பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…
பிள்ளைகள் ஒரு பெற்றோருடன் வாழ்ந்தாலும் அல்லது இரு பெற்றோரிடையே மாறி மாறி வாழ்ந்தாலும், பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கு ஒரு பெற்றார் இணங்கவில்லை என்றால், அவர் சட்டத்தை மீறுகிறார். தீர்வுகள் உள்ளன.
18/11/2022 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
பரஸ்பர இணக்கத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கு மற்றைய பெற்றார் எப்போதும் இணங்கவில்லை என்றால் அல்லது “modalités d’exercice de l’autorité parentale” எனப்படும் பெற்றோருக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நீதிபதியால் தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் சட்டத்தை மீறுகிறார்.
உதாரணமாக, அவர் ஒப்புக்கொண்ட நேரத்தில் பிள்ளைகளை அழைத்து வரவில்லை என்றால், அவர் “délit de non-présentation d’enfant” எனப்படும் குற்றத்தைச் செய்கிறார்கள்.
அவசரநிலை உட்பட தீர்வுகள் உள்ளன.
நீங்கள் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.
மற்றைய பெற்றார் பிள்ளைகளை சரியான நேரத்தில் அழைத்து வரவில்லை என்றால் அல்லது அவர்களை அழைத்துச்செல்லப் பொருத்தமற்ற நேரத்தில் அழைத்துச்செல்லச் சென்று அதற்காக நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் எந்தப் பொலிஸ் நிலையத்திற்கும் செல்லலாம், அதாவது புகாரொன்றைப் பதிவு செய்வதற்கு ஒரு “commissariat de police” இற்கு அல்லது “brigade de gendarmerie” இற்குச் செல்லலாம்.
உங்கள் பிள்ளைகளை மீட்க உதவுவதற்குப் பொலிசார் விரைவாகச் செயற்பட முடியும்.
உங்கள் அனுமதியின்றி மற்றைய பெற்றார் உங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார் என்று நீங்கள் பயந்தால், நீங்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும். இதை எப்படிச் செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.
முதலில், உங்கள் வழக்கறிஞர் மூலம் மற்றைய பெற்றாருடன் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கவும். இது ஒரு இணக்கத்தீர்வு நடைமுறை அல்லது “procédure de conciliation” என்று அழைக்கப்படுகிறது.
இந்த நடைமுறை தோல்வியுற்றால், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணங்காதது குறித்துப் பொலிஸாரிடம் புகாரளிக்கலாம்.
பின்னர் நீங்கள் மற்றைய பெற்றாருக்கு அவரின் கடமைகளின் மீறல்களை விவரிக்கும் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்ப வேண்டும், இது ஒரு முறையான எச்சரிக்கை அல்லது “mise en demeure” என அழைக்கப்படுகிறது. இதை வரைவதற்கு உங்கள் வழக்கறிஞர் உங்களுக்கு உதவ முடியும். பதிவு செய்யப்பட்ட விநியோகம் அல்லது “lettre recommandée avec accusé de réception” மூலம் கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பவும், இதுவே உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிப்பதற்குரிய ஒரே வழியாகும். அஞ்சலுக்கான ஆதாரத்தையும் கடிதத்தின் நகலையும் கவனமாக வைத்துக் கொள்ளவும்.
இந்த முறையான எச்சரிக்கை அல்லது “mise en demeure” சரியாகச் செயற்படவில்லை என்றால், நீங்கள் உங்கள் வழக்கறிஞர் ஊடாக குடும்ப நீதிமன்ற நீதிபதிக்கு அல்லது “Juge aux affaires familiales (JAF)” க்குக் கோரிக்கையொன்றை அனுப்ப வேண்டும். நீதிபதி அதன் பிறகு நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கு முடிவு செய்யலாம், உதாரணமாக, அவரின் சந்திப்புக்களிற்கும் நள்ளிரவில் தங்குவதிற்குமான உரிமைகளைக் கட்டுப்படுத்துதல்.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…