ஒரு பிரெஞ்சு சிவில் கூட்டாண்மையை அல்லது "Pacte civil de solidarité (Pacs)” ஐ முடிவுக்குக் கொண்டுவருதல்

நீங்கள் ஒரு பிரெஞ்சு சிவில் கூட்டாண்மையில் அல்லது “Pacte civil de solidarité (Pacs)” இல் இருந்து, நீங்கள் அதை நிறைவு செய்ய விரும்பினால், செயன்முறை பொதுவாக விரைவானதாக இருக்கும். உங்கள் “Pacs” துணைவரின் ஒப்பந்தம் உங்களுக்குத் தேவையில்லை.

31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

"Pacs" ஐ நிறைவு செய்தல்

நீங்கள் பிரெஞ்சுச் சட்டத்தின் கீழ் அல்லது ஒரு “Pacte civil de solidarité (Pacs)” இன் கீழ் ஒரு சிவில் கூட்டாண்மையில் கையொப்பமிட்டிருந்து நீங்கள் பிரிந்தால், கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

சிவில் கூட்டாண்மையின் முடிவு “dissolution du Pacs” என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் சிவில் கூட்டாண்மையை முடிக்கவில்லை என்றால், உங்கள் முன்னாள் துணைவர் மீதான சட்டபூர்வக் கடமைகள் இன்னும் உங்களுக்கு இருக்கும்:

 • ஒன்றாக வாழ வேண்டிய கடமை
 • பொருள் ஆதரவை வழங்குவதற்கான கடமை
 • பரஸ்பர உதவியை வழங்குவதற்கான கடமை.
 • Pacs” ஐ முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீங்கள் இருவரும் ஒப்புக்கொண்டால், நீங்கள் பின்வரும் படிகளை மேற்கொள்ளலாம்:

  • நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியுமான “déclaration conjointe de dissolution d’un Pacte civil de solidarité” (கூட்டுக் கலைப்பு அறிவிப்பு) ஐ நிரப்பவும்.
  • நீங்கள் இருவரும் அதில் கையொப்பமிட வேண்டும்.
  • அதை உங்கள் “Pacs” ஐ முதலில் பதிவு செய்த ஆணையத்திற்குத் தபால் மூலம் அனுப்பவும். அது ஒரு நகர மன்றம் ஆக அல்லது “mairie” ஆக, ஒரு நீதிமன்றமாக, “notaire” என்று அழைக்கப்படும் பொது அதிகாரியாக அல்லது ஒரு பிரெஞ்சு இணைத்தூதரகமாக அல்லது தூதரகமாக இருக்கலாம்.
   • உங்கள் கடிதத்துடன் ஒவ்வொரு துணைவருக்குமான செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தின் புகைப்பட நகலைச் சேர்க்கவும்.
   • உங்கள் அறிவிப்பின் நகலை வைத்துக் கொள்ளவும்.
   • பதிவு செய்யப்பட்ட விநியோகம் அல்லது “lettre recommandée avec accusé de réception” மூலம் கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பவும், இதுவே உங்கள் கடிதம் பெறப்பட்டதை நிரூபிப்பதற்குரிய ஒரே வழியாகும். பற்றுச்சீட்டைத் தபாலின் சான்றாக வைத்துக் கொள்ளவும்.

  அடுத்த வாரங்களில், “confirmation d’enregistrement”எனப்படும் ஒப்பந்தத்தின் முடிவை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை நீங்கள் பெற வேண்டும். இந்த ஆவணம் “Pacs” முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்கான ஆதாரமாகும். நீங்கள் அறிவிப்புப் படிவத்தில் வழங்கிய முகவரிக்கு இது அனுப்பப்படும்.

  இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் எந்தப் பதிலையும் பெறவில்லையெனில், உங்கள் அறிவிப்பைப் பெற்ற ஆணையத்தைத் தொடர்புகொண்டு அதன் நிலையின் இற்றைப்படுத்தலை வினவலாம்.

 • உங்கள் துணைவரின் சம்மதமின்றி “Pacs” ஐ நீங்கள் முடிவுக்குக் கொண்டுவரலாம். உங்கள் தீர்மானத்தை நீங்கள் நியாயப்படுத்த வேண்டியதில்லை. இதைச் செய்வதற்கு, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  • huissier” என்றழைக்கப்படுகின்ற சட்ட வல்லுநரொருவரைத் தொடர்பு கொள்ளவும். இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள வல்லுநரொருவரை நீங்கள் கண்டறியலாம்.
  • உங்கள் தீர்மானத்தை உங்கள் துணைவருக்குத் தெரிவிப்பதற்கு “huissier” பொறுப்பாவார். "huissier" உங்கள் துணைவருக்கு “Pacs” ஐ முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீங்கள் விரும்புவதை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் செயலாற்றுவார், இது “signification du souhait de dissolution du Pacs” என அறியப்படுகிறது. இந்தச் சேவைக்குக் கட்டணம் அறவிடப்படுகின்றது.
  • huissier” இந்த ஆவணத்தின் நகலை உங்கள் “Pacs” ஐப் பதிவு செய்த ஆணையத்திற்கு அனுப்புவார். அது ஒரு நகர மன்றம் ஆக அல்லது “mairie” ஆக, ஒரு நீதிமன்றமாக, “notaire” என்று அழைக்கப்படும் பொது அதிகாரியாக அல்லது ஒரு பிரெஞ்சு இணைத்தூதரகமாக அல்லது தூதரகமாக இருக்கலாம்.

  அடுத்த வாரங்களில், “confirmation d’enregistrement”எனப்படும் ஒப்பந்தத்தின் முடிவை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை நீங்கள் பெற வேண்டும். இந்த ஆவணம் “Pacs” முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்கான ஆதாரமாகும். நீங்கள் அறிவிப்புப் படிவத்தில் வழங்கிய முகவரிக்கு இது அனுப்பப்படும்.

  இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் எந்தப் பதிலையும் பெறவில்லையெனில், அதன் நிலையை இற்றைப்படுத்துவதற்கு ஆவணத்தைப் பெற்ற ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு “huissier” ஐக் கேட்கவும்.

"Pacs" முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர்

Pacs” முடிவடைந்ததும், உங்கள் முன்னாள் துணைவரைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த உரிமைகளும் கடமைகளும் இருக்காது.

இனிமேல், நீங்கள் தனிநபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

உங்களுக்குப் பிள்ளைகள் இருந்து நீங்கள் இனிமேல் ஒன்றாக வாழவில்லை என்றால், “modalités d’exercice de l’autorité parentale” என்றழைக்கப்படுகின்ற பிள்ளைக் காப்புப் பொறுப்பு விதிமுறைகளை ஒப்புக்கொள்வது முக்கியமானதாகும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

 • point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

  • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • இந்த மையங்களுக்குப் பல பெயர்கள் உள்ளன: “Maison de Justice et du Droit (MJD)”, “Point d’accès au droit (PAD)”, "Relais d’accès au droit (RAD)”, “Antenne de justice (AJ)” or “France services (FS)”.
  • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • உங்களுக்கு அருகில் ஒரு “point-justice” நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியும்:
   • இந்த நிகழ்நிலை கோப்பகத்தில்.
   • பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 3039 மற்றும் வெளிநாடுகளில் இருந்து +33 9 70 82 31 90 இல் தொலைபேசி மூலம். அவர்கள் உங்கள் அஞ்சல் குறியீட்டைக் கேட்டு, “point-justice”உடன் உங்களைத் தொடர்புகொள்வார்கள். கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
 • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

  • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
  • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
  • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்

பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…

பிள்ளை தொடர்பான செலவுகளுக்குப் பங்களிப்பதற்கு மற்றைய பெற்றாரிடமிருந்து நிதிப் பங்களிப்பைப் பெறுதல்

பெற்றார்கள் பிரிந்தாலும், தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புடைய செலவுகளுக்குத் தொடர்ந்து பங்களிக்க…

பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்

சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்