பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
வீட்டு வன்முறை அல்லது பலவந்தமான திருமணதிற்கான அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சிய நீதிபதியிடம் இருந்து பாதுகாப்பு கட்டளை அல்லது "ordonnance de protection” இனை பெற்றுக்கொண்ட மக்களுக்கு "titre de séjour”அல்லது வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
06/10/2023 அன்று FNCIDFF இனால் சரிபார்க்கப்பட்டது
குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “juge aux affaires familiales (JAF)” வழங்கும் “ordonnance de protection” அல்லது பாதுகாப்பு ஆணை எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் பயனாளியாக இருக்க வேண்டும் என்பதே ஒரே தேவை.
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் உறுப்புரைகள் L.425–6 மற்றும் L.425–7.
உங்களுக்கு “vie privée et familiale” அல்லது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு ஒரு தற்காலிக வதிவிட அட்டை அல்லது “carte de séjour temporaire” இற்கு உரிமையுண்டு. அது ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். அது உங்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.
உங்கள் “ordonnance de protection” மற்றும் நீங்கள் புகாரைப் பதிவு செய்திருந்தால், சட்ட நடவடிக்கைகளின் போது முழுக் காலகட்டத்திலும் இது புதுப்பிக்கப்படலாம்.
நீங்கள் அதை வைத்து, உங்கள் “ordonnance de protection”முழு காலக்கெடு முழுவதும் காலாவதியாகும் போது மற்றும் நீங்கள் புகார் அளித்திருந்தால், சட்ட நடவடிக்கைகளின் போது புதுப்பிக்கலாம்.
நீங்கள் ஒரு “ordonnance de protection” ஐப் பெற்றிருந்தால், பின்வரும் மூன்று நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால், “carte de résident” அல்லது வதிவிட அட்டையைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு:
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் உறுப்புறை L.425–8.
இந்த நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை, ஆனால் நீங்கள் பிரான்சில் குறைந்தது ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலும் “carte de résident” ஐப் பெறலாம். மேலும் அறியவும்
கொள்கையளவில், அல்ஜீரிய தேசியம் கொண்டவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. நீங்கள் அல்ஜீரிய குடிமகனாக இருந்தால், பிரான்சில் உங்கள் குடியேற்ற நிலை இந்த சூழ்நிலையை வழங்காத இருதரப்பு ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், “préfecture” எனப்படும் வதிவிட அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரம், நீங்கள் “ordonnance de protection” அல்லது பாதுகாப்பு ஆணையைப் பெற்றிருந்தால், உங்களுக்கு வதிவிட உரிமைகளை வழங்க முடிவு செய்யலாம். எனவே, உங்களிடம் “ordonnance de protection” உள்ளது என்பதை முன்னிலைப்படுத்தி, எப்படியும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” என்பன புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…