அவசரநிலை தங்குமிடத்தைக் கண்டறிதல்

நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இல்லாவிட்டால், எங்கு செல்வது என்று தெரியாவிட்டால், தீர்வுகள் உள்ளன. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்தான சூழ்நிலையில் நீங்கள் இருக்காமலிருப்பது மிகவும் முக்கியமாகும் உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானதாகும்.

24/05/2023 அன்று Ouarda Varda Sadoudi ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டு, துஷ்பிரயோகம் செய்தவருடன் வாழ்ந்தால், நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய தீர்வுகளில் ஒன்று, பாதுகாப்பு உத்தரவு அல்லது “ordonnance de protection என்ற பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றும்படி நீதிபதியிடம் கேட்பதாகும்.

தங்குமிடம் அவர்களின் பெயரில் இருந்தாலும், அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் அவர்களின் வெளியேற்றத்தை நீங்கள் பெறலாம்.

நீதிபதியின் முடிவு நிலுவையில் உள்ளது, அல்லது நீங்கள் “ordonnance de protection” கோரவில்லை என்றால், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அவசர நிலைத் தீர்வுகள் கிடைக்கும்.

இன்று

உங்கள் வீட்டின் வசதியை விட்டு வெளியேறுவது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், ஆனால் துஷ்பிரயோகம் செய்யும் நபரின் முன்னிலையில் நீங்கள் பாதுகாப்பாக இல்லை.

நீங்கள் அவற்றை கடினமாகக் கண்டாலும், இந்த தீர்வுகள் குறுகிய காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு பெறுவதற்கும், உங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கும் இதுவே முதல் படியாகும்.

  • இது சங்கடமாகத் தோன்றலாம், ஆனால் உங்களுக்கு நெருக்கமான நம்பகமான நபர் அவசரநிலையில் உங்களுக்கு விருந்தளிக்கத் தயாராக இருக்கலாம்.

    அதிகமான மக்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் பிரச்சனையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், அது யாருக்கும் ஏற்படலாம் என்பதை அறிந்து, அதை எதிர்கொள்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.

  • உங்களிடம் போதுமான பணம் இருந்தால், சில நாட்களுக்கு ஹோட்டலுக்குச் செல்வதையும் கருத்தில் கொள்ளலாம்.

    இந்த தேடல் நுழைவாயில்கள் பன்மொழியிலும் பிரான்சில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான தங்குமிடங்களையும் வழங்குகின்றன:

    • ஹோட்டல் அறை அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கான Booking.
    • Airbnb ஆனது குறுகிய கால வாடகைக்கு, சில சமயங்களில் நீண்ட கால வாடகைக்கு.
  • அவசரநிலைச் சூழ்நிலைகளில் குடும்ப வன்முறையை அனுபவிக்கும் நபர்களின் தங்குமிடத்திற்கான அணுகல் போலீஸ் சேவைகளுக்கு உள்ளது.

    அதே நாளில் தங்குமிட மையத்தில் அவர்களால் உங்களுக்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். இவற்றில் சில மையங்கள் குறிப்பாக பெண்களுக்காக அமைக்கப்பட்டவை.

    இந்தச் சேவையைக் கோர, உங்களுக்கு அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்திற்கும் செல்லலாம், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie” இற்கு

    நீங்கள் அங்கு வரும்போது:

    • நீங்கள் பிரெஞ்சு மொழி பேசவில்லை என்றால், இந்தக் கடிதத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
    • நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்பதை விளக்குங்கள். நீங்கள் அனுபவித்த துஷ்பிரயோகம் பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
    • அவசரநிலைத் தங்குமிடத்தைப் பெற நீங்கள் புகாரைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
    • உங்களின் உடமைகளை எடுத்துச் செல்ல உங்களுடன் வருமாறும் அவர்களைக் கேட்கலாம். அவர்கள் கையாள வேண்டிய அவசரநிலைகளைப் பொறுத்து இதற்கு அதிகமான அல்லது குறைவான நேரம் எடுக்கும்.
  • Samusocial” என்பது தொலைபேசி எண் 115 ஐ நிர்வகிக்கும் அமைப்பாகும், இது வீடற்ற நிலையில் உள்ள மக்களுக்கான தேசிய ஆலோசனை, ஆதரவுக்கான எண்ணாகும்.

    துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து முடிந்தவரை தொலைவில், இரவு தங்குவதற்கு ஹோட்டல் அல்லது தங்குமிடம் போன்ற அவசரநிலைத் தங்குமிடங்களை உங்களுக்கு வழங்க அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.

    துரதிஷ்டவசமாக, இது எப்போதும் மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்காது. சில நேரங்களில் நீங்கள் பதிலைப் பெற தொலைபேசியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும், மேலும் அவர்கள் தங்குமிடத்தைப் பெற உங்களுக்கு உதவ முடியாமல் போகலாம்.

    எனவே முன்னுரிமையாக போலீஸாரைத் தொடர்புகொள்வது நல்லது.

    நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடிவு செய்தால்:

    • அழைப்பு 115 ஆனது, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் கிடைக்கும் ஒரு இலவச தொலைபேசி எண்ணாகும் ,
    • நீங்கள் பிரெஞ்சு பேசவில்லை என்றால், உங்கள் அழைப்பிற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படுவார்.
    • காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அழைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது
    • உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் பல முறை முயற்சி செய்யலாம்.
  • Some organisations offer emergency accommodation with local residents. 

    You can ask the “associations” in your department if they offer this service.

நீண்ட காலத்தில்

உங்கள் நிதி வளங்களுக்கு ஏற்ற புதிய வீட்டில் உங்களை அமர்த்துவதற்கான தீர்வுகள் உள்ளன:

travailleur social” அல்லது சமூக சேவகர் என அறியப்படும் ஒரு தொழில் வல்லுநருடன் சந்திப்பு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தத் தொழில் வல்லுநர் உங்களுக்குத் தங்குமிடத்தைக் கண்டறிய உதவுவதோடு, வழியில் உங்களை ஆதரிக்கவும் முடியும். நிதி உதவி க்கு விண்ணப்பிக்கவும் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

travailleur social” உடன் சந்திப்பை ஏற்படுத்த உங்களால் முடியும்:

  • Conseil départemental” எனும் உங்கள் துறையின் நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
  • mairie” என அறியப்படும் உங்கள் நகரத்தின் நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொள்வதன் மூலம், உங்கள் நகரில் உள்ள “Centre communal d’action sociale” எனப்படும் சமூக ஆதரவிற்குப் பொறுப்பான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.
  • நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் நிறுவனத்தின் சமூகப் பணி உதவியாளரிடம் அல்லது “assistante sociale” உடன் சந்திப்பை ஏற்படுத்துங்கள் மேலும் அறிய உங்களை வேலையில் அமர்த்துபவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: அளவளாவல் சேவை. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில்உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

பிரான்சில் சமூக வீட்டுவசதி, மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பித்தல்

உங்களிடம் குறைந்த நிதி வளங்கள் இருந்தால், சமூக வீட்டு வசதி அல்லது “HLM” அல்லது “logement social”,…

பிரான்சில் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்தல்

பிரான்சில், தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பது, தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பீட்டளவில்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்