பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…
உங்களின் முன்னாள் துணைவர் உங்கள் விவாகரத்தில் தீர்மானிக்கப்பட்ட சொத்துப் பிரிவினைக்கு இணங்கவில்லை என்றால் அல்லது இழப்பீட்டுத் தொகையாக அல்லது “prestation compensatoire”ஆக அறியப்படும் நீதிபதி கோரும் தொகையை உங்களுக்கு வழங்கவில்லை என்றால், அதற்கான தீர்வுகள் இருக்கின்றன.
31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
முன்னாள் துணைவருக்குத் நீதிபதியால் தீர்ப்பளிக்கப்பட்டாலும் கூட. துரதிஷ்டவசமாக,அவர் உங்கள் விவாகரத்து விதிமுறைகளுக்கு இணங்காமல் போகலாம். அப்படி இருந்தால், அவர் சட்டத்தை மீறுகிறார்.
நீதி முறைமை அதிகாரிஅல்லது “commissaire de justice” இன் ஈடுபாடு தேவைப்படும் பல தீர்வுகள் உள்ளன.
இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை அமர்த்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தச் சேவைகளுக்குப் பணம் செலுத்துவதற்கு உங்கள் வளங்கள் மிகக் குறைவாக இருந்தால், நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்
“saisie sur compte bancaire” என்ற செயன்முறையானது செலுத்தப்படாத தொகைகளை உங்கள் “débiteur” இன் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக மீட்டெடுப்பதைக் குறிக்கின்றது.
“saisie-vente” என்ற செயன்முறையானது “débiteur” இன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதைக் கொண்டுள்ளது. உங்களுக்குச் செலுத்தப்படாத தொகையைச் செலுத்த அவை விற்கப்படும்.
நீங்கள் பணம் பெறுவதற்கு எடுக்கும் நேரம், உங்கள் “débiteur” இன் தீர்வுகாணும் திறனில் தங்கியுள்ளது உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை முதல் பறிமுதல் முயற்சியிலேயே கைப்பற்றப்பட்டால்,நீங்கள் மூன்று மாதங்களுக்குள் அந்தத் தொகையைப் பெற வேண்டும்.
துரதிஷ்டவசமாக, “débiteur” தீர்க்கக்கூடியதாக இல்லையென்றால்., அதற்கு அதிக காலம் ஆகலாம்.
“commissaire de justice” இன் சேவைகளுக்கு நீங்களே பணம் செலுத்த வேண்டும், அதனால்தான் இந்த நடைமுறைகள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. கட்டணம் செலுத்தப்படாவிட்டால், ஒவ்வொரு மாதமும் “saisie” செயன்முறையை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும். இருப்பினும், உங்களிடம் சட்ட உதவி அல்லது “aide juridictionnelle” இருந்தால் கட்டணம் செலுத்தப்படலாம்.
“commissaire de justice” எனப்படும் நீதி முறைமை அதிகாரியை நீங்கள் அழைக்க வேண்டும். இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.
நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்
“saisie sur compte bancaire” இன் ஒரு பகுதியாக, “commissaire de justice” அதிகாரி , “acte de saisie” என அறியப்படும் கொடுப்பனவுக் கோரிக்கையை நேராக உங்கள் “débiteur” இன் வங்கிக்கு அனுப்புவார்.
“saisie-vente” இன் ஒரு பகுதியாக,“commissaire de justice” உங்கள் “débiteur” இடம் பணம் செலுத்தச் சொல்லும் ஆவணத்தை அவருக்கு அனுப்பி, செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துமாறு கேட்பார். இது பணம் செலுத்துவதற்கான உத்தரவு அல்லது “commandement de payer” என அறியப்படுகிறது.
“saisie sur salaire” என அறியப்படும் செயன்முறையானது, உங்கள் “débiteur” இன் சம்பளத்திலிருந்து செலுத்தப்படாத தொகையை மீட்டெடுப்பதை உள்ளடக்குகிறது.
சராசரியாக, இந்தச் செயன்முறைக்கு அதிக காலம் எடுக்கும், ஏனெனில்:
சராசரியாக, செலுத்தப்படாத தொகையை மீட்டெடுக்க 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகும்.
ஆம், ஆனால் உங்கள் “débiteur” இந்தச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
வழக்கறிஞர் வழியாக “Juge aux affaires familiales (JAF)” என அறியப்படும் குடும்ப நீதிபதியிடம் நீங்கள் முதலில் அங்கீகாரத்தைக் கோர வேண்டும். அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.
நீதிபதியால் அங்கீகரிக்கப்பட்டதும், நீங்கள் ஒரு நீதி முறைமை அதிகாரி அல்லது “commissaire de justice” ஐப் பணியமர்த்த வேண்டும், அவர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அவரின் சம்பளத்தில் இருந்து நேரடியாகப் பறிமுதல் செய்வார். இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.
நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்
சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள். “saisie sur salaire” நடைமுறையைச் செயல்படுத்த, “commissaire de justice” உங்கள் “débiteur” இன் பணியமர்த்துநரைத் தொடர்புகொள்வார்,
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
“Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…
பிரான்சில் விவாகரத்து
நீங்கள் பிரான்சில் உங்கள் சிவில் திருமணத்தை முடிக்க விரும்பினால், நீங்கள் பல வகையான விவாகரத்து…