பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்
பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…
துஷ்பிரயோகத்தை அனுபவித்த பிறகு நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது. இருப்பினும், நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் வெளிநாடு செல்ல விரும்பினால், ஏற்கனவே இருக்கும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகளைப் பொருட்படுத்தாமல், நீங்கள் மற்றைய பெற்றார் அல்லது நீதிபதியின் உடன்பாட்டை பெற வேண்டும்.
03/10/2023 அன்று மைத்ரே ஜூடித் புச்சிங்கர் ஆல் சரிபார்க்கப்பட்டது
நீங்கள் பிரான்சை விட்டு வெளியேறி உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அங்கு நீங்கள் பாதுகாப்பாகவும் உங்களுக்கு நெருக்கமானவர்களால் சூழப்பட்டதாகவும் உணர்கிறீர்கள், குறிப்பாக நீங்கள் உள்நாட்டு துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டால் அது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது.
இருப்பினும், வெளிநாடு செல்வதற்கு முன் மற்றைய பெற்றாரின் அல்லது “Juge aux affaires familiales (JAF)” எனப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியின் சம்மதத்தைப் பெறுவது அவசியம். இல்லையெனில், நீங்கள் வெளியேறுவது சர்வதேச பெற்றோர் குழந்தை கடத்தலாகக் கருதப்படலாம்.
“autorité parentale” என அறியப்படும், தங்கள் பிள்ளைகளுக்கான உரிமைகள் மற்றும் கடமைகளை இரு பெற்றோர்களும் பகிர்ந்து கொண்டால், “modalités d’exercice de l’autorité parentale”எனப்படும் புதிய பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
மற்றைய பெற்றாருக்கு இனி பெற்றோரின் அதிகாரம் அல்லது “autorité parentale” இல்லாமலும் உங்களிடம் “autorité parentale exclusive” இருந்தும் இருந்தால், உங்கள் மற்றைய பெற்றாருக்கு நீங்கள் தெரிவிக்கவும் கிளம்புவதற்கு முன் நீதிபதியிடம் அனுமதி கேட்கவும் வேண்டும்.
திட்டமிடப்பட்ட புறப்படும் திகதிக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக உங்கள் திட்டத்தைப் பற்றி மற்றைய பெற்றாருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மற்றைய பெற்றாரின் அனுமதியின்றி நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினால், இது சர்வதேச பெற்றோர் குழந்தை கடத்தலாகக் கருதப்படும். உங்கள் முன்னாள் துணைக்கு பிள்ளைகளை பிரான்சுக்குத் திருப்பி அனுப்ப சட்டப்பூர்வ வழிகள் இருக்கும்.
“சங்கம்” குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றிடமிருந்து அல்லது வழக்கறிஞர் இடமிருந்து ஆலோசனையைப் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.
பிள்ளைப் பொறுப்புக் காப்பு ஏற்பாடுகள் அல்லது “modalités d’exercice de l’autorité parentale”ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால், நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பினால், அவை மாற்றியமைக்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட புறப்படும் தேதிக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நீங்கள் இடம் மாற்றுவதற்கான உங்கள் திட்டத்தை மற்றைய பெற்றாருக்கு தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் பிள்ளைகளுடன் வெளிநாட்டில் குடியேறலாம் மற்றும் புதிய “modalités”, உடன் உடன்படுவதை அவர்கள் ஒப்புக்கொள்கிறாரா என்பதை முதலில் மற்றைய பெற்றாரிடம் கேட்க வேண்டும்.
“modalités” பற்றிய மதிப்பாய்வு உங்கள் வழக்கறிஞர்கள் மூலம் செய்யப்படலாம்,குறிப்பாக இவை நீதிபதியால் அமைக்கப்பட்டிருந்தால்.
தற்போதைய “modalités” நீதிபதியால் அமைக்கப்பட்டிருந்தால், குடும்ப நீதிமன்ற நீதிபதி அல்லது “Juge aux affaires familiales” இற்கு, “requête conjointe” எனப்படும் கூட்டுக் கோரிக்கையை அனுப்ப வேண்டும், அதனால் அவர்கள் புதிய “modalités” ஐ அனுமதிக்க முடியும்.
தற்போதைய “modalités”, நீதிபதியின் மூலம் செல்லாமல் பெற்றோருக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டிருந்தால், இருப்பினும் “requête conjointe” எனப்படும் ஒரு கூட்டுக் கோரிக்கையை “Juge aux affaires familiales” க்கு அனுப்பப் பரிந்துரைக்கப்படுகிறது, இதனால் அவர் புதிய “modalités” ஐ செல்லுபடியாக்கலாம்
“requête conjointe” என்பது நீங்களும் மற்றைய பெற்றாரும் கையொப்பமிட வேண்டிய கடிதம் ஆகும்.
உங்கள் வழக்கறிஞர் மூலம் “Juge aux affaires familiales” க்கு நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக, பெற்றார்கள் ஒரு உடன்பாட்டுக்கு வராத போது, இந்த வகையான கோரிக்கையை நீதிபதி வழங்குவது அரிது. நீதிபதிகள் தங்கள் முடிவை எடுக்கும்போது பல விடயங்களை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் அதை நிரூபிக்க வேண்டியது அவசியம்:
மற்றைய பெற்றாருக்கு இனி பெற்றோருக்குரிய அதிகாரம் இல்லாதிருந்து உங்களிடம் பிரத்தியேக பெற்றோருக்குரிய அதிகாரம் அல்லது “autorité parentale exclusive” என இருந்தால், நீங்கள் இன்னும் பின்வரும் இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.
“Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெற்றோருக்கு இடையே பிள்ளைக் காப்புப் பொறுப்பை ஏற்பாடு செய்தல்
பிரான்சில், பிரிவு அல்லது விவாகரத்து என்பவற்றின் நிகழ்வில், பெற்றோர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள்…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…
ஒரு வழக்கறிஞருக்கும் பிற சட்டச் செலவுகளுக்கும் பணம் செலுத்துவதற்கு "'aide juridictionnelle" அல்லது சட்ட உதவிக்கு விண்ணப்பித்தல்
ஒரு வழக்கறிஞரை அமர்த்துவதற்கும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்துவதற்கும் உங்களிடம் போதுமான பணம்…