பிரான்சில் உங்கள்“titre de séjour”திருடப்பட்டாலோ அல்லது இழந்தாலோ “duplicata”அல்லது நகல் எனப்படும் ஆவணத்தைக் கோருதல்

உங்களிடம் “titre de séjour”எனப்படும் செல்லுபடியாகும் குடியேற்ற ஆவணம் இருந்தால், நீங்கள் பிரான்சில் இருக்கும் போது அது திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, உள்ளூர் நிர்வாக அதிகாரியிடம் இருந்து“duplicata”என்ற ஆவணத்தைக் கோரலாம்.

31/01/2024 அன்று La Cimade ஆல் சரிபார்க்கப்பட்டது

எது தொடர்புபடுகின்றது?

titre de séjour” அல்லது வதிவிட னுமதி என அறியப்படும் உங்கள் குடியேற்ற ஆவணத்தின் இழப்பு அல்லது திருடப்பட்டால், “préfecture” அல்லது“sous-préfecture” எனப்படும் உங்கள் துறையின்உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரியிடம் இருந்து நகல் அல்லது “duplicata” எனப்படும் ஆவணத்தை நீங்கள் கோரலாம்.

நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், PACS அல்லது சிவில் பார்ட்னர்ஷிப்பில் இருந்தாலும், உங்கள் “titre de séjour”ஐத் திருட யாருக்கும் அதிகாரம் இல்லை, உங்கள் துணைவருக்குக் கூட அதிகாரம் இல்லை.

எவ்வாறு செயற்படுத்துவது

என்ன செய்வது என்பது பற்றி மேலும் அறிய இந்த வினாப்பட்டியலை நீங்கள் பூரணப்படுத்தலாம்.

படி 1: பிரான்ஸ் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள்

முதலாவதாக, உங்களுக்கு அருகிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, இழப்பு அல்லது திருட்டு குறித்து அவர்களிடம் அல்லது commissariat de police” அல்லது “brigade de gendarmerie இடம் புகாரளிக்க வேண்டும். உங்கள் “titre de séjour” இன் இழப்பு அல்லது திருட்டை உறுதிப்படுத்தும் அறிவிப்பு அல்லது “déclaration” எனப்படும் ஆவணத்தை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.

நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களைத் திருடிய அல்லது அழித்த நபர் மீது வழக்குத் தொடர காவல் நிலையத்தில் புகாரொன்றை தாக்கல் செய்ய முடியும் , அது உங்கள் துணைவராக அல்லது முன்னாள் துணைவராக, நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், PACS அல்லது சிவில் பார்ட்னர்ஷிப்பில் இருந்தாலும்.

புகாரைப் பதிவு செய்ய நீங்கள் தேர்வுசெய்தால்:

 • குற்றம் சாட்டப்பட்ட நபரை, முடிந்தால் பொலிசார் விசாரித்து விசாரணை நடத்துவார்கள்.
 • உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவரால் நீங்கள் அனுபவித்த திருட்டு அல்லது அழிவு ஏற்பட்டால், நிர்வாகத் துஷ்பிரயோகத்திற்கு புகார் ஆதாரமாக இருக்கலாம்.

படி 2: “préfectureஇருந்து ஒரு “duplicata”அல்லது நகலைக் கோரவும்

duplicata” அல்லது நகலைக் கோருவதற்கான நடைமுறையைக் கண்டறிய, நீங்கள் வசிக்கும் இடத்தின் “préfecture” அல்லது“sous-préfecture” எனப்படும் உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த கோப்பகங்களில் நீங்கள் “préfectures” மற்றும் “sous-préfectures”இற்கான தொடர்பு விவரங்களைக் காணலாம்.

தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் விண்ணப்பிக்கும் வதிவிட அனுமதி அல்லது“titre de séjour”இற்கு நீங்கள் இன்னும் உரிமையுள்ளவரா இல்லையா என்பதை “préfecture” மறுபரிசீலனை செய்யலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • பிரான்சில் வசிக்கும் உரிமை தொடர்பான நிர்வாக நடைமுறைகளை உங்களுக்குத் தெரிவிக்கவும் ஆதரவளிக்கவும், உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து பிற சேவைகளுக்கு உங்களை வழிநடத்தவும் அவர்களால் முடியும்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்.
  • தொடர்பு கொள்ளவும்:
   • ஒரு சந்திப்பு நேரம் இல்லாமல் உங்களுக்கு அருகிலுள்ள மையம்
   • புதன்கிழமைகளில் 01 40 08 05 34 அல்லது 06 77 82 79 09 என்ற தொலைபேசி மூலம் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும்
 • Associations” என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகள் ஆகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • பிரான்சில் உங்கள் உரிமைகள் பற்றி அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம், சில சமயங்களில் குடியேற்ற நடைமுறைகளில் உங்களுக்கு ஆதரவு இருக்கும்.
  • கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் பிராந்தியமும் திணைக்களம் வாரியாகவும் நீங்கள் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

வெளிநாட்டில் உங்கள் “titre de séjour” திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ “visa de retour”எனப்படும் ஆவணத்தைக் கோரவும்.

நீங்கள் தற்போது பிரான்சில் இல்லை என்றால், உங்கள் “titre de séjour”வதிவிட அனுமதியை இழந்தாலோ அல்லது…

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

உங்களுக்கு பிரான்சில் வசிக்க வசிப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடிய “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும் ஆவணத்தைக் கோருதல்

பிரான்சில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்