நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை உங்களின் முன்னாள் துணைவர் வழங்காவிட்டால் என்ன செய்வது என அறிந்து கொள்ளல்
உங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை அல்லது பிள்ளைப்…
பிரான்சில், சட்டத்தின்படி,தேவைப்பட்டால் திருமணமான துணைவர்கள் ஒருவருக்கொருவர் நிதி மற்றும் பொருள் உதவிகளைச் செய்துகொள்ள வேண்டும். நீங்கள் விவாகரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணையிடமிருந்து நிதிப் பங்களிப்புகளைக் கோரலாம்.
31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
இந்த நிதி பங்களிப்பு, "pension alimentaire au titre du devoir de secours” எனப்படும் பராமரிப்பு கொடுப்பனவாகும், இது பல்வேறு வடிவங்களை எடுக்கலாம்:
விவாகரத்து உறுதியாக அறிவிக்கப்படும் வரை இந்தப் பராமரிப்புக் கொடுப்பனவு பொருந்தும்.
குடும்ப நீதிபதி அல்லது “Juge aux affaires familiales (JAF)” தற்காலிகமான விவாகரத்து நடவடிக்கைகளில் பராமரிப்புக் கொடுப்பனவை அல்லது “pension alimentaire au titre du devoir de secours” ஐச் சேர்க்க முடிவு செய்யலாம்.
வாழ்க்கைத் துணைவர்கள் தொடர்பான பல அளவுகோல்களின்படி இந்த பராமரிப்புக் கொடுப்பனவின் அளவை அவர்கள் அமைப்பார்கள்:
எந்த நேரத்திலும் உங்களுக்கோ அல்லது அவர்களுக்கோ இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பராமரிப்புத் தொகை மதிப்பாய்வு செய்யப்படலாம். இது தான் விடயமெனில், உங்கள் வழக்கறிஞர் ஊடாக “Juge aux affaires familiales” இற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் முன்னாள் துணைவர் நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்புக் கொடுப்பனவைச் செலுத்தவில்லை என்றால், அதற்குத் தீர்வுகள் உள்ளன.
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை உங்களின் முன்னாள் துணைவர் வழங்காவிட்டால் என்ன செய்வது என அறிந்து கொள்ளல்
உங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை அல்லது பிள்ளைப்…
உங்கள் முன்னாள் துணைவர் விவாகரத்து விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளல்
உங்களின் முன்னாள் துணைவர் உங்கள் விவாகரத்தில் தீர்மானிக்கப்பட்ட சொத்துப் பிரிவினைக்கு இணங்கவில்லை…
பிரான்சில் விவாகரத்து
நீங்கள் பிரான்சில் உங்கள் சிவில் திருமணத்தை முடிக்க விரும்பினால், நீங்கள் பல வகையான விவாகரத்து…