நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை உங்களின் முன்னாள் துணைவர் வழங்காவிட்டால் என்ன செய்வது என அறிந்து கொள்ளல்

உங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை அல்லது பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை எனின், அதற்கு உங்களுடைய துணைவரை அல்லது மற்றைய பெற்றாரை அதனை வழங்குமாறு வற்புறுத்துவதற்கான தீர்வுகள் உள்ளன.

31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு நிதிப் பங்களிப்பு நீதிபதியால் தீர்மானிக்கப்படலாம்:

  • ஒரு விவாகரத்துச் சூழ்நிலையில், நீதிபதி துணைகளில் ஒருவரிடம் மற்றைய துணைக்கு பராமரிப்புக் கொடுப்பனவாக அறியப்பட்டுள்ள நிதிப் பங்களிப்பொன்றை அல்லது “pension alimentaire au titre du devoir de secours” ஐ நடைமுறையின் கால எல்லைக்கு வழங்குமாறு கேட்கலாம்
  • பெற்றோர்கள் பிரிந்து இருந்தால், நீதிபதி ஒரு பெற்றாரிடம் மற்றைய பெற்றாருக்கு “contribution à l’entretien et à l’éducation des enfants”, அல்லது பராமரிப்பு மற்றும் கல்விக்கான பங்களிப்பாக அறியப்பட்டுள்ள ஒரு தொகையை வழங்குமாறு கேட்கலாம், இது பராமரிப்புக் கொடுப்பனவு அல்லது “pension alimentaire” எனவும் அறியப்படுகின்றது.

நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட அல்லது நொதாரிசு அல்லது “notaire” என அறியப்பட்டுள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வமான சாட்சியுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் சூழ்நிலையில், நிதிப் பங்களிப்பை உங்கள் துணைவர் அல்லது மற்றைய பெற்றார் உங்களுக்கு வழங்காவிட்டால் அதற்குத் தீர்வுகள் உள்ளன. இவை முதன்மையாக உங்களுக்குப் பணம் வழங்கவேண்டிய நபரின் வதிவிடத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுக்ன்றது, இது “débiteur” என அறியப்படுகின்றது

பிரான்சில் “Débiteur

Débiteur”ஆனவர் பிரான்சிலே வசித்தால், செலுத்தப்படாத தொகையை மீளப்பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட தீர்வுகள் உள்ளன.

உங்களுக்குப் பிள்ளைகள் இருப்பின், குடும்ப உதவி நிதியினால் வழங்கப்படுகின்ற வேகமான செயல்முறையினூடாகவோ “Caisse d’allocations familiales (Caf)” அல்லது “Mutualité Sociale Agricole (MSA)” ஊடாகவோ செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

எந்தச் செயல்முறையை நீங்கள் தெரிவு செய்தாலும், அதை “débiteur” மேல் முறையீடு ஒன்றை மேற்கொள்வதன் மூலம் பிரச்சனைக்கு உற்படுத்தப்படலாம். எவ்வாறாயினும், நீதிபதி ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் வரையில் நீங்கள் கேட்கின்ற தொகையை உங்களுக்கு வழங்குவதற்கு இன்னும் அவர்கள் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படிமுறைகளை மேற்கொள்வதற்கு ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.

  • எது தொடர்புபடுகின்றது?

    உங்களுக்கு உரித்துடைய “Caisse d’allocations familiales (Caf)” அல்லது “Mutualité Sociale Agricole (MSA)” குடும்ப உதவி நிதியை நீங்கள் வேண்டலாம், “Agence de recouvrement et d’intermédiation des pensions alimentaires (Aripa)” என அழைக்கப்படுகின்ற மீட்பு முகவர் ஊடாக செலுத்தப்படாத தொகையை சேகரிப்பதற்கு நீங்கள் இதை வேண்டலாம்.

    recouvrement” என அறியப்பட்டுள்ள செயல்முறை அல்லது மீட்பு ஆகியவற்றைக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படாத நிலையில் உடனடியாகப் பயன்படுத்த முடியும், மேலும் செலுத்தப்படாத தொகைக்கான காலம் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் நிர்ணயிக்கப்படும்

    உங்களின் நிலைமைக்கு ஏற்ப அவர்கள் தீர்மானிக்கலாம்:

    • குடும்ப உதவித்தொகை அல்லது “allocation de soutien familial” என அறியப்பட்ட ஒரு நிதி உதவி சில நிபந்தனைகளின் கீழ் உங்களுக்கு வழங்கப்படும்
    • ஒவ்வொரு மாதத்திற்கும் செலுத்தப்படாத தொகையை நேரடியாக மற்றைய பெற்றாரிடம் இருந்து சேகரித்தல் இம்முறைமை “intermédiation” என அழைக்கப்படுகின்றது

    இது வேகமானதா?

    ஆம் மீட்பு அல்லது “recouvrement” முறைமையானது பொதுவாக விரைவானது, அண்ணளவாக சில வாரங்கள் எடுக்கும்.

    சில நிகழ்வுகளில், “Caf” அல்லது “MSA”, உங்களுடைய “débiteur” இடமிருந்து கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முன்னரும் கூட செலுத்தப்படாத தொகையை முன் கூட்டியே உங்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கலாம்

    அதற்குச் செலவாகுமா?

    இல்லை, இச்செயல்முறை இலவசமானது

    என்ன படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

    நீங்கள் நேரடியாக “Caf” அல்லது “MSA” உடன் வேண்டுகோள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    • விண்ணப்பப்படிவத்தைநிகழ்நிலை மூலம் முன்வையுங்கள்(“Caf”மாத்திரம்) அல்லது ஒரு விண்ணப்பப் படிவத்தை தபால் மூலம் அனுப்புங்கள். Caf மற்றும் MSA க்கான தொடர்பு இலக்கங்களை அவர்களின் வெப் தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்
    • contribution à l’entretien et à l’éducation des enfants” என அறியப்படுகின்ற உங்களுடைய விண்ணப்பத்திற்கு உங்களுக்கு நிதிப் பங்களிப்புக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ நீதிமன்ற ஆவணத்தின் ஒரு பிரதியை இணைக்கவும்.
    • அதனை நீங்கள் தபால் மூலம் அனுப்பினால், கையளிப்பு பதியப்பட்ட பதிவுத்தபாலில் அல்லது “lettre recommandée avec accusé de réception” அக்கடித்தை அனுப்புங்கள். இதுதான் பற்றுச்சீட்டுச் சான்று பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழியாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்

    அடுத்து என்ன?

    விண்ணப்பப்படிவ செயல்பாட்டுக் காலம் குறிப்பாக திணைக்களத்துக்கு திணைக்களம் வேறுபடும் நீங்கள் ஒரு மாதத்தின் பின்பு எந்தவொரு பதிலையும் பெற்றுக்கொள்ளாவிடின் நீங்கள் உங்களுடைய “Caf” அல்லது “MSA” ஐத் தொடர்பு கொள்ள முடியும்.

  • எது தொடர்புபடுகின்றது?

    paiement direct” என அறியப்படுகின்ற இந்நடைமுறையானது நிதிப் பங்களிப்புக் கொடுப்பனவை முதலாளியிடமிருந்து நேரடியாகவோ அல்லது உங்களுக்கு பணம் வழங்க வேண்டிய “débiteur” நபரினது வங்கியிலிருந்தோ கொடுப்பனவை பெற முடியுமாக்குகின்றது. இவ்வமைப்புக்கள் ஒரு மூன்றாம் தரப்பாகவோ அல்லது ஒரு “tiers” என அறியப்படுகின்றது.

    காலம் கடந்த கொடுப்பனவின் முதலாவது தினத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்த முடியும், மேலும் செலுத்தப்படாத தொகைக்கான காலம் ஆறு மாதங்களாக நிர்ணயிக்கப்படும்

    இது வேகமானதா?

    tiers” கொடுப்பனவை மேற்கொள்வது விரைவாக இருந்தால் இச்செயல்முறை விரைவாக இருக்க முடியும் இந்நிலையில், நீங்கள் செலுத்தப்படாத தொகையை ஒரு மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    துரதிஷ்டவசமாக, “tiers” இல் சம்மந்தப்பட்டவர்களைப் பொறுத்து கொடுப்பனவிற்குப் பல மாதங்கள் வரை செல்லலாம்

    அதற்குச் செலவாகுமா?

    ஆம், ஆனால் உங்களுடைய “débiteur” ஆனவர் இச்செலவுகளை பொறுப்பேற்க வேண்டி இருக்கும் நீங்கள் எவ்வித கொடுப்பனவும் செய்யவேண்டி இருக்காது.

    என்ன படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

    நீங்கள் “huissier de justice” என அறியப்பட்டுள்ள நீதித்துறை அரிகாரியினால் அழைக்கப்பட வேண்டும் இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.

    நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கும்:

    • உங்களுக்கு நிதிப் பங்களிப்பை வழங்கும் அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணம்
    • உங்களுடைய வங்கிக்கணக்கு சான்றிதழ் அல்லது “relevé d’identité bancaire (RIB)
    • நீங்கள் செலுத்தப்படாத தொகையை குறிப்பிட்டுள்ள ஒரு ஆவணம். நீங்கள் அது மிகச்சரியானது என சான்றுப்படுத்துவதோடு அதில் கையொப்பமிடவும் வேண்டும். இதைச் செய்ய, உதாரணமாக நீங்கள் பிரமாண அறிக்கையைப் பயன்படுத்தலாம். தயவுசெய்து கவனிக்கவும்: ஒரு விண்ணப்பதாரியாக நீங்கள் பிழையாக கணிக்கப்பட்ட தொகையை வேண்டிய நிலையில் அதனை சட்டபூர்வமாக பொறுப்பேற்கலாம்

    huissier” ஆனவர் உங்களுடைய “débiteur” தொடர்பான முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி, அவர்களின் முகவரி, அவர்களின் முதலாளி மற்றும் அரச சுகாதாரக் காப்பு முறைமைக்கான சமூகப் பாதுகாப்பு இலக்கம் உட்பட உங்களின் தகவல்களைக் கேட்பார், இது “numéro de sécurité sociale” என அறியப்படுகின்றது. இத்தகவல்கள் அனைத்தும் உங்களிடம் இல்லாவிடின், அவர்கள் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

    அடுத்து என்ன?

    huissier”ஆனவருக்கு, நேரடிக் கொடுப்பனவு வேண்டுகோள் ஒன்றை “tiers” க்கு அனுப்புவதற்கு எட்டு நாட்கள் இருக்கும். “tiers” ஆனவருக்கு வேண்கோளுக்குப் பதில் வழங்குவதற்கு எட்டு நாட்கள் இருப்பதோடு கேற்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கு இயலுமை உள்ளதா எனவும் குறிப்பிடல் வேண்டும்.

    அவர்களுக்கு செலுத்துவதற்கு முடியுமாக இருந்தால் “tiers” ஆனவர் தொகையை நேரடியாக உங்களுடைய வங்கிக்கணக்கிற்கு செலுத்துவார். கட்டணம் செலுத்தும் காலம் ஒரு “tiers” இலிருந்து மற்றொன்றுக்கு வியத்தகு அளவில் மாறுபடலாம்.

  • எது தொடர்புபடுகின்றது?

    saisie sur compte bancaire” செயல்முறையானது, உங்கள் “débiteur” வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்தப்படாத தொகைகளை மீட்டெடுப்பதைக் கொண்டுள்ளது.

    saisie-vente” நடைமுறையானது “débiteur” சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதைக் கொண்டுள்ளது. உங்களுக்குச் செலுத்தப்படாத தொகையைச் செலுத்த அவை விற்கப்படும்.

    இது வேகமானதா?

    நீங்கள் பணம் பெறுவதற்கு எடுக்கும் நேரம் உங்களின் “débiteur” இன் தீர்வுத் திறனைப் பொறுத்தது. உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை முதல் கைப்பற்றல் முயற்சியில் கைப்பற்றப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நீங்கள் தொகையைப் பெற வேண்டும்.

    துரதிஷ்டவசமாக, “débiteur” தீர்க்கப்படாவிட்டால், அதற்கு அதிக காலம் ஆகலாம்.

    அதற்குச் செலவாகுமா?

    huissier” இன் சேவைகளுக்கு நீங்களே பணம் செலுத்த வேண்டும்,அதனால்தான் இந்த நடைமுறைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. கட்டணம் செலுத்தப்படாவிட்டால்,ஒவ்வொரு மாதமும் “saisie” நடைமுறையை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும். இருப்பினும், உங்களிடம் சட்ட உதவி அல்லது “aide juridictionnelle” இருந்தால் கட்டணம் அறவிடப்படலாம்

    என்ன படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

    நீங்கள் “huissier de justice” என அறியப்பட்டுள்ள நீதித்துறை அரிகாரியினால் அழைக்கப்பட வேண்டும் இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.

    நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கும்:

    • உங்களுக்கு நிதிப் பங்களிப்பை வழங்கும் அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணம்
    • உங்களுடைய வங்கிக்கணக்கு சான்றிதழ் அல்லது “relevé d’identité bancaire (RIB)
    • நீங்கள் செலுத்தப்படாத தொகையை குறிப்பிட்டுள்ள ஒரு ஆவணம். நீங்கள் அது மிகச்சரியானது என சான்றுப்படுத்துவதோடு அதில் கையொப்பமிடவும் வேண்டும். இதைச் செய்ய, உதாரணமாக நீங்கள் பிரமாண அறிக்கையைப் பயன்படுத்தலாம். தயவுசெய்து கவனிக்கவும்: ஒரு விண்ணப்பதாரியாக நீங்கள் பிழையாக கணிக்கப்பட்ட தொகையை வேண்டிய நிலையில் அதனை சட்டபூர்வமாக பொறுப்பேற்கலாம்

    அடுத்து என்ன?

    saisie sur compte bancaire” இன் ஒரு பகுதியாக, “huissier”, “acte de saisie” என அறியப்படும் கட்டணக் கோரிக்கையை அனுப்பும், அது நேராக உங்கள் “débiteur” வங்கிக்குச் செல்லவும்..

    • huissier” உங்களுடைய “débiteur” க்கு எட்டு நாட்களுக்குள் தெரிவிக்கும்.
    • அவர்களின் வங்கிக் கணக்கு அதிகபட்சம் 15 வேலை நாட்களுக்குத் தடுக்கப்படும், அந்த நேரத்தில் வங்கி பறிமுதல் செய்யக்கூடிய தொகையைத் தீர்மானிக்கும், அதன் பிறகு வங்கிக் கணக்குகளுக்கான அணுகலைத் தடுக்கும்.

    saisie-vente” இன் ஒரு பகுதியாக, “huissier”, உங்கள் “débiteur”யிடம் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தும்படி கேட்கும் பணம் செலுத்துமாறு கேட்கும் ஆவணத்தை அவர்களுக்கு அனுப்புதல், இது பணம் செலுத்துவதற்கான உத்தரவு அல்லது “commandement de payer” என அறியப்படுகிறது.

    • பணம் செலுத்த எட்டு நாட்கள் அவகாசம் இருக்கும்.
    • இந்தக் காலத்திற்குள் பணம் செலுத்தப்படவில்லை என்றால், “huissier” சொத்தை பறிமுதல் செய்யும். “débiteur” மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்க்கை மற்றும் வேலைக்குத் தேவையான பொருட்களைத் தவிர, கைப்பற்றப்பட்ட சொத்து மதிப்புக்குரியதாக இருக்கலாம்.
  • எது தொடர்புபடுகின்றது?

    saisie sur salaire” எனப்படும் செயல்முறையானது, உங்கள் “débiteur” இன் சம்பளத்திலிருந்து செலுத்தப்படாத தொகையை மீட்டெடுப்பதை உள்ளடக்குகிறது.

    இது வேகமானதா?

    சராசரியாக, இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்கும், ஏனெனில்:

    • இது குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “Juge aux affaires familiales”" முன் சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது
    • நடைமுறையில் ஈடுபட்டுள்ள தொழில்தருநரைப் பொறுத்து கட்டணம் செலுத்தும் நேரம் கணிசமாக மாறுபடும்.

    சராசரியாக, செலுத்தப்படாத தொகையை மீட்டெடுக்க 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகும்.

    அதற்குச் செலவாகுமா?

    ஆம், ஆனால் உங்களுடைய “débiteur” ஆனவர் இச்செலவுகளை பொறுப்பேற்க வேண்டி இருக்கும் நீங்கள் எவ்வித கொடுப்பனவும் செய்யவேண்டி இருக்காது.

    என்ன படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

    வழக்கறிஞர் மூலம் “Juge aux affaires familiales (JAF)” என அறியப்படும் குடும்ப நீதிபதியிடம் நீங்கள் முதலில் அங்கீகாரத்தைக் கோர வேண்டும். அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.

    நீதிபதியால் அங்கீகரிக்கப்பட்டதும், நீங்கள் ஒரு நீதி அமைப்பு அதிகாரியை அல்லது “huissier de justice” யை உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளை அவர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாகப் பறிமுதல் செய்யும் ஒருவரை நியமிக்க வேண்டும் இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.

    நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கும்:

    • உங்களுக்கு நிதிப் பங்களிப்பை வழங்கும் அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணம்
    • உங்கள் வங்கிகணக்கு சான்றிதழ் அல்லது “relevé d’identité bancaire (RIB)
    • நீங்கள் செலுத்தப்படாத தொகையை குறிப்பிட்டுள்ள ஒரு ஆவணம். நீங்கள் அது மிகச்சரியானது என சான்றுப்படுத்துவதோடு அதில் கையொப்பமிடவும் வேண்டும். இதைச் செய்ய, உதாரணமாக நீங்கள் பிரமாண அறிக்கையைப் பயன்படுத்தலாம். தயவுசெய்து கவனிக்கவும்: கோரப்பட்ட தொகைகளின் தவறான கணக்கீடு ஏற்பட்டால், விண்ணப்பதாரராக நீங்கள் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாவீர்கள்.

    அடுத்து என்ன?

    சட்டத்தால் அமைக்கப்பட்ட வரம்புக்குள், “huissier”, “saisie sur salaire” நடைமுறையைச் செயல்படுத்த,உங்களின் “débiteur” இன் பணியமர்த்துநரைத் தொடர்புகொள்ளும்.

  • எது தொடர்புபடுகின்றது?

    முன்னைய நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் முயற்சி செய்து அது வெற்றிபெறவில்லை என்றால்,“Trésor public” எனப்படும் பிரெஞ்சு பொதுக் கருவூலத்தில் செலுத்தப்படாத தொகையை மீட்டெடுக்க நீங்கள் கேட்கலாம்.

    குறிப்பு: Trésor public” உடன் “recouvrement” என அறியப்படும் இந்த நடைமுறையை நீங்கள் தொடங்கினால், இந்த செலுத்தப்படாத தொகைகளை மீட்பதற்கு உங்களால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. . எனவே இது கடைசி முயற்சியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

    இது வேகமானதா?

    பொது நீதிமன்றம் உங்கள் வழக்கைச் செயல்படுத்த வேண்டிய காலத்தைப் பொறுத்து இந்தச் செயல்முறை பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

    அதற்குச் செலவாகுமா?

    இல்லை, இச்செயல்முறை இலவசமானது “débiteur” எடுக்கப்பட்ட தொகையில் 10% கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    என்ன படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

    உங்கள் கோரிக்கையை “procureur de la République” என அழைக்கப்படும் அரச வழக்கறிஞருக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

    • இந்த கோப்பகத்தில் உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் விவரங்களைக் காணலாம்.
    • பதிவு செய்யப்பட்ட விநியோகம் அல்லது “lettre recommandée avec accusé de réception” உடன் பதிவு தபால் மூலம் கடிதத்தை அனுப்பவும். உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்க ஒரே வழி இதுதான். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

    உங்கள் கோப்பில் பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும்:

    • உங்களுக்கு நிதிப் பங்களிப்பை வழங்கும் அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணம்
    • மேலே விவரிக்கப்பட்ட பிற கட்டணக் கோரிக்கை செயல்முறைகளில் ஒன்று வெற்றிபெறவில்லை என்பதை நிரூபிக்கும் ஆவணம்
    • உங்கள் “débiteur” பற்றிய அனைத்து சாத்தியமான தகவல்களும்: முழுப்பெயர், முகவரி, பணியமர்த்துபவர், சமூகப் பாதுகாப்பு எண் அல்லது “numéro de sécurité sociale”, வங்கி, சொத்துக்கள் மற்றும் வருமானங்களின் பட்டியல் போன்றவை.
    • கையொப்பமிடப்பட்ட விண்ணப்பக் கடிதம், நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பின் அளவு மற்றும் செலுத்தப்படாத மொத்தத் தொகை உட்பட.

    அடுத்து என்ன?

    procureur de la République”, ஒரு நிர்வாகப் பத்திரம் அல்லது “état exécutoire” எனப்படும் ஆவணத்தை வரைவு செய்து, அதை எடுத்துச் செல்ல அரசின் தொடர்புடைய திணைக்களத்திற்கு மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பும்.

வெளிநாட்டில் “Débiteur

Débiteur” வெளிநாட்டில் வாழ்ந்தால், பின்பற்ற வேண்டிய செயல்முறை அவர்கள் இருக்கும் நாட்டைப் பொறுத்தது.

இந்த நடைமுறையில் உங்களுக்கு பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சு அல்லது பிரெஞ்சு நீதி அமைச்சு ஆதரவு அளிக்கும்.

எது உங்களுக்கு ஆதரவளிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் பொதுவான விதிகளை நாங்கள் விளக்குகிறோம், ஆனால் உங்கள் சூழ்நிலையின் குறிப்பிட்ட விவரங்களைப் பொறுத்து நீங்கள் வேறொரு அலுவலகத்திற்கு திருப்பி விடப்படலாம்.

  • உங்கள் வழக்கைத் தயாரிப்பதற்கான உதவியை வழக்கறிஞரிடம் பெறலாம். அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.

    நிதிப் பங்களிப்பை அமைத்தது பிரெஞ்சு நீதிபதியாக இருந்தால், உங்கள் கோப்பில் பின்வருவன அடங்கும்:

    • உங்கள் நிலைமையை விளக்கும் கடிதம்: நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட நிதி பங்களிப்பு மற்றும் செலுத்தப்படாத தொகைகள்
    • greffe” என அழைக்கப்படும் நீதிமன்றத்தின் நிர்வாக அலுவலகத்தால் சான்றளிக்கப்பட்ட நகல் நிதி பங்களிப்பை அமைத்தது, உதாரணமாக விவாகரத்து தீர்ப்பு
    • greffe” வழங்கிய அசல் ஆவணங்கள் “certificat de non appel” மற்றும் “ certificat de non pourvoi en cassation ”(காச்சாஷன் இல் மேல்முறையீடு செய்யாததற்கான சான்றிதழ் மற்றும் மேல்முறையீடு செய்யாததற்கான சான்றிதழ்) என்றழைக்கப்படும்,
    • huissier de justice” என அறியப்படும் நீதி அமைப்பு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் தொடர்புடைய தீர்ப்புகளின் சேவைகள்
    • உங்கள் வங்கிக் கணக்குச் சான்றிதழ் அல்லது “relevé d’identité bancaire (RIB)”.

    வெளிநாட்டில் உள்ள நீதிபதிகள் நிதி பங்களிப்பை அமைத்திருந்தால், உங்கள் விண்ணப்பத்தில் பின்வருவன அடங்கும்:

    • உங்கள் நிலைமையை விளக்கும் கடிதம்: நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட நிதி பங்களிப்பு மற்றும் செலுத்தப்படாத தொகைகள்
    • வெளிநாட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை விவரிக்கும் அசல் ஆவணம்
    • தீர்ப்பின் அறிவிப்பு மற்றும் சேவையின் அசல் அல்லது இதற்குப் பதிலாக ஏதேனும் பத்திரம்
    • உயர் அல்லது மீஉயர் நீதிமன்ற மேல்முறையீடு உட்பட, எந்த வகையான மேல்முறையீடு மூலமாகவும் எதிர்ப்பு இல்லை என்று தகுதியான நீதிமன்றத்தின் சான்றிதழ்
    • உங்கள் வங்கிக் கணக்குச் சான்றிதழ் அல்லது “relevé d’identité bancaire (RIB)”.

    தயவுசெய்து கவனிக்கவும்: பிரெஞ்சு மொழியில் இல்லாத எந்த ஆவணமும் “traducteur assermenté” என அறியப்படும் ஒரு சான்று பகரப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

  • உங்கள் “débiteur” அமைந்துள்ள நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடொன்றில், நியூயார்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடொன்றில் அல்லது ஹேக் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடொன்றில் இருப்பதை முதலில் சரிபார்க்கவும்.

    நான் எப்படி விண்ணப்பிப்பது?

    உங்கள் “débiteur” வாழும் நாடு இந்தப் பட்டியலில் இருந்தால், உங்கள் விண்ணப்பத்தை (மேலே உள்ள தேவையான ஆவணங்களின் பட்டியலைப் பார்க்கவும்) பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சிற்கு அனுப்ப வேண்டும். :

    Ministère des Affaires étrangères
    Sous-direction de la protection des droits des personalnes / Recouvrement des Créances Alimentaires (RCA)
    27 rue de la Convention
    CS 91533
    75732 Paris Cedex 15

    பதிவு செய்யப்பட்ட விநியோகம் அல்லது “lettre recommandée avec accusé de réception” உடன் பதிவுத் தபாலில் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பவும். உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்க ஒரே வழி இதுதான். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

    உங்கள் வழக்கைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அமைச்சை +331 43 17 90 01 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    அதற்குச் செலவாகுமா?

    விண்ணப்பம் இலவசமானது.

    சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் வெளிநாட்டு ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு உங்கள் வளங்கள் மிகவும் போதாதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நாட்டைப் பொறுத்து நீங்கள் நிதி உதவியைக் கோரலாம். இதற்கு அமைச்சு உங்களுக்கு உதவ முடியும்.

    அடுத்து என்ன?

    நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே செலுத்தப்படாத தொகையைப் பெறுவதற்கு அமைச்சு முயற்சிக்கும். இது ஒரு நட்பு நடவடிக்கை அல்லது “procédure amiable” என குறிப்பிடப்படுகிறது.

    இந்த நடைமுறை வெற்றிபெறவில்லை என்றால், சட்டப்பூர்வ நடைமுறை தொடங்கப்படும்.

  • நான் எப்படி விண்ணப்பிப்பது?

    நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை (மேலே உள்ள தேவையான ஆவணங்களின் பட்டியலைப் பார்க்கவும்) பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் பிரெஞ்சு நீதி அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்:

    Ministère de la Justice
    Bureau de l’Union et du droit International privé (BDIP)
    13 Place Vendôme
    75042 Paris Cedex 01

    பதிவு செய்யப்பட்ட விநியோகம் அல்லது “lettre recommandée avec accusé de réception” உடன் பதிவு தபால் மூலம் கடிதத்தை அனுப்பவும். உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்க ஒரே வழி இதுதான். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

    நீங்கள் அவர்களை +331 44 77 61 05 என்ற எண்ணிலும், [email protected]என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    அதற்குச் செலவாகுமா?

    விண்ணப்பம் இலவசமானது.

    ஒரு சட்ட நடைமுறையைத் தொடங்க வேண்டும் என்றால், நீங்கள் வெளிநாட்டு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும். சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு உங்கள் வளங்கள் மிகவும் போதாதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நாட்டைப் பொறுத்து நீங்கள் நிதி உதவியைக் கோரலாம். இதற்கு அமைச்சு உங்களுக்கு உதவ முடியும்.

    இது வேகமானதா?

    நேர வரையறைகள் சூழ்நிலையைப் நிலையைப் பொறுத்து பெரிதும் மாறுபடும். செலுத்தப்படாத தொகையைப் பெறுவதற்கு பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை ஆகலாம்.

    அடுத்து என்ன?

    விண்ணப்ப செயலாக்க நேரங்கள் பெரிதும் மாறுபடும். பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்களை விளக்க அமைச்சு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    ஒரு மாதத்திற்குள் பதில் வரவில்லை எனில், உங்கள் வழக்கு எவ்வாறு முன்னுற்றமடைகின்றது என்பதைக் கண்டறிய, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • இந்த மையங்களுக்குப் பல பெயர்கள் உள்ளன: “Maison de Justice et du Droit (MJD)”, “Point d’accès au droit (PAD)”, "Relais d’accès au droit (RAD)”, “Antenne de justice (AJ)” or “France services (FS)”.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்களுக்கு அருகில் ஒரு “point-justice” நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியும்:
      • இந்த நிகழ்நிலை கோப்பகத்தில்.
      • பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 3039 மற்றும் வெளிநாடுகளில் இருந்து +33 9 70 82 31 90 இல் தொலைபேசி மூலம். அவர்கள் உங்கள் அஞ்சல் குறியீட்டைக் கேட்டு, “point-justice”உடன் உங்களைத் தொடர்புகொள்வார்கள். கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவை இலவசமானது.
    • அவர்களின் வழக்கறிஞர்கள் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் மற்றும் உங்கள் பிரிவு, விவாகரத்து மற்றும்/அல்லது பிள்ளைக் காப்புப் பொறுப்பு விடயங்களில் ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஒரு தகவல் சேவை மட்டுமே ஆகும்: அவர்கள் உங்களை சட்ட நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம்.
    • தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது தொலைபேசி மூலம் 04 78 03 33 63 திங்கள் முதல் புதன்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
  • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

    • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
    • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
    • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
    • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில்நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

உங்கள் முன்னாள் துணைவர் விவாகரத்து விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளல்

உங்களின் முன்னாள் துணைவர் உங்கள் விவாகரத்தில் தீர்மானிக்கப்பட்ட சொத்துப் பிரிவினைக்கு இணங்கவில்லை…

பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கு மற்றைய பெற்றார் இணங்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளவும்

பிள்ளைகள் ஒரு பெற்றோருடன் வாழ்ந்தாலும் அல்லது இரு பெற்றோரிடையே மாறி மாறி வாழ்ந்தாலும், பிள்ளைப்…

பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்

சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்