமுறைகளுக்குப் பொறுப்பான மையத்திற்கு உங்கள் செயல்பாட்டின் அறிவிப்பை அனுப்பவும். நீங்கள் சார்ந்திருக்கும் மையம் உங்கள் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடலாம்.
    • நீங்கள் வணிக, தொழில்துறை அல்லது கைவினைஞர் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தை “Registre du Commerce et des Sociétés (RCS)” உடன் பதிவு செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்வது என்பது பற்றிய விளக்கத்தை இந்த இணையத்தளத்தில் காணலாம்.
    • நீங்கள் ஒரு கைவினைஞர் வணிகச் செயல்பாட்டைச் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு சுய வேலைவாய்ப்புப் பாடநெறியையும் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்தை அறிவிக்கும்போது இது பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.

உங்கள் நிறுவனத்தை நிறுவிய பிறகு

உங்கள் நிறுவனம் உருவாக்கப்பட்டவுடன், “SIRET” எனப்படும் உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வணிக எண்ணைக் குறிப்பிடும் ஆவணத்தை அடுத்த சில நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பெறுவீர்கள். 

தயவு செய்து இந்த ஆவணத்தைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள், உங்கள் நிறுவனம் தொடர்பாக நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் இது உதவும். இந்த எண்ணை உங்கள் விலைப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.

  • நீங்கள் ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை என்றால், Urssaf” இணையத்தளத்தில் ஆன்லைன் கணக்கை உருவாக்க வேண்டும். 

    இந்த இணையத்தளத்தில் உங்கள் வருமானத்தை அறிவிக்கலாம், மேலும் உங்கள் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளை ஆன்லைனில் செலுத்தலாம்:

    • ஒவ்வொரு மாதமும் உங்கள் பங்களிப்பை அறிவித்துச் செலுத்துவதற்கு நீங்கள் தேர்வுசெய்திருந்தால், அவை ஒவ்வொரு மாத இறுதியிலும் செலுத்தப்பட முடியுமாக இருக்கும். 
    • ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உங்கள் வருமானத்தைச் செலுத்தி, உங்கள் பங்களிப்புகளைச் செலுத்த நீங்கள் தேர்வுசெய்திருந்தால், அவை அறிவிக்கப்பட்டு உங்கள் வணிகத்தின் இரண்டாவது காலாண்டிலிருந்து செலுத்தப்பட வேண்டும்.
    • நீங்கள் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை என்றால், €0 இன் அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதன் பிறகு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

    உங்களின் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பைத் தபால் மூலம் அறிவிக்கவும், செலுத்தவும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த விடயத்தில், நீங்கள் ஆவணங்களைப் பூர்த்தி செய்வதற்கு உங்கள் வீட்டு முகவரிக்குப் பெறுவீர்கள்.

  • உங்கள் “auto-entrepreneur” பதிவில் தோன்றும் டவுன் அல்லது நகரம் “Cotisation Foncière des Entreprises (CFE)” எனப்படும் வரியைச் செலுத்தும்படி உங்களைக் கேட்கும்.

    இந்த வரியானது குறிப்பிட்ட வருமான வரம்புக்கு மேல் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் வசிக்கும் டவுன் அல்லது நகரத்தைப் பொறுத்துத் தொகை மாறுபடும். 

    ஆண்டின் இறுதியில், உங்கள் வீட்டு முகவரியில் நிரப்புவதற்கான படிவத்தைப் பெறுவீர்கள். நீங்கள் எந்த வருமானத்தையும் உருவாக்காவிட்டாலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன் இந்த ஆவணத்தை பூர்த்தி செய்து திருப்பி அனுப்புவது முக்கியமாகும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • ADIE” என்பது அனைத்து வகையான தொழில்முறைத் திட்டங்களுக்கும் நுண் நிதியளிப்பு வழங்கும் ஒரு நிறுவனமாகும்.

    • நீங்கள் வங்கியிடமிருந்து கடனைப் பெற முடியாவிட்டால், அவர்கள் உங்களுக்குச் சில நிபந்தனைகளுடன் 100 முதல் 12,000 யூரோக்கள் வரை கடன்களை வழங்க முடியும். 
    • அவர்கள் வணிகத்தை உருவாக்கும் ஆதரவையும் வழங்க முடியும். அவர்கள் ஆன்லைனில் ஒரு இலவச திட்ட உருவாக்கக் கருவியைக் கொண்டுள்ளனர்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: அளவளாவல் மூலம் அல்லது 09 69 32 81 10 இல் தொலைபேசி மூலம். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்சியையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
  • France Travail” என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுகிறது, மேலும் வணிக உருவாக்கம் குறித்து ஆலோசனைகளையும் வழங்கும். அவர்கள் பிரெஞ்சு வேலையற்றோர் கொடுப்பனவுகள் அல்லது பொதுவாக “chômage” என்று அழைக்கப்படும் “allocations de retour à l’emploi” ஆகியவற்றை நிர்வகிக்கின்றனர்.

    • இந்தச் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
    • இந்தச் சேவையைப் பயன்படுத்த, முதலில் அவர்களுடன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்சியில் சந்திப்பு நேரமொன்றைப் பெறுவீர்கள்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: பதிவு அவர்களின் இணையத்தளத்தில் ஆன்லைனில் செய்யப்படுகிறது. நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், பல வழிகள் உள்ளன:
      • உங்கள் ஆன்லைன் ப்ரோபைலை உருவாக்கிய பிறகு உங்கள் தனிப்பட்ட இடத்திலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
      • திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, வியாழன் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை, 3949 என்ற இலவச எண்ணில் அவர்களை அழைக்கலாம்.
      • காலையில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்சிக்கு நேரில் செல்லலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரஞ்சு மொழியைக் கற்றல்

பிரான்சில், துரதிஷ்டவசமாக, பிரெஞ்சு தவிர மற்ற மொழிகளில் மிகச் சில சேவைகளும் படிவங்களும்…

பிரான்சில் வேலை தேடுவது, தொழிற்பயிற்சி பெறுவது

நீங்கள் வளராத ஒரு நாட்டில் வேலை தேடுவது கடினமானதாகத் தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மொழி பேசவில்லை…

மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான பிள்ளைப் பராமரிப்பு

பிரான்சில், மூன்று வயது முதல் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பள்ளி வருகை கட்டாயமாகும். உங்கள் பிள்ளைகள்…

பிரான்சில் பல்கலைக்கழகத்தில் படித்தல்

பல்கலைக்கழகத்தில் படிப்பது ஒரு பட்டம் பெற உங்களை அனுமதிக்கும், இது பிரான்சில் வேலை தேடுவதற்கு…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்