உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்

வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் நபரையும் அவரின் பிள்ளைகளையும் பாதிக்கின்றன.

22/09/2023 அன்று La Maison des Femmesஆல் சரிபார்க்கப்பட்டது

உங்கள் மீதான விளைவுகள்

நீங்கள் அனுபவிக்கும் துஷ்பிரயோகத்தின் தன்மை எவ்வாறிருப்பினும், அது உங்கள் ஆரோக்கியத்திலும் உறவுகளிலும் குறிப்பிடத்தக்களவில் குறுகிய கால, நடுத்தர கால அல்லது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், நம்பகமான நபரொருவரிடம், சாத்தியமெனில், உங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு தொழில்முறையான நிபுணரிடம் பேசுவது முக்கியமானதாகும்.

எங்களின் உடல் ரீதியான, பாலியல் ரீதியான மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான பக்கம், சுகாதாரப் பராமரிப்பை எவ்வாறு, எங்கு அணுகுவது மற்றும் உளவியல் ஆதரவை எவ்வாறு, எங்கு பெறுவது பற்றிய தகவல்களை வழங்குகிறது. 

 • வீட்டுத் துஷ்பிரயோகத்தின் உளவியல் விளைவுகள் பல வழிகளில் வெளிப்பட முடியும்: 

  • மன அழுத்தம்
  • வெட்கம்
  • குற்ற உணர்வு
  • சுயமதிப்பை இழத்தல்
  • பயம்
  • கோபம்
  • பதற்றம்
  • விரக்தி
  • தீர்மானங்களை மேற்கொள்வதில் சிரமம்
  • மனக் குழப்பம்
  • அதிர்ச்சிக்குப் பிந்திய மன உளைச்சல்
  • அதிக விழிப்புணர்வு
  • தனக்குப் பொருத்தமற்ற அல்லது ஆக்ரோஷமான நடத்தை 
  • தற்கொலை எண்ணம்
  • தற்கொலை முயற்சிகள்.
 • வீட்டுத் துஷ்பிரயோகத்தின் உடல் ரீதியான விளைவுகள் பல வழிகளில் வெளிப்பட முடியும்: 

  • தூங்குவதில் சிரமங்கள்
  • பயங்கரமான கனவுகள்
  • உணவில் ஆர்வமின்மை
  • குமட்டல்
  • உணவு உட்கொள்ளல் சார்ந்த கோளாறுகள் (இயற்கையை மீறிய அளவுக்கதிகமான பசி, பசியின்மை)
  • செரிமானத்தில் சிரமங்கள்
  • கவனித்தலில் சிரமங்கள்
  • கடுமையான சோர்வு
  • நாள்பட்ட வலி(தலை, வயிறு, முதுகு)
  • உயர் இரத்த அழுத்தம்
  • உடல் காயங்கள்
  • போதைப்பொருட்கள், மது மற்றும்/அல்லது மருந்துகளின் பயன்பாடு.
 • வீட்டுத் துஷ்பிரயோகத்தின் சமூக ரீதியான விளைவுகள் பல வழிகளில் வெளிப்பட முடியும்: 

  • தனிமைப்படல்
  • சமூக வலையமைப்பு சுருங்குதல்
  • வேலையில் வினைத் திறனின்மை
  • வருகையின்மை
  • நிதிசார் நெருக்கடிகள்
  • அன்றாட செயற்பாடுகளை நிர்வகிப்பதில் சிரமம்
  • உங்கள் குழந்தைகளின் உணர்ச்சி ரீதியானதேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம்.

இந்த விளைவுகளை எதிர்கொண்டு சமாளிப்பது சாத்தியமானதாகும். நீங்கள் தனித்தவரல்லர்: இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஆதரவளிப்பதற்குத் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் உள்ளனர்.

பிள்ளைகள் மீதான விளைவுகள்

உங்கள் துணைவர் உங்களை உட்படுத்தும் துஷ்பிரயோகம், அவமதிப்புகள் மற்றும் கட்டுப்பாடு என்பவற்றின் முதன்மையான சாட்சிகள் உங்கள் பிள்ளைகளாவர். வெறும் சாட்சிகளாக இல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த உரிமையில் துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்களாகவும் கருதபடலாம், ஏனெனில் துஷ்பிரயோகம் அவர்களையும் பாதிக்கிறது.

பின்வரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் நேரடியாக துஷ்பிரயோகத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறார்கள்:

 • அவர்கள் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கிறார்கள்
 • அவர்கள் மற்றொரு அறையில் இருந்து வன்முறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அல்லது அசைவுகளைக் கேட்கிறார்கள்
 • அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகிறார்கள்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் வன்முறைக்கு மறைமுகமாக வெளிப்படுத்தப்படுகிறார்கள்:

 • குற்றவாளி உங்களுக்கு ஏற்படுத்தும் துன்பத்தை அவர்கள் உணர்கிறார்கள்
 • உங்கள் மீதான குற்றவாளியின் துஷ்பிரயோகத்தின் விளைவுகளை அவர்கள் பார்க்கிறார்கள்
 • அவர்கள் குற்றவாளியால் ஏற்படுத்தப்படுகின்ற பதற்றம், பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர்
 • அவர்களுக்குத் தேவையான பராமரிப்பையும் ஆதரவையும் பெறுவதில்லை.

வீட்டுத் துஷ்பிரயோகம் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் இதற்கு நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பானவரல்ல. துஷ்பிரயோகம் செய்தவர் மட்டுமே இதற்குப் பொறுப்பானவர்.

 • பிள்ளைகளில், உளவியல் ரீதியான விளைவுகள் பல வழிகளில் வெளிப்படும்: 

  • துயரம்
  • பதற்றம்
  • குற்ற உணர்வு
  • பின்வாங்குதல்
  • மனக் குழப்பம்
  • ஆக்ரோஷமான நடத்தை
  • கைவிடப்படும் என்ற பயம்
  • குறைந்த தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பு
  • தற்கொலை எண்ணம்
  • தற்கொலை முயற்சிகள்.
 • பிள்ளைகளில், உடல் ஆரோக்கியம் மீதான விளைவுகள் பல வழிகளில் வெளிப்படும்: 

  • தூங்குவதில் சிரமங்கள்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • உடல் வலி
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
  • உண்ணல் கோளாறுகள்
  • வளர்ச்சித் தாமதங்கள்
  • அதிக அழுகை
  • போதைப்பொருட்கள் மற்றும் மது என்பவற்றின் பயன்பாடு
 • பிள்ளைகளில், சமூக ரீதியான விளைவுகள் பல வழிகளில் வெளிப்படும்: 

  • கூச்ச சுபாவம்
  • உறவுகளைக் கட்டியெழுப்புவதில் சிரமம்
  • தனிமைப்படல்
  • துஷ்பிரயோகம் செய்யாத பெற்றோரை அதிகம் சார்ந்திருத்தல்
  • நண்பர்களை வீட்டிற்கு அழைப்பதில் பயம்
  • நண்பர்களிடம் ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தல்
  • பாடசாலைச் செயற்பாடுகளில் ஈடுபாடின்மை
  • வருகையின்மை
  • இளமையில் குற்றம் புரியும் நடத்தை

இந்தச் சிக்கல்களை எதிர்கொண்டு சமாளிப்பது சாத்தியமானதாகும். உங்கள் பிள்ளைகள் வீட்டுத் துஷ்பிரயோகத்திலிருந்து மீளுவதற்கு உயர் பயிற்சி பெற்ற நிபுணர்களால் ஆதரவளிக்க முடியும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
  • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
  • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
  • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
 • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.
 • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக

வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…

மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்

பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…

வதிவிட உரிமைகள் இன்றி மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு “Aide médicale de l’État” இல் பதிவு செய்தல்.

Aide médicale de l’État (AME)” அல்லது மருத்துவ உதவியாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கானது, வதிவிட…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்