திருமணம் செய்து கொள்ளாமல் நீங்கள் அனுபவித்த வன்முறையை முன்னிலைப்படுத்தல்

நீங்கள் “Pacs”அல்லது வீட்டுக் கூட்டாண்மை என அழைக்கப்படும் ஒரு பிரெஞ்சு சிவில் கூட்டாண்மையாளராகவும் உங்கள் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”, உங்கள் துணையுடன் நீங்கள் வாழும் நிபந்தனையின் அடிப்படையில் இருந்தால், நீங்கள் அனுபவித்த குடும்ப வன்முறையை முன்னிலைப்படுத்தலாம் மற்றும் பிரிந்தால் உங்கள் வதிவிட உரிமைகளை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

06/10/2023 அன்று FNCIDFF இனால் சரிபார்க்கப்பட்டது

நிபந்தனைகள்

இந்த இரண்டு நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • நீங்கள் பிரான்சுக்கு வந்தீர்கள் அல்லது ஒரு சிவில் துணைவராக வீட்டுக் கூட்டாண்மையாக பின்வருவோருடன் பிரான்சில் “titre de séjour” ஐப் பெற்றுள்ளீர்கள்:
    • ஒரு பிரெஞ்சுக் குடிமகனுடன்
    • அல்லது செல்லுபடியாகும் “titre de séjour” ஐ வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவருடன்.
  • நீங்கள் பிரான்சிற்கு வந்ததிலிருந்து வீட்டு வன்முறையை அல்லது குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறீர்கள், இனி உங்கள் துணைவருடன் வாழ மாட்டீர்கள்.

இந்த நிபந்தனைகள் உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் எதிர்கொண்ட வன்முறையை முன்னிலைப்படுத்தலாம் மேலும் உங்களால் உங்கள் “titre de séjour”ஐ வைத்திருக்க முடியும்.

préfecture” என அழைக்கப்படும் வதிவிட அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்கும் பொறுப்புள்ள உள்ளூர் பிரெஞ்சு நிர்வாகம், உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் அது அவ்வாறு செய்யலாம்.

வழங்கவேண்டிய சான்றுகள்

விண்ணப்பத்தின் போது வன்முறைக்கான சான்றுகளை நீங்கள் வழங்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன் “préfecture” ஆதாரங்களை மதிப்பாய்வு செய்யும்.

நான் என்ன ஆதாரத்தை வழங்க வேண்டும்?

உங்கள் கோப்பில் பயனுள்ள எந்தச் சான்றையும் சேகரிக்கவும், எடுத்துக்காட்டாக:

  • முறையான புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு வழங்கப்பட்ட ஆவணம், புகாரின் ரசீது அல்லது “récipissé de plainte” என அழைக்கப்படுகிறது.
  • பொலிஸிற்கு வன்முறையைப் புகாரளிக்கும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம், பதிவு அல்லது “main courante” என அறியப்படுகின்றது
  • சாட்சி அறிக்கைகள்
  • ஒரு மருத்துவச் சான்றிதழ்
  • இலவச சேவைகளை வழங்கும் நிறுவனம் அல்லது வீட்டு வன்முறையை எதிர்கொண்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற “association” மூலம் உங்களுக்கு உதவப்படுகிறது என்பதை நிரூபிக்கும் ஆவணம்
  • வன்முறையைச் செய்தவரின் தண்டனைக் குற்றத்தீர்ப்பின் பதிவு, அல்லது வழக்குத் தொடர ஒரு மாற்றுத் தண்டனை
  • நீங்கள் நினைக்கக் கூடிய வேறு ஏதாவது சான்றுகள்.

titre de séjour” இன் வகை அல்லது வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

  • உங்கள் “carte de séjour temporaire” ஐ “vie privée et familiale” என்பதைக் குறிப்பிட்டு வைத்திருக்கலாம் அத்துடன் “préfecture” உங்கள் விண்ணப்பத்தை அனுமதித்திருந்தால், அதைப் புதுப்பிக்கலாம்.

    மேலதிகமாக, வன்முறையில் ஈடுபட்டவருக்கு எதிராக நீங்கள் புகாரைப் பதிவுசெய்து, நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருந்தால், நீங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​ “préfecture” இற்கு இதைக் குறிப்பிடலாம். உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது, ​​அவர்கள் சட்டப்படி கடமைப்பட்டிருக்காவிட்டாலும், அவர்கள் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

  • நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் “carte de résident” ஐக் கோரலாம். மேலும் அறியவும்

அல்ஜீரிய குடிமக்கள்

கொள்கையளவில், “Le Code de l'entrée et du séjour des étrangers et du droit d'asile (CESEDA)” எனப்படும் பிரெஞ்சு குடியேற்ற அமைப்பின் விதிகள் அல்ஜீரிய குடிமக்களுக்குப் பொருந்தாது, ஏனெனில் பிரான்சில் அவர்களின் குடியேற்ற நிலை இருதரப்பு ஒப்பந்தமொன்றால் ஆளப்படுகிறது.

இருப்பினும், குடும்ப வன்முறை காரணமாக உங்கள் துணையுடன் வாழ்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “préfecture” உங்கள் வதிவிட உரிமைகளை நிலைநிறுத்த முடிவு செய்யலாம்.

எனவே நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை முன்னிலைப்படுத்தவும், உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் உதவக்கூடிய ஆதாரங்களை வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • பிரான்சில் வசிக்கும் உரிமை தொடர்பான உங்கள் நிர்வாக நடைமுறைகளில் உங்களுக்குத் தெரிவிக்கவும் ஆதரவளிக்கவும், உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து பிற சேவைகளுக்கு உங்களை வழிநடத்தவும் அவர்களால் முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்.
    • தொடர்பு கொள்ளவும்:
      • ஒரு சந்திப்பு நேரம் இல்லாமல் உங்களுக்கு அருகிலுள்ள மையம்
      • தொலைபேசி மூலம் 01 40 08 05 34 அல்லது 06 77 82 79 09 புதன்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை. மற்றும் மதியம் 2:30 மணி முதல். மாலை 5:30 மணி வரை
  • Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • உங்களின் வதிவிட உரிமைகள் தொடர்பான உங்களின் உரிமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு பெறுவது என்பதை அவர்களால் உங்களுக்குத் தெரிவிக்க முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்:
      • தொலைபேசி மூலம் +331 84 60 90 26 திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை. மேலும் புதன் மற்றும் வெள்ளி அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை . அழைப்பு எண் சில நேரங்களில் நிறைவுறும், சோர்வடைய வேண்டாம். நாள் முடிவில் அவர்களை அடைவது சில நேரங்களில் எளிதாக இருக்கும்.
      • அஞ்சல் மூலம் “Gisti, 3 villa Marcès 75011 பாரிஸ்,பிரான்சு”. அச்சிட்டுப் பூர்த்தி செய்து இந்தப் படிவத்தை உங்கள் கடிதத்தில் தொடர்புடைய நிர்வாக ஆவணங்களின் நகலையும் சேர்த்துக்கொள்ளவும் “Gisti” ஆலோசகருக்கு உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவும் அனைத்துக் கூறுகளும் உட்பட, உங்கள் கேள்வியை முடிந்தவரை தெளிவாகக் குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • "Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • பிரான்சில் உங்கள் உரிமைகள் பற்றி அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம், மேலும் சில சமயங்களில் குடியேற்ற நடைமுறைகளில் உங்களுக்கு ஆதரவளிக்கலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் பிராந்தியமும் திணைக்களம் வாரியாகவும் நீங்கள் தேடலாம்.
  • அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” என்பன புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்கள் உரிமைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கலாம், உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம், உங்கள் நிர்வாக நடைமுறைகளில் உங்களுக்கு ஆதரவளிக்கலாம் மற்றும் அகதிகள் மற்றும் நாடற்ற நபர்களைப் பாதுகாப்பதற்கான பிரெஞ்சு அலுவலகம் அல்லது “Office français de la protection des réfugiés et des apatrides (OFPRA)” உடனான உங்கள் சந்திப்பிற்கு உங்களுடன் வரலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழி: முக்கியமாக பிரஞ்சு, விளக்கம் சாத்தியம்.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகில் உள்ள “associations habilitées” ஒன்றை நீங்கள் கண்டறியலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்

இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…

பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்

சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்