உங்களுக்கு பிரான்சில் வசிக்க வசிப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடிய “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும் ஆவணத்தைக் கோருதல்
பிரான்சில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு…
சர்வதேச பாதுகாப்பிலிருந்து பயனடையும் நபர்களின் துணைவர்கள், குடும்ப வன்முறையை அனுபவித்திருந்தால், அவர்கள் தங்கள் துணையுடன் வாழ்வதை நிறுத்தும்போது அவர்களின் வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
16/05/2023 அன்று FNCIDFF இனால் சரிபார்க்கப்பட்டது
இந்த இரண்டு நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்:
பொருந்தக்கூடிய சட்டம்: "CESEDA" இன் கட்டுரைகள் L.424-7, L.424-16 மற்றும் L-424-20.
விண்ணப்பத்தின் போது வன்முறைக்கான சான்றுகளை நீங்கள் வழங்க வேண்டும்.
“préfecture” எனப்படும் வதிவிட அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரிகள், உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முன் சான்றுகளை மதிப்பாய்வு செய்வார்கள்.
வன்முறையை எந்த வகையிலும் நிரூபிக்க முடியும்.
உங்கள் கோப்பில் பயனுள்ள எந்தச் சான்றையும் சேகரிக்கவும், எடுத்துக்காட்டாக:
வன்முறைக்கான ஒரு குறிப்பிட்ட வகை ஆதாரத்தைக் கோருவதற்கு “préfecture” இற்கு உரிமை இல்லை. எனவே குறிப்பிட்ட ஆதாரம் இல்லை என்று கூறி உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி இல்லை.
நீங்கள் உங்கள் துணைவரை விட்டு வெளியேறி குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருந்தால் உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de résident” ஐத் திரும்பப் பெற முடியாது.
காலாவதியாகும் போது, முதலில் வழங்கப்படுவதற்கான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யாவிட்டாலும், அது புதுப்பிக்கப்படும்.
நீங்கள் உங்கள் துணைவரை விட்டு வெளியேறி குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருந்தால் உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de résident” ஐத் திரும்பப் பெற முடியாது.
காலாவதியாகும் போது, உங்கள் சூழ்நிலையின் அடிப்படையில் நீங்கள் எந்த வதிவிட உரிமைகளைப் பெறலாம் என்பதைத் தீர்மானிக்க உதவ, “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றைத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
வன்முறையில் ஈடுபட்டவருக்கு எதிராக நீங்கள் புகாரைப் பதிவு செய்திருந்தால் மற்றும் நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருந்தால், உங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் போது “préfecture” இற்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது, அவர்கள் சட்டப்படி கடமைப்பட்டிருக்காவிட்டாலும், அவர்கள் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
கொள்கையளவில், அல்ஜீரிய குடிமக்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது, ஏனெனில் பிரான்சில் அவர்களின் குடியேற்ற நிலை இருதரப்பு ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இருப்பினும், “préfecture” என்று அழைக்கப்படும் “titre de séjour” இற்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பொறுப்புள்ள உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரிகள், நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்திருந்தால், இதிலிருந்து பயனடைய உங்களை அனுமதிக்கலாம்.
எனவே நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை முன்னிலைப்படுத்தவும், உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் உதவக்கூடிய ஆதாரங்களை வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” என்பன புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
உங்களுக்கு பிரான்சில் வசிக்க வசிப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடிய “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும் ஆவணத்தைக் கோருதல்
பிரான்சில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு…
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…