உடல்நலக் கவனிப்பு அட்டைக்கு அல்லது “carte vitale”க்கு விண்ணப்பித்தல்

carte vitale” என்பது உங்கள் சுகாதாரச் செலவுகள் பிரான்சில் எளிதாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் ஒரு உடல்நலக் கவனிப்பு அட்டையாகும். இது இலவசமானது அல்லது கட்டணத்திற்குரியது. “Protection universelle maladie” என்றும் குறிப்பிடப்படும் “sécurité sociale” அல்லது சமூக பாதுகாப்பு எனப்படும் அரச சுகாதாரக் காப்பீட்டு அமைப்பில் நீங்கள் பதிவு செய்தவுடன் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

31/05/2023 அன்று காமெட் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

இது எவ்வாறு செயற்படுகின்றது?

carte vitale” எனப்படும் உடல்நலக் கவனிப்பு, திருப்பிச் செலுத்துதல்களை எளிதாக்குகிறது. இந்த அட்டையை மருத்துவரின் சந்திப்புகளிலும், மருந்தகத்திலும் உங்கள் மருத்துவச் செலவுகளைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தலாம். இது பிரான்சில் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும்.

carte vitale” மூலம், “caisse d’assurance maladie” என அறியப்படும் உங்கள் உடல்நலக் காப்பீட்டுத் தகுதிகளை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு கட்டணத் தகவல் இலத்திரனியல் முறையில் அனுப்பப்படுகிறது. நீங்கள் எந்த ஆவணங்களையும் அனுப்பாமல், நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு திருப்பிச் செலுத்தப்படும்.

நிபந்தனைகள்

சமூகப் பாதுகாப்பு அல்லது “sécurité sociale” என்றழைக்கப்படும் “Protection universelle maladie” எனப்படும் மாநில சுகாதார காப்பீட்டு அமைப்பில் நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். ”.

உங்கள் சமூகப் பாதுகாப்பு எண் அல்லது “numéro de sécurité sociale” எனப்படும் உங்கள் தனிப்பட்ட எண்ணைப் பெற்றவுடன் “carte vitale”க்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது

carte vitale”க்கு நிகழ்நிலையில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன.

  • உங்கள் ameli.fr கணக்கில் உள்நுழைந்து “Mes démarches > Commander une carte vitale” என்பதைத் தேர்ந்தெடுத்து, வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், ஸ்கேன் செய்யப்பட்ட அடையாளப் புகைப்படத்தையும் அடையாள ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டும்.

  • நீங்கள் “Protection universelle maladie” உலகளாவிய ரீதியில் பதிவு செய்தபோது, “Ma nouvelle carte vitale” என்ற தலைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றிருக்க வேண்டும். சுகாதார காப்பீட்டுத் திட்டம், சமூகப் பாதுகாப்பு அல்லது “sécurité sociale” என்றும் அழைக்கப்படுகிறது.

    விண்ணப்பிப்பதற்கு:

    • படிவத்தில் உள்ள தகவல் சரியானதா என சரிபார்க்கவும்.
    • வழங்கப்பட்ட இடத்தில் நிற அடையாள புகைப்படத்தை இணைக்கவும்.
    • உங்கள் அடையாள ஆவணத்தின் புகைப்பட நகலை இணைக்கவும்.
    • உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித உறையில் உங்கள் “caisse d’assurance maladie”க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
    • தயர் செய்த கடித உறை இன்மை, எனவே நீங்கள் முத்திரையிடப்பட்ட ஒரு தபால் உறையைப் பயன்படுத்த வேண்டும்.
    • உங்கள் “caisse d’assurance maladie” உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுக்கு அருகிலுள்ள “Caisse Primaire d’Assurance Maladie (CPAM)”ஐத் தொடர்புகொண்டு அதைத் தெரிந்துகொள்ளலாம். தொடர்பு விவரங்களை இந்தத் தளத்தில் காணலாம்.

விண்ணப்பத்திற்குப் பிறகு

நீங்கள் நேரலையில் விண்ணப்பித்தால் அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குள்ளும், தபால் மூலம் விண்ணப்பித்தால் மூன்று வாரங்களுக்குள்ளும் “carte vitale” ஐப் பெறுவீர்கள்.

அட்டையில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏதேனும் பிழை இருந்தால், அதை உங்கள் “caisse d’assurance maladie”க்கு தெரிவிக்கவும்.

உங்கள் “carte vitale” ஐப் பெற்றவுடன் மனதில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்:

  • carte vitale” மருத்துவச் செலவுகளை அண்ணளவாக ஒரு வாரத்திற்குள் திருப்பிச் செலுத்த அனுமதிக்கிறது. உங்கள் “carte vitale” கிடைத்ததும், ஒவ்வொரு மருத்துவ சந்திப்புக்கும் அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். திருப்பிச் செலுத்தப்பட்ட தொகையை உங்கள் வங்கிக் கணக்கின் ஊடாக நேரடியாகப் பெறுவீர்கள்
  • அரிதான சந்தர்ப்பத்தில் ஒரு சுகாதார நிபுணர் இன்னும் “carte vitale”ஐ ஏற்கத் தயாராக இல்லை என்றால், அவர் உங்களுக்கு “feuille de soins” என்ற பற்றுச்சீட்டை வழங்குவார். நீங்கள் இதை உங்கள் “caisse d’assurance maladie”க்கு தபால் மூலம் அனுப்பலாம், இதன் மூலம் நீங்கள் திருப்பிப் பெறலாம். திருப்பிப் பெறும் காலம் ஒரு மாதம் வரை ஆகலாம்.
  • நீங்கள் வங்கிகளை மாற்றினால், “relevé d’identité bancaire (RIB)” எனப்படும் புதிய வங்கி அடையாள ஆவணத்தை உங்கள் “caisse d’assurance maladie”க்கு Ameli நிகழ்நிலையில் அனுப்பவும்,அல்லது தபால் மூலம் அனுப்பவும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • Comede” என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைப் பெற உதவும் ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களுக்கு உடல்நலப் பாதுகாப்பை அணுக உதவலாம் மற்றும் உங்கள் ஆவணங்களில் உங்களுக்கு உதவலாம், குறிப்பாக அவர்களின் தொலைபேசி சேவை மூலம் உங்களுக்கு உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: அனைத்து மொழிகளிலும் உரைபெயர்ப்பு சாத்தியமாகும்.
    • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம்.
  • "PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “France Travail” இற்கான அறிவிப்புகள் போன்றவை.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.
  • சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “France Travail” இல் பதிவு செய்தல் போன்றவை.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்:

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்

பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…

mutuelle” எனப்படும் தனியார் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கையை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் சுகாதாரக் செலவுகளை முடிந்தவரை திருப்பிப் பெறுவதற்கு, பொதுவாக “mutuelle” எனப்படும் தனியார்…

Complémentaire santé solidaire (CSS)” எனப்படும் அனுசரணை அரச சுகாதார காப்பீட்டிற்கு பதிவு செய்தல்

உங்களிடம் சில அல்லது நிதி ஆதாரங்கள் இல்லை மற்றும் சமூக பாதுகாப்பு அல்லது “sécurité sociale”…

பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக

வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்