உங்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகள் கண்காணிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்தல்

உறவின் போதும் நீங்கள் பிரிந்த பிறகும், உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு உங்கள் மின்னணு சாதனங்கள்
மற்றும் ஆன்லைன் கணக்குகள் என்பவற்றைக் கண்காணிக்க முயற்சி செய்யக் கூடும். இது மிகவும் பயங்கரமானதாக இருக்கலாம், ஆனால் அதற்கும் தீர்வுகள் உள்ளன.

17/11/2023 அன்று ஸ்கார்லெட் டாசன் ஆல் சரிபார்க்கப்பட்டது

என்ன தெரிந்து கொள்ள வேண்டும்

பல துஷ்பிரயோகம் செய்பவர்களின் கவலையளிக்கும் ஒரு நடத்தை என்னவெனில், அவர்களின் துணைவரின் அல்லது முன்னாள் துணைவரின் மின்னணு சாதனங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளைக் கண்காணிப்பதாகும்

மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்படும் சாதனங்களாவன: 

  • தொலைபேசிகள்
  • கணனிகள் 
  • டேப்லட்ஸ்கள். 

பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் GPS இருப்பிடம் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்கும் ஸ்பைவேர் என்பனவாகும்.

செய்ய வேண்டியவை

உங்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகள் என்பன கண்காணிக்கப்படுவதாக நீங்கள் நினைத்தால், பின்வருவனவற்றைச் செய்யப் பரிந்துரைக்கப்படுகின்றீர்கள்.

  • உங்கள் சாதனங்கள் செயல்படும் விதத்தில் சாத்தியமான மாற்றங்களைக் கவனியுங்கள்: அவை வழக்கத்தை விட மெதுவாக உள்ளனவா?
  • உங்கள் துணைவரின் அல்லது முன்னாள் துணைவரின் நடத்தையைக் கவனிக்கவும்: அவர் செய்யக்கூடாத விடயங்களைப் பற்றி அவருக்குத் தெரியுமா? ஆம் எனில், அவர் இந்தத் தகவலை வேறு வழியில் கண்டுபிடித்திருக்கக் கூடுமா?
  • உங்கள் ஆப்ஸ்களின் பட்டியலைப் பரீட்சிக்கவும்: நீங்கள் பதிவிறக்கம் செய்யாத மற்றும் அறிமுகமில்லாத ஏதேனுமொரு ஆப் உள்ளதா?
  • நீங்கள் இந்த மாற்றங்களைச் செய்கிறீர்கள் என்பதை உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் விரைவில் உணரக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமானதாகும், குறிப்பாக நீங்கள் இன்னும் ஒன்றாக வாழ்ந்தால்:

    • உங்கள் நடத்தையை மாற்றாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், இவ்வாறு மாற்றுவது அவர்களை எச்சரிக்கக்கூடும்
    • ஆப்ஸ்கள் அல்லது மென்பொருள் என்பவற்றை அகற்ற வேண்டாம், ஏனெனில் இதுவும் அவர்களை விழிப்படையச் செய்யலாம்
    • சந்தேகத்திற்கிடமான சாதனத்தை அழிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் ஒரு நாள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோர அல்லது புகார் செய்ய விரும்பினால், அதை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
    • எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த ஆலோசனையைப் பெற, காவல்துறையை அல்லது "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும்.

வெளியேறுங்கள்(லாக் அவுட் ஆகுங்கள்)

கவனமாக இருங்கள்: நீங்கள் உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்கிறீர்கள் என்பதை உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உணரக் கூடும். 

இது உங்கள் பாதுகாப்பிற்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் காவல்துறையை அல்லது "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள், இவ்வமைப்பு வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்றது. பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்.

  • உங்கள் கணக்குக் கடவுச்சொற்கள் அனைத்தையும் மாற்றி, உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் கணக்குகளுடன் இணைக்கப்படவில்லை என்பதைப் பரீட்சிக்கவும்:

    • மின்னஞ்சல் இன்பாக்ஸ்கள் (உ.ம். Gmail, Outlook, Hotmail, Yahoo)
    • சமூக வலைத்தளங்கள் (உ.ம். Facebook, Instagram, LinkedIn, Twitter, TikTok)
    • உணவு விநியோக சேவைகள் (உ.ம். Deliveroo, Uber Eats)
    • இசைச் சேவைகள் (உ.ம். Spotify, Apple Music)
    • ஸ்ட்ரீமிங் சேவைகள் (உ.ம். Netflix, Disney+)
    • போக்குவரத்து/டாக்ஸி சேவைகள் (உ.ம். Uber, G7)
    • உடற்பயிற்சிச் சேவைகள் (உ.ம்.Garmin)
    • கிளவுட் சேமிப்பகம் (உ.ம். Dropbox, Google Drive, iCloud)
    • சக்தி வழங்குநர்கள் (மின்சாரம், எரிவாயு)
    • பயணச் சேவுகள் (உ.ம்.Airbnb, SNCF, Airlines, Booking.com)
    • கார் பயண சேவைகள் (உ.ம். Waze, Google Maps, Car GPS)
    • வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (உ.ம். Online banking, Lydia, சர்வதேச பரிமாற்ற கணக்குகள்)
    • கையடக்கத் தொலைபேசிச் சேவைகள் (உ.ம். Orange, SFR, Bouygues, Free)
    • ஆன்லைன் விளையாட்டு (உ.ம். Minecraft, Grand Theft Auto)
    • ஆன்லைன் ஷாப்பிங் (உ.ம். Zalando, Amazon)
    • ஏனைய ஆப்ஸ்கள்

    இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. நீங்கள் பிரிந்த பிறகு, ஒவ்வொரு முறையும் ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்தும் போது உங்கள் கடவுச்சொல்லை மாற்றியுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

  • உங்கள் எல்லாச் சாதனங்களிலும் உள்ள எல்லா ஆப்ஸ்களுக்கும் இருப்பிட அனுமதிகளை செயலிழக்கச் செய்யுங்கள்:

    • தொலைபேசிகள்
    • டேப்லட்ஸ்
    • கணனிகள்
    • கார்
    • ஸ்மார்ட் இணைக்கப்பட்ட பொருட்கள் (கேமரா, கைக்கடிகாரம், தொலைக்காட்சி போன்றவை).

    சில சந்தர்ப்பங்களில், அல்லது நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், முடிந்தால் புதிய சாதனத்தை வாங்குவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் பழைய சாதனத்திலிருந்து அமைப்புகளை(settings) மீட்டெடுக்க வேண்டாம், ஏனெனில் இது ஸ்பைவேரை மீண்டும் நிறுவக் கூடும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: அளவளாவல் சேவை. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • "associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

நீங்கள் இன்னும் ஒன்றாக வாழும்போது பாதுகாப்பு உத்திகளை வைத்திருத்தல்

எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை…

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

முன்னாள் துணைவர் உங்களை அணுகுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு நீதிபதியிடம் வினவுதல்

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்