முன்னாள் துணைவர் உங்களை அணுகுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு நீதிபதியிடம் வினவுதல்

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி முறைமையிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டிக்கொள்ள முடியும். குடும்ப வீட்டிலிருந்து துஷ்பிரயோகம் செய்ப்பவரை வெளியேற்றுவது உட்பட துஷ்பிரயோகம் செய்ப்பவர் உங்களை அணுகுவதை அவர்கள் தடுக்கலாம்

05/10/2023 அன்று ஒலிம்பே ஆல் சரிபார்க்கப்பட்டது

பிரான்சில் வசிக்கும் எவரும் தங்கள் துணைவர் அல்லது தங்களின் முன்னாள் துணைவர் தங்களுக்கு மற்றும்/அல்லது அவர்களின் பிள்ளைகள் மேலும் துஷ்பிரயோகத்தை அனுபவிக்க நேரிடும் என்று அஞ்சும் எவரும் அவர்களுக்கு வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் அவர்கள் பிரெஞ்சு நீதி அமைப்பிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரலாம்.

பாதுகாப்பு உத்தரவு அல்லது “ordonnance de protection

வேகமானதும் மிகவும் பூரணமானதுமான பாதுகாப்பு நடவடிக்கையானது ஒரு “ordonnance de protection”, அல்லது பாதுகாப்பு உத்தரவாகக் கருதப்படுகின்றது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீதிபதியால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பை விரைவாகப் பெற இது உங்களை அனுமதிக்கும்.

குறிப்பெடுத்துக் கொள்வதற்கு சில முக்கியமான தகவல்கள்

  • நீங்கள் இதனை ஒரு வார காலத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும்.
  • துஷ்பிரயோகம் செய்தவர்களின் பெயர்களில் அது இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்ப்பவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் விளைவை அது ஏற்படுத்தும்.
  • நீங்கள் ஒரு “ordonnance de protection” ஐக் கோருவதற்குப் பொலிஸாரிடத்தில் ஒரு புகாரை அளிக்கத் தேவையில்லை, ஆனால் நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டுமென்று மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. புகாரானது உங்கள் விண்ணப்பத்திற்கு கூடுதல் சான்றாக இருக்கும்
  • உங்களுக்கு வதிவிட உரிமை இல்லாவிட்டாலும் கூட தடுத்து வைக்கப்படுவதற்கோ நாடு கடத்தப்படுவதற்கோ உரிய எந்த ஆபத்துமின்றி இதனைக் கோர முடியும்.
  • நீங்கள் ஒரு “ordonnance de protection” ஐப் பெற்றுக்கொண்டால், ஒரு வருடகாலம் செல்லுபடியாகக் கூடியதும் மீள் புதுப்பிக்கத்தக்கதுமான ஒரு வதிவிட அனுமதிப்பத்திரம் அல்லது “titre de séjour” இற்காக நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
  • கட்டாயத் திருமணம் என்ற ஆபத்து இருந்தால் இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.

உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகத் தயாரிப்பது முக்கியமாகும். அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு உண்டாகும். நாம் உதவியைப் பெறுவது எவ்வாறு என்பதையும் செயன்முறை எவ்வாறு படிப்படியாகச் செயற்படுகின்றது என்பதையும் கீழே விளக்குகின்றோம்.

  • ordonnance de protection” இன் ஒரு பகுதியாக நீதிபதியால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உங்கள் பாதுகாப்பின் பல அம்சங்களைப் பற்றியது, பின்வருவன உட்பட:

    • உதாரணத்திற்கு: உங்களின் உடற்பாதுகாப்பு:
      • துஷ்பிரயோகம் செய்தவர் உங்களைத் தொடர்பு கொள்ளவும் வீடு மற்றும் நீங்கள் வழக்கமாகச் செல்லும் சில இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆயுதம் எடுத்துச் செல்லவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது
      • வீட்டுத் துஷ்பிரயோகத்தின் மிகக் கடுமையான வழக்குகளில், துஷ்பிரயோகம் செய்தவரை "bracelet anti-rapprochement" அல்லது அணுகுமுறை எதிர்ப்புக் குறிச்சொல் எனப்படும் மின்னணு சாதனத்தை அணியுமாறு நீதிபதி கேட்கலாம், குற்றவாளி உங்கள் அருகில் வந்தவுடன் பொலிஸாரை அது விழிப்படையச் செய்யும்
    • உங்கள் வீடு, உதாரணமாக:
      • வீடு துஷ்பிரயோகம் செய்பவரின் பெயரில் இருந்தாலும் கூட குடும்ப வீட்டை உங்களுக்கு ஒதுக்கும்படியும், துஷ்பிரயோகம் செய்தவரை வெளியேற்றும்படியும் நீங்கள் கேட்கலாம்,.
      • நீங்கள் வீடு மாறினால், துஷ்பிரயோகம் செய்தவருக்குத் தெரியாமல் இருக்க, உங்கள் புதிய முகவரியை மறைக்குமாறு நீதிபதியிடம் கேட்கலாம்.
    • உதாரணமாக உங்கள் நிதி வளங்கள்
      • நீங்கள் திருமணமானவராக இருந்தால், துஷ்பிரயோகம் செய்தவர் உங்களுக்கு நிதிப் பங்களிப்பைச் செலுத்த வேண்டியிருக்கும்
    • பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள், உதாரணமாக:
      • பிரத்தியேக பெற்றோருக்குரிய அதிகாரம் அல்லது “autorité parentale exclusive” என அழைக்கப்படும் உங்கள் பிள்ளைகளுக்கான பிரத்தியேக உரிமைகளையும் கடமைகளையும் உங்களுக்கு வழங்குமாறு நீதிபதியிடம் நீங்கள் கேட்கலாம்.
      • visites médiatisées” அல்லது மேற்பார்வையிடப்பட்ட வருகைகள் என அழைக்கப்படும் தொழில் வல்லுநர்களின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த அவர்களின் வருகைகளை ஏற்பாடு செய்ய அல்லது குற்றவாளியின் வருகை உரிமைகளை இடைநிறுத்த நீதிபதி முடிவு செய்யலாம்
    • துஷ்பிரயோகம் செய்தவருக்கு உளவியல் ரீதியான தலையீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது

    இந்த நடவடிக்கைகள் பொதுவாக ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும், பிறகு அவை புதுப்பிக்கப்படலாம்.

    இருப்பினும், “juge aux affaires familiales (JAF)” என்றழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதிக்கு ஆறு மாதங்கள் முடிவதற்குள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைப் பொறுப்புக் காப்பை ஏற்பாடு செய்யவும், மற்றும்/அல்லது நீங்கள் கோரிக்கையை அனுப்பினால் நீதிபதியின் அடுத்த முடிவு வரை நடவடிக்கைகளும் தானாகவே நீட்டிக்கப்படும்.

  • இது கட்டாயமில்லை என்றாலும், வீட்டுத் துஷ்பிரயோகத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. “ordonnance de protection” விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

    அவர்களின் சேவைகளுக்குப் பணம் செலுத்துவதற்கு உங்கள் வளங்கள் மிகவும் குறைவாக இருந்தால், உங்களுக்கு வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும், செலவுகளை ஈடுகட்ட நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்

    aide juridictionnelle” உடன் “ordonnance de protection” இற்கு விண்ணப்பம் செய்வதற்கு:

    • அவசரநிலையில் “aide juridictionnelle” இன் கீழ் உங்கள் வழக்கை ஏற்க ஒப்புக்கொள்ளும் வழக்கறிஞரைக் கண்டறிய முயற்சிக்கவும். ஒரே நேரத்தில் “ordonnance de protection” மற்றும் “aide juridictionnelle” ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய அவர்கள் உங்களுக்கு உதவலாம்.
    • உங்களால் ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவும் “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றைக் கண்டறிய முயற்சிக்கவும். நீங்கள் சட்ட உதவிக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, நீதிமன்றத்தால் உங்களுக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு நீங்கள் கோரலாம். “Vous n’avez pas choisi d’auxiliaire de justice et vous demandez la désignation d’un ou de plusieurs professionnels du droit”(நீங்கள் நீதிமன்ற உதவியாளரைத் தேர்வு செய்யாமல் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட சட்ட வல்லுநர்களை நியமிக்கக் கோருகிறீர்கள்) இற்குப் பிறகு (வழக்கறிஞர்) “avocat” என்ற பெட்டியைத் தேர்வு செய்யுங்கள்.
    • படிவத்தின் இந்தப் பகுதியை நிரப்பும்போது, “huissier de justice” என அறியப்படும் நீதி முறைமை அதிகாரியின் சேவைகளை உறுதி செய்ய, “huissier” (சட்ட அதிகாரி) பெட்டியை சரிபார்க்கவும். வன்முறையில் ஈடுபட்டவருக்கு சட்ட உதவியால் நீதிபதியின் உத்தரவை வழங்குவதற்கு அவர் பொறுப்பாவார்.
    • ஒரே நேரத்தில் “ordonnance de protection” மற்றும் “aide juridictionnelle” ஆகியவற்றுக்காக இரண்டு விண்ணப்பங்களையும் பதிவு செய்யுங்கள். “aide juridictionnelle” செயன்முறை இந்தச் சூழலுக்குக் குறிப்பிட்டது என்பதால், வழக்கமான தாமதங்கள் இல்லாமல் நீங்கள் உடனடியாக அதைப் பெறலாம்.
  • juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யப்படுகிறது.

    செயன்முறை சிக்கலானதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

    • உங்களுக்கு மற்றும்/அல்லது உங்கள் பிள்ளைகளுக்குமான துஷ்பிரயோகம் மற்றும் ஆபத்தை நிரூபிக்க முடிந்தவரை சான்றுகளைச் சேகரிக்க முயற்சிக்கவும்.
    • விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, நீதிபதியிடம் நீங்கள் கோர விரும்பும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்களுக்கான ஒன்று உட்பட, விண்ணப்பப் படிவத்தின் மூன்று நகல்களை உருவாக்குங்கள்.
    • குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “juge aux affaires familiales” இன் (எழுத்தரிடம்) “greffe” எனப்படும் நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களையும் நேரடியாக சமர்ப்பிக்கவும்
      • உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய இந்த கோப்பகத்தை பயன்படுத்தலாம்.
      • greffe” திறக்கும் நேரத்தையும் நீதிபதி எப்போது இருப்பார் என்பதையும் கண்டறிய நீதிமன்றத்திற்கு அழைப்பெடுக்கவும். வழக்கமாக இந்த மணிநேரங்களில் சந்திப்பு நேரம் இல்லாமல் நீங்கள் வரலாம். உங்கள் அழைப்பின் போது அவர்களுடன் இதைச் சரிபார்க்கவும்.
    • உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள், விசாரணைக்கான அல்லது “audience” க்கான சந்திப்பு நேரத்தை நீதிபதி உங்களுக்கு நீதிமன்றத்தில் வழங்குவார்,அதனால் அவர் உங்கள் வாதங்களையும், “défendeur” அல்லது பிரதிவாதியாக அறியப்படும் துஷ்பிரயோகம் செய்தவரின் வாதங்களையும் கேட்க முடியும்.
      • நீங்கள் பிரெஞ்சு மொழி கதைப்பதில்லையெனில், உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது “greffe” (எழுத்தரிடம்) தெரிவிக்கவும். அதனால் அவர்கள் “audience”க்கு ஒரு உரைபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யலாம். சில நீதிமன்றங்கள் இந்தச் சேவைக்குப் பணம் செலுத்தும்படி கேட்கலாம். ஆனால் நீங்கள் “aide juridictionnelle”, அல்லது சட்ட உதவி கோரியிருந்தால் அது இவ்வழக்கில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கலாம்
      • துஷ்பிரயோகம் செய்பவரின் முன்னிலையில் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், நீதிபதியிடம் வேறு சந்திப்பு நேரத்தை ஏற்பாடு செய்ய நீங்கள் கேட்கலாம் இது ஒரு தனி விசாரணை அல்லது “audition séparée” என அறியப்படுகிறது. நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது “greffe” இடம் (எழுத்தரிடம்) இதைக் கோரலாம்.
    • விசாரணையின் அல்லது “audience” இன் திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடும் “permis de citer” எனப்படும் ஆவணத்தை நீதிபதி உங்களுக்கு வழங்குவார்.
  • audience” இன் திகதி, நேரம் மற்றும் இருப்பிடத்தைக் குறிப்பிடும் “permis de citer” எனப்படும் ஆவணம் 48 மணி நேரத்திற்குள் “huissier de justice” என அறியப்படும் நீதி முறைமை அதிகாரியால் துஷ்பிரயோகம் செய்தவருக்கு வழங்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு:

    • இந்தக் கோப்பகத்தைத் தேடுவதன் மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தில் உள்ள “huissier” ஐத் தொடர்புகொள்ளலாம்.
    • இந்தச் சேவை கட்டணத்திற்கு உட்பட்டது, சட்ட உதவி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது நீங்கள் “huissier” பெட்டியில் புள்ளடி இட்டிருந்தால் இந்தச் சேவை சட்ட உதவி அல்லது “aide juridictionnelle” ஆல் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கலாம்
    • உங்களால் இந்தச் செலவுகளைச் செலுத்த முடியாமல் நீங்கள் சட்ட உதவியை அல்லது “aide juridictionnelle” ஐப் பெறவில்லை என்றாலும், “greffe” இடம் அல்லது எழுத்தரிடம்(Clerk), உங்கள் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கும் போது, துஷ்பிரயோகம் செய்தவருக்குத் தெரிவிக்குமாறு கூறலாம் துரதிஷ்ட வசமாக, சில நீதிமன்றங்கள் இன்னும் இந்தத் தெரிவை வழங்கவில்லை.

    துஷ்பிரயோகம் செய்தவர் சரியான நேரத்தில் “permis de citer” ஐப் பெற்றிருந்தாலும், நீதிபதி நிர்ணயித்த சந்திப்பு நேரத்திற்கு அவர் வரவில்லை என்றால், நீதிபதி அவர் பிரசன்னமாகாமல் வழக்கைத் தொடரலாம்.

  • நீதிபதியுடன் இந்தச் சந்திப்பில் நீங்கள் கலந்துகொள்ளுமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உங்கள் வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    நீதிமன்றத்தில் இந்தச் சந்திப்பு எவ்வாறு கட்டவிழ்க்கப்படும் மற்றும் அதற்கு நீங்கள் எவ்வாறு சிறந்த முறையில் தயாராகலாம் என உங்கள் வழக்கறிஞர் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்

    நீங்கள் தனி விசாரணையை அல்லது “audition séparée” ஐ கோராமல், துஷ்பிரயோகம் செய்தவரைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள் எனில், உங்கள் வழக்கறிஞரிடம் தெரிவிக்கவும்அதன் காரணமாக நீங்கள் நீதிமன்றத்திற்கு வரும் தருணத்திலிருந்து நீங்கள் வெளியேறும் வரை அவர்கள் உங்களுடன் வர முடியும்.

    நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது ஒரு உரைபெயர்ப்பாளரைக் கோரினால்,“audience” இன் தொடக்கத்தில் உரைபெயர்ப்பாளர் இருப்பதை உங்கள் வழக்கறிஞர் உறுதிசெய்ய முடியும்.

  • உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதாவது அதிகபட்சம் ஆறு நாட்களுக்குள் நீதிபதி தீர்மானமொன்றெடுப்பார். இரண்டு வழிகளில் ஒன்றில் அவர்களின் தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்:

    • உங்களிடம் வழக்கறிஞர் இருந்தால், உங்கள் வழக்கறிஞர் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
    • உங்களிடம் வழக்கறிஞர் இல்லையென்றால், துரதிஷ்ட வசமாக, இந்தக் காலத்திற்குப் பிறகு நீதிபதியின் முடிவைக் கண்டறிய நீங்கள் நீதிமன்றத்தை அழைக்க வேண்டும். அவர்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிவதற்கு, உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தக் கோப்பகத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

    நீதிபதி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்தால், உங்கள் வழக்கறிஞரின் உதவியுடன் மேன்முறையீடு அல்லது “appel” மூலம் இந்த தீர்மானத்தை நீங்கள் சவாலிற்குட்படுத்தலாம்.

  • நீதிபதியால் “ordonnance de protection” போடப்பட்டிருக்கும் போது வன்முறையில் ஈடுபட்டவர் உங்களை அணுகினால், நீங்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

    procureur de la République” என்று அழைக்கப்படும் ஒரு அரச வழக்கறிஞர் அவர்களைத் தற்காலிகக் காவலில் வைக்க முடிவு செய்யலாம்.

தீவிர ஆபத்துத் தொலைபேசி அல்லது “Téléphone Grave Danger

தீவிர ஆபத்துத் தொலைபேசி அல்லது “Téléphone Grave Danger” என்பது குடும்பத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தீவிரமான நிகழ்வுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.

இது 24/7 உதவியெண்ணுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பொத்தானைக் கொண்டுள்ளது. உங்கள் அழைப்பைப் பெறுபவர் உங்களைக் கண்டுபிடித்து பொலிஸாரின் தலையீட்டைக் கோர முடியும்.

இது ஆறு மாத காலத்திற்கு வழங்கி பின்னர் புதுப்பிக்கப்படலாம்.

  • Téléphone Grave Danger” (தீவிர ஆபத்துத் தொலைபேசி) பெறுவதற்கு:

    • நீங்கள் பிரெஞ்சு மொழியின் அடிப்படை மட்டத்தில் பேச வேண்டும்
    • துஷ்பிரயோகம் செய்பவருடன் நீங்கள் இனி வாழக்கூடாது அல்லது அவர்களை அணுகக்கூடாது
    • துஷ்பிரயோகம் செய்தவர் உங்களைத் தொடர்புகொள்வதைத் தடைசெய்து நீதிபதியிடமிருந்து ஏற்கனவே உத்தரவு பெற்றிருக்க வேண்டும், அதை அவர்கள் மதிக்கவில்லை.
  • துரதிஷ்டவசமாக, நீங்களாகவே கோரிக்கையை வைக்க முடியாது.

    "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்தாலோ அல்லது பொலிசாராலோ, வழக்கறிஞராலோ நீங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைப் புகாரளிக்க வேண்டும். பின்வருவோருக்கு அறிக்கை மேற்கொள்ளப்படலாம்:

    • procureur de la République” எனப்படும் அரச வழக்கறிஞருக்கு, அவர் உங்கள் துறையில் உள்ள “Téléphone Grave Danger” ஐ நிர்வகிப்பதற்குப் பொறுப்பான அமைப்பிடமிருந்து சமூக விசாரணை அல்லது “enquête sociale” எனப்படும் மதிப்பீட்டு அறிக்கையைக் கோருவார்.
    • அல்லது உங்கள் துறையில் உள்ள “Téléphone Grave Danger” ஐ நிர்வகிப்பதற்குப் பொறுப்பான அமைப்பிற்கு நேரடியாகச் செல்லவும்.

    ஒரு அறிக்கை செய்யப்பட்டவுடன், பின்வருபவை நடக்கும்:

    • கூடிய விரைவில் சந்திப்பை ஏற்பாடு செய்ய அமைப்பு உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும். அவர்கள் “Téléphone Grave Danger” என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்துப் பரிசீலிப்பதற்காக உங்கள் நிலைமையை மதிப்பிடுவதே இந்தச் சந்திப்பு என்பதை சுட்டிக்காட்டும்.
    • மதிப்பீட்டு அறிக்கையை வரையவும், அதை “procureur de la République” இற்கு அனுப்பவும் அமைப்பிற்கு வழக்கமாக 48 மணிநேரம் உள்ளது. இருப்பினும், துரதிஷ்டவசமாக, சில துறைகளில், இதற்குப் பல வாரங்கள் வரை ஆகலாம்.
    • மதிப்பீட்டு அறிக்கையின் மூலம் மதிப்பிடப்பட்ட ஆபத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு “Téléphone Grave Danger” ஐ வழங்க வேண்டுமா என்பதை “procureur de la République” பின்னர் மதிப்பிடுவார்.

    Téléphone Grave Danger” ஐ நிர்வகிப்பதற்குப் பொறுப்பான அமைப்பால் தொலைப்பேசி உங்களுக்கு ஒதுக்கப்படுமா இல்லையா என்பது உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும். சூழ்நிலையைப் பொறுத்து, அவர்கள் உங்களுக்குத் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் உங்களுக்கு அடுத்த படிகள் பற்றிய தகவலை வழங்குவார்கள்:

    • உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீதிமன்றத்திலே நேரில் உங்களுக்குத் தொலைபேசி வழங்கப்படும். “Téléphone Grave Danger” ஐச் சேகரிக்க, அதை நிர்வகிக்கும் பொறுப்பான அமைப்புடன் நீங்கள் இருப்பீர்கள்.
    • நீதிபதி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்தால், உங்கள் வழக்கறிஞரின் உதவியுடன் மேன்முறையீடு அல்லது “appel” மூலம் இந்த முடிவை நீங்கள் சவால் செய்யலாம்.
  • Téléphone Grave Danger” ஐ அல்லது தீவிர ஆபத்துத் தொலைபேசியைப் பெறும் எந்தவொரு நபரும், அவர்கள் கோரினால், அவர்களுக்கு சமூக வீட்டுவசதி தானாகவே ஒதுக்கப்படும்.

நீதித்துறைக் கட்டுப்பாடு அல்லது “Contrôle judiciaire

புகார் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்து, ஒரு குற்றவியல் சட்ட நீதிபதி, நீதித்துறைக் கட்டுப்பாட்டு ஆணையை அல்லது “ordonnance de placement sous contrôle judiciaire” ஐ வழங்குவதன் மூலம் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை நீதி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் வைக்க முடிவு செய்யலாம்

உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி கருதினால், துஷ்பிரயோகம் செய்தவர் உங்களை அணுகுவதை அவர் தடுப்பார். இந்தத் தற்காலிக நடவடிக்கை விசாரணை வரை இருக்கும்.

விசாரணையின் போது, துஷ்பிரயோகம் செய்தவருக்கு எதிராகக் குற்றவியல் தடைகளை எடுத்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நீதிபதி எடுக்கலாம்.

  • உதாரணமாகத் துஷ்பிரயோகம் செய்பவர் நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட சில தடைகளுக்கும் கடமைகளுக்கும் இணங்க வேண்டும்,

    • அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இந்த வரம்புகளுக்கு அப்பால் அவர்கள் பயணம் செய்தால் நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்
    • குடும்ப வீட்டை விட்டு வெளியே செல்லல்
    • அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக அவர்களின் அடையாள ஆவணங்களை, குறிப்பாக அவர்களின் கடவுச்சீட்டை நீதிபதியிடம் வழங்குதல்
    • சமூக-கல்வி மற்றும்/அல்லது மருத்துவ ஆதரவைப் பெறுதல்.
  • துரதிஷ்ட வசமாக, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்களாகவே கோர முடியாது. இதை நீதிபதியால் மட்டுமே முடிவெடுக்க முடியும்.

    contrôle judiciaire” அமைக்கப்பட்டால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீதிமன்றத்தை அழைக்கலாம் அல்லது உங்கள் வழக்கறிஞரிடம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கலாம். நீதிமன்றத்தின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய, உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தக் கோப்பகத்தைப் பயன்படுத்தலாம்.

  • நீதிபதியால் தடைசெய்யப்பட்ட பிறகும் துஷ்பிரயோகம் செய்பவர் உங்களை அணுகினால், நீங்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும். “détention provisoire” அல்லது தற்காலிகத் தடுப்பு என அழைக்கப்படும் விசாரணை வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி முடிவு செய்யலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.
  • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

    • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
    • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
    • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
    • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக

வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…

மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்

பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…

உடல்நலக் கவனிப்பு அட்டைக்கு அல்லது “carte vitale”க்கு விண்ணப்பித்தல்

carte vitale” என்பது உங்கள் சுகாதாரச் செலவுகள் பிரான்சில் எளிதாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்