பிரஞ்சு மொழியைக் கற்றல்

பிரான்சில், துரதிஷ்டவசமாக, பிரெஞ்சு தவிர மற்ற மொழிகளில் மிகச் சில சேவைகளும் படிவங்களும் கிடைக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டிய சில விடயங்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் மற்றும் வேலை தேடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஆரம்ப மட்டம் எதுவாக இருந்தாலும், பல தீர்வுகள் இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தியும் கிடைக்கின்றன.

30/05/2022 ஆம் திகதி எமிலி மாத்தியூ-பெனாய்ட் மூலம் சரிபார்க்கப்பட்டது

நீங்கள் பிரெஞ்சு மொழியில் சரளமாக இல்லாவிட்டால், பிரான்சில் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அடிப்படைகளைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவ பல தெரிவுகள் இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ள முடியம்.

நேரம் மற்றும் வழக்கமான பயிற்சி மூலம், நீங்கள் எந்த வயதிலும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பிரெஞ்சு மொழியை மதிப்பிடுதல்.

பொதுவாக, ஒரு வெளிநாட்டு மொழியில் புலமையை மதிப்பீடு செய்வதற்கு மொழிகளுக்கான பொதுவான ஐரோப்பியக் கட்டமைப்பு (CEFRL) அல்லது “Cadre européen commun de référence pour les langues (CECRL)” எனப்படும் நிர்வாகங்களும் பிரெஞ்சு நிறுவனங்களும் ஐரோப்பிய வகைப்பாட்டைக் குறிப்பிடுகின்றன.

இந்த வகைப்படுத்தல் ஆரம்ப மட்டம் A1 முதல் நிபுணர்களுக்கான C2 வரை ஆறு தரங்களைக் கொண்டுள்ளது.

  • titre de séjour” அல்லது வதிவிட அனுமதி எனப்படும் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஆவணத்தை நீங்கள் பெற்றால், பிரெஞ்சு குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகம் அல்லது “Office français de l’immigration et de l’intégration (OFII)”, “contrat d’intégration républicaine (CIR)” என்று அழைக்கப்படுகிற ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்படி கேட்கும்.

    இது பிரான்ஸ் அரசுக்கும் பிரான்சில் நிரந்தரமாக குடியேற விரும்பும் மற்றும் பிரெஞ்சு சமுதாயத்தில் ஒருங்கிணைக்க உறுதியளிக்கும் ஒரு வெளிநாட்டு குடிமகனுக்கும் இடையே செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.

    இந்த சூழலில்:

    • அவர்கள் உங்களை தங்கள் வளாகத்தில் எழுத்து மற்றும் வாய்மொழியான பிரெஞ்சு பரீட்சையை செய்யுமாறு சொல்வார்கள்.
    • உங்கள் பெறுபேறுகளைப் பொறுத்து, மொழிப் பயிற்சியை முடிக்குமாறு அவர்கள் கேட்கலாம், உங்கள் தரத்தைப் பொறுத்து அது கட்டாயம் அல்லது தெரிவாக இருக்கும். இந்தப் பயிற்சி இலவசம்.
    • attestation” எனப்படும், பிரெஞ்சு மொழியை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீங்கள் பெறுவீர்கள்.
  • préfecture” எனப்படும் வதிவிட உரிமைகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான பல்கலைக்கழகங்கள் மற்றும் நிர்வாக அதிகாரசபைகள் போன்ற நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்குப் பதிவு செய்வதன் மூலமும் உங்கள் நிலையை மதிப்பிடலாம்.

    இந்த சோதனை பின்வருமாறு இருக்கலாம்:

    • France Éducation International” என்ற தலைப்பினைக் கொண்ட நிறுவனத்தால் “test de connaissance du français (TCF)” நிர்வகிக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்தைத் தேடலாம்.
    • Chambre de commerce et d’industrie de Paris Île-de-France” என அழைக்கப்படும் அமைப்பால் “test d’évaluation du français (TEF)” வழங்கப்படும். இந்த இணையதளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்தைத் தேடலாம்.

    தேர்வுக் கட்டணம் தேர்ந்தெடுக்கப்பட்ட மையம் மற்றும் எடுக்கப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 90 முதல் 200 யூரோக்கள் வரை இருக்கலாம்.

பாடநெறிகளுக்குப் பதிவு செய்தல்

நேரலையில் மற்றும் நேருக்கு நேர் பிரெஞ்சு மொழியைக் கற்க உதவும் பல சேவைகள் உள்ளன.

உங்கள் நிலைக்கு ஏற்றவாறு இலவசப் படிப்புகளைக் கண்டறிய, உங்கள் உள்ளூர் டவுன் ஹால் அல்லது “mairie” அல்லது வெளிநாட்டு குடிமக்களின் உரிமைகள் தொடர்பாக விசேட நிபுணத்துவம் பெற்ற “associations” எனப்படும் இலவசச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களைக் கேட்டுத் தொடங்கலாம்.

Refugies.info என்ற தளம் நகரம் அல்லது மாநகரம் வாரியாக வரைபடத்தை வழங்குகிறது. இங்கே நீங்கள் உங்கள் பிரெஞ்சு மொழி மட்டத்தைக் குறிப்பிடலாம்.

  • பல சேவைகள் நேரலையில் பிரெஞ்சு மொழி பாடநெறிகளை வழங்குகின்றன.

    இந்தத் தேர்வுகள் இலவசமானவை:

    • Duolingo செயலி நேரலையில் கேம்களை விளையாடும் போது வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. பயிற்சிகள் உங்கள் தரத்திற்கு ஏற்றவை.
    • Happy FLE, அல்லது Pas à pas செயலிகள் முழுமையாக ஆரம்பிப்பவர்களுக்கானது. சமீபத்தில் பிரான்சுக்கு வந்த மக்களுக்கான ஒருங்கிணைப்பு செயல்முறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
    • J’apprends அல்லது Solido செயலிகள் குறிப்பாக வாசிப்பு மற்றும்/அல்லது எழுதுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
    • TV5Monde இணையத்தளம் வீடியோக்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பை வழங்குகிறது, பின்னர் உங்கள் அறிவை பரிசோதிக்க வினாடி வினாக்களை நீங்கள் எடுக்கலாம்.
    • RFI Savoirs தளம் தரம் மற்றும் தலைப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட பல வினாடி வினாக்கள், எளிதான பிரெஞ்சு செய்திகள் மற்றும் “TCF” மொழிச் சோதனைப் பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது.
    • Alliance française”அமைப்பு வெவ்வேறு தலைப்புகளில் பிரெஞ்சு மொழிக் கற்றல் வீடியோக்களை வழங்குகிறது. இந்த பாடநெறிகள் பல தரங்களில் வழங்கப்படுகின்றன:
  • தனிப்பட்ட பிரஞ்சு பாடநெறிகளுக்கு பல தெரிவுகள் உள்ளன.

    இலவச அல்லது குறைந்த கட்டண பாடநெறிகள்

    உங்களுக்கு அருகில் வழங்கப்படும் இலவச அல்லது குறைந்த கட்டண பாடநெறிகளைப் பற்றி அறிய, “mairie” எனப்படும் உங்கள் நகரம் அல்லது மாநகரத்தின் உள்ளூர் நிர்வாக அதிகாரசபையிடம் கேட்கலாம்.

    துரதிர்ஷ்டவசமாக, வெவ்வேறு நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே கிடைக்கும் தன்மை பெரிதும் மாறுபடும்.

    மேலும், “associations” எனப்படும் சில நிறுவனங்கள் இலவச சேவைகளை வழங்குகின்றன. இலவச பிரெஞ்சு வகுப்புகள் அல்லது “cours de français gratuits” மற்றும் உங்கள் நகரம் அல்லது மாநகரத்தின் பெயரைத் தட்டச்சு செய்வதன் மூலம் நேரலையில் தேடலாம்.

    France Travail (இலவசம்) ஆல் வழங்கும் பிரெஞ்சு பாடநெறிகள்

    France Travail” எனப்படும் வேலையில்லாதவர்களுக்கான தேசிய ஆதரவு சேவையில் நீங்கள் பதிவு செய்திருந்தால், நீங்கள் இலவச பிரெஞ்சு மொழிப் பாடநெறிகளைப் பெறலாம். “France Travail” இல் உங்கள் ஆலோசகரிடம் பேசுங்கள்.

    கட்டணம் செலுத்தப்பட்ட பாடநெறிகள்

    குறைந்த விலையில் கிடைக்கும் பிரெஞ்சு மொழி பாடநெறிகளை வழங்கும் நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    உதாரணமாக, உங்களுக்கு முடியும்:

    • இந்த இணையத்தளத்தில் பாடநெறியைத் தேடவும், இது பிராந்திய வாரியாக கிடைக்கும் பாடநெறிகளின் வரைபடத்தை வழங்குகிறது. உங்கள் நகரம் அல்லது மாநகரப் பிரதேசத்தில் உள்ள பாடநெறிகளைத் தேட, முதலில் உங்கள் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரான்சின் வரைபடத்தைக் கிளிக் செய்து, பின்னர் “Ville” தேடல் பட்டியில் உங்கள் நகரம் அல்லது மாநகரத்தின் பெயரை உள்ளிடவும்.
    • தரமான பிரெஞ்சு பாடநெறிகளை வழங்குவதில் புகழ்பெற்ற “Alliance française” நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.
    • Superprof, Kelprof அல்லது Acadomia போன்ற தளங்களில் தேடுவதன் மூலம் தனிப்பட்ட ஆசிரியருடன் தனிப்பட்ட பாடங்களைப் படிக்கவும்.
  • பாடநெறிகள் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாகும், முடிந்தவரை பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் அதிக முன்னேற்றம் அடைவீர்கள்.

    இதற்கு முன்னர் பாடநெறிகளைத் தொடர்ந்த பெண்களுக்கான பிரான்ஸ் அணியில் உள்ளவர்களிடமிருந்து சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.

    • ஒவ்வொரு நாளும் பிரெஞ்சு மொழியில் வானொலியைக் கேட்பது மற்றும் டிவி பார்ப்பது உங்கள் புரிதலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.
    • பிரெஞ்சு மொழிப் படங்களைப் பார்க்கும்போது சப்டைட்டில்களை பிரெஞ்சு மொழியிலும் போடுங்கள். வார்த்தைகள் எழுதப்பட்ட விதத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும் பழகிக்கொள்ளவும் இது உதவும்.
    • பிரஞ்சு நூல்களை சத்தமாக வாசிக்க பயிற்சி எடுங்கள். சரளமாக பிரஞ்சு பேசும் உறவினர்கள் உங்களிடம் இருந்தால், உங்கள் உச்சரிப்பை சரிசெய்யும்படி அவர்களிடம் கேளுங்கள்.
    • உங்கள் தாய்மொழி பேசாதவர்களுடன் முடிந்தவரை நேரத்தைச் செலவிடுங்கள், அது சோர்வாகத் தோன்றினாலும் கூட.
    • உங்களை நீங்களே தணிக்கை செய்யாதீர்கள் - நீங்கள் வார்த்தைகளைத் தேடினால் அல்லது தவறு செய்தால் அது பெரிய விடயமல்ல. எந்தவொரு நியாயமான நபரும் உங்களை ஒருபோதும் நடுவாண்மை செய்ய மாட்டார்கள், ஏனென்றால் நீங்கள் பிரெஞ்சுக்காரர் அல்ல என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
    • உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரெஞ்சு மொழியில் பேசுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
    • உங்களுக்கு அருகிலுள்ள செயற்பாடுகளில் பங்கேற்கவும் உங்கள் சொந்த மொழியைப் பேசாத புதிய நபர்களுடன் பிரெஞ்சு மொழியைப் பயிற்சி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

    மனம் தளராதீர்கள். தினசரி அடிப்படையில் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், சில வாரங்களில் நீங்கள் முன்னேற்றமடைய முடியும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • France Travail” என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுகிறது, மேலும் தொழில்முயற்சி உருவாக்கம் குறித்து ஆலோசனை வழங்க முடியும். அவர்கள் “chômage” என பொதுவாக அறியப்படும் பிரெஞ்சு வேலையின்மை கொடுப்பனவுகள் அல்லது “allocations de retour à l’emploi”ஆகியவற்றையும் நிர்வகிக்கிறார்கள்.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • இந்தச் சேவையைப் பயன்படுத்த, முதலில் அவர்களுடன் நேரலையில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு அருகிலுள்ள முகவரகமொன்றிலிருந்து ஒரு சந்திப்பைப் பெறுவீர்கள்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: அவர்களின் இணையத்தளத்தில் நேரலையில் பதிவு செய்யப்படுகிறது. நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், பல வழிகள் உள்ளன:
      • உங்கள் நேரலை சுயவிவர பக்கத்தை உருவாக்கிய பிறகு உங்கள் தனிப்பட்ட பக்கத்திலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
      • நீங்கள் அவர்களை 3949 என்ற இலவச எண் மூலம் அழைக்கலாம், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, வியாழன் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 3:30 மணி வரையும்.
      • காலையில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்சிக்கு நேரில் செல்லலாம்.
  • Mairie” என்பது உள்ளூர் கொள்கைகளுக்குப் பொறுப்பான உள்ளூர் நிர்வாக சபையாகும். அதன் முக்கிய பங்கு அதன் குடிமக்களின் சிரமத்தின் போது உதவுவதாகும். அவர்கள் உங்கள் உரிமைகள் மற்றும் நிதி உதவியைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கலாம், தொடர்புடைய நிறுவனங்களுக்கு உங்களை வழிநடத்தலாம் மற்றும் சில நிர்வாக நடைமுறைகளில் உங்களுக்கு உதவலாம்.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது மாநகரத்தின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் உங்கள் உள்ளூர் “mairie” இன் தொடர்பு விவரங்களை இந்தத் தளத்தில் காணலாம்.
  • Associations” என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும். சில குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவை

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • பிரான்சில் உங்கள் உரிமைகள் பற்றி அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம், மேலும் சில சமயங்களில் குடியேற்ற நடைமுறைகளில் உங்களுக்கு ஆதரவளிக்கலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் பகுதி மற்றும் திணைக்கள வாரியாக நீங்கள் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரான்சில் பல்கலைக்கழகத்தில் படித்தல்

பல்கலைக்கழகத்தில் படிப்பது ஒரு பட்டம் பெற உங்களை அனுமதிக்கும், இது பிரான்சில் வேலை தேடுவதற்கு…

பிரான்சில் ஒரு சமூகத்தைக் கண்டறிதல்

குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து வெகு தொலைவில், குறிப்பாக நீங்கள் வீட்டு துஷ்பிரயோகத்தை…

பிரான்சில் வேலை தேடுவது, தொழிற்பயிற்சி பெறுவது

நீங்கள் வளராத ஒரு நாட்டில் வேலை தேடுவது கடினமானதாகத் தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மொழி பேசவில்லை…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்