பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
நீங்கள் பிரான்சை விட்டு வெளியேறி உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், சில நிபந்தனைகளின் கீழ், “aide au retour volontaire” அல்லது தன்னார்வத் திரும்பிச் செல்லல் உதவி எனப்படும் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
30/05/2022 அன்று Women for Women France ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான பிரெஞ்சு அலுவலகம் அல்லது “Office français de l’Immigration et de l’Intégration (OFII)” என அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வரவேற்பை ஒழுங்கமைக்கும் பொறுப்பான பிரெஞ்சு தேசிய சேவை, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கு குடியேற விரும்பும் மக்களுக்கு ஆதரவளிக்க நிதி மற்றும் நிர்வாக உதவிகளை வழங்குகிறது
“aide au retour volontaire” என்றழைக்கப்படும் ஆதரவு அல்லது தன்னார்வத் திரும்பிச் செல்லுதல் உதவி, பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
உங்கள் சொந்த நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிக்குத் திரும்பலாம்.
“aide au retour volontaire” அல்லது தன்னார்வத் திரும்பிச் செல்லுதல் உதவி பெற, நீங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் ஒன்றில் இருக்க வேண்டும்:
நீங்கள் பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:
கோரிக்கை நேராக “OFII” இற்கு மேற்கொள்ளப்படுகின்றது. உங்களுக்கு அருகிலுள்ள அவர்களின் அலுவலகத்திற்கான தொடர்பு விவரங்களை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம்.
தன்னார்வத் திரும்புதல் பற்றிய கூடுதல் தகவல்களை http://www.retourvolontaire.fr/இல் காணலாம். கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு, போர்த்துகீசியம், அல்பேனியன், ஆர்மீனியன், டாரி, ஸ்பானிஷ், ஜார்ஜியன், மாண்டரின், உருது, பாஷ்டோ, ரஷ்யன், செர்பியன், பெங்காலி, தமிழ், ரோமானிய, ஹைட்டியன் கிரியோல்.
சில சந்தர்ப்பங்களில், மற்றும் சில நாடுகளுக்கு, “aide à la réinsertion” (அல்லது மறு ஒருங்கிணைப்பு ஆதரவு) எனப்படும் உங்கள் சொந்த நாட்டில் குடியேறுவதற்கான ஆதரவையும் நீங்கள் பெறலாம்; எடுத்துக்காட்டாக, வீட்டை அமைக்க, வேலை தேட அல்லது வணிகத்தைத் தொடங்க உங்களுக்கு உதவுவதற்கு. இதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற OFII ஐத் தொடர்புகொள்ளலாம்.
“La Cimade” என்பது அனைத்துப் புலம்பெயர்ந்த மற்றும் குடிபெயர்ந்த மக்களுக்கும், பிரான்சில் உள்ள அகதிகளுக்கும், குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் குடியேறியவர்கள் மற்றும் அகதிகளுக்கான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
அவசரமாக நிதியை அணுகுதல்
உங்களிடம் நிதி வளங்கள் இல்லையென்றால் அல்லது உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் நிதிக்கான…
அரச நிதி உதவியை கோருதல்
வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மக்களுக்கு உதவ பிரெஞ்சு பொது அமைப்புகளால் பல வகையான நிதி…