பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்
பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…
உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்களோ அல்லது உங்கள் அனுமதியின்றி அவர்களை வெளிநாட்டில் வைத்திருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும். உங்கள் அனுமதியின்றி உங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்கான தீர்வுகள் உள்ளன.
09/02/2024 அன்று மைத்ரே ஹன்சு யாலாஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
மற்றைய பெற்றார் உங்களை எச்சரிக்காமல் உங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நீங்கள் பயந்தால், உங்கள் பிள்ளைகளின் அடையாள ஆவணங்கள் மற்றும் அவர்களின் சமீபத்திய புகைப்படங்களின் நகலை எப்போதும் வைத்திருங்கள்.
மற்றைய பெற்றார் ஒரு வெளிநாட்டவராக இருந்தால் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தால், உங்கள் ஆதங்கங்களைத் தெரிவிக்க அவரின் தேசிய தூதரகம் அல்லது தூதரகத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில், அவர் உங்கள் பிள்ளைகளின் கடவுச்சீட்டில் எச்சரிக்கையை வைக்கலாம்.
இருப்பினும், நீங்கள் பிரான்சில் அரசியல் அகதியாக இருந்தால், நீங்கள் பிறந்த நாட்டின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, அகதிகளின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மற்றைய பெற்றார் உங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக அச்சுறுத்தினால், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இந்த அச்சுறுத்தல்களை முறையாகப் புகாரளிப்பது நல்லது, அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”
அங்கு சென்றதும், பதிவு அல்லது “main courante” எனப்படும் உண்மைகளைப் பதிவுசெய்யும் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எழுதும்படி அவர்களிடம் கேட்கலாம். இது அச்சுறுத்தல்களுக்கு உத்தியோகபூர்வ சான்றுகளை வைத்திருக்க உங்களை அனுமதிக்கும், ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
துரதிஷ்டவசமாக, பிரான்சில்,விசாரணையைக் கொண்டிருக்கின்ற “plainte” எனப்படும் முறையான புகாரை நியாயப்படுத்த, இது போன்ற அச்சுறுத்தல்கள் போதுமான கடுமையான குற்றங்களாகக் கருதப்படவில்லை.
“Opposition à la Sortie du Territoire (OST)” எனப்படும் அவசர நிர்வாக நடவடிக்கையை நீங்கள் கோரலாம், இது உங்கள் பிள்ளைகள் பிரான்சை விட்டு வெளியேறுவதை எதிர்க்க உங்களை அனுமதிக்கும். இது அதிகபட்சம் 15 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
துரதிஷ்டவசமாக, உங்களிடம் செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இல்லையென்றால், இந்த நடவடிக்கைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியாது.
உங்கள் திணைக்களத்தில் உள்ள “préfecture” எனப்படும் உள்ளூர் பிரெஞ்சு அதிகார சபையிடம் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். அவர்களின் தொடர்பு கொள்ளல் விவரங்களை இந்த கோப்பகத்தில் காணலாம்.
அங்கு சென்றதும், விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்யும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள். நீங்கள் பின்வரும் ஆவணங்களையும் வழங்க வேண்டும்:
உங்கள் விண்ணப்பம் “Préfet” எனப்படும் மாகாணத்தின் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு அடுத்த சில மணிநேரங்களில் தொலைபேசி மூலம் பதிலைப் பெறுவீர்கள். விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் பதிலை உறுதிப்படுத்தும் கடிதத்தையும் அடுத்த சில நாட்களுக்குள் நீங்கள் பெறுவீர்கள்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகளின் பெயர்கள் தேசிய காணாமல் போனோர் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு, ஷெங்கன் தகவல் முறைமையில் தெரிவிக்கப்படும். சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும்போது பிள்ளைகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா என்பதைச் சரிபார்க்க இது பொலிஸ் மற்றும் குடிவரவுச் சேவைகளை அனுமதிக்கும்.
இந்த நடவடிக்கை பின்வரும் காலத்திற்குச் செல்லுபடியாகும்:
“Juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் நீங்கள் இதை உடனடியாகக் கோரும் வரை இது புதுப்பிக்கப்படாது.
சில சமயங்களில் “Préfet” விண்ணப்பத்தை நியாயமற்றதாகக் கருதினால் அதை விண்ணப்பத்ததை அங்கீகரிக்க மறுப்பார். இது தான் காரணமென்றால், என்ன நடவடிக்கை சாத்தியம் என்பதைக் கண்டறிய நீங்கள் ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் அங்கீகாரம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை எதிர்க்க “Interdiction de Sortie du Territoire (IST)” எனப்படும் சட்ட நடவடிக்கையை நீங்கள் கோரலாம்.
“Juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் நீங்கள் இதைக் கோர வேண்டும். நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு வரை அல்லது தவறினால், ஒவ்வொரு பிள்ளையும் சட்டப்பூர்வ வயதை அடையும் வரை இது செல்லுபடியாகும்.
இந்தச் செயற்பாட்டில் வழக்கறிஞரின் உதவி பெறுவது வெகுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.
இரு பெற்றோரின் அனுமதியின்றிப் பிள்ளை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை உங்களை அனுமதிக்கிறது. இதன் பொருள் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுடன் வெளிநாடு செல்ல விரும்பினால் மற்றைய பெற்றாரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். இந்த ஆவணம் பிரெஞ்சு பொலிஸால் பதிவு செய்யப்படும்.
இந்தத் தடை பொதுவாக ஒவ்வொரு பிள்ளைக்கும் 18 வயது வரை அல்லது புதிய முடிவு எடுக்கும் வரை நீடிக்கும். இரு பெற்றோரின் ஒப்புதலுடன் இது தற்காலிகமாக நீக்கப்படலாம்.
“Juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.
விவாகரத்து அல்லது பிள்ளைப் பொறுப்புக் காப்புக்கான விண்ணப்பங்கள் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உங்களிடம் இருந்தால், அது ஒரு வழக்கறிஞரால் செய்யப்பட வேண்டும்.
உங்களிடம் தற்போதைய சட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றால், இந்த விண்ணப்பத்தைச் செய்வதற்கு உங்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞரை நீங்கள் கேட்கலாம்.
படிகள் பின்வருமாறு:
நீதிபதி முடிவெடுப்பதற்கு, இரு பெற்றோரையும் விசாரணை அல்லது “audience” என அழைக்கப்படும் சந்திப்புக்காக அழைப்பார் அல்லது கருத்தில் கொள்ள வேண்டிய சில புள்ளிகள்:
ஒரு முடிவை எடுப்பதில், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சட்டப்பூர்வ தடையை நியாயப்படுத்தும் உறுதியான கூறுகள் மற்றும் கவலைகளை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்வார், உதாரணமாக:
“audience” தினத்தில் நீதிபதியின் முடிவு எடுக்கப்படாது. இந்த நாளில், நீதிபதி முடிவெடுக்க வேண்டிய திகதியை திட்டமிடுவார், இது விவாத திகதி அல்லது “date de délibéré” என்று அழைக்கப்படுகிறது, இது நான்கு வாரங்களுக்குப் பிறகு திட்டமிடப்படலாம்.
உங்கள் வழக்கறிஞர் வழக்கமாக முடிவைப் பெறுவார். நீங்கள் வழக்கறிஞரொருவர் இல்லாமல் “audience” இற்குத் தனியாகச் சென்றிருந்தால், உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் தபால் மூலம் முடிவைப் பெறுவீர்கள். நீங்கள் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது “lettre recommandée avec avis de réception” மூலமாகவோ கடிதத்தைப் பெறுவீர்கள்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகளின் பெயர்கள் தேசிய காணாமல் போனோர் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு, ஷெங்கன் தகவல் முறைமையில் தெரிவிக்கப்படும். சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும்போது பிள்ளைகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா என்பதைச் சரிபார்க்க இது பொலிஸ் மற்றும் குடிவரவுச் சேவைகளை அனுமதிக்கும்.
“Droit d'enfance” ஆல் நிருவகிக்கப்படும் இந்த தொலைபேசி ஆலோசனை சேவை, மற்றைய பெற்றார் பிள்ளையை கடத்தும் சந்தர்ப்பம் அடங்கலாக பிள்ளை காணாமல் போன சகல மக்களுக்கும் கிடைக்கும். மற்றைய பெற்றார் உங்கள் அனுமதியின்றி உங்களின் பிள்ளைகளை கூட்டிச்சென்று விடுவார்கள் என உங்களுக்கு அச்சமிருந்தால், அவர்கள் தடுப்பது பற்றிய ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குவார்கள்.
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் பிள்ளை பராமரிப்பு.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்
பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…
சர்வதேச பெற்றோர் பிள்ளை கடத்தல் விடயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
மற்றைய பெற்றோர் உங்களின் பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றிருந்தால் அல்லது உங்களின் ஒப்புதலின்றி அவர்களை…
உங்கள் பிள்ளைகளுடன் பிரான்சை விட்டு வெளியேறுதல்
துஷ்பிரயோகத்தை அனுபவித்த பிறகு நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அது முற்றிலும்…