கட்டாயத் திருமணம் அல்லது கட்டாயத் திருமணத்திற்கான ஆபத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

கட்டாய சிவில், மத அல்லது பாரம்பரிய திருமணத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால், ஒரு பிரெஞ்சு நீதிபதியால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம். நீங்கள் வேறொரு நாட்டிலிருந்து கட்டாயத் திருமணத்தை விட்டும் நீங்கி தப்பி ஓடினால், புகலிட உரிமை என்றும் அழைக்கப்படும் பிரான்சின் சர்வதேச பாதுகாப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

30/05/2022 அன்று Fédération GAMS ஆல் சரிபார்க்கப்பட்டது

உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

கட்டாயத் திருமணம் என்பது நீங்கள் தேர்வு செய்யாத ஒருவருடன் உங்கள் சம்மதமின்றி உங்கள் மீது சுமத்தப்படும் ஒரு சிவில், மத அல்லது பாரம்பரிய திருமணம் ஆகும்.

கட்டாயத் திருமணம் பிரான்சில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள சுதந்திரமாக இருக்கிறீர்கள், ஆனால் திருமணத்தை மறுப்பதும் கூட கட்டாயத் திருமணம் ஆகும்.

திருமணத்திற்கு வருங்கால வாழ்க்கைத் துணைவர்களிடையே பரஸ்பர ஒப்புதல் தேவை. இதன் அர்த்தம் என்னவெனில்:

 • mairie” அல்லது நகர மண்டபம் எனப்படும் சிவில் திருமண விழாக்களை நடத்தும் நிர்வாக அமைப்பிற்கு நடவடிக்கைகளின் போது நீங்கள் உங்கள் மறுப்பை தெரிவிக்கலாம்.
 • திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின் போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
 • சம்மதம் இல்லாத நிலையில், பிரெஞ்சு சட்டத்தின்படி திருமணம் செல்லாததாகக் கருதப்படுகிறது. பொருந்தக்கூடிய சட்டம்: சிவில் சட்டத்தின் 180 வது பிரிவு.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

 • நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, கட்டாயத் திருமணத்திற்கு நீங்கள் அச்சுறுத்தப்பட்டால், உங்களுக்கு வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும், பிரெஞ்சு சட்ட அமைப்பிலிருந்து “ordonnance de protection” எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

  இந்த நடவடிக்கை ஒரு வாரத்திற்குள் அவசரமாக வெளியிடப்படும்.

  juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி ஆறு மாதங்களுக்குப் புதுப்பிக்கத்தக்க காலத்திற்குப் பாதுகாப்பைப் பெற உங்களை இது அனுமதிக்கும், உதாரணமாக:

  • நீங்கள் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்ற நபர் உங்களைச் சந்திப்பதைத் தடை செய்யும்
  • நீங்கள் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்ற நபர் ஆயுதம் ஏந்துவதைத் தடை செய்யும்
  • உங்கள் வீட்டின் முகவரியை மறைக்க அனுமதிக்கும்
  • உங்கள் வேண்டுகோளின் பேரில், பிரெஞ்சு நிலப்பிரதேசத்தை விட்டு வெளியேறுவதைத் தற்காலிகமாகத் தடை செய்யும்.

  நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அதிகாரமளிக்கும் ஆவணத்தை நீங்கள் கோரலாம், இது வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” என அறியப்படுகிறது. இந்தச் செயன்முறை இந்தப் பக்கத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 • நீங்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பாதுகாப்பானது பிள்ளைகளின் நீதிமன்றத்தைப் பொறுத்தது என்பதால், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையிலிருந்து நீங்கள் பயனடைய முடியாது.

  உங்கள் ஆதங்கங்களைப் பற்றி உங்களுக்கு நெருக்கமான நம்பகமான நபரிடம் நீங்கள் பேசலாம், அதாவது ஒரு மருத்துவர் அல்லது ஆசிரியர் போன்ற ஒரு தொழில்வல்லுநர்.

  மேலும்119 என்ற தேசிய பிள்ளைகள் பாதுகாப்பு ஹாட்லைனையும் நீங்கள் அழைக்கலாம். இந்த இலவச எண் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் பெற்றுக்கொள்ளப்பட முடியும், ஆனால் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்கவும் “procureur de la République” என்றழைக்கப்படுகின்ற அரசு வழக்கறிஞரிடம் அறிக்கையொன்றை அளிக்கவும் முடியும்.

வதிவிட உரிமைகள்

நீங்கள் வேறொரு நாட்டிலிருந்து கட்டாயத் திருமணத்தை விட்டும் நீங்கி தப்பி வந்தவராக இருந்தால், புகலிட உரிமை என்றும் அழைக்கப்படும் பிரான்சின் சர்வதேச பாதுகாப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு இந்தப் பக்கத்தில் மேலதிக தகவல்களைக் கண்டறியலாம்

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
  • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
  • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
  • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
 • Fédération GAMS” என்பது பெண் பிறப்புறுப்புச் சிதைவு அல்லது கட்டாயத் திருமணத்திற்கு ஆளானவர்களை ஆதரிக்கிறது.

  • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • அவர்கள் உங்கள் நிலைமையை மதிப்பிடுவார்கள், பின்னர் உங்களுக்கு அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்துவார்கள்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் பம்பாரா.
  • தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி மூலம் 01 43 48 10 87 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல். மாலை 4 மணி வரை அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
 • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்

சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…

ஒரு வழக்கறிஞருக்கும் பிற சட்டச் செலவுகளுக்கும் பணம் செலுத்துவதற்கு "'aide juridictionnelle" அல்லது சட்ட உதவிக்கு விண்ணப்பித்தல்

ஒரு வழக்கறிஞரை அமர்த்துவதற்கும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்துவதற்கும் உங்களிடம் போதுமான பணம்…

பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்குப் பிறகு சிகிச்சை பெறுதல்

நீங்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் குணமடையும் போது உங்களை…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்