பிரான்சில் சமூக வீட்டுவசதி, மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பித்தல்

உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social” என்றும் அழைக்கப்படும் வீட்டை வாடகைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம். இது வாடகைக் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகள் ஆகும், இது பொதுவாக தனியார் வீடுகளை விட மிகவும் மலிவாகக் காணப்படும் நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டிருந்தால், நீங்கள் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

27/11/2022 அன்று Ouarda Varda Sadoudi ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

எது தொடர்புபடுகின்றது?

குறைந்த வளங்களைக் கொண்ட மக்களுக்கு சமூக வீட்டுவசதி மிகவும் மலிவு வீடாக இருக்கிறது வாடகை கட்டுப்படுத்தப்பட்டு சந்தை விலையை விட குறைவாக உள்ளது.

இது “bailleurs sociaux” என அறியப்படும் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது, இது முன்னுரிமை அளவுகோல்களின்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு வீடுகளை ஒதுக்குகிறது.

நிபந்தனைகள்

  • சமூக வீட்டுவசதிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் கண்டிப்பாக:

    • உள்ள வதிவிட உரிமைகள், மூன்று மாதங்களுக்கும் மேலாக உங்களை பிரான்சில் வசிக்க அனுமதிக்கிறது
    • வளங்களின் அதிகபட்ச அளவை விட அதிகமாக இல்லை. இந்தத் தொகையானது தங்குமிடத்தின் வகை, அதன் இருப்பிடம், வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, என்பன பிரெஞ்சு துறைகளைப் பொறுத்து மாறுபடும்.
  • Téléphone Grave Danger” என்று அழைக்கப்படும் நீதிபதியால் ஒதுக்கப்பட்ட தீவிர ஆபத்துத் தொலைபேசியை பெற்றிருந்தால், நீங்கள் சமூக வீட்டுவசதிக்கு விண்ணப்பித்தால், இந்த தங்குமிடம் தானாகவே உங்களுக்கு ஒதுக்கப்படும்.

    Téléphone Grave Danger” ஐ நிர்வகிப்பதற்குப் பொறுப்பான நிறுவனத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம், மேலும் உங்கள் சூழ்நிலையில் சமூக வீட்டுவசதிக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை பற்றிய கூடுதல் தகவலுக்கு அது உங்களுக்கு உதவும்.

  • நீங்கள் உங்கள் துணைவருடன் வாழ்ந்து, வீட்டுத் துஷ்பிரயோகம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினால், சமூக வீட்டுவசதி பெறுவதற்கான முன்னுரிமையாக நீங்கள் கருதப்படுவீர்கள். பொருந்தக்கூடிய சட்டம்: “Code de la construction et de l’habitation”, க. L-441.1.”

    உங்கள் விண்ணப்பத்தில், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை வழங்கும் “juge aux affaires familiales (JAF)”எனப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை நீங்கள் வழங்க வேண்டும், அதாவது:

    • உங்கள் பிள்ளைகளுடன் தனித்தனியாக வாழ்வதற்கான அங்கீகாரம் போன்ற அவசரநிலை நடவடிக்கைகளை அமைக்கும் ஒரு தற்காலிக முடிவு ஏதேனும் உங்களிடம் இருந்தால்
    • ordonnance de protection” அல்லது பாதுகாப்பு கட்டளையை ஒதுக்கீடு செய்தல்

    இருப்பினும், நடைமுறையில், “bailleurs sociaux” எனப்படும் சமூக வீட்டுவசதிகளை நிர்வகிக்கும் சில நிறுவனங்கள், துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரமாக போலீஸில் புகார் செய்வதையும் ஏற்றுக்கொள்கின்றன. இதில், “récépissé de plainte” என அறியப்படும் இந்த நடவடிக்கையை நீங்கள் எடுத்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை மட்டுமே வழங்க வேண்டும்.

    நீங்கள் சமூக வீட்டுவசதிகளை வழக்கமாக எடுத்துக்கொள்வதை விட விரைவாகப் பெற வேண்டும். இருப்பினும், நீங்கள் வசிக்கும் துறையைப் பொறுத்து காத்திருக்கும் நேரம் வியத்தகு முறையில் மாறுபடும், சில சமயங்களில் மிக நீண்டதாக இருக்கும்.

எப்படித் தொடர வேண்டும்

  • வழங்க வேண்டிய ஆவணங்கள்

    உங்கள் விண்ணப்பத்தில், நீங்கள் பின்வரும் ஆவணங்களைச் சேர்க்க வேண்டும்:

    • உங்கள் அடையாள ஆவணத்தின் புகைப்படம். உதாரணமாக, உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இருபுறமும்
    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் ஒன்றின் குடிமகனாக இல்லாவிட்டால், உங்கள் வதிவிட அனுமதியின் அல்லது “titre de séjour” இன் புகைப்படம்
    • ஊதியச் சீட்டுகள், வரி அறிவிப்புகள் போன்ற உங்கள் நிதி ஆதாரங்களை நிரூபிக்கும் ஆவணங்கள்
    • நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருந்தால், நீங்கள் அனுபவித்த துஷ்பிரயோகத்தை நிரூபிக்கும் ஆவணங்கள்:
      • முடிந்தால், குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “juge aux affaires familiales” இன் தீர்ப்பு
      • இல்லையெனில், “récépissé de plainte” எனப்படும், நீங்கள் புகாரைப் பதிவுசெய்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணம்.

    நிகழ்நிலையில் விண்ணப்பித்தல்

    பெரும்பாலான சமூக வீட்டு விண்ணப்பங்கள் இப்போது நிகழ்நிலை மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

    படிகள் பின்வருமாறு:

    • இந்த இணையத்தளத்தில் உள்நுழைந்து படிவத்தை நிரப்பவும்.
    • கோரப்பட்ட வெவ்வேறு ஆவணங்களை பதிவேற்றவும். உங்கள் விண்ணப்பம் முடிந்தவரை முழுமையானதா என்பதை உறுதிப்படுத்தவும்.
    • உங்கள் விண்ணப்பம் பதிவுசெய்யப்பட்டதும், உங்கள் அடையாள ஆவணத்தின் நகலை யாராவது உறுதி செய்து, உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்ப்பார்.
    • உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த ஐந்து வேலை நாட்களுக்குள் “numéro unique d’enregistrement” என்ற விண்ணப்ப எண்ணைப் பெறுவீர்கள். இந்த எண் உங்கள் வழக்கின் முன்னேற்றத்தை நிகழ்நிலையின் மூலம் பார்க்க உங்களை அனுமதிக்கும்.

    நேரில் விண்ணப்பிக்கவும்

    ஒரு கிளையில் உங்கள் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கவும் முடியும்.

    நீங்கள் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து, கோரப்பட்ட அனைத்து ஆவணங்களுடனும் சமர்ப்பிக்க வேண்டும்.

    உங்கள் நகரம் அல்லது மாநகரத்தில் உள்ள கிளைகளின் பட்டியலை இந்த இணையத்தளத்தில் காணலாம்:

    • Connaître les offres de logements sociaux sur une commune” என்பதைக் கிளிக் செய்யவும்
    • உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுங்கள்
    • பக்கத்தின் கீழே உள்ள “Consulter la liste des guichets” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    உதவி பெறுதல்

    உங்கள் விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஒரு தொழில் வல்லுநருடன் சந்திப்பை மேற்கொள்ளலாம், அவர் அதை நிரப்ப உங்களுக்கு உதவுவார்.

  • தங்குமிடம் கண்டறிதல்

    உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன், நீங்கள் பல வழிகளில் தங்குமிடத்தைக் கண்டறியலாம்:

    • முடிந்தவரை உங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தங்குமிடத்திற்கான வாய்ப்பைப் பெறும் வரை காத்திருக்கவும். துரதிஷ்டவசமாக, சமூக வீடுகளைப் பெறுவதற்கு எடுக்கும் நேரம் பிராந்தியத்தைப் பொறுத்து வாரங்கள் முதல் பல ஆண்டுகள் வரை மாறுபடும்.
    • bailleurs sociaux” மூலம் விளம்பரப்படுத்தப்படும் வீட்டுவசதிக்கு நேரடியாக விண்ணப்பிக்கவும். சில நேரங்களில் பாரிஸிற்கான இந்த இணையத்தளம் போன்ற துறை வாரியாக தேடல் தளங்கள் உள்ளன. உங்கள் உள்ளூர் நகர மன்றம் அல்லது “mairie” ஐத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் பகுதியில் உள்ள சலுகைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி நீங்கள் கேட்கலாம்.
    • வீட்டுத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுகுடியமர்த்துவதற்கான அமைப்பின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட, இந்த organisations ஆல் வழங்கப்படும் வீட்டுவசதிக்கு விண்ணப்பிக்கவும்.

    உங்கள் விண்ணப்ப எண் அல்லது “numéro unique d’enregistrement” மூலம் உங்கள் வழக்கின் முன்னேற்றத்தை நிகழ்நிலையில் கண்காணிக்கலாம்.

    உங்கள் தொடர்பு விவரங்கள் மாறினால் அவற்றைப் புதுப்பிக்க நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் சலுகையை இழக்க மாட்டீர்கள்.

    உங்கள் நிலைமையின் அவசரத்தை முன்னிலைப்படுத்தல்

    சமூக வீட்டுவசதிகள் கையகப்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக “droit au logement opposable (Dalo)” எனப்படும் துறைசார் குழுவுடன், “commission de médiation” அல்லது வீட்டுவசதி அமுலாக்க உரிமை எனப்படும் நடைமுறையைப் பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும்.

    அவ்வாறு செய்ய, நீங்கள் சமூக வீட்டுவசதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நிபந்தனைகளையும், பின்வரும் அளவுகோல்களில் குறைந்தபட்சம் ஒன்றையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

    • சமூக வீட்டுவசதி கோரப்பட்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சலுகையைப் பெறாமல், அசாதாரணமாக நீண்ட காத்திருப்புக் காலத்திற்கு இருத்தல்
    • வீடற்றவர்களாக காணப்பட்டால்; உதாரணமாக, உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நீங்கள் தங்கியிருத்தல்
    • உங்கள் வீட்டிலிருந்து உங்களை வெளியேற்றும் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்
    • ஆறு மாதங்களுக்கு மேலாக விடுதி அல்லது ஹோட்டலில் தங்கியிருத்தல்
    • குடியிருப்புக்கு பொருத்தமற்ற அல்லது சுகாதாரமற்ற அல்லது ஆபத்தான வளாகங்களில் தங்கியிருத்தல்
    • மாற்றுத்திறனாளியாக அல்லது மாற்றுத்திறனாளி உங்கள் பராமரிப்பில் இருக்க வேண்டும்
    • குறைந்த பட்சம் ஒரு பிள்ளை சிறுவராகவும், முறையற்ற அல்லது அதிகமாக குடியமர்த்தப்பட்ட குடியிருப்பாகவும் இருக்க வேண்டும்

    இதைச் செய்ய, தொழில் வல்லுநர்களின் ஆதரவை நாடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

    நீங்கள் Ile-de-France பிராந்தியத்தில் வசிக்கிறீர்களா அல்லது வேறு பிராந்தியத்தில் வசிக்கிறீர்களா என்பதைப் பொறுத்து பின்பற்ற வேண்டிய நடைமுறை இருக்கும். இது இந்த இணையத்தளத்தில் விரிவாக உள்ளது.

    ஒவ்வொரு வருடமும் உங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பித்தல்

    ஒரு வருடத்திற்குப் பிறகும் நீங்கள் பதிலைப் பெறவில்லை என்றால், நீங்கள் இன்னும் சமூக வீட்டு வசதியைப் பெற விரும்பினால், உங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

    உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் புதுப்பிக்கலாம்:

    • நிகழ்நிலை மூலம் நீங்கள் பதிவு செய்த தளத்தில், உங்கள் விண்ணப்ப எண் அல்லது “numéro unique d’enregistrement உடன்
    • அல்லது நீங்கள் உங்கள் முதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்த அலுவலகத்தில்.

நீங்கள் பாகுபாடுகளை அனுபவித்தால் என்ன செய்வது

உங்கள் பூர்வீகம், உடல்நலம், பாலியல் நோக்குநிலை அல்லது மதம் போன்ற சில பாரபட்சமான அளவுகோல்களின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு “bailleur social”க்கு உரிமை இல்லை.

பாகுபாடு காரணமாக தங்குமிடத்திற்கான உங்கள் தேடலில் குறைவான சாதகமான உபசரிப்பைப் பெற்றதாக நீங்கள் நினைத்தால், உங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த தீர்வுகள் உள்ளன

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • ADIL” சேவைகள் என்பது மக்களுக்கு அவர்களின் வீட்டு உரிமை, அவர்களுக்கு இருக்கும் தீர்வுகள் பற்றி தெரிவிக்கும் உள்ளூர் ஏஜென்சிகள் ஆகும்

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • ஒரு ஆலோசகர் உங்களுக்குத் தெரிவிக்கவும், தங்குமிடத்திற்கான தேடலில் உங்களுக்கு உதவவும் முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: உங்கள் பகுதியில் உள்ள ஏஜென்சியின் தொடர்பு விவரங்களை இந்தக் கோப்பகத்தில் காணலாம்.
  • சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “Pôle emploi” இல் பதிவு செய்தல் போன்றவை.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்:
  • "PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “Pôle Emploi” இற்கான அறிவிப்புகள் போன்றவை.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரான்சில் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்தல்

பிரான்சில், தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பது, தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பீட்டளவில்…

நகர்வதற்கும், முகவரியை மாற்றுவதற்கும் தயாராதல்

நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன், நிர்வாக அதிகாரிகள்,சேவை வழங்குநர்கள் தொடர்பாக…

உங்கள் முன்னாள் துணைவருடனான குத்தகை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தல்

நீங்கள் உங்கள் முன்னாள் துணைவருடன் “bail” அல்லது குத்தகைக்கு கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் வீட்டை…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்