மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்
பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…
உங்கள் சுகாதாரக் செலவுகளை முடிந்தவரை திருப்பிப் பெறுவதற்கு, பொதுவாக “mutuelle” எனப்படும் தனியார் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கையை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இது “Protection universelle maladie” என அழைக்கப்படும் மாநில சுகாதார காப்பீட்டு முறைக்கு துணைபுரிகிறது, இது சமூக பாதுகாப்பு அல்லது “sécurité sociale” எனவும் குறிப்பிடப்படுகிறது.
31/05/2023 அன்று காமெட் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
பிரான்சில், “mutuelle” என்பது “Protection universelle maladie” எனப்படும் அரச சுகாதாரக் காப்பீட்டு அமைப்பால் உள்ளடக்கப்படாத மருத்துவச் செலவுகளின் முழு அல்லது பகுதியையும் திருப்பிச் செலுத்தும் ஒரு தனியார் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கையாகும், இது “sécurité sociale” என அறியப்படுகிறது.
நீங்கள் “mutuelle” காப்புறுதி ஒப்பந்தத்தை தனித்தனியாக எடுத்துக் கொள்ளலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் உங்கள் பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம்.
நீங்கள் ஒரு மாதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இது சராசரியாக மாதத்திற்கு EUR 30 முதல் EUR 100 வரை இருக்கும்.
உங்களிடம் குறைந்த நிதி ஆதாரங்கள் இருந்தால், “Complémentaire santé solidaire (CSS)” இலிருந்து நீங்கள் பயனடையலாம், இது இலவசம் அல்லது குறைந்த விலை அரச- நிதியுதவி “mutuelle” ஆகும்.
“Protection universelle maladie (Puma)” (“sécurité sociale”) என்றும் அழைக்கப்படும் அரச சுகாதார காப்பீட்டு அமைப்பில் நீங்கள் பதிவுசெய்திருந்தால், நீங்கள் மேலதிகமானதொரு சுகாரார காப்பீட்டுக் கொள்கையை அல்லது “mutuelle” ஐ எடுக்கலாம்.
மாற்றாக, சமூகப் பாதுகாப்பு அல்லது “sécurité sociale” இல்லாதவர்களிடமிருந்து சந்தாக்களை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய “mutuelles” வழங்கும் நிறுவனங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
பல நிறுவனங்கள் “mutuelles” வழங்குகின்றன. உங்களுக்கான சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவற்றின் விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதங்களை ஒப்பிடுவதன் மூலம் பல சலுகைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
உங்களின் “mutuelle” மற்றும் உத்திரவாதங்கள் உள்ளிட்டவற்றைத் தேர்வுசெய்த பிறகு, நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். “relevé d’identité bancaire (RIB)” எனப்படும் வங்கி அடையாள ஆவணம் உட்பட, பின்பற்ற வேண்டிய படிகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்களை நிறுவனம் உங்களுக்குத் தெரிவிக்கும்.எனவே நீங்கள் உங்கள் கணக்கில் நேரடியாக திருப்பிச் செலுத்தல்களைப் பெறலாம்.
உங்கள் பதிவைத் தொடர்ந்து, நீங்கள் பதிவுசெய்திருந்தால், உங்களுடைய “caisse d’assurance maladie” எனப்படும் உங்கள் உடல்நலக் காப்பீட்டுத் தகுதிகளை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு உங்கள் “mutuelle” தெரிவிக்கும். உங்கள் ameli.fr கணக்கில் உங்கள் “mutuelle” உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.
பெரும்பாலான நேரங்களில், மீளுச் செலுத்தப்படாத மருத்துவச் செலவுகள் அவதி பரிவர்த்தனையிலிருந்து நீங்கள் பயனடைய முடியும், இது திருப்பிச் செலுத்தப்படாத எந்தவொரு சுகாதாரச் செலவுகளையும் உங்கள் “mutuelle” க்குத் தானாகத் தெரிவிக்க உங்கள் “caisse d’assurance maladie” அனுமதிக்கும் முறைமையொன்றாகும். இதன் அர்த்தம்:
"PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “France Travail” இற்கான அறிவிப்புகள் போன்றவை.
சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.
மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்
பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…
“Complémentaire santé solidaire (CSS)” எனப்படும் அனுசரணை அரச சுகாதார காப்பீட்டிற்கு பதிவு செய்தல்
உங்களிடம் சில அல்லது நிதி ஆதாரங்கள் இல்லை மற்றும் சமூக பாதுகாப்பு அல்லது “sécurité sociale”…
பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக
வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…