உங்கள் முன்னாள் துணைவருடனான குத்தகை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தல்

நீங்கள் உங்கள் முன்னாள் துணைவருடன் “bail” அல்லது குத்தகைக்கு கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், பிரிந்த பிறகு குத்தகையைப் புதுப்பிப்பது முக்கியமாகும். செலுத்தப்படாத வாடகைக்கு நீங்கள் பொறுப்பாவதிலிருந்து இது உங்களைத் தடுக்கும். வீட்டுத் துஷ்பிரயோகம் காரணமாக நீங்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேறினால், நீங்கள் வீட்டு உரிமையாளருக்கு வழங்க வேண்டிய குறைக்கப்பட்ட அறிவிப்புக் காலத்தின் மூலம் நீங்கள் பயனடையலாம்.

18/11/2022 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

நீங்கள் தற்போது “bail” அல்லது குத்தகை எனப்படும் வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட சொத்தில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தக் குத்தகையை நிறுத்தினால் அல்லது சொத்தை விட்டு வெளியேறினால் அதைப் புதுப்பிப்பது முக்கியமாகும்.

வீட்டுத் துஷ்பிரயோகம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுதல்

துரதிஷ்டவசமாக பிரான்சில், நீங்கள் திருமணமானவராகவோ அல்லது சிவில் கூட்டாண்மையாகவோ இருந்தால், உங்கள் துணைவருடன் வாழ உங்களுக்கு சட்டப்பூர்வக் கடமை உள்ளது.

உங்கள் துணைவரின் அனுமதியின்றி நீங்கள் சொத்தை விட்டுச் சென்றால், அவர்கள் சேதத்தை செலுத்தக் கோரலாம்.

இருப்பினும், வீட்டுத் துஷ்பிரயோகத்திற்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் நீங்கள் வெளியேறியதை நியாயப்படுத்தினால் இது பொருந்தாது.

 • கிளம்பும் முன், பாதுகாப்புக் கட்டளையின் அல்லது “ordonnance de protection” இன் ஒரு பகுதியாக உங்கள் துணைவரை வீட்டிலிருந்து வெளியேற்றும்படி நீதிபதியிடம் நீங்கள் கேட்கலாம்.

  தங்குமிடம் அவர்களின் பெயரில் இருந்தாலும், அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் அவர்களை வெளியேற்றிவிடலாம். இருப்பினும், அதிலிருந்து வாடகை, தங்குமிட செலவுகளை நீங்கள் செலுத்த வேண்டும்.

  நீதிபதியின் முடிவு நிலுவையில் இருந்தால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அவசரநிலை தங்குமிடத்திற்கான தெரிவுகள் உள்ளன.

 • நீங்கள் வெளியேற முடிவு செய்தால், துஷ்பிரயோகத்தையும் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறியதையும் புகாரளிக்க பரிந்துரைக்கப்படுகிறது:

  • பொலிஸாரிடம் “main courante” அல்லது “plainte” தாக்கல் செய்வதன் மூலம்
  • அல்லது “juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் “requête” என்ற கோரிக்கையை முன்வைப்பதன் மூலம். இந்த நடவடிக்கையை எடுக்க வழக்கறிஞரை பணியமர்த்துமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களின் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உங்கள் வளங்கள் இருந்தால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கு நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்.

bail” அல்லது குத்தகையை எவ்வாறு மாற்றுவது

 • குத்தகையை மாற்றும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டல்

  bail” இல் கையெழுத்திட்ட குத்தகைதாரர்களில் ஒருவர் வெளியேறினால், இந்த மாற்றம் குறித்து வீட்டு உரிமையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

  பின்னர், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • நீங்கள் வெளியேறுவதை உங்கள் வீட்டு உரிமையாளருக்கு தெரிவிக்க ஒரு கடிதம் எழுதவும்:
   • இந்தக் கடிதத்தில், சொத்தை விட்டு வெளியேறிய குத்தகைதாரரின் பெயரைக் குறிப்பிடும், சேர்க்கை அல்லது “avenant” என்ற ஆவணத்தை உங்களுக்கு அனுப்பும்படி அவர்களிடம் கேளுங்கள்.
   • இந்த ஆவணம் மிகவும் முக்கியமானது, குறிப்பாக நீங்கள் சொத்தை விட்டு வெளியேறினால். உங்கள் முன்னாள் துணைவர் தனது வாடகையைச் செலுத்தவில்லை என்றால், இந்த ஆவணத்தை நீங்கள் வழங்க முடியாவிட்டால், நீங்கள் அவர்களின் வாடகைக்கும் செலுத்த வேண்டியிருக்கும்.
  • lettre recommandée avec accusé de réception” அல்லது கடிதத்தின் விநியோகம் பதிவு செய்யப்பட்டு, பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்கக் கூடியஒரே வழி இதுவாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

  வீட்டு உரிமையாளர் மறுத்தால்

  ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட வேண்டிய நபர் கோரிக்கையில் கையெழுத்திடப்படவில்லை என்றால், சில நேரங்களில் வீட்டு உரிமையாளர் “bail””ஐ மாற்ற மறுக்கலாம்.

  உங்கள் முன்னாள் துணைவர் சொத்தை விட்டுவிட்டு கையொப்பமிட மறுத்தால், உங்களின் “bail” இற்குச் சேர்ப்புத் தொகையைப் பெற நீதிபதியின் முடிவு தேவைப்படலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு பாதுகாப்பு கட்டளை அல்லது “ordonnance de protection” மூலம் பயனடைந்தால்,குத்தகையை மாற்றியமைக்க நீதிபதி கையொப்பமிட்ட ஆவணத்தை நீங்கள் வழங்கலாம்.

  குத்தகைக்கு “avenant” ஐ வழங்க உங்கள் வீட்டு உரிமையாளர் மறுத்து, நீங்கள் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற வேண்டும் என்றால், ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

  உங்கள் வைப்புத்தொகையை அல்லது “dépôt de garantie” ஐத் திரும்பப் பெறுதல்

  நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது , வைப்பு அல்லது “dépôt de garantie” என அழைக்கப்படும் ஒரு தொகையை நீங்கள் செலுத்தியிருக்கலாம்.

  பொதுவாக, “bail” முடிவடையும் போது மட்டுமே நில உரிமையாளர் இந்தத் தொகையைத் திருப்பித் தருவார்.

  உங்கள் முன்னாள் துணைவர் வீட்டில் தங்கினால், இந்தப் பணத்தை உடனடியாக உங்களால் திரும்பப் பெற முடியாமல் போகலாம்.

  உங்கள் முன்னாள் துணைவர் தங்குமிடத்தை விட்டு வெளியேறும்போது உங்கள் வைப்புத்தொகையின் பங்கை அல்லது “dépôt de garantie” ஐ உறுதிசெய்ய வீட்டு உரிமையாளருக்கு எழுத்துப்பூர்வமாக நிலைமையை அறிவிக்கவும்.

 • délai de préavis” இன் அறிவிப்பு காலத்தைச் சரிபார்க்கவும்

  குத்தகை ஒப்பந்தம் அல்லது “bail” முடிவடைவதைப் பற்றி உங்கள் வீட்டு உரிமையாளருக்குத் தெரிவிக்கும் தருணத்திற்கும் அது உண்மையில் நிறுத்தப்படும் தருணத்திற்கும் இடையில் அவதானிக்க உங்களுக்குச் சட்டப்பூர்வ காலம் உள்ளது.

  இந்த காலம் அறிவிப்புக் காலம் அல்லது “délai de préavis” எனக் குறிப்பிடப்படுகிறது.

  இது பொதுவாக மூன்று மாதங்களாகும், ஆனால் பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு மாதமாக குறைக்கப்படுகிறது:

  • உறவில் அல்லது உங்களுடன் வசிக்கும் பிள்ளை மீதான துஷ்பிரயோகம் காரணமாக உங்கள் முன்னாள் துணைவருக்கு எதிராக புகாரைப் பதிவு செய்துள்ளீர்கள்:
   • சட்ட நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன
   • அல்லது வழக்குத் தொடர மாற்று நடவடிக்கைகளைப் பெற்றிருக்கிறார்கள்
   • அல்லது அவர்கள் தண்டனை பெற்றுள்ளனர்
  • ordonnance de protection” என அழைக்கப்படும் பிரெஞ்சு நீதிபதியால் கட்டளையிடப்பட்ட ஒரு பாதுகாப்பு நடவடிக்கை உங்களுக்கு உள்ளது
  • நீங்கள் ஒரு அலங்கார வீட்டில் வசிக்கிறீர்கள்
  • zone tendue” என அறியப்படும், கேள்வி அதிகமாக இருக்கும் இடத்தில் உங்கள் வீடு அமைந்துள்ளது.
  • நீங்கள் இப்போதுதான் உங்கள் முதல் வேலையைப் பெற்றிருக்கிறீர்கள், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிட்டீர்கள், உங்கள் வேலையை இழந்துவிட்டீர்கள் அல்லது வேலை இழப்பின் விளைவாகப் புதிய வேலையைப் பெற்றிருக்கிறீர்கள்
  • உங்கள் உடல்நிலைக்கு வதிவிடமாற்றம் தேவை (இதை நிரூபிக்க மருத்துவச் சான்றிதழை நீங்கள் வழங்க வேண்டும்)
  • revenu de solidarité active (RSA)” அல்லது “allocation aux adultes handicapés (AAH)” என அறியப்படும் நிதி உதவியைப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது
  • உங்களுக்கு சமூக வீட்டுவசதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் நீங்கள் இல்லை என்றால், நீங்கள் விரும்பினால், வீட்டு உரிமையாளருடன் குறுகிய அறிவிப்பு காலத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்த முயற்சி செய்யலாம். இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு வாடகையை செலுத்தாமல் விரைவாக வெளியேற முடியும்.

  bail” ஐ நிறுத்துதல்

  bail” (டெம்ப்ளேட்) ஐ நிறுத்துவதற்கு இரு குத்தகைதாரர்களாலும் கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதத்தை நீங்கள் வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டும்.

  உங்களுக்குப் பொருந்தும் அறிவிப்புக் காலம் அல்லது “délai de préavis”, ஒரு மாதத்திற்கான குறுகிய அறிவிப்புக் காலத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்தவும்.

  lettre recommandée avec accusé de réception” அல்லது கடிதத்தின் விநியோகம் பதிவு செய்யப்பட்டு, பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிக்கக் கூடியஒரே வழி இதுவாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • ADIL” சேவைகள் என்பது மக்களுக்கு அவர்களின் வீட்டு உரிமை, அவர்களுக்கு இருக்கும் தீர்வுகள் பற்றி தெரிவிக்கும் உள்ளூர் ஏஜென்சிகள் ஆகும்

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒரு ஆலோசகர் உங்களுக்குத் தெரிவிக்கவும், தங்குமிடத்திற்கான தேடலில் உங்களுக்கு உதவவும் முடியும்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: உங்கள் பகுதியில் உள்ள ஏஜென்சியின் தொடர்பு விவரங்களை இந்தக் கோப்பகத்தில் காணலாம்.
 • சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “Pôle emploi” இல் பதிவு செய்தல் போன்றவை.
  • கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்:
 • "PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “Pôle Emploi” இற்கான அறிவிப்புகள் போன்றவை.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

நகர்வதற்கும், முகவரியை மாற்றுவதற்கும் தயாராதல்

நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன், நிர்வாக அதிகாரிகள்,சேவை வழங்குநர்கள் தொடர்பாக…

பிரான்சில் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்தல்

பிரான்சில், தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பது, தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பீட்டளவில்…

பிரான்சில் சமூக வீட்டுவசதி, மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பித்தல்

உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social”,…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்