எந்த நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளல்

உங்கள் தேசியம், உங்கள் வாழ்க்கைத் துணையின் தேசியம், நீங்கள் திருமணம் செய்து கொண்ட நாடு மற்றும் நீங்கள் வழக்கமாக வசிக்கும் நாடு ஆகியவற்றைப் பொறுத்து, நீங்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் நாட்டிற்கு வரும்போது உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கலாம்.

09/02/2024 அன்று மைத்ரே ஹன்சு யாலாஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

பிரான்சில், விவாகரத்து நடவடிக்கைகள் குறிப்பாக நீண்டதாக இருக்கலாம், சில சமயங்களில் பல ஆண்டுகள் ஆகலாம். குறிப்பாக உங்கள் சூழ்நிலையின் ஒரு உறுப்பு மற்றொரு நாட்டை உள்ளடக்கியதாக இருந்தால் அது “élément d’extranéité” அல்லது வெளிநாட்டு உறுப்பு என அறியப்படும்

வேறொரு நாட்டில் விவாகரத்து செய்வது சாத்தியமா மற்றும் மிகவும் சாதகமானதா என்பதை முதலில் சரிபார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் விவாகரத்துச் செய்ய விரும்பாத நாட்டில் உங்கள் வாழ்க்கைத் துணை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காமல் இருக்க நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும். ஒரு பொதுவான விதியாக, விவாகரத்துக்கான விண்ணப்பம் முதலில் செய்யப்படும் நாட்டிற்கு சட்ட அதிகாரம் இருக்கும், அதாவது விவாகரத்து நடவடிக்கைகள் அங்கு நடைபெறும்.

உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

பின்வரும் நிகழ்வுகளில் “élément d’extranéité” உள்ளது:

  • நீங்கள் பிரெஞ்சுக்காரர் இல்லையென்றால்
  • நீங்கள் பிரான்சில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால்
  • உங்கள் முதல் திருமணக் குடியிருப்பு வெளிநாட்டில் இருந்தால்
  • நீங்கள் தற்போது பிரான்சில் வசிக்கவில்லை என்றால்.

élément d’extranéité” இருந்தால், விதிகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், உங்கள் வழக்கறிஞர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் ஒரு பிழையான செயல் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பிரான்சிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள ஒரு வழக்கறிஞர், தங்கள் நாட்டில் விவாகரத்து செய்ய உங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது குறைவான அனுகூலமானதாக இருந்தாலும், அவர்கள் உங்களை ஒரு வாடிக்கையாளராக வைத்து உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முடியும். உதாரணமாக, ஒவ்வொரு வழக்கறிஞ ரிடமும், தாங்கள் எதைப் பெறலாம் என்று நினைக்கிறீர்கள், இதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எடுக்கக்கூடிய நேரம் ஆகியவற்றை தெளிவாக விளக்குமாறு கேட்கலாம்.

பிரான்சில் விவாகரத்துக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

பிரான்சில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் பல விதிகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் , தேசியம், மற்ற விஷயங்களோடு இந்த விதிகள் சார்ந்தது,

உதாரணமாக, நீங்கள் இந்தச் சூழ்நிலைகளில் ஒன்றில் இருந்தால், நீங்கள் பிரான்சில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் :

  • நீங்கள் பிரெஞ்சுக்காரர், அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை பிரெஞ்சுக்காரர்
  • நீங்கள் ஜோடியாக வசிக்கும் இடம் பிரான்ஸ்.

நீங்கள் ஏற்கனவே பிரிந்து, அதே நாட்டில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் இருந்தால் பிரான்சில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்:

  • உங்களுக்கு 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருந்தால், பிள்ளைகளின்பாதுகாப்பிற்கு இருக்கும் பெற்றோரின் வசிப்பிட நாடாக பிரான்ஸ் இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு 18 வயதிற்குட்பட்ட பிள்ளை இல்லையென்றால், விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்காத வாழ்க்கைத் துணையின் வசிப்பிட நாடாக பிரான்ஸ் இருக்க வேண்டும்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் குடிமகனாக இருந்தால் (டென்மார்க் தவிர), நீங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் இருந்தால் பிரான்சிலும் விவாகரத்து செய்யலாம்:

  • பிரான்ஸ் ஜோடிகளின் கடைசி வழக்கமான வசிப்பிடமாகும், உங்களில் ஒருவர் இன்னும் அங்கேயே வசிக்கிறீர்கள்
  • பிரான்ஸ் என்பது விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்கிய நபரின் சாதாரண வசிப்பிடமாகும், மேலும் விண்ணப்பத்தின் போது குறைந்தது ஒரு வருடமாவது அங்கு வாழ்ந்தவர்.

உங்கள் சூழ்நிலையில் பொருந்தக்கூடிய விதிகளைப் புரிந்துகொள்ள ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு உதவ முடியும்.

வேறொரு நாட்டில் நீங்கள் விவாகரத்துக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

சர்வதேச விவாகரத்து விதிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

சில நாடுகள் பிரான்சுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன; மற்றவர்கள் பிரஸ்ஸல்ஸ் II பிஸ் ஒழுங்குமுறை அல்லது ஹேக் மாநாட்டில் கையெழுத்திட்டவர்கள். இந்த நாடுகளின் பட்டியலை நீங்கள் இங்கே காணலாம்.

நீங்கள் வேறொரு நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால், உங்கள் தேசம் போன்று,நீங்கள் திருமணம் செய்து கொண்ட நாடு அல்லது திருமணத்திற்குப் பிறகு நீங்கள் முதலில் வசிக்கும் நாட்டில், அந்த நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் என்ன விதிகள் பொருந்தும் என்று கேளுங்கள்.

நீதிபதிகள் அல்லது அதிகார வரம்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும், ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் திறமையானவையாக இருந்தால், விவாகரத்துக்கான விண்ணப்பம் முதலில் செய்யப்பட்ட நாட்டில் பொதுவாக விவாகரத்து நடைபெறும்.

நீங்களும் வாழ்க்கைத் துணையும் வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு விவாகரத்து விண்ணப்பத்தை அனுப்பினால், நீதிபதிகள் “litispendance”எனப்படும் ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். எவருக்கு அதிகார வரம்பு உள்ளது, அதாவது விவாகரத்து நடவடிக்கைகள் எங்கு நடைபெறும் என்பதைக் கண்டறிய வேண்டும்,

litispendance” பற்றி நீதிபதியிடம் புகாரளிக்க எடுக்க வேண்டிய படிகள் குறித்து உங்கள் வழக்கறிஞர் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணை வேறொரு நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த நாட்டில் ஒரு வழக்கறிஞரைப் பணியமர்த்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில், உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • இந்த மையங்களுக்குப் பல பெயர்கள் உள்ளன: “Maison de Justice et du Droit (MJD)”, “Point d’accès au droit (PAD)”, "Relais d’accès au droit (RAD)”, “Antenne de justice (AJ)” அல்லது “France services (FS)”.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்களுக்கு அருகில் ஒரு “point-justice” நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியும்:
      • இந்த நிகழ்நிலை கோப்பகத்தில்.
      • பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 3039 மற்றும் வெளிநாடுகளில் இருந்து +33 9 70 82 31 90 இல் தொலைபேசி மூலம். அவர்கள் உங்கள் அஞ்சல் குறியீட்டைக் கேட்டு, “point-justice”உடன் உங்களைத் தொடர்புகொள்வார்கள். கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவை இலவசமானது.
    • அவர்களின் வழக்கறிஞர்கள் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் மற்றும் உங்கள் பிரிவு, விவாகரத்து மற்றும்/அல்லது பிள்ளைக் காப்புப் பொறுப்பு விடயங்களில் ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஒரு தகவல் சேவை மட்டுமே ஆகும்: அவர்கள் உங்களை சட்ட நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம்.
    • தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது தொலைபேசி மூலம் 04 78 03 33 63 திங்கள் முதல் புதன்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
  • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

    • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
    • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
    • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
    • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரான்சில் விவாகரத்து

நீங்கள் பிரான்சில் உங்கள் சிவில் திருமணத்தை முடிக்க விரும்பினால், நீங்கள் பல வகையான விவாகரத்து…

மற்றொரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு விவாகரத்தொன்றைப் பெறுதல்

பிரான்சில்,வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படக்கூடிய விவாகரத்தொன்றைப் பெறுவதற்கான நடைமுறை கேள்விக்குரிய…

உங்கள் பிரெஞ்சு சிவில் நிலை ஆவணங்களில் உங்கள் வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்யப்பட்டிருத்தல்

பிரான்ஸ் அல்லாத வேறு நாட்டில் நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தால், உங்களிடம் பிறப்புச் சான்றிதழ்…

பிரான்சில் வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல்

நீங்கள் வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், உங்கள் விவாகரத்துத் தீர்ப்பை பிரான்சில்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்