பிரான்சில் சமூக வீட்டுவசதி, மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பித்தல்
உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social”,…
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன், நிர்வாக அதிகாரிகள்,சேவை வழங்குநர்கள் தொடர்பாக நீங்கள் பல படிகளைச் செய்ய வேண்டும். உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் மாறுபடலாம்.
29/09/2023 அன்று Ouarda Varda Sadoudi ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
நகர்வதென்பது மிகவும் அழுத்தமான நேரமாகும், ஆனால் நல்ல தயார்படுத்தலுடன் இது ஒரு மென்மையான செயல்முறையாக இருக்க முடியும்
இந்தப் பக்கத்தில், நாங்கள் உங்களுக்குப் படிப்படியாக வழிகாட்டுவோம்.
முக்கியமான படிகள் எதையும் மறக்கவில்லை என்பதை உறுதிசெய்ய விரும்பினால், உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து எடுக்க வேண்டிய படிகளின் பட்டியலைப் பெற, கருவி ஐப் பயன்படுத்தலாம்.
நீங்கள் குத்தகைதாரராக இருந்தால், “bail” அல்லது குத்தகையை நிறுத்த விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் வீட்டு உரிமையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இது குத்தகையை நிறுத்துதல் அல்லது “résiliation du bail” என்று அழைக்கப்படுகிறது.
உங்களின் முன்னாள் துணைவர் சொத்தில் தங்கியிருந்தால், ஒப்பந்தத்தை மாற்றுமாறு அவர்களிடம் கேளுங்கள். அதனால் உங்கள் பெயர் இனி தோன்றாது.
“bail” ஐ நிறுத்துவதற்கு உங்கள் வீட்டு உரிமையாளருக்கு நீங்கள் கடிதம் அனுப்ப வேண்டும். ஒரு பொது விதியாக, குத்தகையில் தோன்றும் அனைத்து குத்தகைதாரர்களாலும் கையொப்பமிடப்பட வேண்டும். கடிதத்தை எழுத இந்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தலாம்.
அதை அனுப்புவதற்கு முன், உங்கள் குத்தகைக்குப் பொருந்தும் அறிவிப்பு காலத்தைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இந்தக் காலம் பொதுவாக மூன்று மாதங்களாகும், ஆனால் ஒரு மாதமாக குறைக்கப்பட்டால்:
இந்தச் சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு மாத அறிவிப்புக் காலத்திற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
“lettre recommandée avec accusé de réception” அல்லது கடிதத்தின் விநியோகம் பதிவு செய்யப்பட்டு, பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்கக் கூடியஒரே வழி இதுவாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் இல்லை என்றால், மூன்று மாத வாடகையைச் செலுத்த விரும்பாமல் நீங்கள் விரைவாக வெளியேற விரும்பினால், உங்கள் வீட்டு உரிமையாளருடன் அறிவிப்புக் காலத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யலாம்.
உங்கள் வீட்டிற்காக நீங்கள் தற்போது வைத்திருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கிட்டு, அவற்றை ரத்து செய்யுமாறு /அல்லது உங்கள் புதிய முகவரிக்கு மாற்றுமாறு கேட்கவும்.
பிரான்சில், “La Poste” என்று அழைக்கப்படும் அஞ்சல் சேவையிடம், 6 அல்லது 12 மாத காலத்திற்கு உங்கள் அஞ்சலை உங்கள் புதிய முகவரிக்கு தானாக திருப்பி விடும்படி நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் இதற்கு நிகழ்நிலை மூலம் இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தச் சேவையானது பிரான்சில் ஒரு அஞ்சலை மாற்றுவதற்கு மாதத்திற்கு சுமார் 6 யூரோக்கள், சர்வதேச பரிமாற்றத்திற்கு மாதத்திற்கு 15 யூரோக்கள் கட்டணத்திற்கு உட்பட்டது.
உங்கள் புதிய முகவரியைப் பெற்றவுடன், உங்கள் தொடர்பு விவரங்கள் தேவைப்படும் பல்வேறு பொது, தனியார் நிறுவனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும், உதாரணமாக:
நிகழ்நிலைச் சேவையானது, அனைத்துப் பொது அமைப்புகளையும் ஒரே கோரிக்கையில் தெரிவிக்க அனுமதிக்கிறது.
உங்களுடன் எதை எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும், அதை உங்கள் புதிய வீட்டிற்கு எப்படி எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள்.
தேவைப்பட்டால், “déménageur” எனப்படும் அகற்றும் நிறுவனத்தின் சேவைகளுக்கு நீங்கள் அழைக்கலாம்.
எடுத்துச் செல்லப்படும் தளபாடங்கள், பெட்டிகளின் அளவைப் பொறுத்து, நிறுவனத்திற்கு நிறுவனம் செலவு கணிசமாக மாறுபடும். அவர்களின் விலைப்புள்ளிகளை ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் பலரை அழைக்கலாம்.
Supervan போன்ற ,ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் தனிப்பட்ட உடமைகளுடன் விரைவாகச் செல்ல உதவும் சேவைகள் உள்ளன.இது பிரான்சின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் கிடைக்கிறது.
வீடு மாறுவதற்கு நிதி உதவி உள்ளது, உதாரணமாக:
“ADIL” சேவைகள் என்பது மக்களுக்கு அவர்களின் வீட்டு உரிமை, அவர்களுக்கு இருக்கும் தீர்வுகள் பற்றி தெரிவிக்கும் உள்ளூர் ஏஜென்சிகள் ஆகும்
சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.
"PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “Pôle Emploi” இற்கான அறிவிப்புகள் போன்றவை.
பிரான்சில் சமூக வீட்டுவசதி, மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பித்தல்
உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social”,…
பிரான்சில் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்தல்
பிரான்சில், தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பது, தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பீட்டளவில்…
உங்கள் முன்னாள் துணைவருடனான குத்தகை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தல்
நீங்கள் உங்கள் முன்னாள் துணைவருடன் “bail” அல்லது குத்தகைக்கு கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் வீட்டை…