பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
ஒரே நிபந்தனை என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் நீங்கள் செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும், நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்தீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இருப்பினும், இந்த வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” தானாக வழங்கப்படுவதில்லை: “préfecture என அழைக்கப்படும் “titre de séjour” விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரம், அதன் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுக்கிறது. இது பிரான்சில் உங்கள் வாழ்க்கை ஒருங்கிணைப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும், எடுத்துக்காட்டாக:
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் கட்டுரை L.435–1.
பிரான்சில் உங்கள் வாழ்க்கைக்கான ஆதாரம் சம்பந்தப்பட்ட முழுக் காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: மாதத்திற்குத் தோராயமாக ஒரு சான்று.
குறிப்பு: பிரான்சில் உங்கள் இருப்பை நிரூபிக்க ஆவணம் வரையப்பட்ட தேதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, வரி அறிவிப்பு அது வெளியிடப்பட்ட நேரத்தில் மட்டுமே உங்கள் இருப்பை நிரூபிக்கும், அது உள்ளடக்கிய காலத்திற்கு அல்ல.
சில சான்றுகள் மற்றவற்றை விட மதிப்புமிக்கவை.
உங்கள் விண்ணப்பத்தின் பரிசீலனையின் போது, “préfecture” அவர்களின் கருத்துக்காக வதிவிட அனுமதி குழு அல்லது Commission du titre de séjour” எனப்படும் குழுவை அழைக்க வேண்டும்.
இந்தக் குழு உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்து, உங்களிடம் கேள்விகளைக் கேட்கும், பின்னர் உங்கள் விண்ணப்பம் குறித்த தனது கருத்தை வெளியிடும். இருப்பினும், “préfecture” அவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. பல சந்தர்ப்பங்களில், “préfecture” இந்தக் குழுவை அழைப்பதில்லை, இருப்பினும் சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டும்.
நீங்கள் “vie privée et familiale” அல்லது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு ஒரு தற்காலிக வதிவிட அட்டை அல்லது “carte de séjour temporaire” ஐப் பெறலாம், அது ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். இது உங்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.
நீங்கள் இன்னும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de séjour” புதுப்பிக்கப்படும்.
நீங்கள் பல வருட வதிவிட அட்டை அல்லது “carte de séjour pluriannuelle” ஒன்றை நீங்கள் கோரினால் அது நான்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். “Contrat d’Intégration Républicaine (CIR)” எனப்படும் பிரெஞ்சு மாநிலத்துடன் குடியேற்ற ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும் மற்றும் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்.
நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் “carte de résident” ஐக் கோரலாம். மேலும் அறியவும்
உங்கள் விஷயத்தில், “préfecture” எனப்படும் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரம், நீங்கள் பிரான்சில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்திருப்பதை நிரூபிக்க முடிந்தால், உங்களுக்கு “titre de séjour” வழங்கக் கடமைப்பட்டுள்ளது.
நீங்கள் பிரான்சில் “titre de séjour” உடன் “étudiant” அல்லது மாணவர் என்று குறிப்பிடப்பட்டு வாழ்ந்திருந்தால், பிரான்சில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வசித்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…