பிள்ளை தொடர்பான செலவுகளுக்குப் பங்களிப்பதற்கு மற்றைய பெற்றாரிடமிருந்து நிதிப் பங்களிப்பைப் பெறுதல்

பெற்றார்கள் பிரிந்தாலும், தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புடைய செலவுகளுக்குத் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். ஒரு நீதிபதி மற்றைய பெற்றாரிடம் அவரது பிள்ளைகளுடன் தொடர்புடைய கல்வி மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்கான கொடுப்பனவை அல்லது “contribution à l’entretien et à l’éducation de l’enfant” ஐ கேட்கலாம், இது “pension alimentaire” என்றும் குறிப்பிடப்படுகிறது.

31/01/2024 அன்று மைட்ரே எலோடி ராமோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

இது எவ்வாறு செயற்படுகின்றது?

பிரிவொன்றின் நிகழ்வில், பெற்றோரில் ஒருவர் மற்றைய பெற்றாருக்கு ஒரு தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இது பிள்ளையின் கல்வி மற்றும் பராமரிப்புக் கொடுப்பனவு அல்லது “contribution à l’entretien et à l’éducation de l’enfant” என அறியப்படுகிறது, இது “pension alimentaire” என்றும் குறிப்பிடப்படுகிறது. 

இது குறிப்பாக அவ்விடயமாக இருக்கின்றது ஆயின்: 

  • பிள்ளைகள் முக்கியமாக ஒரு பெற்றாரின் வீட்டில் வசிக்கிறார்கள், அவர்களின் “résidence habituelle” இல்
  • பெற்றோரில் ஒருவருக்குக் குறைந்த சாதகமான நிதி நிலைமை உள்ளது.

நான் அதை எவ்வாறு பெறுவது?

பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் அல்லது “modalités d’exercice de l’autorité parentale”உருவாக்கப்படும் போது “contribution à l’entretien et à l’éducation de l’enfant” இல் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படல் வேண்டும், இது “pension alimentaire” என்றும் அழைக்கப்படும். பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் இந்தப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளன.

  • contribution à l’entretien et à l’éducation de l’enfant” இன் அளவு என்பது ஒவ்வொரு பெற்றாரின் நிதி நிலைமையைப் பொறுத்ததாகும். பின்வருவதிற்கு ஏற்ப இது பொருந்துகின்றது:

    • உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் 
    • மற்றைய பெற்றாரின் வருமானம் மற்றும் செலவுகள்
    • உங்கள் பிள்ளையின் தேவைகள்.

    இந்தத் தொகையானது உங்கள் தாய்நாட்டில் நீங்கள் பெற்ற தொகையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு பெறுவீர்கள் என்பது பற்றிய உளக்கருத்தைப் பெறுவதற்கு, நீங்கள் ஒப்புருவாக்கத்தை இயக்கலாம். 

    contribution à l’entretien et à l’éducation de l’enfant” இன் கொடுப்பனவு, நீதிபதி வேறுவிதமாக முடிவு செய்யாவிட்டால், சட்டப்பூர்வ வயதை (பிரான்சில்,பொதுவாக 18 வயது) அடைந்த பிறகும், பிள்ளைகள் நிதிச் சுதந்திரத்தைப் பெறும் வரை பொதுவாகத் தொடரும்.

    பெற்றோர்களின் நிலைமை மாறினால் எந்த நேரத்திலும் தொகையை மதிப்பாய்வு செய்யலாம். இந்த நிகழ்வில், உங்கள் வழக்கறிஞர் மூலம் “Juge aux affaires familiales”இற்கு நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.

  • pension alimentaire” வெவ்வேறு வடிவங்களில் செலுத்தப்படலாம்: 

    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் தொகையாகும்.
    • சில சமயங்களில், உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் செலவுகளை நேரடியாகச் செலுத்துதல் போன்ற பிற வடிவங்களையும் இது எடுக்கலாம்.

    பொதுவாக, “modalités d’exercice de l’autorité parentale” எனப்படும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளையும் அமைக்கும் தீர்ப்பில் “Juge aux affaires familiales” நிர்ணயித்த திகதியிலிருந்து இந்த நிதிப் பங்களிப்பு செலுத்தப்படுகிறது.

    பெற்றோர் இருவரும் இதை விரும்பவில்லை என்றால், 2022 மார்ச் மாதம் முதல், நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட “pension alimentaire” இற்கான கொடுப்பனவுகள் இப்போது “l’Agence de recouvrement et d’intermédiation des pensions alimentaires (Aripa)” எனப்படுகின்ற “pension alimentaire” இற்குப் பொறுப்பான தேசிய முகவரகத்தால் தானாகவே செயல்படுத்தப்படுகிறது. இச் செயன்முறையானது:

    • நீதிபதி தனது முடிவை நேரடியாக “Aripa” இற்கு அனுப்புவார்.
    • ஒவ்வொரு மாதமும், "débiteur" என அழைக்கப்படும் பராமரிப்புக் கொடுப்பனவைச் செலுத்தும் பெற்றோரிடமிருந்து முகவரகம் தொகையைச் சேகரித்து, "créancier" என அழைக்கப்படும் பராமரிப்புக் கொடுப்பனவைப் பெறும் பெற்றோருக்கு மாற்றுகிறது.
  • உங்கள் முன்னாள் துணைவர் நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்புக் கொடுப்பனவை உங்களுக்குச் செலுத்தவில்லை என்றால், அவற்றுக்குத் தீர்வுகள் உள்ளன.

    பராமரிப்புக் கொடுப்பனவு செலுத்துதல் அமுல்படுத்தப்பட்டால் “Aripa”:

    • பணம் செலுத்தாத பட்சத்தில் மற்றும் முதல் மாத இயல்புநிலையிலிருந்து, “Aripa”, “débiteur” உடன் மூலம் மீட்பு நடவடிக்கையைத் தொடங்குகிறது;
    • நிலுவைத் தொகையை மீட்டெடுக்கக் காத்திருக்கும் போது, “Aripa”, உங்களுக்கு “allocation de soutien familial” என்றழைக்கப்படுகின்ற நிதி உதவியை வழங்கும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன. 

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • இந்த மையங்களுக்குப் பல பெயர்கள் உள்ளன: “Maison de Justice et du Droit (MJD)”, “Point d’accès au droit (PAD)”, "Relais d’accès au droit (RAD)”, “Antenne de justice (AJ)” அல்லது “பிரான்சு சேவைகள் (FS)”. 
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்களுக்கு அருகில் ஒரு “point-justice” நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியும்:
      • இந்த நிகழ்நிலை கோப்பகத்தில்.
      • பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 3039 மற்றும் வெளிநாடுகளில் இருந்து +33 9 70 82 31 90 இல் தொலைபேசி மூலம். அவர்கள் உங்கள் அஞ்சல் குறியீட்டைக் கேட்டு, “point-justice”உடன் உங்களைத் தொடர்புகொள்வார்கள். கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் பிள்ளை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.

    தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்

பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…

நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை உங்களின் முன்னாள் துணைவர் வழங்காவிட்டால் என்ன செய்வது என அறிந்து கொள்ளல்

உங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட நிதிப் பங்களிப்பை அல்லது பிள்ளைப்…

பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளுக்கு மற்றைய பெற்றார் இணங்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளவும்

பிள்ளைகள் ஒரு பெற்றோருடன் வாழ்ந்தாலும் அல்லது இரு பெற்றோரிடையே மாறி மாறி வாழ்ந்தாலும், பிள்ளைப்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்