துஷ்பிரயோகம் நடந்ததற்கான சான்றுகளைச் சேகரித்தல்
துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றாலும், சான்றுகளைச் சேகரிப்பது…
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட, துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்குப் புகாரொன்றைத் தாக்கல் செய்யலாம். புகாரைப் பதிவு செய்வது மிக முக்கியமான படியாகும், மேலும் பாதுகாப்பு, தங்குமிடம் அல்லது விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு போன்றவை தொடர்பான நடைமுறைகளுக்கு இது ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம்.
31/05/2023 அன்று Commissaire கேப்ரியல் ஹசன் மற்றும் மைட்ரே பாலின் ரோங்கியர் ஆகியோரால் சரிபார்க்கப்பட்டது
பிரெஞ்சு சட்டத்தால் வீட்டுத் துஷ்பிரயோகம் தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்களிடம் மற்றும்/அல்லது உங்கள் பிள்ளைகளிடம் துஷ்பிரயோகமான நடத்தைகளை வெளிப்படுத்தினால், நீங்கள் புகாரொன்றைத் தாக்கல் செய்யலாம்.
நீங்கள் பொலிஸில் புகாரொன்றைத் தாக்கல் செய்ய முடிவு செய்தால், பொலிஸார் விசாரணை செய்து, உங்கள் புகாரை “procureur de la République” என்று அழைக்கப்படும் அரசு வழக்கறிஞருக்கு அனுப்புவார்கள், அவர் வழக்கின் பொறுப்பை ஏற்று எப்படித் தொடர வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
விருப்பத்தேர்வாக இருந்தாலும், பிரான்சில் குறிப்பாக சிக்கலான இந்த நடைமுறைகளுக்கு ஆலோசனை வழங்கவும் உதவவும் கூடிய ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரான்சில், பாதுகாப்பு நடவடிக்கைகள் நீதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன, பொலிஸாரால் அல்ல.
நீங்கள் அனுபவித்தவற்றிற்கு நீதி தேடுவதில் புகார் ஒரு முக்கியமான படியாகும்.
உங்கள் பாதுகாப்பு, உங்கள் வதிவிட உரிமைகள், வீட்டுவசதி மற்றும் விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான எதிர்கால விண்ணப்பங்களுக்கும் இந்தப் படி தேவைப்படலாம்.
துஷ்பிரயோகம் செய்பவரை பொலிஸார் சில சமயங்களில் 48 மணிநேரம் வரை குறுகிய காலத்திற்கு உடனடியாகத் தடுத்து வைக்கலாம். இது தடுப்பு அல்லது “garde à vue” என்று அழைக்கப்படுகிறது. இது விசாரணையை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவுகிறது, ஆனால் அது ஒரு தண்டனை அல்ல.
இருப்பினும், வீட்டுத் துஷ்பிரயோகம் தொடர்பான புகாரைப் பதிவுசெய்த பிறகு நடைமுறைக்கு மிக நீண்ட காலம் எடுக்கலாம். சமீபத்திய ஆண்டுகளில் இந்த முறைமை மேம்பட்டுள்ளது, ஆனால் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன.
துரதிஷ்டவசமாக, நீங்கள் பிரெஞ்சு நீதி அமைப்புடன் ஈடுபடும் போது பொறுமையாகவும் செயலூக்கமாகவும் இருக்க வேண்டும், நீங்கள் உயிர்வாழ முயற்சிக்கும்போது இது மிகவும் கடினமாக இருக்கும்.
கீழே உள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் புகாரைப் பதிவு செய்வதற்கு முன்னர் முடிந்தவரை ஆயத்தமாவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது:
நீங்கள் முறையான புகாரொன்றைத் தாக்கல் செய்வதற்குத் தயாராக இல்லை எனில், பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொலிஸாரின் பன்மொழியிலான நிகழ்நிலை அளவளாவல் சேவையின் மூலம் நிகழ்நிலையில் துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.
உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம் அல்லது தேவைப்பட்டால் தலையிடுவதற்கு ஒரு பொலிஸ் அதிகாரியை அனுப்பலாம்.
நீங்கள் விரும்பினால் உங்கள் பரிமாற்றம் முற்றிலும் அநாமதேயமாக இருக்கும். ஆனால் மிகவும் தீவிரமான வன்முறைச் சம்பவங்களில் அல்லது நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், “procureur de la République” எனப்படும் அரசு வழக்கறிஞரிடம் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு அவர்கள் கடமைப்பட்டிருப்பார்கள். அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்த முடிவு செய்யலாம் அத்துடன் வன்முறையில் ஈடுபட்டவர் மீது வழக்குத் தொடரலாம்.
இந்த எழுத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து:
புகார் அல்லது “plainte” என்பது விசாரணையைத் தூண்டும் ஒரு உத்தியோகபூர்வ செயலாகும்.
பதிவு அல்லது “main courante” என்பது அதிகாரப்பூர்வ ஆவணமொன்றாகும், இது நீங்கள் தெரிவிக்கும் உண்மைகளை வெறுமனே பதிவுசெய்கிறது ஆனால் பொதுவாக விசாரணையொன்றைத் தூண்டாது.
வீட்டுத் துஷ்பிரயோகத்தின் சூழலில், “plainte” இற்குப் பதிலாக “main courante” ஐ நீங்கள் தாக்கல் செய்யுமாறு பரிந்துரைப்பதற்குப் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை. இருப்பினும், நீங்கள் “main courante” ஐ “plainte” ஐ விடவும் விரும்பினால், அதைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
குறிப்பு: வீட்டுத் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில், பொலிஸார் “main courante” ஐ அரசு வழக்கறிஞருக்கு அல்லது “procureur de la République” இற்கு அனுப்ப வேண்டும். வன்முறை மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட்டால், அரசு வழக்கறிஞர் விசாரணையை மேற்கொள்ளவும், துஷ்பிரயோகம் செய்தவர் மீது வழக்குத் தொடரவும் தீர்மானிக்கலாம்.
நீங்கள் பிரெஞ்சு மொழி பேசவில்லை என்றால் மற்றும்/அல்லது பொலிஸார் உங்கள் உரிமைகளை மதிக்க மாட்டார்கள் என்று நீங்கள் பயந்தால், இந்தக் கடிதத்தை அவர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் பொலிஸ் நிலையத்தின் வரவேற்பு மேசைக்கு வரும்போது, நீங்கள் விவேகமாக நடத்தப்பட விரும்புகிறீர்கள் என்று வரவேற்பாளரிடம் சொல்லலாம்.
அவர்கள் உங்களிடம் பல தகவல்களைக் கேட்பார்கள்:
நீங்கள் விரும்பினால் ஒரு சமூக சேவகரை அல்லது உளவியலாளரை சந்திக்கவும் கேட்கலாம். இது நீங்கள் செல்லும் பொலிஸ் நிலையத்தில் உள்ள நிபுணத்துவப் பணியாளர்களின் இருப்பைப் பொறுத்தது.
துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனத்தின் தொடர்பு விவரங்களையும் நீங்கள் கோரலாம். இது "association" என்று அழைக்கப்படுகிறது.
ஒரு விசாரணையாளர் உங்கள் அறிக்கையின் எழுத்துப்பூர்வமான பதிவை எடுப்பதற்கு ஒரு நேர்காணலை அல்லது “audition” ஐ நடத்துவதற்கு, உங்களைச் சந்திக்க வருவார்.
நீங்கள் விரும்பினால், “procureur de la République” என்று அழைக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் “plainte” ஐ இடுகையிடுவதன் மூலம் அதைத் தாக்கல் செய்யலாம். கடிதத்தை எழுதி அனுப்புவதற்கு உங்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞரை அல்லது "association” ஐ நீங்கள் கேட்கலாம்.
“procureur” உங்கள் புகாரைப் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்புவார், அது விசாரணைக்குப் பொறுப்பாகும்.
நேர்காணல் அல்லது “audition” இன் போது உங்கள் அறிக்கையின் எழுத்துப்பூர்வமான பதிவை எடுக்க அவர்கள் உங்களை “commissariat de police” அல்லது “brigade de gendarmerie” என்று அழைக்கப்படும் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பார்கள்.
உங்கள் புகாரைத் தபால் மூலம் தாக்கல் செய்வதற்கு, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
உங்களுடைய “audition” இற்காக, “commissariat” இற்கு அல்லது “gendarmerie” இற்கு உங்களுடன் வரும்படி ஒரு வழக்கறிஞரை நீங்கள் கேட்கலாம்.
ஒரு விசாரணையாளர் உங்கள் அறிக்கையின் எழுத்துப்பூர்வமான பதிவை எடுப்பார். இந்தக் கலந்துரையாடல் நேர்காணல் அல்லது “audition” என்று அழைக்கப்படுகிறது. தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்:
நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ள அதிகாரி உங்களிடம் கேள்விகளைக் கேட்பார், மேலும் உங்கள் சூழ்நிலையின் அவசரத்தை மதிப்பிடுவதற்கான ஆவணத்தை உங்களுடன் பூர்த்தி செய்வார், இது “grille d’évaluation du danger” என்று அழைக்கப்படுகிறது. கேள்விகளுக்குள் உள்ளடங்குபவை:
உங்களிடம் ஏதேனும் சான்று அல்லது சாட்சிகள் இருக்கிறதா என்றும் கேட்பார்கள். இவற்றை வைத்திருப்பது கட்டாயமில்லை: விசாரணை சிலவற்றைக் கண்டுபிடிக்க உதவும்.
audition” இன் முடிவில், “Unité médico-judiciaire (UMJ)” எனப்படும் சிறப்பு மருத்துவத் துறையில் உள்ள மருத்துவரைப் பார்க்குமாறு பொலிஸ் அதிகாரி பரிந்துரைப்பார். பொதுவாக, பொலிஸ் அதிகாரி இந்த மருத்துவரிடம் உங்களுக்கான ஏற்பாடு செய்வார்.
தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்:
நேர்காணல் அல்லது “audition” இன் முடிவில், நீங்கள் மூன்று முக்கியமான ஆவணங்களைப் பெறுவீர்கள்.
துரதிஷ்டவசமாக, உங்கள் புகாரைத் தொடர்ந்து பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகள் உங்களுக்குத் தானாகவே தெரிவிக்கப்படாது.
உண்மைகள் தீவிரமானவை என்று அவர்கள் கருதினால், துஷ்பிரயோகம் செய்தவரை அழைத்து விசாரிக்க அவர்கள் முடிவு செய்யலாம். உண்மைகளின் ஈர்ப்பைப் பொறுத்து, அவர்கள் அழைக்கப்படலாம்:
குறிப்பு: “audition” எப்போது நடைபெறும் அல்லது “garde à vue” இன் முடிவைப் பற்றித் தானாகவே உங்களுக்கு அறிவிக்கப்பட மாட்டாது. எனவே துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து ஏதேனும் பழிவாங்கும் பயம் இருந்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
துஷ்பிரயோகம் செய்பவருடன் நீங்கள் இன்னும் வாழ்ந்து, வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், உங்களுடைய வீடு அவரின் பெயரில் இருந்தாலும், துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை உங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றும்படி “Juge aux affaires familiales” எனப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் கேட்கலாம். இது ஒரு பாதுகாப்பு உத்தரவின் ஒரு பகுதியாக அல்லது “ordonnance de protection” ஆகச் செய்யப்படுகிறது, மேலும் அதற்கு ஒரு வாரம் ஆகலாம்.
இதற்கிடையில், அவசரகாலத் தங்குமிடத்தைக் கண்டறிய உதவுமாறு நீங்கள் பொலிஸாரிடம் கேட்கலாம் அல்லது வேறு தீர்வுகளைத் தேடலாம்.
உங்கள் வீட்டிலிருந்து உங்களின் உடமைகளை எடுத்துச் செல்லப் பொலிஸாரை உங்களுடன் வரச் சொல்லலாம்.
சந்திப்பின் போது, மருத்துவரின் பங்கு, உங்கள் உடல்நிலையில் ஏற்படும் துஷ்பிரயோகத்தின் உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான, அது உடல் ரீதியான தடயங்களை விட்டுச் செல்லாவிட்டாலும் கூட பின்விளைவுகளை மதிப்பிடுவதாகும்.
நீங்கள் அனுபவித்த துஷ்பிரயோகம் மற்றும் அது உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்பவற்றை விரிவாக விவரிக்க வேண்டியது அவசியமாகும். இது மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் பின்னர் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். இது கடினமாக இருந்தாலும், அது உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைக்காமல் இருக்க முயற்சி செய்யவும்.
சந்திப்பின் முடிவில், மருத்துவர் “Incapacité temporaire de travail (ITT)” எனப்படும் எண்ணைக் குறிப்பிடும் மருத்துவச் சான்றிதழை வரைவார். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் துஷ்பிரயோகத்தின் விளைவுகளின் தீவிரத்தை மதிப்பிடுவதே இந்த எண்ணின் நோக்கமாகும். குற்றவியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இது நீதிபதியால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வெளியேறுவதற்கு முன்னர், “UMJ” இலிருந்து மருத்துவரிடம் கேட்கலாம்:
“mis en cause” என்று குறிப்பிடப்படும் துஷ்பிரயோகத்தின் குற்றவாளியை பொலிஸார் விசாரித்துக் கேள்வி கேட்பார்கள்.
உண்மைகளின் தீவிரத்தைப் பொறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்படலாம்:
குறிப்பு: “audition” எப்போது நடைபெறும் அல்லது “garde à vue” இன் முடிவைப் பற்றித் தானாகவே உங்களுக்கு அறிவிக்கப்பட மாட்டாது. எனவே துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து ஏதேனும் பழிவாங்கும் பயம் இருந்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
துஷ்பிரயோகம் செய்தவர் உண்மைகளை மறுத்தால், பொலிஸார் அவர் முன்னிலையில் உங்களுக்கு ஒரு சந்திப்பை வழங்குவார்கள், இது “confrontation” என்று அழைக்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக நீங்கள் இல்லாதது உங்களுக்கு எதிராக இருக்கக்கூடும் என்பதால், நீங்கள் கலந்துகொள்ளுமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது; எடுத்துக்காட்டாக, துஷ்பிரயோகம் செய்தவர் உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் செய்தால். உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், உங்களுடன் ஒரு வழக்கறிஞரை அழைத்து வரலாம்.
வழக்கின் சிக்கலான தன்மையைப் பொறுத்து, விசாரணை சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும்.
உண்மைகள் மிகவும் தீவிரமானதாக இருந்தால், வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியைச் சிறைப்படுத்திய அல்லது “garde à vue” உடனேயே தீர்ப்பு வழங்குவதற்கு “procureur de la République” தீர்மானிக்கலாம். இது “comparution immédiate” என்று குறிப்பிடப்படுகிறது.
துரதிஷ்டவசமாக, விசாரணையின் முன்னேற்றம் குறித்து உங்களுக்குத் தானாகவே தெரிவிக்கப்பட மாட்டாது.
வழக்கு எவ்வாறு முன்னேறுகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், உங்களிடம் இரண்டு தீர்வுகள் உள்ளன:
விசாரணை முழுவதும், பொலிஸ் சேவைகள் வழக்குக்குப் பொறுப்பான “procureur de la République” என்று அழைக்கப்படும் அரசு வழக்கறிஞருக்கு அறிக்கைகளை அனுப்பும். அவர் உங்களுக்குத் தெரியப்படுத்தலாம், ஆனால் துரதிஷ்டவசமாக இது தானாக நடக்காது.
“procureur de la République” ஒரு இறுதி அறிக்கையைப் பெறும்போது, அவர் நடைமுறை குறித்து முடிவெடுப்பார். அவர் முடிவு செய்யலாம்:
உங்கள் புகாரை நீங்கள் பதிவு செய்யும் போது நீங்கள் வழங்கிய முகவரியில் அவர்களின் முடிவு குறித்து தபால் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் சில நேரங்களில் இது நடக்காது.
சில வாரங்களுக்குப் பிறகு நீங்கள் எதையும் கேட்கவில்லை எனில், நடவடிக்கைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைக் கண்டறிய “procureur de la République” இற்கு எழுதலாம். அவர்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிவதற்கு, உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தக் கோப்பகத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
“procureur de la République” இன் தீர்மானத்தை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மேன்முறையீடு அல்லது “appel” மூலம் வழக்கை விசாரிக்க நீதிபதியைக் கேட்கலாம். இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை அமர்த்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கு “procureur de la République” தீர்மானித்தால், ஒரு நீதிபதி சான்றுகளை ஆராய்ந்து பல்வேறு தரப்பினரை விசாரிப்பார்:
நீங்கள் புகாரைத் தாக்கல் செய்தபோது கொடுத்த முகவரியில் “convocation” என்ற ஆவணத்தைப் பெறுவீர்கள். இந்த ஆவணம் உங்களை விசாரணையில் அல்லது “audience” இல் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்குச் செல்லும்படி கேட்கும். இது திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடும்.
விசாரணைக்கு உங்களுடன் ஒரு வழக்கறிஞரை அமர்த்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்:
விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதி முடிவு செய்வார். அவர் இதற்கு முடிவு செய்யலாம்:
நீதிபதியின் தீர்மானத்தில் நீங்கள் உடன்படவில்லை என்றால், உங்கள் வழக்கறிஞர் ஊடாக மேன்முறையீடு அல்லது “appel” செய்து வழக்கை விசாரிக்க மற்றொரு நீதிபதியை நீங்கள் கேட்கலாம்.
உங்கள் புகாரைப் பொலிஸார் பதிவு செய்ய மறுப்பார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டால், இந்தக் கடிதத்தை அவர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
புகாரைப் பதிவு செய்ய மறுப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி இல்லை. இது நடந்தால், நீங்கள்:
ஒரு பொலிஸ் அதிகாரி உங்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால், அந்தப் பொலிஸ் அதிகாரி சட்டத்தை மீறுகிறார். சட்டத்தின் மீறல்களைப் பற்றி நீங்கள் புகாரளிக்கலாம்:
வீட்டுத் துஷ்பிரயோகத்திற்கு ஒரு பதிவை அல்லது “main courante” ஐப் பரிந்துரைக்கப் பொலிஸாருக்கு உரிமை இல்லை. “main courante” என்பது துஷ்பிரயோகம் நடந்ததாக ஒரு அறிவிப்பை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும், ஆனால் எந்த நடவடிக்கையும் பின்தொடராது.
உங்கள் புகாரை மறுத்ததன் மூலம், பொலிஸ் அதிகாரி சட்டத்தை மீறியவர் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்தின் மீறலை நீங்கள் புகாரளிக்கலாம்:
குறிப்பு: துஷ்பிரயோகத்திற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க விரும்பி, ஆனால் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நீங்கள் தயாராக இல்லை என்றால் ஒரு பதிவை அல்லது “main courante” ஐத் தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, . இருப்பினும், வீட்டுத் துஷ்பிரயோகத்தின் வழக்கில், பொலிஸார் “main courante” ஐ “procureur de la République” இற்கு அனுப்ப வேண்டும். உண்மைகள் மிகவும் தீவிரமானதாக இருந்தால், அவர் விசாரணையை மேற்கொள்ளவும், துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்யலாம்.
பிரெஞ்சு நீதி அமைப்பில் இருந்து பாதுகாப்புப் பெற முயற்சிக்கும்போது உங்களுக்குப் பாகுபாடு காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஆனால் துரதிஷ்டவசமாக இது இன்னும் நடக்கிறது.
இந்தப் பாகுபாட்டைத் தெரிவிப்பதற்கும் அதனால் உங்களுக்கு ஏற்படுத்திய தீங்குகளுக்கு இழப்பீடு பெறுவதற்கும் தீர்வுகள் உள்ளன. மேலும் அறிக
விசாரணையின் முன்னேற்றம் மற்றும் துஷ்பிரயோகம் செய்தவர் தொடர்பான “procureur de la République” இன் தீர்மானத்தைப் பற்றி அவர் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இது சில நேரங்களில் நடக்காது.
சில வாரங்களுக்குப் பிறகு நீங்கள் எதையும் கேட்கவில்லை என்றால், பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வழக்கிற்குப் பொறுப்பான “procureur de la République” இற்கு நீங்கள் எழுதலாம்:
நீங்கள் பிரெஞ்சு மொழி பேசவில்லை என்றால், பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும்போது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்லலாம். உங்கள் புகாரை நீங்கள் தாக்கல் செய்யும் போது ஒரு உரைபெயர்ப்பாளரைக் கொண்டிருக்க வேண்டிய கடமையைக் கடிதம் பொலிஸாருக்கு நினைவூட்டுகிறது.
நடைமுறையில், இது உங்கள் மொழியில் உரைபெயர்ப்பாளர்களின் இருப்பைப் பொறுத்ததாகும். அவர்கள் உங்களை வேறொரு நேரத்தில் திரும்ப வரச் சொல்லலாம்.
உங்களிடம் இன்னும் பல தீர்வுகள் உள்ளன:
ஆம், நீங்கள் குறிப்பிட்ட கால வரம்பை மீறவில்லை என்றால் தாக்கல் செய்யலாம். இது சட்டத்தால் வழங்கப்பட்ட “délai de prescription” என்று அழைக்கப்படுகிறது. சட்டப்பூர்வ காலக்கெடு:
பிரான்சில், உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உங்களைப் பாதுகாப்பதே பொலிஸாரின் பணியாகும். துரதிஷ்டவசமாக இது இன்னும் நிகழ்கிறது என்றாலும், எந்தப் பாகுபாடுமின்றி மனித உரிமைகளை மதிக்க வேண்டிய கடமை பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ளது.
புகாரைத் தாக்கல் செய்யும் போது நீங்கள் விரும்பும் நபர் உடன் வர உங்களுக்கு உரிமை உண்டு.
நீங்கள் பயப்பட்டால், நீங்கள் தபால் மூலமாகவும் புகார் அளிக்கலாம். ஆயினும்கூட, நேர்காணல் அல்லது “audition” இன் போது பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க, பொலிஸாரால் நீங்கள் இன்னும் அழைக்கப்படுவீர்கள்.
உங்களால் உள்ளூர் “commissariat de police” அல்லது “brigade de gendarmerie” இற்குச் செல்ல முடியாவிட்டால், உங்கள் புகாரைத் தபால் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்.
ஆயினும்கூட, நேர்காணல் அல்லது “audition” இன் போது பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, பொலிஸாரால் நீங்கள் இன்னும் அழைக்கப்படுவீர்கள். அந்த நேரத்தில் உங்களின் பயணச் சிரமங்களை நீங்கள் குறிப்பிடலாம்.
வீட்டுத் துஷ்பிரயோகத்திற்கான தண்டனை, துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியைத் தானாகவே சிறையில் அடைப்பதை விளைவாக்காது. நீதிபதி மேலும் முடிவு செய்யலாம்:
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு தண்டனைக்கும் நீங்கள் பொறுப்பல்ல, இது நீதிபதியால் தீர்மானிக்கப்படும்.
துஷ்பிரயோகம் செய்தவர் மட்டுமே அவரின் செயல்களுக்கு பொறுப்பானவர்.
சாத்தியமெனில், நீங்கள் புகாரொன்றைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஆயத்தமாகலாம். நீங்கள் சான்றுகளைச் சேகரித்து, நேர்காணல் அல்லது “audition” இன் போது உங்களுடன் வைத்திருக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளையும் திகதிகளையும் குறித்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு வழக்கறிஞருடன் அல்லது துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்களை ஆதரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுடன் வரலாம்.
புகாரைத் தாக்கல் செய்யும் போது, எந்தத் தவறும் செய்யாமல் இருக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யவும். எடுத்துக்காட்டாக, திகதி குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், அதைக் குறிப்பிட வேண்டாம். இந்தச் சிறிய விவரங்களை உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் தவறானவை என்று நிரூபிக்க முடிந்தால், அது உங்கள் வழக்கைப் பாதிக்கலாம்.
நீங்கள் தகவலை மறந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகாரிற்குக் கூடுதல் தகவலை “complément de plainte” பதிவு செய்வதன் மூலம் உங்கள் புகாரில் கூடுதல் தகவல்களை நீங்கள் சேர்க்கலாம்.
முறையான வதிவிட உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புகாரைத் தாக்கல் செய்வதும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோருவதும் உங்கள் உரிமையாகும்.
பிரான்சில், வன்முறைச் சம்பவங்களில் நீங்கள் உதவியை நாடினால், செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இல்லாத காரணத்திற்காக உங்களை காவலில் வைப்பதற்குப் பொலிஸாருக்கு அனுமதி இல்லை.
அவர்கள் உங்கள் உரிமைகளை மதிக்க மாட்டார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டால், அவர்கள் உங்களைத் தடுத்து வைக்க முடியாது என்பதை நினைவூட்டுவதற்காக இந்தக் கடிதத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
சாத்தியமெனில், உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் அல்லது வெளிநாட்டுக் குடிமக்களின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றிடம் நீங்கள் புகாரொன்றைத் தாக்கல் செய்ய உள்ளீர்கள் என்று சொல்லவும். பொலிஸ் அதிகாரி சட்டத்திற்கு இணங்கவில்லை என்றால் இது உங்களைப் பாதுகாப்பாக உணர வைக்கும்.
பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
"associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.
துஷ்பிரயோகம் நடந்ததற்கான சான்றுகளைச் சேகரித்தல்
துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றாலும், சான்றுகளைச் சேகரிப்பது…
நீங்கள் பாகுபாடுகளை அனுபவித்தால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்
பிரெஞ்சு சட்டத்திற்கு ஏற்ப பாகுபாடு தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் தண்டனைக்குரியது. நீங்கள்…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…