உங்களுக்கு பிரான்சில் வசிக்க வசிப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடிய “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும் ஆவணத்தைக் கோருதல்
பிரான்சில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு…
இந்த மூன்று நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் கட்டுரைகள் L.425–9 மற்றும் R.425–14.
உங்கள் நோய் மற்றும் அதன் தீவிரத்தன்மையை நிரூபிக்க உதவும் அனைத்து மருத்துவ ஆவணங்களுடன் ஒரு கோப்பைத் தயாரிக்கவும்.
நீங்கள் அங்கு சிகிச்சை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த மருத்துவர் போன்ற திறமையான நபர்களிடமிருந்து சான்றிதழ்களைச் சேர்க்கலாம்.
“préfecture” எனப்படும் “titre de séjour” அல்லது வதிவிட அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரியிடம் உங்களின் ஆரோக்கிய நிலை காரணமாக நீங்கள் “titre de séjour” இற்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டு நீங்கள் சந்திப்பு நேரமொன்றை மேற்கொள்ள வேண்டும். this directory இற்குச் சென்று உங்கள் துறைக்கான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறியலாம்.
“préfecture” உடன் சந்திப்பைப் பெறுவதில் சிரமம் இருந்தால் அல்லது சந்திப்பைத் திட்டமிடுவது பற்றி மேலும் அறிய, this page இல் கூடுதல் தகவலைக் காணலாம்.
சந்திப்பின் போது, “préfecture” இல் உள்ள முகவர் உங்களுக்கு வழங்குவார்:
உங்கள் மருத்துவரால் படிவம் நிரப்பப்பட்டவுடன், இந்த ஆவணம் ஏதேனும் பயனுள்ள மருத்துவ ஆவணங்களுடன் “OFII” மருத்துவருக்குத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
மருத்துவர் வழக்கமாக கடிதம் மற்றும் படிவத்தை அனுப்புவார், ஆனால் சில சமயங்களில் அவர்கள் அதை அனுப்பச் சொல்வார்கள்.
கடிதத்தை நீங்களே அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட டெலிவரி அல்லது “lettre recommandée avec accusé de réception மூலம் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்புவதை உறுதிசெய்யவும்: உங்கள் கடிதம் கிடைத்ததை நிரூபிக்க இதுவே ஒரே வழியாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.
“OFII” மருத்துவர் மருத்துவ அறிக்கையை விநியோகிப்பார்.
இறுதியாக, “OFII” மருத்துவரின் மருத்துவ அறிக்கை “OFII” மருத்துவ சேவைக்கு அனுப்பப்படும், அது ஒரு கருத்தை வெளியிட்டு மூன்று மாதங்களுக்குள் “préfecture” இற்கு அனுப்பும்.
“préfecture” பின்னர் உங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளிக்க முடியும். “OFII” இன் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
நீங்கள் “vie privée et familiale” அல்லது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகின்ற ஒரு தற்காலிக வதிவிட அட்டை அல்லது “carte de séjour temporaire” ஒன்றைப் பெறுவீர்கள். இது உங்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.
இருப்பினும், நீங்கள் பிரான்சில் ஒரு வருடத்திற்கும் குறைவாக வாழ்ந்திருந்தால், “préfecture” உங்களுக்கு தற்காலிக வதிவிட அனுமதி அல்லது “autorisation provisoire de séjour”, அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யலாம்.
நீங்கள் இன்னும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் வதிவிட அட்டை அல்லது “carte de séjour” புதுப்பிக்கப்படும்.
நீங்கள் கோரினால், பல வருட குடியிருப்பு வதிவிட அல்லது “carte de séjour pluriannuelle” ஒன்றைப் பெற முடியும். மருத்துவப் பராமரிப்புத் திட்டமிடப்பட்ட அதே காலத்திற்கும் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கும் இது செல்லுபடியாகும்.
நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் “carte de résident” ஐக் கோரலாம். மேலும் அறியவும்
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” என்பன புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
உங்களுக்கு பிரான்சில் வசிக்க வசிப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடிய “titre de séjour” அல்லது வதிவிட அனுமதி என அழைக்கப்படும் ஆவணத்தைக் கோருதல்
பிரான்சில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு…
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…