பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
ஒரு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”, ஏற்கனவே வதிவிட உரிமைகள் மற்றும் சுதந்திரமாக வேலை செய்ய அல்லது பிரான்சில் தங்கள் சொந்த வணிகத்தை அமைக்க விரும்பும் நபர்களுக்கு வழங்கப்படலாம்.
06/10/2023 அன்று FNCIDFF ஆல் சரிபார்க்கப்பட்டது
இந்த இரண்டு நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் உறுப்புரைகள் L.421–5 மற்றும் L.421–6.
இந்த இணையத்தளத்தில் உங்களின் புதிய வணிக யோசனையின் மதிப்பீட்டை நீங்கள் பெறலாம்.
“entrepreneur / profession libérale'' அல்லது தொழில்முனைவோர்/ சுயதொழில் செய்பவர் என்பதைக் குறிப்பிட்டு ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் தற்காலிக வதிவிட அட்டை அல்லது “carte de séjour temporaire” ஐப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது.
நீங்கள் இன்னும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de séjour” புதுப்பிக்கப்படும்.
நீங்கள் இன்னும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de séjour” புதுப்பிக்கப்படும். இதைச் செய்வதற்கு, நீங்கள் “Contrat d’Intégration Républicaine (CIR)” எனப்படும் பிரெஞ்சு மாநிலத்துடன் குடியேற்ற ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் மற்றும் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்.
நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் “carte de résident” ஐக் கோரலாம். மேலும் அறியவும்
இந்த அடிப்படையில் “titre de séjour” ஒன்றினைப் பெறுவதற்கான விருப்பத்தேர்வு அல்ஜீரிய நாட்டினருக்குப் பொருந்தும்.
உங்கள் விடயத்தில்:
பொருந்தக்கூடிய சட்டம்: 27 டிசம்பர் 1968 இன் பிராங்கோ-அல்ஜீரிய ஒப்பந்தத்தின் 5வது பிரிவு திருத்தப்பட்டது போன்று.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…